Thursday, July 9, 2009

ஜுகல்பந்தி - 09 - ஜூலை - 2009 - சிவப்புக் கொடியில் சிதறிய ரத்தம்!!!!!!!
நகரம் - பாடலிபுத்திரம்

கங்கையின் தெற்குக் கரையில் அமைந்திருக்கும் இந்த அழகிய நகரம், பரந்து விரிந்திருந்த பாரத மண் பரப்பின் மீதுள்ள பழம் பெருமை வாய்ந்த நகரங்களில் ஒன்று. மகத வம்ச வழி வந்த ஹரியங்கா, நந்தா, மௌர்யா,சுங்கா,குப்தா, பாலா மற்றும் சூரி என்ற ஏழு (கார்க்கியின் ஏழு அல்ல) பேரரச வம்சங்கள் இந்த மண்ணை ஆண்டிருக்கின்றன. கல்விக்கும், கலைகளுக்கும் பெயர் பெற்ற ஒரு நகரமாக பண்டைய காலத்தில் இது விளங்கியிருக்கிறது. உலகிலேயே மனிதன் காலடி வைத்து வாழ்வதற்கு ஏற்ற இடமென்று கண்டு, வாழும் முறைகளை தெரிந்தெடுத்து, நெறிகள் உருவாக்கி, இயற்கையை புரிந்து கொண்டு, அதனுடன் இணைந்து கொண்டு பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்தது பூமிபந்தின் மேல் உள்ள நீர்மூடா நிலப் பரப்பில் சில இடங்களில் தான். அப்படி துவங்கியதுதான் பழமை பெற்ற நாகரிகமாக வரலாற்று பக்கங்களில் காணப்படும் மெசபடோமியா நாகரிகம். இதுவும் யூப்ரடிஸ், டிக்ரீஸ் (இன்றைய ஈராக்கிலுள்ள) என்ற இரு நதிக்கரைகளில் தான் முதல் முதலாக நாகரிகம் தோன்றியதாம். அதற்கு சற்றும் குறையாத நாகரிக செருக்கு இந்த கங்கை நதிக்கரை பட்டணமான பாடலிபுத்திரத்திலும் இருந்திருக்கிறது. கிறிஸ்துவுக்கு முந்தைய காலங்களில் வந்த கிரேக்க வரலாற்று ஆசிரியரான மெக்தென்னிஸ்ஸின் வர்லாற்று குறிப்புகளிலும், சீன பிரயாணியான ஃபா ஹெயின் என்பவரது பிரயாண குறிப்புகளிலும் பாடலிபுத்திரத்தின் சிறப்புகள் ஓஹோவென புகழப்படுகிறது.

இந்து, புத்த,ஜைன மதங்களுக்கான புண்ணிய பூமியாக இது இன்றும் திகழ்கிறது. சீக்கியர்களின் மதகுருவும், கல்ஸா இயக்கத்தின் தலைவரும், இன்றும் சீக்கியர்களால் போற்றி வழிபடப்படுபவருமான குரு கோவிந்த் சிங் பிறந்தது இந்த பாடலிபுத்திரத்தில் தான். பாடலிபுத்திரத்தில் இவரது நினைவாக கட்டப்பட்ட குருத்வாரா ஸ்ரீ தக்த் பட்னா சாஹிப், மகாராஜா ரஞ்சித் சிங் என்பவரால் கட்டப்பட்டது.

இப்படி கலாச்சார செருக்கும், வரலாற்று சிறப்பும், கல்வியில் மேன்மையும் பெற்றதாலோ என்னவோ, இந்த பாடலி புத்திரத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகளில் இந்நாளிலும் வாழும் மக்கள் அதே தெய்வ பக்தியும், கலாச்சாரத்தின் எச்சங்களுடனும், வரலாற்றின் மிச்சங்களுடனும், கல்வியின் சொச்சங்களுடனும் வாழ்கிறார்கள். கூட்டுக்குடும்பங்கள் இன்னும் அழியாமல் இருக்கிறது. இருபது நபர்களைக் கொண்ட குடும்பத்தை சர்வ சாதாரணமாக காண முடிகிறது. எத்தனை தான் நவீனம் இந்தியனை ஆட்கொண்டாலும் இந்த புண்ணிய மண்ணின் புனிதம் இன்னும் கெடாமல் இருக்கிறது. பழமையின் இனிமைக்கு கட்டியம் கூறும் போஜ்பூரி மொழியில் பாடப்படும் இதிகாச பாடல்களும், அந்த மொழியின் இனிமையும், புரிகிறதோ, புரியவில்லையோ கேட்போரை ஆனந்தப்படுத்தும்

ஆனால் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குட்பட்ட இந்த புராதன நகரம் இன்று சொல்லிக்கொள்ளும்படியான முக்கியத்துவத்தை இழந்து விட்டது. ஊழலும், ஜாதிப்பித்தும், அரசியல் கட்சிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியும் இந்த பிராந்தியத்தை அதன் பழம் பெருமைகளை குலைத்துப் போட்டு தினமும் சண்டையும் சச்சரவும் நிறைந்த ரத்த பூமியாக்கி விட்டது.

ஆனால் வாழ்வில் ஒரு முறையேனும் இந்த பழைய பூமியை, அதன் சிறப்பை, நாகரிக செருக்கை, வெவ்வேறு மத நம்பிக்கைகளின் பிறப்பிடத்தை, வந்தாரை வாழ வைக்கும் இந்த பிராந்திய மக்களின் அன்பை ருசித்து உணர வேண்டும்.


நாட்டு நடப்புகள் : சிவப்புக் கொடியில் சிதறிய ரத்தம்

துருக்கிய பழங்குடியினரின் இனமான உக்ஹ்யூர் என்ற ஒரு இனம் நாடு விட்டு நாடு மாறி இன்றைய கஜகிஸ்தான், கைர்கிஸ்தான்,உஸ்பெகிஸ்தான், தஜகிஸ்தான் (அப்பா, எத்தனை இஸ்தான், இஸ்தான்) ம்ற்றும் இன்றைய ரஷ்யா, ஏன் நம்ம பக்கத்து வீடான பாகிஸ்தானிலும் கூட வசிக்கிறார்கள். சீனாவின் வட மேற்கு பகுதியான ஜின் ஜியாங் உக்ஹ்யூர் என்ற தன்னாட்சி பெற்ற பிரதேசத்திலும் வசிக்கிறார்கள். பெருவாரியான முஸ்லிம் மக்களைக் கொண்ட இந்தப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் அமைதியுடனும் செழிப்புடனும் வாழ்வது சிவப்புக் கொடி நாடான சீனாவின் கண்களை வெகுவாக உறுத்தி வருகிறது. துரதிஷ்டவசமாக இந்த பிராந்தியத்தில் எண்ணைக்கிணறுகள் வேறு இருந்து தொலைத்து விட, இந்த மக்களை ஒழித்தலொழிய இந்த எண்ணைய்ப் பணம் நம் கைக்கு வராது என சீனா நினைக்கிறதோ என்னவோ. கம்யூனிஸ சித்தாந்தங்களை அவர்கள் மீது ஏவியும், திணித்தும் எப்பொழுதும் அவர்களை சீண்டிக் கொண்டிருப்பது சீனாவின் பொழுது போக்கு. முஸ்லிம்களின் விழாக்காலங்களிலும், நோன்பு நாட்களிலும் அவர்களை வெறுப்பேற்றுவதை ஒரு பாரம்பரியமாகவே சீனா செய்து வந்திருக்கிறது. அவர்களும் பொருளாதார ரீதியாக சீனாவை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறதே என்ற ஒரு பாவத்திற்காக பல்லைக்கடித்தபடி பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். பொறுத்துப் போகிறவர்களை சீண்டிப் பார்ப்பதில் சீனாவுக்கு நிகர் வேறு யாருமே உலகில் இருக்க முடியாதென நினைக்கிறேன். 2008 ம் ஆண்டில் திபெத்தில் நடத்திய வெறியாட்டத்திலும் சரி, அவ்வப்பொழுது அருணாச்சல பிரதேச எல்லையில் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுப்பதிலும் சரி, தைவான் மக்களுடைய அனுதின வாழ்வியல் நெறிகளில் குறுக்கிடுவதிலும் சரி, சீனா எப்பொழுதுமே தன்னை ஒரு அரை பிளேடு பக்கிரி போன்ற பிராந்திய ரவுடியாகவே அடையாளம் காட்டியிருக்கிறது. இந்த ரவுடித்தனங்களால் ஏற்பட்ட வெறுப்பும் கோபமும் உக்ஹ்யூர் மக்களின் மனதில் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த வேளையில் தான், ஒரு சிறு பொறி சென்ற ஜூன் மாதத்தில் கிளம்பியது.

சீனாவின் க்வாங்டாங் மாநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு உக்ஹ்யூர் இன ஆண்கள் ஒரு சீன பெண்மணியை கற்பழித்தி விட்டார்கள என்ற வதந்தி கிளம்பியது. பிற்பாடு வதந்தி பரப்பிய புண்ணிய வானை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். வதந்தி பரவுவதற்கு நேரம் பிடிக்குமா என்ன, முதலிலேயே இந்த வேற்று இன மக்கள் மீது வெறுப்பிலிருந்த சீன மக்கள், அந்த இருவரையும் பிடித்து தகுந்த மரியாதைகளுடன் சிவலோக பிராப்தி அடைய வைத்தார்கள். இந்த அநியாயத்துக்கு கண்டனம் தெரிவித்து, உக்ஹ்யூர் மக்கள் வீதிக்கு வந்து போராட, இதை ஒரு காரணமாக வைத்து சீனர்களும், சீன காவல்துறையும் ஒரு பேயாட்டம் ஆடிவிட்டார்கள். நூற்றுக்கணக்கில் இறந்துபோய், நூற்றுக்கணக்கில் சிறை பிடிக்கப்பட்டுமென உக்ஹ்யூர் மக்கள் இன்னும் பதட்டத்தில் தான் இருக்கிறார்கள்.

மறுபடியும் ஒருமுறை தன் ரவுடித்தனத்தால் தன் சிவப்புக் கொடியில் ரத்தத்தை சீனா பூசிக் கொண்டது.

பதிவர் வட்டம் :

இந்த திங்கள் கிழமை ஒரு சிறிய மொக்கைப் பதிவை போட்டுவிட, பதிவுலகில் இருக்கும் மொக்கை சாமிகள் அனைவரும் அவர்களது குழுமத்திற்கு அழைத்து கும்மு கும்மென கும்மி விட்டார்கள். காலேஜ்ல கூட இப்படி எல்லாம் ராகிங் பண்ணுவாங்களான்னு தெரியல. அப்புறமா நம்ம ஒரு பின்நவீனத்துவ கவிதைய எடுத்து விட்டதுக்கப்புறமா தான் அடங்குனாங்க. வாழ்க மொக்கைச் சாமிகள்.

இந்த குழுமத்துக்கு என்னை அழைத்துச் (இழுத்துச்) சென்ற என் நலம் விரும்பி, அன்பர் கார்க்கிக்கு , ஹூக்கும் நல்லா இருங்க சாமி.

கவுஜ :

எலியின் தலையில் இரு விரல்கள்,
எலியின் ஆணைக்கு காத்திருக்கும் அம்பு,
எலியின் தலையில் இடது புறமாய்
விரலால் போட்டேன் பொளேரென,
அம்பு பாய்ந்தது திரையில் எழுத்தினூடே,
முன்னே விரிந்தது பதிவுலகம்,
ங்கொய்யால, அதுல தான் நீங்க படிக்கற
இந்த மொக்கையே இருக்குது.

17 comments:

கார்க்கி said...

ஹிஹிஹி..

நெம்ப நன்றிங்கண்ணா

Anonymous said...

//ங்கொய்யால//

இந்த வார்த்தை உங்கள் கவிதைகளில் அடிக்கடி வருவதால் இதை ங்கொய்யால கவிதைகள் என வெளியிடவும்.

டக்ளஸ்....... said...

எங்கிருந்துய்யா புடிக்கீறீங்க கவிதைகள..?

நாஞ்சில் நாதம் said...

இன்றைக்கு காலையில தான் நினைச்சேன் பாடலிபுத்திரம் அப்படின்னு ஒரு ஊர பத்தி படிச்சோமே அப்படின்னு. அது அக்கா பையனுக்கு ஒரு கட்டுரை தயாரிக்க.

நல்ல தகவல் நீங்க கொடுத்த்திருக்கீங்க. நன்றி

\\ அவர்களது குழுமத்திற்கு அழைத்து கும்மு கும்மென கும்மி விட்டார்கள்.//

ஓஓஓ அந்த அப்பாவி நீங்க தானா. அடி கொஞ்சம் ஓவரோ.

பின்நவீனத்துவ கவிதைய கொஞ்சம் மெயில் அனுப முடியுமா

தராசு said...

//@ வடகரை வேலன் said...
//ங்கொய்யால//

இந்த வார்த்தை உங்கள் கவிதைகளில் அடிக்கடி வருவதால் இதை ங்கொய்யால கவிதைகள் என வெளியிடவும்.//

அண்ணே, வந்ததுக்கு டேங்சு.

கண்டிப்பா செய்யறேன்.

தராசு said...

//@ டக்ளஸ்....... said...
எங்கிருந்துய்யா புடிக்கீறீங்க கவிதைகள..?//

அது வந்துங்க, அதை எப்படி சொல்றது, மறுபடியும் மல்லாக்க படுத்து யோசிச்சப்போ,

வேண்டாம், வேண்டாம், த அது இங்க பாரு, இப்பவே சொல்லிடறேன், பேச்சு பேச்சத்தான் இருக்கணும், ஆமா

தராசு said...

//@ நாஞ்சில் நாதம் said...

பின்நவீனத்துவ கவிதைய கொஞ்சம் மெயில் அனுப முடியுமா//

கண்டிப்பா அனுப்பறேன் தலைவரே.

செந்தழல் ரவி said...

கடைசி கவுஜ...ஆஹா...!!!

Rangs said...

//பொறுத்துப் போகிறவர்களை சீண்டிப் பார்ப்பதில் சீனாவுக்கு நிகர் வேறு யாருமே உலகில் இருக்க முடியாதென நினைக்கிறேன். 2008 ம் ஆண்டில் திபெத்தில் நடத்திய வெறியாட்டத்திலும் சரி, அவ்வப்பொழுது அருணாச்சல பிரதேச எல்லையில் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுப்பதிலும் சரி, தைவான் மக்களுடைய அனுதின வாழ்வியல் நெறிகளில் குறுக்கிடுவதிலும் சரி, சீனா எப்பொழுதுமே தன்னை ஒரு அரை பிளேடு பக்கிரி போன்ற பிராந்திய ரவுடியாகவே//

ரொம்ப சரி.. அருமையா சொல்லிருக்கீங்க..

தராசு said...

//செந்தழல் ரவி said...
கடைசி கவுஜ...ஆஹா...!!!//

தலைவரே, வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

வாங்க ரங்ஸ்,

வந்ததுக்கு டேங்சு

அனுஜன்யா said...

இதுக்கு முன்னால கான்பூர் பத்தி எழுதினீங்க. இப்போ பாட்னா. நல்லா இருக்கு. சமீபத்தில் அங்க போயிட்டு வந்தீங்களா?

அனுஜன்யா

ஜோசப் பால்ராஜ் said...

ங்கொய்யாலத்துவ கவிதைகள் நல்லாருக்குண்ணே.
உம்ம அங்க வைச்சுப் பார்த்துக்கிறேன்.

மங்களூர் சிவா said...

/
எலியின் தலையில் இரு விரல்கள்,
எலியின் ஆணைக்கு காத்திருக்கும் அம்பு,
எலியின் தலையில் இடது புறமாய்
விரலால் போட்டேன் பொளேரென,
அம்பு பாய்ந்தது திரையில் எழுத்தினூடே,
முன்னே விரிந்தது பதிவுலகம்,
ங்கொய்யால, அதுல தான் நீங்க படிக்கற
இந்த மொக்கையே இருக்குது.
/

ங்கொய்ய்யால கவுஜ சூப்பர்!

தராசு said...

//@அனுஜன்யா said...
இதுக்கு முன்னால கான்பூர் பத்தி எழுதினீங்க. இப்போ பாட்னா. நல்லா இருக்கு. சமீபத்தில் அங்க போயிட்டு வந்தீங்களா? //

இந்த பிரதேசங்களில் தாண்ணே அடிக்கடி வேலை விஷயமா சுத்திகிட்டிருக்கேன்.

வந்ததுக்கு டேங்சுண்ணே

தராசு said...

//@ ஜோசப் பால்ராஜ் said...
ங்கொய்யாலத்துவ கவிதைகள் நல்லாருக்குண்ணே.
உம்ம அங்க வைச்சுப் பார்த்துக்கிறேன்.//

அங்க வேற பாக்கப் போறீங்களா,

நல்லா இருங்க சாமி

தராசு said...

//@ மங்களூர் சிவா said...

ங்கொய்ய்யால கவுஜ சூப்பர்!//

வந்ததுக்கு டேங்சு.