Wednesday, September 23, 2009

ஜுகல்பந்தி - 23 – 09 – 2009 , காமன் மேன்

நகரம் – அமிர்தசரஸ் - தங்க நகரம்

சீக்கியர்களின் புனித பூமி, பொற்கோவில், பாகிஸ்தானுக்கு அருகில் இருக்கும் நகரம், கால்ஸா பிரிவினரின் வீர விளையாட்டுகளுக்கு பெயர் போன பூமி, மண்ணிலும் நீரிலும் மாத்திரமல்லா; காற்றிலும் வீரம் உலவும் பூமி, பிரிவினையின் போது பிரிய மனமில்லாது பிரிந்தவர்களின் துயர வடுக்கள் துடைக்கப் படாமல் இன்னும் புண்களாய் உள்ளது என சிறப்பும், சிறுமையும் ஒருங்கே உள்ள முரண்பாடுகளின் மொத்த உருவமே அம்ரிஸ்டர் எனப்படும் அமிர்த சரஸ் நகரம்.

துங் என்ற பழங்குடியினர் வசித்து வந்த இந்த பூமியை குரு ராம்தாஸ் ஜி என்பவர் கி.பி.1574 ல் 700 ரூபாய்க்கு வாங்கினார். பிறகு இங்கு இருந்த வளங்களைப் பார்த்து குளங்கள் வெட்டவும் மரங்கள் நட்டவும் என திருப் பணிகள் தொடங்கி, வளம் கொழிக்கும் பூமியானவுடன் அதற்கே உரிய சண்டைகளும் சச்சரவுகளும், உரிமைப் பிரச்சனைகளும், உழைக்கும் வர்க்கத்தின் இருப்பியல் நிர்பந்தங்களும் என அரசியல் ஆரம்பித்தவுடன் இங்கிருக்கும் உழைக்கும் வர்க்கம் தனக்கென ஒரு அடையாளம் தேடிக் கொண்டதுதான் சீக்கிய மார்க்கம். அதன் இன்னொரு பரிமாணமே கால்ஸா பிரிவு என்ற வீரர்கள் படை. இந்திய திருநாட்டுக்குள் யார் நுழைந்தாலும் அவர்கள் இந்த நகரைக் கடந்துதான் வர வேண்டுமென்பதாலும், நுழைந்தவுடன் கண்ணில் காணும் வளங்கள் அவர்களது நாவில் நீர் ஊற வைப்பதாலும், எப்பொழுதும் ஒரு எல்லை பாதுகாப்பு படையை போலவே இந்த மண்ணின் மைந்தர்கள் வாழ வேண்டிய நிர்பந்தத்துக்குள்ளானார்கள். ராஜஸ்தானிய ராஜ புத்திரர்களை புரட்டியெடுத்த ஆப்கானிய போர் வீரன் அப்தாலி, தன் கண்களை இந்த மண்மீதும் பதிக்க தவறவில்லை. வளங்கள் ஒரு புறம் இருந்தாலும், கண்ணைப் பறித்தது இங்குள்ள மங்கையர்களும் கூடத்தான். கோதுமை நிறத்தில் கூரிய நாசியும், நெடிதுயர்ந்த வனப்பும், அகன்ற தோள்களும், இடுப்பு வரை கூந்தலுமென இருக்கும அழகுப் பதுமைகளை கண்டு மனதை பறி கொடுத்த வந்தேறிகள் அநேகர். இவர்களிடமிருந்து தங்களை பாதுகாக்கத்தானோ என்னவோ ஒவ்வொரு சீக்கிய பெண்ணும் கூட எப்பொழுதும் கத்தியும் கையுமாகவே இருந்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 13, 1939, எல்லோருக்கும் போலவே இந்நகரத்து வாசிகளுக்கும் ஒரு இனிய காலையாகத்தான் விடிந்தது. ஆனால் அன்று நிகழப் போகிற விபரீதம் தெரியாமலே, “வாஹே குரு”, என்ற கோஷங்களுடன் அமர்ந்திருந்த 1500 சொச்சம் பேரை தயவு தாட்சண்யமின்றி கொன்று குவிக்கும்படியாக தனது துப்பாகிகளை திருப்பிய ஜெனரல் டயர் இங்குதான் தனது திருவிளையாடலை நடத்தினார். துப்பாக்கிகள் ஓய்ந்த பின் எண்ணிப்பார்த்தால் 329 பேர் கடைசி முறையாக “வாஹே குரு” என அழைத்திருந்தார்கள்.

அடுத்ததாக சுதந்திரமடைந்தோம் என்ற சந்தோஷ கீதம் காதில் படுவதற்கு முன்னே, வந்த இந்திய பாகிஸ்தான் பிரிவினை தனது கோரக்கரங்களால் இன்னொரு முறை இந்நகர வீதிகளில் ரத்த ஆறை ஓடச்செய்து விட்டுப் போனது. டோம்னிக் லேப்பயர் மற்றும் லேரி காலின்ஸ் என்ற இருவர் எழுதிய Freedom at Midnight என்ற புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். பிரிவினையின் போது இந்நகரமும் லாஹூரும் சந்தித்த அனைத்து வேதனைகளையும் வார்த்தைகளில் அழுது கொண்டே சொல்லியிருப்பார்கள்.

இன்று இந்த நகரம் புதுப் பொலிவுடன், பொற்கோவில் மற்றும் ஏனைய புராதனச் சின்னங்களின் சிறப்புகளுடன், மனித நேயமிக்க சீக்கிய மக்களுடன், கால்ஸா பிரிவினரின் வீர விளையாட்டுகளுடன் என இன்னும் எத்தனையோ சிறப்புடன் தனது பெருமையை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

பதிவுலகம் – காமன் மேன்

உன்னைப் போல் ஒருவன் என கமலஹாசன் ஒரு படம் எடுத்து விட்டார். அப்பப்பா, பதிவுலகம் எனும் ரத்தபூமியிலும் விமர்சனங்களால் பதிவர்கள் விளாசித்தள்ளுவதை பார்த்தால் மூச்சு முட்டுகிறது. இந்துதுவா, காமன் மேன், பிராமண அகங்காரம், கட்டுடைத்தல், பின் நவீனத்துவம், இஸ்லாமிய தீவிரவாதம், குஜராத் மோடி, வாஜ்பாய், நஸ்ருத்தீன் ஷா, மோகன்லால், உயர்சாதி திமிர், காவி நிற வாடை, சிறுபான்மையினரின் இழிவு, கோவை குண்டு வெடிப்பு, ஆனா பாருங்க நிஜ காமன் மேன் யாருன்னு இன்னும் தெரியலீங்க.

ஸ்ஸ்ஸோ, ஆள விடுங்கடா சாமி, இப்ப இருக்கற நிலைமையில பதிவுலகத்துல இந்த படத்தைப் பத்தி ஒரு பதிவாவது போடலைன்னா, நீயெல்லாம் என்னத்த எழுதி, என்னத்த கிழிச்சேன்னு கேட்டுருவாங்க போலிருக்குது. ஆனா பாருங்க நிஜ காமன் மேன் யாருன்னு இன்னும் தெரியலீங்க.

அய்யா சாமிகளா, சிங்கைப்பதிவர் செந்தில்நாதனுக்கு ஒரு தேவைன்ன உடனே முகம் பார்த்தறியாத அந்த நண்பருக்கு வரிஞ்சு கட்டிட்டு முன்னால வந்து உதவி பண்ணுனீங்களே, பதிவுலகம்னா என்னான்னு பாருங்கடா, நட்புன்னா அதுக்காக மலைகளெல்லாம் எங்களுக்கு ஒரு தூசுடான்னு செஞ்சு காமிச்சீங்களே, அப்படியே இருங்கைய்யா, அதுதான்யா நல்லாருக்கு.

ங்கொய்யால பக்கங்கள் :


தீப்புடிச்சா ஓடி அணைக்கறவன் ஃபயர் மேன்,

லெட்டர் போட்டா தேடி குடுக்கறவன் போஸ்ட் மேன்,

ராவும் பகலுமா காவல் இருக்கறவன் வாட்ச் மேன்,

ங்கொய்யால,

கலவர பூமில கம்னு இருக்கறவன்தாண்டா காமன் மேன்.

22 comments:

anujanya said...

கான்பூர், பாட்னா போல அமிர்தசரஸ் பற்றி எழுதியதும் நல்லா இருக்கு. அங்கேயும் வேலை நிமித்தம் பயணமா?

காமன் மேன் - :)

அனுஜன்யா

தராசு said...

வந்ததுக்கு நன்றி தல,

ஆமாம், அங்கும் சில நாள் வாழ்ந்திருக்கிறேன்.

அறிவிலி said...

காமன் மேன்
:)))

வேந்தன் said...

//கலவர பூமில கம்னு இருக்கறவன்தாண்டா காமன் மேன்//
:))))

Raju said...

//கலவர பூமில கம்னு இருக்கறவன்தாண்டா காமன் மேன்//

அப்ப நானா அது..!

Thamira said...

ங்கொய்யால.. டாப்பு.!

தராசு said...

அறிவிலி டேங்சு

தராசு said...

வாங்க வேந்தன் டேங்சு

தராசு said...

ராஜூ,

இப்பிடியெல்லாம் வேற நெனப்பு இருக்குதா????

தராசு said...

ஆதி,

டேங்சு தல

Cable சங்கர் said...

இது நல்லாருக்கு, அது நல்லாருக்குன்னு எழுதணுமினு படிச்சிட்டே வநதா ங்கொய்யாலே..கலக்கிடுது..

நாஞ்சில் நாதம் said...

ங்கொய்யால கலவர பூமியில காத்து வந்குறவந்தான் காமன்மேனா?

காமன் மேன் - ஜுகல்பந்தி சூப்பர்

Unknown said...

அமிர்தசரஸ் - அருமை..

//.. ங்கொய்யால,

கலவர பூமில கம்னு இருக்கறவன்தாண்டா காமன் மேன்..//

ஹா.. ஹா..

தராசு said...

வாங்க கேபிள் அண்ணே,

டேங்சு

தராசு said...

//@ நாஞ்சில் நாதம் said...
ங்கொய்யால கலவர பூமியில காத்து வந்குறவந்தான் காமன்மேனா? //

அட, இப்படி வேற எழுதலாமா???

நாஞ்சிலண்ணே, டேங்சு.

தராசு said...

வாங்க பட்டிக்காட்டான், டேங்சு

எம்.எம்.அப்துல்லா said...

//உழைக்கும் வர்க்கத்தின் இருப்பியல் நிர்பந்தங்களும்

//

பெரிய பின்னவீனத்துவவாதி ஆயிட்டீங்க.வாழ்த்துகள் அண்ணே.

:))

Karthikeyan G said...

//இந்துதுவா, காமன் மேன், பிராமண அகங்காரம், கட்டுடைத்தல், பின் நவீனத்துவம், இஸ்லாமிய தீவிரவாதம், குஜராத் மோடி, வாஜ்பாய், நஸ்ருத்தீன் ஷா, மோகன்லால், உயர்சாதி திமிர், காவி நிற வாடை, சிறுபான்மையினரின் இழிவு, கோவை குண்டு வெடிப்பு,//

Sir,
This is "Unity in Diversity" :)

GHOST said...

ஜுகல்பந்தி - கலக்கல்

அதிலும் ங்கொய்யால மெய்யாலுமே நல்லாருக்கு

தராசு said...

வாங்க அப்துல்லா அண்ணே,

டேங்சு.

தராசு said...

கார்த்திகேயன்,

டேங்சு

தராசு said...

வாங்க கோஸ்ட்,

டேங்சு