Wednesday, September 2, 2009

ஜுகல்பந்தி - 2 - 09 - 2009, துருவங்களான தொப்புள் கொடி உறவு

நகரம் - நாக்பூர் – மத்திய நகரம்.

இந்திய வரைபடத்தின் மத்தியிலுள்ள நகரம். இங்கிருக்கும் பூஜ்ஜிய மைல் கல்லிலிருந்து இந்தியாவின் அனைத்து பாகங்களுக்குமான தொலைவு கணக்கிடப்படுகிறது. இந்தியாவிலேயே உள்ள அனைத்து விமான கட்டுப்பாடுடு அறைகளிலும் மிகவும் பரபரப்புடனும் சுறு சுறுப்புடனும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை நாக்பூரிலுள்ளது. தெற்கு வடக்காகவும், கிழக்கு மேற்காகவும் செல்லும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு விமானங்கள் இங்கு நாக்பூரில் கைநாட்டு போட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும். மேலும் ரயிலாகட்டும், தரை வழிப் போக்குவரத்தாகட்டும் எல்லோரும் நாக்பூரின் வழியாகத்தான் செல்ல வேண்டிய கட்டாயத்திலிருப்பதால் இந்த நகரத்திற்கான் முக்கியத்துவம் அதிகம் அதிகரித்திருக்கிறது.

வரலாற்று ரீதியாக இந்த நகரத்தின் பெருமை 3000 வருடங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. நாக்பூரின் நடுவில் ஓடும் ஒரு நதி பாம்பு போல் வளைந்து வளைந்து செல்வதால், இதை நாக் நதி (நாகப் பாம்பின் நினைவாக) என அழைக்க ஆரம்பித்து, அந்த நதியை சுற்றி கட்டப்பட்ட பட்டணத்துக்கு நாக்பூர் என்று பெயரிட்டு விட்டார்கள். இன்றும் இதன் நினைவாக நாக்பூர் நகராட்சியின் அதிகார முத்திரையில் படமெடுத்து நிற்கும் நாகப் பாம்பினை காணலாம். மத்திய நகரம் என்பதாலோ, அல்லது நதிக்கரையில் அமைந்து வளம் கொழித்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ தெரியவில்லை, இந்த சமவெளிப் பரப்பில் தோன்றிய அனைத்து ஆட்சியாளர்களுக்கும் இந்த நகரத்தை தன்னகத்தே வைத்திருப்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாயிருந்தது. கி.மு 8 ம் நூற்றாண்டுக்கு இழுத்துச் செல்லும் வரலாற்று குறிப்புகள் நமக்கு இந்த நகரத்தையும் அதைச் சுற்றியுள்ள விந்திய பிரதேசங்களையும் ஆண்ட மகத அரசர்களின் அறிமுகத்தை தருகின்றன. அடுத்து இது 4 – ம் நூற்றாண்டில் குப்த பேரரசுடன் நல்லுறவு கொண்டிருந்த வாகடக வம்சத்தை சேர்ந்த முதலாம் பிருத்வி சேனா அரசனின் கீழ் நல்லாட்சி பெற்றிருக்கிறது.

பிறகு போன்ஸ்லே வம்சத்தின் ரகோஜி, ஜனோஜி, முதோஜி மற்றும் இரண்டாம் ரகோஜி என ஏகப்பட்ட ஜி ஜி க்களே இந்த பிரதேசத்தை ஆண்டிருக்கிறார்கள். அவரவர் பலத்திற்கு தகுந்தாற்போல் இந்த நகரம், மராத்தியர்கள், குஜராத்திகள், ராஜபுத்திரர்கள், குப்தர்கள் என பலர் கையிலும் மாறி மாறி வளர்ந்தும் செழித்துமிருக்கிறது. பிறகு ஆங்கிலேயர்களின் கைக்கு மாறியபின் இந்த போன்ஸ்லே வம்சத்திலிருந்த எள்ளு கொள்ளு பேரன்களில் ஒருவரான இன்னொரு ரகோஜியை பொம்மை அரசராக நியமித்துவிட்டு, நாட்டாமை பண்ணினார்கள். இந்திய வியாபார காந்தமான டாடா குடும்பத்தின் முதல் துணி தொழிற்சாலை இங்குதான் தொடங்கப் பட்டது. 1877 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இங்கிலாந்து மகாராணி விக்டோரியா இந்தியப் பேரரசியாக அறிவிக்கப்பட்டதை தொடந்து, தங்களது ஆங்கிலேய விசுவாசத்தை காண்பிக்கும் படியாக இந்தியாவின் முதல் துணி தொழிற்சாலைக்கு “எம்ப்ரஸ் மில்” என பெயரிட்டு, எங்க தொழில்ல குறுக்க வராதீங்க ராணி என சொல்லாமல் சொல்லி விட்டார்கள்.

இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடுகள் நடக்கும் இடமாகவும், ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய கேந்திரமாகவும் செயல்பட்ட இந்த நகரத்தில் தான் 1923 ஆம் ஆண்டு நடந்த இந்து முஸ்லிம் மோதல்களினால் வீறுகொண்டெழுந்த கே.பி. ஹெட்கேவார் என்பவர் 1925 ல் ஆர். எஸ். எஸ் ஐ துவக்கி வைத்தார். 1927 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 4 ம் தேதி, லக்ஷ்மி பூஜை தினத்தன்று, நடந்த ஒரு இந்து முஸ்லிம் கலவரம் ஆர்.எஸ். எஸ் க்கு ஒரு தேசிய அங்கீகாரத்தை அளித்ததும் இந்த நகரத்தில் தான். 1956 ல் அம்பேத்கார் தலைமையில் தலித் இனத்தவர்கள் புத்த மதத்திற்கு மாறி, ஒரு புது இயக்கத்துக்கு பிள்ளையார் சுழி போட்டதும் இந்த நாக்பூரில் தான். எது எப்படியோ, அதிகம் ஆரஞ்சுத் தோட்டங்கள் இந்த நகரத்தை சுற்றிலும் காணப் படுவதால் இதற்கு ஆரஞ்சு நகரம் என்ற பெருமையும் உண்டு.

நாட்டு நடப்புகள் : துருவங்களான தொப்புள் கொடி உறவு

ஏமென் நாட்டில் தேமேவென ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞனுக்கு திடீரென ஒரு தொழில் சாம்ராஜ்யக் கனவு உருவாகிறது. எப்படியாகிலும் ஒரு தொழிலதிபர் ஆகி விட வேண்டுமென்று முடிவெடுத்து விட்டு தாயகம் திரும்புகிறார். கையிலிருக்கும் முதலீடுகளை வைத்து தொழில் துவங்கி இன்று தொண்ணூறு ஆயிரம் கோடிக்கு (எவ்வளவு பூஜ்ஜியங்கள் என தலை சுற்றுகிறதா, ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்) மேலான சொத்துக்களுடன் வியாபித்து நிற்கும் சாம்ராஜ்யத்திற்கு அடிக்கோலிட்டவர் தான் தீரு பாய் அம்பானி. இவருக்கும் கோகிலா பென் என்ற இவரது மனைவிக்கும் பிறந்தவர்கள் தான் முகேஷ், அனில் என இரு ஆண்பிள்ளைகள். இதில் முகேஷ் சமர்த்தாக அப்பாவின் தகிடு தத்தங்களை படிப்பதில் நேரம் செலவிட, அனில் பதினாறடி பாய்ந்து, அரசியல் வியாதிகளுடன் கை குலுக்கினார், சினிமா காரர்களுடன் சிரித்துக் கொண்டிருந்தார், பேஷன் ஷோக்களுக்கு போய் வந்தார். ஆக அண்ணனுக்கும் தம்பிக்குமான ரசனையில் ஆரம்பித்த இடைவெளி, இப்பொழுது தந்தையின் மறைவிற்குப் பின் இரு துருவங்களாகி நிற்கும் அளவுக்கு தள்ளி வைத்துள்ளது. தீருபாய் உயிரோடிருந்த காலத்தில் தனது குழந்தைகளுக்கு என சொத்துக்களை பிரித்து வைத்திருந்தாரானால், ஒரு வேளை இந்த விரிசல் பெரிதாகி இருக்காதோ என்னவோ, இருவருக்கும் உள்ள தொழில் போட்டி இப்பொழுது வீதிக்கு வந்து சண்டையிடும் பரிதாபமான நிலைமைக்கு தள்ளி விட்டிருக்கிறது. தொலைத்தொடர்பு, கட்டுமானம், வர்த்தகம், கேளிக்கை, மின் உற்பத்தி என தனது எல்லைகளை விரிவு படுத்தி தம்பியானவன் தனியாவர்த்தனமாட, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற ஒரே குடையின் கீழ் அண்ணன் அடக்கி வாசிக்கிறார். பெட்ரோலியம், மற்றும் பெட்ரோலியம் சார்ந்த எல்லா கண்றாவி வேதிப் பொருள்கள், துணி மில்கள், மற்றும் சில்லறை வர்த்தகம், இன்னும் என்னென்னமோ எழவு துறைகள் என அண்ணனுக்கும் பல துறைகள் உண்டு. அண்ணனின் பெட்ரோலியத்துறை ஆந்திராவின் கிருஷ்ணா கோதாவரி பகுதியில் இயற்கை எரிவாயு இருப்பதை மோப்பம் பிடித்து, தனது கூடாரத்தை போட்டு இந்த வருட ஏப்ரல் மாதத்திலிருந்து பணம் அள்ள ஆரம்பித்தது. இதைக் கண்ட தம்பி, நான் முதலிலேயே அண்ணனுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறேன், அண்ணன் எனக்கும் இந்த எரிவாயுவில் பங்கு தர வேண்டுமென நீதிமன்றத்தின் கதவைத் தட்ட, அம்பானி விவகாரம் பூதாகாரமாக வெடித்து விட்டது. பங்குச்சந்தையின் பிதாமகர்களான இவர்களால், தினமும் ஏற்றமும், இறக்கமும் சர்வ சாதாரணமாக நிகழ்ந்தது. இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் தம்பியானவன் இந்த அழுகுணி ஆட்டத்துக்கு இப்பொழுது ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசும் துணை போகிறது என ஒரு குண்டை தூக்கி போட்டுவிட்டார். பெட்ரோலிய துறை அமைச்சரான முரளி தியோராவிலிருந்து, மன்மோகன் சிங் வரை எல்லோருக்கும் திருகு வலி கண்டிருக்கிறது. அனிலின் நண்பரும் சமாஜ் வாதி கட்சி தலைவரும், அரசியல் அரங்கில் ஆவேச சகுனியுமான அமர்சிங் இப்பொழுது சிங்கப்பூரிலுள்ள ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார். அவர் திரும்பி வந்ததும் இந்தப் பிரச்சனை எத்தனை வீரியம் பெறுமோவென டெல்லியில் அரசியல் தலைகள் குழம்பி தவிக்கின்றன. எது எப்படியோ, ஒரே கொடியில் பூத்த இரு மலர்களை பணம் இரு துருவங்களுக்குமுள்ள தூரத்துக்கு பிரித்து வைத்து விட்டது.


ங்கொய்யால பக்கங்கள் :

பணம் இருக்கற வரைக்கும் மதிக்கறது சொந்த பந்த உறவு,
குணம் இருக்கறவரைக்கும் மதிக்கறது தாலிக்கொடி உறவு,
உதவி செய்யற வரைக்கும் மதிக்கறது உனக்குப் பொறந்த உறவு,
ங்கொய்யால,
உலகம் இருக்கற வரைக்கும் மதிக்கறது தாண்டா நட்புங்கற உறவு.

15 comments:

கார்க்கிபவா said...

ங்கொய்யால தான் வெயிட்டு..

கலக்கல் தலைவா

Raju said...

அம்பானி மேட்டர்க்கு ஒரு பழமொழி ஞாபகம் வருது.
வீட்டு வீடு அடுப்படி..!

ங்கொய்யால பக்கங்கள் சூப்பர்ண்ணே.

பரிசல்காரன் said...

ங்கொய்யாலவுக்கு ஒரு ங்கொய்யால...

எம்.எம்.அப்துல்லா said...

ங்கொய்யாலவுக்கு ஒரு
ங்கொன்னியா....

Anonymous said...

அரசு,

நாக்பூர் பத்தி எழுதுனது நல்லா இருக்கு.

அம்பானி விவகாரத்தை அலசிக் காயப்போட்டிருக்கீங்க. ஆனா ஒரே பத்தியா எழுதனுமா? ஆயாசமா இருக்கு.

தொழில் முறை ஒப்பந்தங்களைப் பொடி வைத்துப் போடுவதும், தங்களுக்குச் சாதகமாக இல்லையெனில் வெட்கம், மானம் சூடு சுரனை ஏதுமற்று அதை மீறுவதுமான ஒரு புது கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்த குடும்பத்திற்கே இன்று ஆப்பாக அமைந்து விட்டது.

One man studied at wharton university another at cambridge. see what education has done to them.

Cable சங்கர் said...

/பணம் இருக்கற வரைக்கும் மதிக்கறது சொந்த பந்த உறவு,
குணம் இருக்கறவரைக்கும் மதிக்கறது தாலிக்கொடி உறவு,
உதவி செய்யற வரைக்கும் மதிக்கறது உனக்குப் பொறந்த உறவு,
ங்கொய்யால,
உலகம் இருக்கற வரைக்கும் மதிக்கறது தாண்டா நட்புங்கற உறவு.//
ங்கொய்யால.. சூப்பர்ண்ணே

தராசு said...

//கார்க்கி said...
ங்கொய்யால தான் வெயிட்டு..

கலக்கல் தலைவா//

அப்ப மத்ததெல்லாம் லைட்டா, பிச்சுப் புடுவேன் பிச்சு.

தராசு said...

//@ ராஜு.. said...
அம்பானி மேட்டர்க்கு ஒரு பழமொழி ஞாபகம் வருது.
வீட்டு வீடு அடுப்படி..!

ங்கொய்யால பக்கங்கள் சூப்பர்ண்ணே.//

மக்கா, அது வீட்டுக்கு வீடு வாசப்படிப்பா.....

தராசு said...

//@ பரிசல்காரன் said...
ங்கொய்யாலவுக்கு ஒரு ங்கொய்யால...//

டேங்சு தல

தராசு said...

//@ எம்.எம்.அப்துல்லா said...
ங்கொய்யாலவுக்கு ஒரு
ங்கொன்னியா....//

இப்படி எத்தனை வார்த்தைதான் கண்டு பிடிப்பீங்களோ போங்க....

தராசு said...

//@ வடகரை வேலன் said...

அம்பானி விவகாரத்தை அலசிக் காயப்போட்டிருக்கீங்க. ஆனா ஒரே பத்தியா எழுதனுமா? ஆயாசமா இருக்கு.//

டேங்சுண்ணே, அடுத்த தரம் பிரிச்சு எழுதறண்ணே.

தராசு said...

//@Cable Sankar said...

டேங்சுண்ணே.

Unknown said...

ங்கொய்யாலதான் இதில பெஸ்ட்

நாஞ்சில் நாதம் said...

ங்கொய்யால தான் சூப்பர்

அறிவிலி said...

தில்லி பக்கம் ட்ரெயின்ல போகும்போது, கூடை கூடையா ஆரஞ்சு பழம் வித்துட்டே வருவாங்க. செம சீப். அதே நேரம் செம டேஸ்ட், உங்க இடுகை போலவே.