சுலபமான 10 வழிகள்:
1. தீவிரவாதத்தைக்குறித்து தெரிகிறதோ இல்லையோ, ஒருமுறையாவது, எழுதிவிடுங்கள். "இவுனுங்க நாய்க்கு பொறந்தவனுங்க, அந்த மதத்தை சேர்ந்தவனுங்க, இந்த மதத்தை சேர்ந்தவனுங்க, இவுனுங்க அம்மா இவுனுங்களுக்கு பால் ஊட்டுனாளா இல்லை நாய் தான் பால் ஊட்டுச்சா" என்பது போன்ற கண்ணியமிக்க வார்த்தைகளை அள்ளித்தெளித்து விடுங்கள்.
2. ஒருமுறையாவது பார்பனர்களைப்பற்றியோ, கிறிஸ்தவர்களைப்பற்றியோ, இஸ்லாமியர்களைப்பற்றியோ ஒரு பதிவு எழுதிவிடுங்கள். இவுனுங்களால நாட்டுக்கு என்ன லாபம் போன்ற நியாயமான கேள்விகளை அடுக்கி வைக்கலாம்.
3. சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களைப்பற்றி எழுதுங்கள். எல்லாமே அபத்தமென்றும், டைரக்டர் என்ன படம்பார்க்கறவனையெல்லாம் கேனையன்னு நினைச்சுட்டானா என்பது போன்ற உரிமையுடன் கூடிய கேள்விகள் அவசியம்.
4. மதம்,மொழி,சாதி,இனம் போன்றவற்றில் பற்றுக்கொண்டிருந்தபோதிலும் ஒரு நடுநிலையாளாராக காட்டிக்கொள்ளுங்கள்.
5. இந்துவின் பெயரில் பதிவை ஆரம்பித்துவிட்டு இந்துத்துவத்தைபற்றி கேவலமாக எழுதுங்கள். சிலைவழிபாடுகள், நாட்டார் தெய்வங்கள், வருணாசிரமகொள்கைகள், மனுதர்மம், இன்னும் எதையெல்லாம் சொன்னால் ஒரு சர்ச்சை கிளம்பி குறைந்த பட்சம் ஒரு 70 பின்னூட்டமாவது கிடைக்குமோ அந்த வார்த்தைகளையெல்லாம் தேடிப்பிடித்து பதிவிடுங்கள்.
6. அல்லது எல்லா பதிவர்களின் பதிவிலும் புகுந்து "அண்ணே, சூப்பரண்ணே" என்று சொல்லலாம். அமைதியாக அல்லது மிக முதிர்ந்த பின்னூட்டாளரைப்போல் காண்பித்துக்கொள்ள வேண்டுமெனில் "அருமை, ஆழ்ந்த கருத்துக்கள், என்னை மிகவும் யோசிக்க வைத்துவிட்டீர்கள்" என்பது போல் எழுதலாம்.
7. கிறிஸ்தவர்களை தாக்கி பதிவிடுங்கள். மதமாற்றங்கள், வெளிநாட்டுப்பணம், சர்ச்சுகளுக்குள் ஆபாசம் போன்ற தலைப்புகள் அதிகம் கவனிக்கப்படும்.
8. குறிப்பாக எதாவது ஒரு குழுவில் சேர்ந்து விடுங்கள். முதுபெரும் எழுத்தாளர்களான லக்கிலுக்,புதுகை அப்துல்லா, டோண்டு, கார்க்கி,அப்புறம் இன்னும் ஒருவர் தங்கமணி, ரங்கமணி என எழுதுவார், வெண்பூ, இன்னும் எத்தனையோ அறிவு ஜீவிகள் பதிவுலகத்தில் வலம் வருகிறார்கள், இவர்களுக்கு ஜால்ரா தட்டிவிட்டு, மேலும் மீ த ஃபர்ஷ்டூ என்று வேறு சொன்னீர்களானால் உங்கள் பதிவு அதிகம் கவனிக்கப்படும்.
9. பெண்களைப்பற்றி உயர்வாக எழுதுங்கள். ஏதோ நீங்கள் பெண்களை எல்லாம் தெய்வங்களைப்போல் ஆராதிப்பது போலவும், பெண்களுக்கௌ எதிரான கொடுமைகளுக்கு உரத்து குரல் கொடுப்பது போலவும் எழுதுங்கள். உங்கள் பதிவு அதிகம் கவனிக்கப்படும்.
10. தெரிந்த தமிழ் வார்த்தைகளையெல்லாம் ஒவ்வொன்றாக சிறுசிறு துண்டு சீட்டுகளில் எழுதிக்கொள்ளுங்கள். அவற்றையெல்லாம் சுருள்சுருளாக சுருட்டி ஒரு ஜாடியில் போட்டு நன்றாக குலுக்குங்கள். உங்கள் குழந்தையை அழைத்து " என் செல்லமில்ல, ஒவ்வொரு சீட்டா எடுத்து எங்கையில குடுடா செல்லம்" என்று சொல்லுங்கள். குழந்தை எடுக்க எடுக்க அதே வரிசைப்படி ஒரு வரிக்கு நான்கு வார்த்தைகளாக எழுதிக்கொண்டு வந்தீர்களானால் இதொ ஒரு புதிய பின் நவீனத்துவ கவிஞராகி விட்டீர்கள். அப்படியே பிரசுரிக்க வேண்டியதுதானே, அதில தப்பித்தவறி எதாவது அர்த்தம் இருந்து அதை வாசிக்கறவன் புரிஞ்சுகிட்டு பின்னூட்டமிட்டால் அது அவன் தலைவிதி.
3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்
2 weeks ago
33 comments:
பதிவ பார்த்தா பழைய ஆள் மாதிரி தெரியுதே? மீள் வருகையா?
இல்லீங்க முரளி,
அதிகமா பதிவுகளை படிச்சதின் பாதிப்பு.
தராசு...ஆரம்பமே அதகளமா இருக்கு ....:)))
எஒம்ப வருஷமா பதிவுலகத்துல பார்வையாளரா இருந்திருக்கீங்க போல...
"அருமை, ஆழ்ந்த கருத்துக்கள், என்னை மிகவும் யோசிக்க வைத்துவிட்டீர்கள்"
முரளிகண்ணன் said...
பதிவ பார்த்தா பழைய ஆள் மாதிரி தெரியுதே? மீள் வருகையா?
வ்ந்ததுக்கு டேங்சு கமல்,
நீங்க சொல்றது சரிதான், ரொம்ப நாளா பார்வையாளர் ஸீட்ல உட்கார்ந்துட்டு இப்பத்தான் களத்துல இறங்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.
ஸாரி, முந்தைய பின்னூட்டத்தில் ரிப்பீட்டு போட தவறிவிட்டேன்.
எல்லா டாபிக்கையுமே இப்படி நக்கல் பண்ணிணீங்கன்னா அப்புறம் எதைத்தான் எழுதுறது?
அப்புறம் இன்னும் ஒருவர் தங்கமணி, ரங்கமணி என எழுதுவார்,// இது நானா?
வ்ந்ததுக்கு டேங்சு தாமிரா,
நான் பழசு இல்லீங்க புதுசு தான். இப்பத்தான் கடையை தெறந்திருக்கேன். பாத்து எதாவது போணி பண்றதுக்கு வழி சொல்லுங்க.
இதே போன்ற பதிவுகளை நிறைய பாத்தாச்சு தராசு. வாழ்த்துகள்.! அய்யய்யோ என்னாச்சு எனக்கு, எங்க டீமுக்கு கூட இவ்ளோ பின்னூட்டம் போட்டதில்லையே.. மீ த எஸ்கேப்பு.!
எழுதாத டாபிக்கை எப்படி தாமிரா நக்கல் பண்ண முடியும்.
அப்புறம் அந்த தங்கமணி, ரங்கமணி நீங்கதான், நக்கல் பண்றதா நெனைக்காதீங்க, நல்ல பேருதான்.
பயப்படறாய்ங்க.
//முதுபெரும் எழுத்தாளர்களான லக்கிலுக்,புதுகை அப்துல்லா, டோண்டு, கார்க்கி,//
ஆவ்வ்வ்வ்வ்வ்.. நான் முதுபெரும் எழுத்தாளாரா???????
நல்ல ஆதங்கம். இன்னும் ஒரு மூனு மாசத்துக்கு பிறகு மீன்டும் இந்த பதிவ படிச்சு பாருங்க..
வந்ததுக்கு டேங்சு கார்க்கி,
ஆமா, நான் இப்ப என்ன தெய்வ குத்தம் பண்ணீட்டனுன்னு இப்படி எல்லாரும் குமுறறீங்க? மனசுல பட்டத சொன்னேன், அது தப்பா?
குறிப்பாக எதாவது ஒரு குழுவில் சேர்ந்து விடுங்கள். முதுபெரும் எழுத்தாளர்களான லக்கிலுக்,புதுகை அப்துல்லா, டோண்டு, கார்க்கி,அப்புறம் இன்னும் ஒருவர் தங்கமணி, ரங்கமணி என எழுதுவார், வெண்பூ, இன்னும் எத்தனையோ அறிவு ஜீவிகள் பதிவுலகத்தில் வலம் வருகிறார்கள், இவர்களுக்கு ஜால்ரா தட்டிவிட்டு,
//
அடப்பாவமே நான் முதுபெரும்பதிவரா??????
அப்புறம் நீங்க கோவுச்சுக்கலனா ஒரே ஒரு கேள்வி உங்ககிட்ட...நீங்க எனக்கு ஜால்ரா தட்டினதாலயோ அல்லது என் பதிவுகளுக்கு வந்து நீங்க பின்னூட்டம் போட்டதைப் பார்த்ததாலயா நான் உங்களைத் தெரிஞ்சுகிட்டு உங்களின் இந்தப் பதிவுப் பக்கம் வர்றேன்???
:0)
வாங்க அப்துல்லா,
வந்ததுக்கு டேங்சு.
தமிழ்மணத்துல அதிகம் அடிபடற பெயர்க்ளில் நீங்களும் ஒருவர், அப்ப நீங்களும் ஒரு முது பெரும் பதிவர் தானே?
வந்ததுக்கு டேங்சு
//
டேங்சுக்கு டேங்சு :)
டேங்சு அப்துல்லா
டேங்சுக்கு டேங்சுக்கு டேங்சு
/தமிழ்மணத்துல அதிகம் அடிபடற பெயர்க்ளில் நீங்களும் ஒருவர், அப்ப நீங்களும் ஒரு முது பெரும் பதிவர் தா//
என்ன அண்ணன் அடிபடறாரா??????????? பச்ச மண்ணுயா அவரு..
//சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களைப்பற்றி எழுதுங்கள். எல்லாமே அபத்தமென்றும், டைரக்டர் என்ன படம்பார்க்கறவனையெல்லாம் கேனையன்னு நினைச்சுட்டானா என்பது போன்ற உரிமையுடன் கூடிய கேள்விகள் அவசியம்.//
:-)))))))))
//முரளிகண்ணன் said...
பதிவ பார்த்தா பழைய ஆள் மாதிரி தெரியுதே? மீள் வருகையா?//
:-))
//புதுகை.அப்துல்லா said...
அடப்பாவமே நான் முதுபெரும்பதிவரா?????? //
:-)))) அப்துல்லா வயசு கூட குறைவு தான்
நல்ல பதிவு.
தமிழ்மணத்தில் ஹிட் ஆக "தமிழ் மணத்தில் உங்கள் பதிவு ஹிட் ஆக வேண்டுமா?" என்று ஒரு பதிவு போட்டாலும் சுலபமாக ஹிட் ஆகலாம் :-)
"அருமை, ஆழ்ந்த கருத்துக்கள், என்னை மிகவும் யோசிக்க வைத்துவிட்டீர்கள்"
கார்க்கி said...
/தமிழ்மணத்துல அதிகம் அடிபடற பெயர்க்ளில் நீங்களும் ஒருவர், அப்ப நீங்களும் ஒரு முது பெரும் பதிவர் தா//
//என்ன அண்ணன் அடிபடறாரா??????????? பச்ச மண்ணுயா அவரு..//
அண்ணன் அடிபட தம்பிக நீங்கெல்லாம் விட்டுருவீங்களா,
அப்துல்லா அண்ணே,
"தம்பியுடையான் பதிவுக்கு அஞ்சான்"
சரிதானா
கிரி said...
//சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களைப்பற்றி எழுதுங்கள். எல்லாமே அபத்தமென்றும், டைரக்டர் என்ன படம்பார்க்கறவனையெல்லாம் கேனையன்னு நினைச்சுட்டானா என்பது போன்ற உரிமையுடன் கூடிய கேள்விகள் அவசியம்.//
:-)))))))))
//முரளிகண்ணன் said...
பதிவ பார்த்தா பழைய ஆள் மாதிரி தெரியுதே? மீள் வருகையா?//
:-))
//புதுகை.அப்துல்லா said...
அடப்பாவமே நான் முதுபெரும்பதிவரா?????? //
//:-)))) அப்துல்லா வயசு கூட குறைவு தான்//
அது ஏங்க எல்லாரும் அப்துல்லா அண்ணனையே வார்ரீங்க, பாவம் பச்ச மண்ணாமே அவுரு,
லக்கிலுக் said...
//நல்ல பதிவு.
தமிழ்மணத்தில் ஹிட் ஆக "தமிழ் மணத்தில் உங்கள் பதிவு ஹிட் ஆக வேண்டுமா?" என்று ஒரு பதிவு போட்டாலும் சுலபமாக ஹிட் ஆகலாம் :-)//
வந்ததுக்கு டேங்சு,
நல்ல வேளை சொல்லிக் குடுத்தீங்க, இனிமே ஜமாய்ச்சுட மாட்டோம்!!!!!!
மதிபாலா said...
//"அருமை, ஆழ்ந்த கருத்துக்கள், என்னை மிகவும் யோசிக்க வைத்துவிட்டீர்கள்"//
வந்ததுக்கு டேங்சு,
எத்தனை நாளைக்குத்தான் யோசிச்சுட்டே இருப்பீங்க, எதையாவது எழுதுங்க
//"அருமை, ஆழ்ந்த கருத்துக்கள், என்னை மிகவும் யோசிக்க வைத்துவிட்டீர்கள்"//
ரிப்பீட்டேய்
வந்ததுக்கு டேங்சு அத்திரி.
அப்துல்லா அண்ணே,
"தம்பியுடையான் பதிவுக்கு அஞ்சான்"
சரிதானா
//
சரிங்கண்ணே :))
யாருக்கு யார் அண்ணன். நீங்க தான் அண்ணனுக்கெல்லாம் அண்ணன்.
அறிமுகப் பதிவு - வணக்கத்திற்கு முந்தைய - வலைப்பூவின் முதல் பதிவே இப்படியா - ம்ம்ம்ம் - வாழ்க வளர்க - நல்வாழ்த்துகள்
Post a Comment