Thursday, December 4, 2008

ஏன், எதற்கு, எப்படி???

பத்து கேள்விகள்:

1. எல்லா அரசு அலுவலகங்களிலும் எத்தனை நவீனப்படுத்தப்பட்டிருந்தாலும், சிலந்தி வலை மாத்திரம் தொங்குவது எப்படி?

2. ஆண்களின் செருப்புகளில் குதிகால் பக்கத்தில் தட்டையாகவே த்க்கப்படும் பொழுது, பெண்களின் செருப்புகள் மட்டும் குதிகாலை உயர்த்தி தைப்பது ஏன்?

3. அலுவலகத்துக்கு செல்லும் பெண்களின் கைப்பைகள் ஃபேஷனாயிருப்பதப் போலல்லாமல், அரசுப்பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் மாத்திரம் ஏன் ஒரு நீண்ட பையை வைத்துக்கொள்கிறார்கள்?

4. சென்னையில் போக்குவரத்து காவல் துறையில் பணிபுரியும் பெரும்பாலான காவலர்கள் கருப்பாகவே இருக்கிறார்களே ஏன்?

5. மாலையில் வீடு திரும்பும் கணவன்மார் மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கி விட்டு கூடவே அல்வாவும் வாங்கிப் போகிறார்களே அது ஏன்?

6. மளிகைக் கடை வைத்திருப்பவர்களெல்லாம் பெரும்பாலும் நாடார்களாகவே இருக்கிறார்களே அது ஏன்?

7. ரவிக்கை தைப்பதற்கு மட்டும் பெண் டைலர்களிடத்திலும் கூட பெண்கள் அளவு ரவிக்கையையே கொடுக்கிறார்களே, பெண்ணுக்கு பெண் ஏன் அளவு எடுத்துக்கொள்வதில்லை?

8. பெண்களின் அழகு நிலையங்கள் மாத்திரம் கருப்பு கண்ணாடி அமைத்து மறைத்து இருக்கிறார்களே, ஆண்கள் தனது 10வயது மகளை அழைத்து வர சென்றாலும் வெளியே நிற்க வைத்து எதொ ஒரு காமுகன் வந்ததைப் போல எல்லா பெண்களும் பார்க்கிறார்களே, உள்ளே பெண்கள் எல்லாம் நிர்வாணமாக அமர்ந்து இருப்பார்களா,,, எப்படி?

9. கல்யாணத்திலே மாப்பிள்ளை மாத்திரம் முதலில் வருவது ஏன்? மணமக்கள் இருவரும் ஒன்றாக மேடைக்கு வராதது ஏன்?

10. எல்லா போஸ்ட் ஆபீஸிலும் கவர் ஒட்டுவதற்கு ஒரு பசை வைத்திருக்கிறார்களே, கவரை ஒட்டியபின் கை துடைப்பதற்கு ஒரு துணி கூட வைக்காதது ஏன்?

8 comments:

மதிய் said...

1. சிலந்தி பெரும்பாலும் கூரையில் வலை பின்னுவதால் அது தொங்குகிறது. தரையில் இருந்தால் அது தொங்காது..
2. பெண்கள் இப்போது குனிந்த தலை நிமிராமல் நடப்பதில்லை. அதனாலேயே இப்படி ஒரு ஏற்பாடு.
3. அப்படி ஒரு பேக்(Bag) வைத்துக்கொண்டால் அவர்கள் சினிமாவில் வரும் டீச்சர் போல தோன்றுவதால்...
4. சென்னை வெயிலுப்பா...
5. பேக்கப் ப்ளான்..
6. அது நாடார் தெருவாக இருக்கக்கூடும்.
7. அளவு ஜாக்கட் மட்டுமே உண்மை.
8. சில உண்மைகள் மறைக்கப்பட வேண்டியவை.
9. அவரவர் வசதியைப்பொறுத்து. சினிமாவில் சீனுக்கேற்ப பெண் அல்லது பையன் முதலில் வருவார்கள்.
10. பசையை வீட்டிலிருந்து எடுத்து வருவது கடினன். ஆனால் துணியை எளிதாக எடுத்து வரலாம்.

தராசு said...

ஐயா மதிய்,

வந்ததுக்கு டேங்சு

எங்கேயா இருந்தீங்க இத்தனை நாளா?

ஆமா அது என்ன 7 வது கேள்விக்கு இப்படி ஒரு பதில், அப்ப எதிர்ல தெரியர உடம்பு பொய்யா?

மதிய் said...

அடேங்கப்பா...

என்ன ஒரு பொறுப்பு...
பின்னூட்டம் உடனேயே வந்துவிட்டது...

இப்போதுதான் பதிவு தொடங்கி இருக்குறீர்கள்.. வாழ்துக்கள்...

பதிலெல்லாம் சும்மா ஒரு டமாசுக்கு...( இதை சொன்னால் நமக்கு நுண்ணரசியல் தெரியவில்லை என நினைத்துவிட வாய்ப்புண்டு)

தராசு said...

ஆரம்பிச்சுட்டாய்ங்கையா, ஆரம்பிச்சுட்டாய்ங்கையா,

சும்மா ஒரு சந்தேகம் கேட்டா அதுல நுண்ணரசியல் வேறையா?

ஒரு குன்சா பதில் சொல்லுங்கப்பு

சகாதேவன் said...

உங்கள் கேள்விகளூக்கு எனக்குத் தெரிந்த பதில்கள்.

1. என்னதான் கம்ப்யூட்டர், ஃபாக்ஸ், என்று நவீனமயமானாலும் உத்திரத்தை க்ளீன் செய்ய நவீன ஆட்டோமாட்டிக் கருவி இல்லை.
2. உயரமான கணவனுக்கு அமைந்த குட்டை மனைவிக்காக ஒரு செருப்பாளி செய்தது
3. ஆபீஸ் பெண்கள் பவுடர், ஒட்டுப்பொட்டு, கொண்டு சென்றால் போதும்
4. ட்ராபிக் போலிஸ் மேல் பஸ் விடும் கரும்புகையினாலோ?
5. பூ மனைவிக்கு, அல்வா தனக்கு.
6. எங்கள் ஊரில் வள்ளியாபிள்ளை மளிகை கடை இருக்கிறது.
7. திருஷ்டி படாமலிருக்கத்தான்
8. எனக்கு தெரியவில்லை
9. இனி காத்திருக்க பயிற்சி அளிக்கத்தான்
10.பின்னே க்ளூ ஸ்டிக் வாங்கி வைக்கமுடியுமா? சின்னதே ரூ20.
சகாதேவன்

தராசு said...

வாங்க சகாதேவன்,

வந்ததுக்கு டேங்சு.

அதிகமா பதிவு எழுத மாட்டீங்களோ? அந்த 8 வது கேள்வியை விட்டு விட்டீர்களே?

கிரி said...

//எல்லா போஸ்ட் ஆபீஸிலும் கவர் ஒட்டுவதற்கு ஒரு பசை வைத்திருக்கிறார்களே, கவரை ஒட்டியபின் கை துடைப்பதற்கு ஒரு துணி கூட வைக்காதது ஏன்? //

:-))

cheena (சீனா) said...

கேள்வி பதில் - குயிஸ்ஸா - ம்ம்ம்ம் - மறுமொழிகள் கம்மியா இருக்கே