Friday, August 7, 2009

மனதை திற - மகிழ்ச்சி வரட்டும் - 2

ஆமையும் மொசலும் ஓட்டப்பந்தயம் வெச்சுட்டு, பாதி வழில மொசலு தூங்கி, ஆமை தூங்காம ஸ்ட்ரெய்ட்டா போய் கெலிச்சு, கடசியில ஸ்லோவார்ந்தாலும் ஸ்டெடியாக்கறவன் தான் ஜெயிப்பான்னு சொல்லுச்சுன்னு கேள்விப்பட்டுக்கறோம். ஆனா அதுக்கு அப்பாலிக்கா இன்னா நடந்துதுன்னா,

மொசலுக்கு ஒரே ஃபீலிங்க்ஸ் ஆயிடுச்சு, ”சே, இத்தினி தெறம இருந்தும் ஜஸ்ட் மிஸ் ஆயிருச்சேடா, எங்க ராங் ஆச்சு” ன்னு ரோசன பண்ணிகினே, ”இன்னொரு தபா ரேஸ் உட்லாம், வரியா” ன்னு ஆமை கைல கேட்டுச்சாம். ஆமையும் சரின்னு சொல்ல, இந்த தபா, ஸ்டார்டிங்லர்ந்து சுகுர்றா ஒரே மூச்சுல ஓடி ஜெயிச்சதுக்கப்புறம் தான் மொசலு திரும்பி லுக் உட்டுச்சாம். அங்க என்னடான்னா, ஆமை அசைஞ்சு ஆடி மெதுவா வந்து மூச்சு வாங்கிகிட்டிருந்துச்சாம்.

இதுலர்ந்து இன்னா தெர்துன்னா நிதானமா இக்கறது நல்லதுதான், ஆனா நிதானமா இர்க்க சொல்லோ, ஸ்பீடா, கரீக்டா வரிஞ்சிருக்கற கோட்டு மேலயே ஓடின்னுக்கணும், அப்பத்தான் ஜெயிக்க முடியும் னு மொசலு சிரிச்சுச்சாம்.

இப்ப ஆமைக்கு பேஜாரா பூடுச்சி, என்னதான் ட்ரை பண்ணாலும் இவனை ஜெயிக்க முடியாதுடான்னு நெனச்சுகுனு, எப்டியாவது ஜெயிக்கணுமே இன்னா பண்லாம்னு மல்லாக்கப் படுத்து ரோசனை பண்ணுச்சாம், கம்னு இருந்தா சரிப்படாது, இதுக்கு வேற ஐடியாத்தான் பண்ணனும்னு முடிவு எட்துகுனு ”மாப்ள, இன்னொரு ரவுண்டு போலாம், ஆனா நான் சொல்ற ரூட்ல தான் போவணும்” னு சொல்லுச்சாம். அதுக்கு மொசலு, ”ஹூம், நீயெல்லாம் எனக்கு ஜூஜூபிடா, எந்த ரூட் வேணா சொல்லு, நா ரெடி” ன்னுச்சாம்.

ரெடி ஸ்டார்ட்னு ஆரம்பிக்க சொல்ல, மொசலு எந்த ரூட்னாலும் நம்ம ஸ்பீடுக்கு வாடா பாக்கலாம்னுட்டு ஓடிக்கினே இருக்க சொல்லோ, கொஞ்ச தூரம் போயி அந்த ரூட்டை பாத்து பேஜாராயிடுச்சாம். மேட்டர் இன்னானா, ஆமை சொன்ன ரூட்ல ஒரு ஆறு ஓடின்னுக்குது. இத்த எப்பட்றா கிராஸிங் பண்றதுன்னு மொசலு பஞ்சரான லாரி கணக்கா நின்னுனு இருக்க சொல்லோ, ஆமை மொசல கிராஸ் பண்ணி, அதும்பாட்டுக்கு நீந்தி போயி ”நாந்தாண்டா வின்னிங்” னுச்சாம்.

இப்ப மொசலு மெர்சலாயிடுச்சு, இன்னாடா இத்தினி ஸ்பீடா வந்தும் அவன் வின்னிங் ஆயிட்டானேன்னு ஒரே கவல.

இதுலர்ந்து இன்னா தெர்துன்னா, உங்கையில இன்னா மேட்டர் சாலிடா இக்குதோ, அதுல பூந்து அடிச்சு ஆடு நைனா, சும்மா ”பில்லா” ஓடிச்சேன்னு ”வில்லு” வும் மைதானத்துக்கு வந்தா அப்புறம் மொசலுக்கு அடிச்ச அதே ஆப்புதான்.

மொசலு இத்தோட விட்டுச்சா, அதான் இங்க மேட்டரே, இத்தினி தபா ரேஸ் உட்டுகுனே இருக்க சொல்ல, மொசலும் ஆமையும் தோஸ்த் ஆயினுக்குறாங்கோ, இப்ப ஒரு ரேஸ் வெச்சு ரெண்டு பேரும் ஜெயிக்கணும், இன்னா பண்றதுன்னு ஒரு மீட்டிங் போட்டு, உன் திறமை என்னுது, என் திறமை உன்னுதுன்னு ஒரு உலக மகா அக்ரிமெண்ட் போட்டுகுனாங்கோ, நிலத்துல ஓட சொல்லோ மொசலு மேல ஆமை ஏறிகிச்சு, ஆத்துல போக சொல்லோ ஆமை மேல மொசலு ஏறிகிச்சு, ரெண்டு பேரும் கரீக்டா ஒரே டயத்துக்கு வின்னிங் ஆயிட்டாங்கோ.

இதுலர்ந்து இன்னா தெரியுதுன்னா,

தோத்து போனாலும், ஆமையாகட்டும், மொசலாகட்டும், ஜெயிக்கணுங்கற வெறிய கொறச்சுக்கல.
ரெண்டு பேரும் ஏனோ தானோன்னு இல்லாம முழு திறமையும் வெச்சு முயற்சி பண்ணுனாங்கோ.
அப்பவும் ஜெயிக்க முடியலயா, ஆமை கணக்கா ரூட்ட மாத்து, ஏன்னாக்கா, பிரச்சனை உங்கிட்ட இல்ல, நீ போற ரூட்லதான் .

அப்பாலிக்கா, இன்னொண்ண கண்டுக்கினியா,

நீ தனியா ஓடுனா உன்னால எத்தினி தூரம் முடியுதோ அத்தினி தூரந்தான் ஓடுவே,ஆனா அல்லாரோடயும் சேர்ந்து ஓடுனா, அல்லாராலும் எத்தினி தூரம் போக முடியுமோ அத்தினி தூரம் போவ.

கடசியா ஒண்ணு,

உன்னால ஒண்ணு முடியலயா,முடியறவனோட சேர்ந்துக்கோ,

மனச தொறந்தீனாத்தான் மகிழ்ச்சி.

14 comments:

எம்.எம்.அப்துல்லா said...

//உன்னால ஒண்ணு முடியலயா,முடியறவனோட சேர்ந்துக்கோ,

//

நா ஓங்ககூட சேந்துகினேன் :))

நையாண்டி நைனா said...

இன்னாம்மே... இப்பிடி.... சோக்கா கீது நைனா....

தராசு said...

அப்துல்லா அண்ணே,

டேங்சு

தராசு said...

//@ நையாண்டி நைனா said...
இன்னாம்மே... இப்பிடி.... சோக்கா கீது நைனா....//

நைனா, டேங்சு

டக்ளஸ்... said...

கீசுறயேப்பா..
மெர்சலாகீதுபா.

நாஞ்சில் நாதம் said...

///நீ தனியா ஓடுனா உன்னால எத்தினி தூரம் முடியுதோ அத்தினி தூரந்தான் ஓடுவே,ஆனா அல்லாரோடயும் சேர்ந்து ஓடுனா, அல்லாராலும் எத்தினி தூரம் போக முடியுமோ அத்தினி தூரம் போவ ///


///உன்னால ஒண்ணு முடியலயா,முடியறவனோட சேர்ந்துக்கோ, மனச தொறந்தீனாத்தான் மகிழ்ச்சி///

//மனதை திற - மகிழ்ச்சி வரட்டும்//

சுவாமி தராசானந்தா பொன்மொழிகள்

சுவாமி தராசானந்தா

Anonymous said...

சொம்மா ஷோக்கா சொல்லிக்கின நைன்னா. டேங்ஸ்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

எம்.எம்.அப்துல்லா said...
//உன்னால ஒண்ணு முடியலயா,முடியறவனோட சேர்ந்துக்கோ,

//

நா ஓங்ககூட சேந்துகினேன் :))

// நானும் கூட..

தராசு said...

//@ டக்ளஸ்... said...
கீசுறயேப்பா..
மெர்சலாகீதுபா.//

டேங்சு.

தராசு said...

//@ நாஞ்சில் நாதம் said...

சுவாமி தராசானந்தா//

புச்சா எதுனா சொல்லாத நைனா, இங்க இக்கறவங்க எல்லாம் அதயே புட்சுகுனு டாவடிப்பாங்கோ.

வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

//@ வடகரை வேலன் said...
சொம்மா ஷோக்கா சொல்லிக்கின நைன்னா. டேங்ஸ்.//

தலிவா, டேங்சு.

தராசு said...

//@ ஆதிமூலகிருஷ்ணன் said...

நானும் கூட//

தலிவா, டேங்சு.

கார்த்திக் said...

நைனா ஓரம்போ ஆட்டோ கதை மாதிரி சோகா கீது..

கார்ல்ஸ்பெர்க் said...

//உன்னால ஒண்ணு முடியலயா,முடியறவனோட சேர்ந்துக்கோ,

//

நா ஓங்ககூட சேந்துகினேன் :))

அண்ணே, நானும் வரேன்னே..