Monday, July 20, 2009

உண்மை சொல், ஒரு கோடி வெல்.

சமீபத்தில் இந்திய தொலைக்காட்சிகளில் ஒரு தொடர் "டெரர்" ஆக ஆரம்பித்துள்ளது. ஆங்கில தொலைக்காட்சிகளில் " Moment of Truth" என்ற தொடரின் கொள்கைகள் அனைத்தையும் கொண்ட ஒரு தொடர் "ஸ்டார் ப்ளஸ்" சேனலில் ஹிந்தியில் "சச் கா சாம்னா" என்ற பெயரில் ஆரம்பித்துள்ளது.

திடுக்கிடும் கேள்விகள், மனிதர்களின் படுக்கையறை நிகழ்வுகளை சுற்றியே அமைக்கப்பட்டிருக்கும் வினா வடிவங்கள், அடுத்தவர் அந்தரங்கத்தை சற்றும் கூசாது வெளிக்கொணரும் வக்கிரங்கள், முறையற்ற உறவுகளை நியாயப் படுத்தும் வண்ணமாக சர்வ அலட்சியமாக "ஆம், அப்படித்தான், இப்ப என்ன பண்ணுவே" என்பது போன்ற பதில்கள், நான்கு சுவர்களுக்குள் உறவுகள் ஒருவர் மீது ஒருவர் கொட்ட முடியாத வெறுப்பு, கோபம் ஆகியவற்றை நாற்பது கோடி பேர் முன்னால் உன்னை நாக்க புடுங்கற மாதிரி நாலு கேள்வி கேக்கறேன் பார் என்ற பழி வாங்கல் என ஆட்டம் களை கட்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நீங்கள் விண்ணப்பித்தீர்களென்றால், முதல், இரண்டு, மூன்று என்று மூன்று கட்டங்களாக ரவுண்டு கட்டி உங்களிடத்தில் நேர்முக தேர்வு நடத்தப் படுகிறது. உங்களது பின்புலம், குடும்பம், குடும்ப உறுப்பினர்களுக்கும் உங்களுக்கும் உள்ள உறவு முறையின் உண்மைத்தன்மை, ஸ்திரத்தன்மை ஆகியவை புரிந்து கொள்ளப்பட்டபின், 50 கேள்விகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் " Polygraph Test" என்ற சோதனை முறையில் பதில்கள் பெறப் படுகின்றன. இந்த முறையில் நீங்கள் எந்த கேள்விக்கு என்ன பதில் சொன்னீர்கள் என்று உங்களுக்கு நினைவில் இருப்பது மிகவும் கடினம். எல்லா கேள்விகளுக்கும் விடை ஆம் அல்லது இல்லை என்பது தான். உதாரணத்திற்கு " உங்கள் மகளது திருமணத்திற்கு பின்பும், நீங்கள் அவளது தனிப்பட்ட வாழ்வின் விஷயங்களை தீர்மானிப்பது சரி என நினைக்கிறீர்களா?" என்பது போன்ற கேள்விகள் கேட்பதிலிருந்து கேமராவின் முன் ஆட்டம் ஆரம்பிக்கிறது. இதில் 24 கேள்விகளுக்கு மனசாட்சியுடன் சரியான பதில் சொல்லி விட்டால் நீங்கள் ஒரு கோடி ரூபாய் ஜெயிக்கலாம்.

முதலில் வெகு எளிமையான கேள்விகள், மற்றவர்களை சிரிக்க வைக்கும் கேள்விகள் கேட்கப் படுகிறது. ஒரு பெண்ணைப் பார்த்து "நீங்கள் ஒரு வாரம் குளிக்காமல் இருந்திருக்கிறீர்களா??" என்ற கேள்விக்கு அரங்கமே அதிர சிரிப்பொலி கேட்கிறது. இந்த தந்திரம் பதில் சொல்பவரை தான் ஒரு தேர்வில் அமர்ந்திருக்கிறோம் என்ற பதட்டத்தை மாற்றி சகஜ நிலைக்கு கொண்டு வர உதவும் ஒரு உத்திதான். அந்தப் பெண்ணும் இதற்கு ஆம் என பதில் அளிக்க, முன்னே "Polygraphic Test" இதே கேள்வி கேட்கப்பட்டு அதற்கு இந்த அம்மணி என்ன பதில் சொன்னார்கள் என்பது சரி பார்க்கப்பட்டு பணம் பரிசாக அளிக்கப்படுகிறது. இப்படியாக விளையாட்டுத்தனத்துடன் ஆரம்பிக்கும் இந்த கேள்விகள் போகப் போக முழுவதும் அந்தரங்கத்தைப் பற்றியதாக மாறுகிறது. கடந்த வாரத்தில் காண்பிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், ஒரு 72 வயது மனிதர், அவருக்கு மூன்று மனைவிகள் இருந்திருக்கிறார்கள், நான்காவதாக வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். அவரது மகளுக்கு 40 வயதிருக்கலாம். அவரது, தம்பி, ஒரு மனைவி, 40 வயது மகள் மற்றும் இப்பொழுது அவருடன் வாழ்ந்து வரும் பெண் ஆகிய இத்தனை பேர் முன்னிலையில் அவரிடத்தில் கேட்கப்படும் கேள்விகள் :

நீங்கள் ஹோட்டல்களில் தங்கிய பொழுது அங்கிருந்து பெட்ஷீட்டுகளை திருடிக் கொண்டு வந்திருக்க்கிறீர்களா?
உங்கள் மகளின் வயதை விட குறைந்த வயதுடைய பெண்ணுடன் உடல் உறவு கொண்டிருக்கிறீர்களா?
உங்கள் உறவுக்கார பெண்களுடன் மனைவிக்கு தெரியாமல் உடலுறவு கொண்டீர்களா?
இதுவரை விபசாரிகளுடன் உடலுறவு கொண்டிருக்கிறீர்களா?
உங்களுக்கு ரகசியமாகப் பிறந்த குழந்தைகள் இருக்கிறார்களா?
உங்கள் மனைவி (அங்கு அமர்ந்திருப்பவர்) வெறும் பணத்துக்காகத்தான் உங்களுடன் உறவு வைத்திருந்தார்களா?


இந்தக் கேள்விகளை மற்றுமொருமுறை வாசித்துப் பாருங்கள். வயிற்றைக் கலக்குகிறதா? ஆச்சரியப் படாதீர்கள் அன்பர்களே, இந்த வக்கிரங்களை ஒருவேளை நேற்று வரை நீங்கள் வீதிக்கு வெளியில், தெரு முனையில், டீக்கடைகளில், அலுவலகத்தில், அல்லது புரளி பேசப்படும் இடங்களில் கேட்டிருக்கலாம் அல்லது பார்த்துமிருக்கலாம். ஆனால் இப்பொழுது இந்த வக்கிரங்கள், இதோ உங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்திருக்கிறீர்களே ஒரு சின்னத்திரை, அதன் மூலம் உங்கள் அருகிலேயே வந்து விட்டது. ஒரு பெண்ணிடம் கேட்கப் பட்ட கேள்வி " கணவனைத் தவிர இன்னொருவருடன் தொடர்ந்து உடல் உறவு கொள்வதும், அது கணவருக்குத் தெரியாமல் இருக்கும் வரை சரி என்றும் நினைக்கிறீர்களா??" என்ற கேள்விக்கு அந்தப் பெண் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக பதில் சொல்ல, உண்மை அறியும் சோதனையில் அதற்கு ஆமாம் என்று பதில் சொன்னது வெளியாக, அந்தக் பெண்ணின் கணவர் தன் தலையை பிடித்துக் கொண்டு கதறுகிறார். அந்தப் பெண்ணின் அம்மா, கண்ணீரை அடக்க மாட்டாமல் விம்முவதும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிகள்.

இதன் தொகுப்பாளரான ராஜீவ் கண்டேல்வால் என்பவரை அனத்து தொலைக்காட்சிகளும் நமது சமூக காவலர்கள் என்ற போர்வையில் இருக்கும் பலரோடுகூட சேர்ந்து பேட்டி மேல் பேட்டியாக எடுத்து ஒளி பரப்புகிறார்கள். எல்லோராலும் வைக்கப்படுகிற வாதங்களுக்கு ராஜீவின் ஒரே பதில், உண்மை பேசுவது தவறா??

ஆமாம் நானும் கேட்கிறேன், உண்மை பேசுவது தவறா? அது அடுத்தவர் படுக்கையறை விஷயங்களாகட்டும், ஒரு பெண்ணின் அந்தரங்கமாகட்டும், ஒரு விளையாட்டு வீரனின் கதையாகட்டும், (வினோத் காம்பிளி சர்ச்சையில் சிக்கியது இந்த பாடாவதி உண்மை பேசியதால் தான்), கணவன் மனைவியின் உறவாகட்டும், தாய், மகள் உறவாகட்டும், என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், உங்கள் வாயிலிருந்து புறப்படும் உண்மைகள் ஒரு பரபரப்பை உண்டு பண்ண வேண்டும், குறிப்பாக ஆண் பெண் உடல் உறவை பற்றிய உண்மைகள், நீங்கள் யார் யாருடன் உடல் உறவு கொண்டீர்கள என்ற உண்மைகள், உங்கள் மேலதிகாரி தன் இச்சைக்கு இணங்கும்படி உங்களை வற்புறுத்தினாரா என்பது போன்ற உண்மைகள், உங்கள் நண்பர்கள் உங்களுக்கு துரோகம் செய்தார்களா என்பது போன்ற உண்மைகள்( உங்கள் நன்பரும் நீங்களும் ஒரு பிரபல புள்ளிகளாய் இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த விவரங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்), இது போன்ற உண்மைகளை தாராளமாக பேசுங்கள். அப்பொழுது தான் நாங்களும் இதை விளம்பரங்களுக்கு மத்தியில் ஒரு பரபரப்பு காட்சியாக காண்பித்து நாலு காசு பார்க்கமுடியும். இந்த உண்மை பேசுவதினால் யார் குடும்பமோ எக்கேடோ கெட்டு நாசமாய் போனால் எனக்கென்ன கேடு, என் சேனலுக்கு பணம் வருகிறதல்லவா, அது போதும்.

அடேய், ஊடக வெண்ணைகளா, அமெரிக்காவில் மனிதனுடைய வாழ்வில் மிகச்சில வேடங்களே உள்ளது. ஒன்று அவனுடைய குடும்பம் (அப்படி ஒன்று தப்பித் தவறி இருந்தால்) அடுத்தது அவனது வேலை. அங்கு சமூக வாழ்க்கை என்பது வெறும் சொல்லிலும் பேச்சிலும் தான். நம்மைப்போல் அண்டை வீட்டுக்காரர்களோ, ஒண்டுக்குடித்தனங்களோ மிகவும் அரிது. அவர்கள் அவர்களது அந்தரங்கங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம். யாரும் கவலைப் பட மாட்டார்கள். ஆனால், இங்குள்ள நாம் ஒரு சமூகமாக வாழ்ந்து வருகிறோம். சமூகத்தில் இத்தகைய நச்சுக்களை சுதந்திரமாக உலா விடுவீர்களெனில், உண்மை பேசி ஒரு கோடி ரூபாய் பரிசு பெறலாம், ஆனால், நீயும் நானும் குடும்பம் என்ற கட்டுக் கோப்புக்குள் வாழுவோமா என்பது சந்தேகமே.

வாய்மையே வெல்லும், ஆனால் இங்கு அதன் விலை ஒரு கோடி ரூபாய், என்ன கொடுமை சார் இது??????

23 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

nothing sells like sex :)

நான் இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததில்லை. நானும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை எதிர்க்கிறேன் - ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள காரணங்களுக்காக அல்ல.

சுவாரசியமான பதிவு!

Raju said...

முழுவதும் அப்படியே உங்களோடு உடன்படுகின்றேன்.

\\ஆமாம் நானும் கேட்கிறேன், உண்மை பேசுவது தவறா? அது அடுத்தவர் படுக்கையறை விஷயங்களாகட்டும், ஒரு பெண்ணின் அந்தரங்கமாகட்டும், ஒரு விளையாட்டு வீரனின் கதையாகட்டும்,\\

இந்த வரிகளைப் படித்தவுடன் உங்களுக்கு எதிர் பதிவு எழுத நினைத்தேன்.
ஆனாள் பதிவை முழுதாய் படித்தவுடன் தோன்றவில்லை.

தராசு said...

//நான் இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததில்லை. நானும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை எதிர்க்கிறேன் - ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள காரணங்களுக்காக அல்ல.

சுவாரசியமான பதிவு!//

குருஜி, வந்ததுக்கு நன்றி.

தயவு செய்து காரணங்களை சொல்லுங்களேன், அடியேனும் புரிந்து கொள்வேன்.

தராசு said...

//இந்த வரிகளைப் படித்தவுடன் உங்களுக்கு எதிர் பதிவு எழுத நினைத்தேன்.
ஆனாள் பதிவை முழுதாய் படித்தவுடன் தோன்றவில்லை.//

டக்ளசு, டேங்சு,

எழுத தோணிச்சுன்னா உடனே எழுதுப்பா.

நாஞ்சில் நாதம் said...

வாய்மையே கொல்லும்.

என்ன கொடுமை சார் இது??????

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அடுத்தவர் அந்தரங்களை அறிந்து கொள்ள அலைவது குறித்தே என் கோபம் (அதைப் பணமாக்கத் துடிப்பது குறித்தும்). மற்றபடி, குடும்பம் என்ற கட்டுக்கோப்பு கலைந்துவிடும் என்பதற்காக அல்ல.

தராசு said...

நன்றி குருஜி.

தராசு said...

வாங்க நாஞ்சில்,

வந்ததுக்கு டேங்சு.

Raju said...

\\குடும்பம் என்ற கட்டுக்கோப்பு கலைந்துவிடும் என்பதற்காக அல்ல.\\

இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது ஜ்யோவ்ஜி...!

கார்க்கிபவா said...

//இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது யோவ்ஜி//

அதான் யோவ்ன்னு சொல்லிட்டிஙக்ளே அப்புறம் என்ன ஜி? :))

அண்ணே, சுவாரஸ்யமா இருக்கு.. அடிக்கடி எழுதுங்க..

அப்புறம் நான் இதை எதிர்க்கவேயில்லை. காரணம் மக்களுக்கு எது புடிக்குதோ அது ஹிட்டாகி விடும். நீங்கள் இந்த நிகழ்ச்சி அமைப்பளாரக்ளை குறை சொல்வதை விட, பார்த்து ஹிட்டாக்குகிறாரக்ளே அவரக்ளை தான் அதிகம் சாடனும்..

எங்கு டிமாண்ட் இருக்கிறதோ அங்கு சப்ளை செய்வதே வியாபரிகளின் வேலை.

மதி.இண்டியா said...

"Polygraphic Test" தவறு , மிக சுலபமாக அதில் மாட்டாமல் தவிர்க்கலாம் என நிருபிக்க பட்டுள்ள நிலையில் அதை வைத்து இப்படி ஒரு நிகழ்ச்சியா ?

இன்னும் விஜய் டிவியில் வரவில்லையா ?

அதில் வந்தால்தானே சன்னும் , கலைஞரும் காப்பியடுக்க முடியும் ?

அத்திரி said...

//எங்கு டிமாண்ட் இருக்கிறதோ அங்கு சப்ளை செய்வதே வியாபரிகளின் வேலை.//


கரீட்டா சொன்ன சகா

தராசு said...

//இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது ஜ்யோவ்ஜி...!//

டக்ளசு,

ம்...சரி...சரி, ஆரம்பிச்சுட்டயாப்பா,
நல்லா இரு சாமி

தராசு said...

//எங்கு டிமாண்ட் இருக்கிறதோ அங்கு சப்ளை செய்வதே வியாபரிகளின் வேலை.//

அதுக்காக எதை யாருக்கு சப்ளை பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லையா தல.

தராசு said...

//@ மதி.இண்டியா said...

"Polygraphic Test" தவறு , மிக சுலபமாக அதில் மாட்டாமல் தவிர்க்கலாம் என நிருபிக்க பட்டுள்ள நிலையில் அதை வைத்து இப்படி ஒரு நிகழ்ச்சியா ?//

வாங்க மதி, உண்மை, Polygraphic test என்பது அறிவியல் ரீதியாகவோ, ம்னோ தத்துவ ரீதியாகவோ இது வரை சரி என்று ஒத்துக் கொள்ளப்படவில்லை.
நீதிமன்றங்களும் சரி, புலனாய்வுகளும் சரி, இதை அங்கீகரிப்பதில்லை.

ஆனால், இதை ஒரு ஆணித்தரமான ஆதாரமாக வைத்து வக்கிரங்களுக்கு வாழ்த்துப் பாடி, கல்லா கட்டும் ஊடகத்தை நினைத்தால், மேலும் கார்க்கி சொல்வது போல் நேயர்களையும் நினைத்தால், வேதனை தான் சாமி.

தராசு said...

//@ அத்திரி said...
//எங்கு டிமாண்ட் இருக்கிறதோ அங்கு சப்ளை செய்வதே வியாபரிகளின் வேலை.//


கரீட்டா சொன்ன சகா//

வாங்க, எங்க போயிருந்தீங்க இத்தனை நாளு, சரி, சரி, இப்பவாவது கண்ணு தெரிஞ்சுதே.

Cable சங்கர் said...

/அப்புறம் நான் இதை எதிர்க்கவேயில்லை. காரணம் மக்களுக்கு எது புடிக்குதோ அது ஹிட்டாகி விடும். நீங்கள் இந்த நிகழ்ச்சி அமைப்பளாரக்ளை குறை சொல்வதை விட, பார்த்து ஹிட்டாக்குகிறாரக்ளே அவரக்ளை தான் அதிகம் சாடனும்..

எங்கு டிமாண்ட் இருக்கிறதோ அங்கு சப்ளை செய்வதே வியாபரிகளின் வேலை//


ரிப்பீட்டேய்..

பணம் தல பணம் எதைபண்ணா டி.ஆர்.பி ஏறும்னு ஒண்ணும்புரியாம அவனவன் எதையாவது செஞ்சி பணம் பாக்க அலையிரான். அதான் நிஜம். இந்த போட்டியில கலந்துக்க ஆள் இல்லாம இருந்தா எப்படி போட்டி நடத்துவானுங்க.. கலந்துக்கவே ஆள் இருக்கறப்ப.. பாக்குறதுக்கு ஆளா இல்ல.

ஆப்பனுக்கு ஆப்பு said...

ஆப்புக்குஆப்படிப்பவன்...!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//சமூகத்தில் இத்தகைய நச்சுக்களை சுதந்திரமாக உலா விடுவீர்களெனில், உண்மை பேசி ஒரு கோடி ரூபாய் பரிசு பெறலாம், ஆனால், நீயும் நானும் குடும்பம் என்ற கட்டுக் கோப்புக்குள் வாழுவோமா என்பது சந்தேகமே.//

சூப்பரா நச்சுன்னு சொன்னிங்க அண்ணே !

தராசு said...

//பணம் தல பணம் எதைபண்ணா டி.ஆர்.பி ஏறும்னு ஒண்ணும்புரியாம அவனவன் எதையாவது செஞ்சி பணம் பாக்க அலையிரான். அதான் நிஜம். இந்த போட்டியில கலந்துக்க ஆள் இல்லாம இருந்தா எப்படி போட்டி நடத்துவானுங்க.. கலந்துக்கவே ஆள் இருக்கறப்ப.. பாக்குறதுக்கு ஆளா இல்ல.//

வந்ததுக்கு டேங்சு தலைவரே.

தராசு said...

//@ அருப்புக்கோட்டை பாஸ்கர் said...//

வாங்க பாஸ்கர், வந்ததுக்கு டேங்சு

Thamira said...

தொடர்ந்து விவாதிக்கப்படவேண்டிய பதிவு. சிந்தனைக்குரியது.

தராசு said...

//@ ஆதிமூலகிருஷ்ணன் said...
தொடர்ந்து விவாதிக்கப்படவேண்டிய பதிவு. சிந்தனைக்குரியது.//

சரி, சரி, ஒரு நாள் ஒதுக்குங்க, விவாதிப்போம்.