Wednesday, October 7, 2009

அப்பாவும், ஈ மெயிலும்

இந்தாப்பா, உனக்கு புதுசா நோட்டுப்புத்தகம் வாங்கி வந்திருக்கேன். பத்திரமா கிழியாம வெச்சுக்கணும்.

அப்பா உங்களுக்குன்னு ஒரு ஈ மெயில் ஐடி ஓப்பன் பண்ணீட்டம்பா, பாஸ்வேர்ட கரெக்டா மறக்காம ஞாபகம் வெச்சுக்கோங்க.

நோட்டுப் புத்தகத்துல முதல் பக்கத்துல உன் பேரையும், வகுப்பையும் எழுதுடா.

முதல்ல ஜி மெயில் டாட் காம்னு டைப் பண்ணி என்டர்னு ஒரு பட்டன் இருக்குமே அத தட்டுங்கப்பா.

வலது கையில பேனாவை பிடிச்சு, நிப்பை அழுத்தாம மெல்லமா தேய்ச்ச மாதிரி எழுதுடா.

அப்பா, வலது கையில மௌஸ பிடிச்சுகிட்டு, ஆள்காட்டி விரல் இடது பட்டன்லயும், நடு விரல வலது பட்டன் மேலயும் வெச்சுக்கங்கப்பா

நோட்ட நேரா திருப்பி உங்கைக்கு வாகா வசதியா வெச்சுகிட்டு எழுதுப்பா, நோட்டு மேல படுத்த மாதிரி உக்காரத.

அப்பா, மானிட்டர்ல இருக்கற ஒவ்வொரு பட்டனயும் நல்லா பாருங்கப்பா, உங்களுக்கு கிட்டப் பார்வை இருக்கறதுன்னால சரியா தெரியலண்ணா கொஞ்சம் பின்னால தள்ளி உக்கார்ந்து பாருங்க.

முதல்ல நீ என்ன எழுதப் போறீங்கறதுக்கான தலைப்பை முதல் பக்கத்துல நடுவுல எழுது.

அப்பா, இப்ப மௌஸ தள்ளினீங்கண்ணா மானிட்டர்ல ஒரு அம்புக்குறி தெரியுமே, அத கம்போஸ் மெயில்னு ஒரு பட்டன் இருக்கும் பாருங்க, அது மேல வெச்சு, மௌஸோட இடது பட்டனை ஒரு தரம் அமுத்துங்கப்பா.

அனுப்புனர்னு முதல் வரில எழுதீட்டு, இரண்டாவது வரியிலிருந்து உன்னோட முகவரிய எழுதுப்பா.

இப்ப உங்க முன்னால ஒரு மெயில் ஓப்பன் ஆயிருக்கும் பாருங்கப்பா.

அனுப்புனர் முகவரிய எழுதி முடிச்சதுக்கப்புறம் கீழ ஒரு வரிய விட்டுட்டு பெறுநர்னு எழுதி, நீ யாருக்கு இந்தக் கடிதத்தை எழுதறயோ அவுங்க முகவரிய எழுது. எழுத்துப் பிழை இல்லாம சரியா எழுது. முகவரியோட ஒவ்வொரு வரிக்கும் கடைசியில கமா போட்டுட்டு, கடைசி வரியில முற்றுப் புள்ளி வை.

இப்ப To ஒரு வரி இருக்குமே அதுல நான் உங்களுக்கு நோட்டு புத்தகத்துல அக்காவோட மெயில் ஐடிய எழுதிக்குடுத்துருக்கன்ல, அத அப்படியே அடிங்கப்பா. கீ போர்டுல இருக்கற ஒவ்வொரு பட்டனா பாத்து தப்பில்லாம அடிங்க. அந்த @ எழுத்த அடிக்கறதுக்கு Shift னு ஒரு பட்டன் இருக்கும் பாருங்க அதை அழுத்திகிட்டு 2 ம் நம்பர் பட்டனை அழுத்துங்க.

இப்ப ஒரு வரி விட்டுட்டு, இடது பக்கமிருந்து ஒரு வார்த்தையளவு இடைவெளி விட்டுட்டு பொருள் அப்படீன்னு எழுதி, ஒரு விகிதப் புள்ளி வெச்சுட்டு எங்கள் ஊர் திரு விழான்னு எழுதிட்டு பொருள்ல ஆரம்பிச்சு எல்லாத்துக்கும் சேர்த்து அடியில் ஒரு கோடு போடு.

இப்ப அந்த To ங்கற லைனுக்கு கீழ CC ன்னு ஒரு லைன் இருக்கும், அத விட்டுடுங்க, அதுக்கும் கீழ Sub னு எழுதி ஒரு காலியிடம் இருக்கும் பாருங்க, அந்த இடத்துக்கு மௌஸ மூவ் பண்ணி அம்புக் குறிய கொண்டு வாங்கப்பா, இப்ப மௌஸுல இருக்கற இடது பக்க பட்டன தட்டுனீங்கன்னா ஒரு கோடு வந்து வந்து போகும், அங்க அப்பாவின் கடிதம்னு டைப் அடிங்க.

நல்லா பிழை இல்லாம பொறுத்து நிதானமா எழுதுப்பா, ஒவ்வொரு எழுத்தா எழுது, அந்த சுழி, கூட்டெழுத்தெல்லாம் தெளிவா இருக்கணும்.

நீங்க எப்படி தமிழ்ல எழுதுவீங்களோ அப்படியே டைப் அடிங்கப்பா, கஷ்டமா இருந்துதுன்னா, நான் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் சரியான ஆங்கில எழுத்தை எழுதி வெச்சிருக்கன்ல, அந்த நோட்டை பக்கத்துல வெச்சு பாத்து டைப் அடிங்க.

இப்ப அந்த பொருள்ங்கற வரிக்கு கீழ ஒரு வரி விட்டுட்டு, இப்ப உங்க ஆசிரியருக்கு நீ எழுதறீன்னா மதிப்பிற்குரிய வகுப்பாசிரியர் அவர்களுக்கு அப்படீன்னு எழுது. பேனாவை கொஞ்சம் சாச்சுப் பிடி, அதை ஏன் அப்பிடி நெட்டுக் குத்தலா ஆணி புடிச்ச மாதிரி புடிச்சிருக்க.

இப்ப அந்த வரிக்கும் கீழ ஒரு காலியிடம் கட்டம் போட்டு இருக்குமல்லப்பா, அங்க அம்புக்குறிய கொண்டு வந்து மறுபடியும் மௌஸோட இடது பக்க பட்டனை தட்டுங்க, இப்ப அந்த இடத்துலயும் ஒரு கோடு வந்து வந்து போகுதா, அங்க அன்புள்ள மகளுக்குன்னு டைப் அடிங்க, கீ போர்டுல இருக்கற பட்டனையெல்லாம் மெதுவா அழுத்துங்க, ஏன் இப்படி டக்கு டக்குனு டைப் ரைட்டராட்டம் அடிக்கறீங்க.

இப்ப உங்க வாத்தியாருக்கு நம்ம ஊர்ல நடந்த திரு விழாவுல நீ என்னெல்லாம் பார்த்தியோ, அத அப்படியே நிதானமா யோசிச்சு ஒரு கடிதம் மாதிரி எழுது. அவசரப் படாம நிதானமா எழுது.

இப்ப அக்காவுக்கு நம்ம ஊர் திரு விழாவுல நடந்த ஒவ்வொண்ணையும் ஒரு விஷயம் விடாமா, நிதானமா யோசிச்சு எழுதுங்க.

எழுதீட்டயா, எல்லாத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தரமா படிச்சு பாத்துக்க, எதும் தப்பு இருந்தா திருத்திக்க, கடைசில இப்படிக்கு தங்கள் கீழ்ப்படிதலுள்ள அப்படீன்னு எழுதீட்டு, அதுக்கு கீழ உன் பேர எழுது.

கடைசியில அன்புள்ள அப்பான்னு எழுதி முடிச்சிருப்பீங்களே, எதுக்கும் ஒரு தரம் நீங்க எழுதுனத படிச்சு பாத்துக்குங்க. இப்ப மறுபடியும் மௌஸ நகர்த்தி அம்புக்குறிய அந்த இடது மூலைல Send அப்படீன்னு ஒரு பட்டன் இருக்கும் பாருங்க, அதுக்கு நேரா வெச்சு, ஒரு தரம் இடது பட்டனை அமுக்குங்க

அவ்வளவுதாண்டா, சபாஷ், உங்க வாத்தியாருக்கு நீ ஒரு கடிதம் எழுதீட்ட பாத்தயா

அவ்வளவு தான்ப்பா, நீங்களும் அக்காவுக்கு ஈ மெயில் அனுப்பீட்டீங்க பாத்தீங்களா.


பின் குறிப்பு : இந்த பதிவுக்கான முன்னோடி நம்ம கார்ப்பரேட் கம்பர் எழுதுன இந்த பதிவு.

27 comments:

Cable Sankar said...

நைஸ்

சஹானா a raga said...

கலக்கல் பதிவு

கார்க்கி said...

நினைச்சுக்கிட்டே வந்தேன்.. கடைசியா பி.கு. இதுவும் நல்லாயிருக்கு தல

♠ ராஜு ♠ said...

நானும் இது ஏரோபிளேன் பதிவாச்சேன்னு நெனைச்சுக்கிட்டே வந்தேன்..! அதேதான். இதுவும் நல்லா இருக்கு.

தராசு said...

கேபிள் அண்ணே,

ஏன் இந்த டெம்பிளேட் பின்னூட்டம்.

தராசு said...

சஹானா,

டேங்சு

தராசு said...

கார்க்கி,

டேங்சு

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு.

தராசு said...

ராஜூ,

எலேய் மக்கா,

என்ன கார்க்கியோட ரிப்பீட்டா.....

தராசு said...

வாங்க விக்னேஷ்வரி,

டேங்சு.

பிரபாகர் said...

அருமையா கம்பேர் செஞ்சி எழுதியிருக்கீங்க... வாழ்த்துக்கள். ரொம்ப நல்லாருக்கு.

பிரபாகர்.

நர்சிம் said...

அருமை. லிங்க் கொடுத்து நினைவு படுத்தியதற்கு நன்றி தல.

தராசு said...

வாங்க பிரபாகர்,

டேங்சு.

தராசு said...

டேங்சு கம்பரே.

எம்.எம்.அப்துல்லா said...

கம்பர் பதிவிற்கு சற்றும் குறைவில்லாத பதிவு :)

தராசு said...

வாங்க அப்துல்லா அண்ணே,

எங்க போயிருந்தீங்க,

வந்ததுக்கு டேங்சு

பட்டிக்காட்டான்.. said...

கலக்கல்..!

தராசு said...

வாங்க பட்டிக் காட்டான்,

டேங்சு.

Jawarlal said...

மகன் தந்தைக்காற்றும் நன்றி மின்னஞ்சலில்
மேதைஎனச் செயல்.

ரொம்ப இன்னவேடிவ்! பாராட்டுக்கள்.

http://kgjawarlal.wordpress.com

ஊடகன் said...

நீங்கள் எழுதிய இந்த உரையாடல் அனைத்தும் உண்மையே.........

ஒரு எதார்த்தமான , இயல்பான பதிவு ..........

தொடருங்கள்.........

அத்திரி said...

அண்ணே கலக்கல்

முரளிகண்ணன் said...

நல்ல ரீமேக்.

தராசு said...

வாங்க ஜவர்லால்,

டேங்சு

தராசு said...

வாங்க ஊடகன்,

டேங்சு

தராசு said...

அத்திரி அண்ணே,

எங்க போனீங்க, ஆளையே காணோம்.

டேங்சு.

தராசு said...

வாங்க முரளி,

ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க.

டேங்சு.

ஆப்பு said...

ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.html