Thursday, December 4, 2008

உண்மையிலேயே பாதிக்கப்பட்டது யாரு???

பத்து பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி, மெட்ராசுக்குள்ள ஒரு 4000 ரூபா சம்பளம் வாங்கிகினு, வாரமான ஒரு படம் பார்த்தமா, பிரியாணி தின்னமா, வீட்ல தூங்குனமான்னு அல்லாரும் நல்லாதான் போய்கினு இருந்தாங்க,
இஞ்சினீரிங் படிச்சுகினு, உள்நாடிலயே வேலை செஞ்சுகினு, பத்துதோ இல்லியோ கிடைக்கிற சம்பளத்தை வாங்கிகினு, அதிகமா ஆசைப்படாம, அதிகமா கவலையும் பட்டமதான் நம்ம பசங்களும் வாழ்ந்தாங்க. ஏதோ அப்பப்ப எவனா ஒருத்தன் திடீர்னு ஏணில ரெண்டு மூணு படிய ஒரே தாவல்ல தாவி ஏறணுமுன்னு ஆசைப்படுவான், அவன் எங்கினா துபாய்கு, இல்லைனா அந்த பாலைவன நாடுகள்ல எதுனா ஒரு மண்ணை பார்த்துட்டு ஒரு ரெண்டு வருசத்துல ஏயெப்பா ஆளை வுடுங்கடா சாமினு ஓடி வருவான். மறுபடியும் அதே சம்பளம், அதே சினிமா, அதே வேலைனு பொழுது போயிரும். எல்லாம் நல்லாதங்க இருந்திச்சு.

திடீர்னு எங்கிருந்தோ ஒரு ஈசல் பூச்சி கணக்கா வந்தாங்க, Y2Kனாங்க, நல்லா படிச்சிகினு இருந்த பசங்களையெல்லாம் சும்மா இன்னாவோ ஒரு சொர்கத்துக்கு இட்னு போறாப்புல பில்ட் அப் குடுத்தாங்க, நீ ஆறு மாசம் இந்த கோர்ஸை படி அப்புறம் இன்னா நீ ராஜாதான், உன்னை யாரும் புடிச்சுக்க முடியாது, அமெரிக்காகாரன் உன்னை அள்ளிகினு போவான், லட்சலட்சமா சம்பளம், அமெரிக்காவுலயே வூடு வாசல்ல்னு செட்டில் ஆயிர்லாம்னு எல்லாம் படம் காமிச்சாங்க, பசங்க நல்ல வேலையிலிருந்தவனெல்லாம் வேலைய விட்டுட்டு கடன் வாங்கி அந்த கோர்ஸை படிச்சான், அதுல முழிச்சுகினவன் எல்லாம் எதோ போட்ட காசை எடுத்தான், ஒரு சிலர் நல்லாவும் செட்டில் ஆயிட்டான். ஆனா, நெறய பேரு உள்ள வேலையையும் விட்டுட்டு முன்னாலயும் போக முடியாம, பின்னாலயும் வர முடியாம பைத்திய காரனானதுதான் மிச்சம்.

அப்புறமா இந்த தனியா பஸ் உட்டுகுனு ஆளுங்கள அவுங்களே இட்னு போயிட்டு கூட்டியார கம்பனிங்களா வந்தாங்க, ஒவ்வொருத்தனும் ஆயிரம் பேர் இரண்டாயிரம் பேர்னு ஆளெடுத்தாங்க, நேத்து வரைக்கும் மெட்ராசுக்கு வர்ரதப்பத்தி யோசிக்காதவனெல்லாம், இப்ப மெட்ராசுல ஐம்பதாயிரம், அறுபதாயிரம்னு சம்பளம் வாங்கிகினு, கழுத்துல கம்பனி கட்டுன தாலிய கட்டிகினு, (அந்த தாலிய பாத்தா மாங்கல்யத்துல இவனோட போட்டோ வேற) எந்நேரமும் செல் போன்ல பீட்டர் உட்டுகுனு ஒரே பந்தா பண்ணிகினு இருந்தாங்க. சும்மா 1500 ரூவாய்க்கு வாடகைக்கு கெடச்ச வீடு கூட 6000 ரூவய்க்கு போயிடுச்சி, இடையில தரகர்னு சொல்ற படுபாவிங்க அவுனுங்களுக்கு கமிஷன் கிடைக்கணும்கறதுக்காக இஷ்டத்துக்கு வாடகையை ஏத்தி வுட்டானுங்க, வீட்டுக்காரனும் வாடகை ஜாஸ்த்தியா கிடைக்கும்னு நெனைச்சுகிட்டு, நல்லா குழந்தை குட்டியோட குடியிருந்து ஒழுக்கமா வாடகை குடுத்துட்டு, பிரச்சனை பண்ணாம இருந்த நல்ல குடும்பஸ்த்தனையெல்லாம் காலி பண்ண வெச்சு தெருவுல நிறுத்துனாங்க, அவிங்களோட வயித்தெரிச்சலோ இல்லை சாபமோ தெரியல, திடீர்னு அல்லாம் அங்கங்க அப்படியே நின்னு போச்சு,

தரமணிக்கு அப்பால சிறுசேரி வரைக்கும் கட்டுன கட்டடமெல்லாம் அப்படியே சிமெண்டு கறையோட கம்பிய நீட்டிகுனு பல்லை இளிச்சுட்டு நிக்குது. நல்லவங்களை காலி பண்ணவெச்ச வீட்டுக்காரனெல்லாம் இப்ப ஆள் தேடிகினு அலையறாங்க, பந்தா பண்ண பார்ட்டியெல்லாம் எங்க போச்சுனே தெரியல, லட்ச லட்சமா வரதட்சணை குடுத்து இந்த பந்தா பார்டிகளுக்கு பொண்ணு குடுத்தவங்க கையை பெசஞ்சுகிட்டு கடவுளை வேண்டிகினு இருக்கறாங்க. பார்த்தா ஒரு பக்கம் பாவமாதான் இருக்குது, எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்களேனு,

ஆனா, ஒண்ணு மாத்திரம் மனுஷன் புரிஞ்சுக்கணும், நீ நெனைக்காத ஒண்ணு உங்கிட்ட வேகமா வந்துதுன்னா அது வந்த வேகத்துலயே போயிரும், நீ விரும்பற ஒண்ணு உங்கிட்ட மெதுவா வந்துதுண்ணா அது ரொம்ப நாள் உங்கிட்டயே இருக்கும்.

எனக்குதெரிஞ்சு நெறய பேர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இதுனால பாதிக்கப்பட்டிருக்கிறாங்க, அதெல்லாம் யாருன்னு சொல்லுங்களேன்.

20 comments:

DHANS said...

வாங்க வாங்க
எடுத்த உடனே அதிரடியா இறங்கிட்டீங்க....நல்லபதிவு அனா இதுக்கு எப்படியும் பதில் கொஞ்சம் காட்டமாவே வரும் பாருங்க இந்த தகவல் தொழில்நுட்ப துறையில் இருப்பவரிடமிருந்துவோர்ட் வெரிபிகேசன் எடுத்துட்டா நல்ல இருக்கும், எனக்கும் இந்த அறிவுரையை முதலில் கூறினார்கள்,

தராசு said...

வாங்க தன்ஸ்,

வந்ததுக்கு டேங்சு,

அது இன்னாதுங்க வோர்ட் வெரிஃபிகேஸன், கொஞ்சம் சொல்லுங்க

DHANS said...

பின்னூட்டம் போடும்போது ஒரு வார்த்தைய காமிச்சு அப்படியே எழுத்துப்பிழை இல்லாம எழுதினாதான் ஒத்துப்பேன் என்று சொல்லுதே அதுதாங்க.. உங்க செட்டிங்க்ஸ் ல மாத்துங்க

தராசு said...

டேங்சுங்க தன்ஸ்,

மாத்தறதுக்கு முயற்சிக்கிறேன்.

தராசு said...

தன்ஸ்,

மாத்தீட்டேன். இப்ப சரி பார்த்து சொல்லுங்க.

Anonymous said...

nalla thaan eluthi irukkinga

DHANS said...

மாறிடுச்சு :)

DHANS said...

மாறிடுச்சு :)

தராசு said...

தன்ஸ்,

திருத்தியதற்கு டேங்சு,

அனானி,

வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

தன்ஸ்,

திருத்தியதற்கு டேங்சு,

அனானி,

வந்ததுக்கு டேங்சு.

Anonymous said...

We cannot blame these software people also for the whole thing that has happened, they are in their early 20ies and 30ies, and they get so much of money which they do not know how to spend it, then what will happen, This is what will happen.

தராசு said...

வாங்க அனானி அண்ணே,

நாங்க யாரையும் குத்தம் சொல்லலீங்க, எல்லாரும் நல்லா இருக்கணும்னு சொல்லறோம்.

இராகவன், நைஜிரியா. said...

//ஆனா, ஒண்ணு மாத்திரம் மனுஷன் புரிஞ்சுக்கணும், நீ நெனைக்காத ஒண்ணு உங்கிட்ட வேகமா வந்துதுன்னா அது வந்த வேகத்துலயே போயிரும், நீ விரும்பற ஒண்ணு உங்கிட்ட மெதுவா வந்துதுண்ணா அது ரொம்ப நாள் உங்கிட்டயே இருக்கும். //
முடிவில் நச்ன்னு சரியாக சொல்லியுள்ளீர்கள். இது சாப்ட்வேர் இஞ்னியர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பொருந்தும்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கின்றேன்.. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு எல்லா பணத்தையும் இழந்தவர்கள் எத்துணைபேர் என்று.
வேகமாக வருவது வேகமாகவே திரும்பி செல்லும் என்பது உலக நியதி.

கடைசி பக்கம் said...

//ஆனா, ஒண்ணு மாத்திரம் மனுஷன் புரிஞ்சுக்கணும், நீ நெனைக்காத ஒண்ணு உங்கிட்ட வேகமா வந்துதுன்னா அது வந்த வேகத்துலயே போயிரும், நீ விரும்பற ஒண்ணு உங்கிட்ட மெதுவா வந்துதுண்ணா அது ரொம்ப நாள் உங்கிட்டயே இருக்கும்.
//

Hey all the words are from my heart.

Exact coincidence. Wow!!!
Really this sudden growth( may call also swelling) makes many people crazy.

Good article.

தராசு said...

வாங்க இராகவன்,

வந்ததுக்கு டேங்சு,

ஆமா, வட்டி வாங்கியவன் என்னைக்கு நல்லா வாழ்ந்திருக்கிறான். அடாவடியா வட்டி வாங்கின பேங்க் கூட தலையில துண்டை போட்டுகிட்டு போயிடுச்சி, கூடவே அடுத்தவன் வாயில மண்ணையும் அள்ளி போட்டுட்டானுங்க பாவிங்க.

தராசு said...

வாங்க கடைசி பக்கம்

வந்ததுக்கு டேங்சு,

அளவுக்கு மீறினா எல்லாமே நஞ்சுதான்

கிரி said...

இராகவன், நைஜிரியா. said...
//ஆனா, ஒண்ணு மாத்திரம் மனுஷன் புரிஞ்சுக்கணும், நீ நெனைக்காத ஒண்ணு உங்கிட்ட வேகமா வந்துதுன்னா அது வந்த வேகத்துலயே போயிரும், நீ விரும்பற ஒண்ணு உங்கிட்ட மெதுவா வந்துதுண்ணா அது ரொம்ப நாள் உங்கிட்டயே இருக்கும். //
முடிவில் நச்ன்னு சரியாக சொல்லியுள்ளீர்கள். இது சாப்ட்வேர் இஞ்னியர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பொருந்தும்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கின்றேன்.. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு எல்லா பணத்தையும் இழந்தவர்கள் எத்துணைபேர் என்று.
வேகமாக வருவது வேகமாகவே திரும்பி செல்லும் என்பது உலக நியதி.//

வழிமொழிகிறேன்

தராசு said...

டேங்சு கிரி

cheena (சீனா) said...

அன்பின் தராசு

நச்சென்ற முடிவு - வேகமும் நிதானமும் பற்றிய முடிவு - நல்லாருக்கு - ஆமா y2K பத்தி இப்ப எழுதுறீங்க - ஏறகனவே எழுதி வச்சதா ?வலைப்பூவினிற்குப் புதியது மாடிரி தெரிலயே ! ச்ச்ச்சும்மா அதிருது பதிவெல்லாம் ........ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள்

ஸ்ரீதர்கண்ணன் said...

நீ விரும்பற ஒண்ணு உங்கிட்ட மெதுவா வந்துதுண்ணா அது ரொம்ப நாள் உங்கிட்டயே இருக்கும்

எப்டிங்க இப்படி !!!!!!!