Tuesday, September 1, 2009

பதிவுலக சொர்க்கம்

ஹாய் ஹாய் ஹாய்,

கொஞ்சம் லீவுல போயிருந்தேன். தாய் நாட்டிற்கு வந்து விட்டு திரும்பி வந்துட்டேன். சென்னை வந்தா சந்திப்போம்னு அப்துல்லா அண்ணனும், கேபிள் அண்ணனும் சொல்லியிருந்தாங்க. ஆனா, இங்க இருக்கறது ஆணின்னா, வீட்டுல இருக்கறது கடப்பாரைகளும், அத விட பெரிய கம்பங்களா இருக்குதண்ணே. அதயெல்லாம் புடுங்கி, ஒரு நிம்மதிப் பெரு மூச்சு விடுறதுக்குள்ள லீவு முடிஞ்சு போச்சுண்ணே. தயவு செஞ்சு கோவிச்சுக்காதீங்க. அப்துல்லா அண்ணன் போன் பண்ணாரு. கேரளாவுல ஒரு கல்யாணத்துல இருந்தப்ப கூப்பிட்டிருந்தாரு. சென்னைக்கு வந்து கூப்புடறேன்னு சொன்னேன். ஆனா, முடியலண்ணே. மன்னிச்சுக்கோங்க. எவ்வளவு தான் ஆணியிருந்தாலும், நம்மள இன்னும் உடன் பிறவா சொந்தங்களோட இணைத்து வைத்திருக்கும் பதிவுலகத்தை விட்டு தூரம் போயிட முடியுமா? அப்பப்ப நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து போயிட்டிருந்தேன்.

சிங்கை பதிவர் செந்தில் நாதனுக்காக பதிவர்கள் செய்த உதவி மனதை நெகிழ வைத்தது. இந்த மாதிரி மனித நேயமிக்க ஒரு கூட்டத்தில் தான் நானும் இருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது, மிகவும் பெருமையாய் உணர்கிறேன். செந்தில் நாதனுக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டது என்று தெரிகிறது. சீக்கிரம் நலம் பெற வாழ்த்துகிறோம். நர்சிம் தல எடுத்த முயற்சிகளின் மூலம் அவர் தான் யார் என்று இன்னுமொரு முறை நிரூபித்து விட்டார். தலை வணங்குகிறேன் தல.

பதிவுலகம் மந்தமாகவே இருக்கிறது. முரளி கண்ணன் திரும்பி வந்து வழக்கம் போல கலக்கறாரு. கேபிள் அண்ணனோட சினிமா வியாபாரம் பயங்கரமா சூடு பிடிச்சுருக்கு. அண்ணே, நிறைய பேர திரும்பி பார்க்க வைக்கறீங்க. கலக்குங்க. ஆதி மாதிரியே அத்திரியும் ஓட்டுப்பெட்டியெல்லாம் வெச்சாரு, ஒரு பய சீந்த மாட்டேங்கறானேன்னு காண்டுல இருக்காரு போல. அப்புறம் நம்ம ஆதி அண்ணன் இன்னொரு குறும்படம் எடுத்து எல்லாரையும் பாடா படுத்திகிட்டிருக்காரு. நர்சிம் தல சாருவுக்கு எதிர்வினை அனுப்பி ஒரு வெடிய கொளுத்திப் போட்டாரு, எதிர்பார்த்த அளவுக்கு வெடிக்கல போலிருக்கு. கந்தசாமிய பார்த்து நொந்த சாமிகள் ஒரு பாட்டம் அழுது தீர்த்தாங்க.
பதிவுலகில் இருந்து கொஞ்ச காலத்துக்கு வடை பெறுகிறேன்னு சொல்லீட்டு போன அப்துல்லா அண்ணன் திரும்பி வந்திருக்காரு. பரிசல் அண்ணன் வழக்கம் போல கலக்கிகிட்டிருக்காரு. பதிவுலகத்தின் வருங்கால மாப்பிள்ளை கார்க்கி கொஞ்சம் கொஞ்சமா காதல், கனவுன்னு டிராக் மாறிகிட்டிருக்காரு.

எல்லாருடைய எதிர்பார்ப்புகளையும் கோக்கு மாக்கா ஏத்தி விட்டிருக்கிற சிறுகதைப் பட்டறை நிறைய பேரை கனவு காண வெச்சுருக்குது. குருஜிக்கும், பைத்தியகாரன் அண்ணாச்சிக்கும் ரொம்ப ரொம்ப டேங்சு.

ஆக மொத்தம் பதிவுலகம் என்ற சொர்க்கம் அதே சுகங்களுடன், அதே குறும்புகளுடன், அதே நக்கலுடன், அதே மொக்கைகளுடன் இப்படியே எப்பவும் இருக்கணும்னு வேண்டிக்கறேன்.

21 comments:

அத்திரி said...

நாந்தான் மொதல்ல

அத்திரி said...

//ஆனா, இங்க இருக்கறது ஆணின்னா, வீட்டுல இருக்கறது கடப்பாரைகளும், அத விட பெரிய கம்பங்களா இருக்குதண்ணே. //

இவ்ளோ கஷ்டத்துலயும் பதிவு போடுற உங்க கடமை உணர்வு -------புல்லரிக்குது அண்ணாச்சி

டக்ளஸ்... said...

ச்செ..வட போச்சே..!
இந்த பதிவரை காணவில்லைன்னு பதிவு போட்ராலம்ன்னு நெனைச்சேன்.
போச்சா..போச்சா..!
சரி..சரி..வாழ்த்துக்கள். (ஹி..ஹி.. நீங்க வேணுமின்னா பாருங்க..எல்லாரும் இதத்தான் சொல்வாங்க‌.)
:)

Cable Sankar said...

/அப்துல்லா அண்ணனும், கேபிள் அண்ணனும் சொல்லியிருந்தாங்க. ஆனா, இங்க இருக்கறது ஆணின்னா, வீட்டுல இருக்கறது கடப்பாரைகளும், அத விட பெரிய கம்பங்களா இருக்குதண்ணே.//

எங்க் போனாலும் ஏதையாவது புடுங்கிறதுனு ஆகி போச்சி.. இல்ல.. சந்தோஷம்..

அதான் என்னுடய கடைசி சிறுகதைக்கு பின்னூட்டத்தை காணுமா../ அடுத்த முறையாவது வந்து பாத்துட்டு போங்க.. தம்பி இங்க இருக்கோம் :)

பரிசல்காரன் said...

//பரிசல் அண்ணன் வழக்கம் போல கலக்கிகிட்டிருக்காரு.//

ஐ! அபப்டியா? சொலல்வேல்ல?

நாஞ்சில் நாதம் said...

Welcome Back :))

கார்க்கி said...

////பரிசல் அண்ணன் வழக்கம் போல கலக்கிகிட்டிருக்காரு.//

ஐ! அபப்டியா? சொலல்வேல்ல//

சகா, அவரு உங்க அண்ணன சொல்றாரு.. ஆசையைப் பாரு..

நையாண்டி நைனா said...

vaanga anne vaanga....

ஆதிமூலகிருஷ்ணன் said...

யாய்.. யாரு குறும்படத்த நக்கல் வுடுற? வந்து பாரு.. எம்மாம் ரவுஸா ஒரு கத விட்னுகிறேன்னு.. ஹிஹி... அனுஜன்யா கவுஜ படிச்சாமேரி நம்ம பயக அல்லாரும் ஓடிப்போயிட்டானுக.. ஒருத்தன காணும் கடப்பக்கம்..

தராசு said...

அத்திரி அண்ணே,

கடமின்னு வந்துட்டா நாங்கெல்லாம்....., வேண்டாம் விடுங்க.

தராசு said...

டக்ளஸு,

ஹா, ஹா, வந்துட்டமுல்ல....

தராசு said...

//அதான் என்னுடய கடைசி சிறுகதைக்கு பின்னூட்டத்தை காணுமா../ அடுத்த முறையாவது வந்து பாத்துட்டு போங்க.. தம்பி இங்க இருக்கோம் //

கேபிள் அண்ணே,

வர்ரண்ணே, வர்ரண்ணே

தராசு said...

//@பரிசல்காரன் said...
//பரிசல் அண்ணன் வழக்கம் போல கலக்கிகிட்டிருக்காரு.//

ஐ! அபப்டியா? சொலல்வேல்ல?//

சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா, இப்படியெல்லாம் சந்தோஷப் படக் கூடாது.

தராசு said...

//@நாஞ்சில் நாதம் said...
Welcome Back :))//

டேங்சு தல.

தராசு said...

கார்க்கி,

என்னாச்சு, போட்டோவுல ஒரு கொலவெறி தெரியுது.

தராசு said...

நைனா,

வாங்க நைனா, டேங்சு.

தராசு said...

//@ ஆதிமூலகிருஷ்ணன் said...
யாய்.. யாரு குறும்படத்த நக்கல் வுடுற? வந்து பாரு.. எம்மாம் ரவுஸா ஒரு கத விட்னுகிறேன்னு.. ஹிஹி... அனுஜன்யா கவுஜ படிச்சாமேரி நம்ம பயக அல்லாரும் ஓடிப்போயிட்டானுக.. ஒருத்தன காணும் கடப்பக்கம்..//

அய்யோ அது குறும்படமா, கொடும்படம்.
ஹலோ, பார்வதியப் பத்தி எல்லாரும் ப்டிச்சோம், எல்லாரும் கமெண்டிருக்கறோம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அட சென்னைக்கு வந்திருந்தீங்களா... ஒரு ஃபோனாவது பண்ணியிருக்கலாமே...

சரி... welcome back :)

தராசு said...

உங்க அன்புக்கு நன்றி குருஜி,

அடுத்த முறை கண்டிப்பா அழைக்கிறேன். பட்டறைக்கு வர முடியலைன்னு வருத்தமா இருக்கு. இருந்தாலும் எதாவது ஒரு வகையில ப்ட்டறை நிகழ்வுகளை காணத்தருவீர்கள் என்ற எதிர்பார்ப்பில் உள்ளேன்.

எம்.எம்.அப்துல்லா said...

ஆட்டத்த நான் இன்னும் முழுசா ஸ்டார்ட் பண்ணல. அப்பாலகீது :)))

murali said...

அண்ணே பார்த்து நாளாச்சு.

கேபிள பார்க்க வரும்போது சொல்லுங்க