Wednesday, July 15, 2009

ஜுகல்பந்தி 15 ஜூலை 2009 - இந்திய ஊடகங்கள் - ஜெய் ஹோ.

ஜுகல்பந்தியில் எழுதப்படும் நகரங்களின் தகவல்கள் குறித்து, ஆரம்பத்தில் வரவேற்பு கொஞ்சம் கூட இல்லாதிருந்த போதும், நாளடைவில் இதையும் படித்து தொலைக்க வேண்டியிருக்கிறதே என்ற எண்ணமோ என்னவோ கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு கூட ஆரம்பித்திருக்கிறது. இதன் முக்கிய நோக்கமே, நம் உள்ளூரில் இருக்கும் சிறப்புகளை நாம் முழுதும் அறிய வேண்டும் என்பதுதான். பல வெளிநாட்டு நகரங்களையும் அதன் நவீனத்தையும் கண்டு பிரமித்து நிற்கிற அதே வேளையில் நமது நகரங்களும் புராதனச் சிறப்பில் அவற்றிற்கு சற்றும் சளைத்தவை அல்ல என்பதை உணர்த்தத்தான் இந்த தகவல்கள். சரி சரி பில்டப்பு ஓவரா ஆயிருச்சு, மேட்டருக்கு வருவோம்.


நகரம் - லக்னௌ - நவாபுகளின் நகரம்.


அவத் சாம்ராஜ்யத்தின் நினைவுச் சின்னங்களில் ஒன்று. இந்த அவத் சாம்ராஜ்யத்தைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை மிகவும் சிரமப் பட்டு தேட வேண்டி இருக்கிறது. எது எப்படியோ இந்த சாம்ராஜ்யத்தில் அயோத்தியாவை (அய்யய்யோ, பேரைக் கேட்டது மாத்திரம் போதும், அப்படியே ஓரமா வந்துரு நைனா, வம்பே வேண்டாம்) தலைநகராகக் கொண்டு கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தில் இருந்தே இந்தப் பகுதி செழிப்புடன் இருந்ததாக, கி.மு. ஆறாம் நூற்றாண்டு வரலாற்றுக் குறிப்புகள் சொல்லுகின்றன. கங்கைக்கும் யமுனைக்கும் நடுவில் இருந்த சமவெளிப் பகுதியில் நீர்வளம் செழித்திருக்க, நிலத்தைப் பண்படுத்தியவுடன், சிந்திய வியர்வைக்கு வஞ்சகமில்லாமல் விளைந்து தள்ளியிருக்கிறது. கோசல வம்சத்து மன்னர்கள் இந்த பகுதியின் பூகோள சிறப்பையும், செழிப்பையும் கண்டு ஆளத் தொடங்கிவிட்டனர். பின்னாளில் இந்த சமவெளிப்பகுதி வளர்ச்சி பெற்று, ஆட்சியாளர்கள் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்தில் இது கடைசியில் முகலாயர்களின் ஆட்சியின் கீழ் சிறிது காலம் தனிப்பெருமை பெற்றிருக்கிறது. புத்தர் இந்த கோசல வம்சத்தை சேர்ந்தவர்தான் என இந்நாளில் ஜாதிச் சான்றிதழ் தருகிறார்கள். 24 காவது தீர்த்தங்கரராக ஜைன மதத்தவரால் மதிக்கப்படும் மகாவீரரும் இந்த பிராந்தியங்களில் தான் போதனையை ஆரம்பித்திருக்கிறார்.


கி.பி. 1350 க்குப் பிறகு இந்த வளம் கொழிக்கும் பகுதி, முதலில், டெல்லி சுல்தானாலும், பிறகு முகலாய சக்கரவர்த்தியாலும், அதன் பின், அவத வம்சத்து நவாபுகளாலும், பிறகு கிழக்கிந்திய கம்பெனியாரலும், முடிவாக பிரிட்டிஷின் நேரடி ஆட்சியின் கீழுமென எத்தனையோ ஆட்சி மாற்றங்களை சந்தித்திருக்கிறது. முதல் இந்திய சுதந்திர போராட்டத்திற்கான மைய கேந்திரமாகவும் இருந்திருக்கிறது.


முகமதியர்களின் சியா பிரிவு நவாபுகளால் ஆளப்பட்டதால், சியா பிரிவினரின் பெரும்பான்மையை இந்நகரில் இன்றும் காணமுடியும். விவசாயத்தில் செழித்து வந்ததால், வடக்கே முகலாயர்கள், தெற்கே மராட்டியர்கள் மற்றும் கிழக்கில் பிரிட்டிஷார்கள் என்ற மும்முனை பயம் இருந்த போதிலும், கையில் துட்டு இருந்ததால் நவாப்கள் இந்த மும்முனை ஆபத்துகளில் இருந்தும் எப்பொழுதும் தங்களை காத்துக் கொண்டே இருந்தனர். நவாப் அஸப் - உத் - தௌலா என்பவரது ஆட்சிக்காலத்தில் லக்னௌ பெரும் பொலிவு பெற்று, பாரா இமாம்பாரா, சோட்டா இமாம்பாரா, ரூமி தர்வாஜா போன்ற இன்றும் நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதில் இந்த பாரா இமாம்பாரா என்ற கட்டிடம் சியா பிரிவினரின் புலம்பல் (ஆதியின் அல்ல) பாடல்கள் இயற்றப் படவும், பாடப்படவும் உபயோகப்படும் ஒரு கட்டிடமாகக் கட்டப்பட்டது. இதைக் கட்டிடத்தை கட்டிய விதம் முக சுவையானது.


அஸப் - உத் - தௌலாவின் காலத்தில் கி.பி.1783 ம் வருடத்தில் இந்த சமவெளியிலும் பஞ்சம் வந்திருக்கிறது. வந்த பஞ்சம் கொஞ்ச நஞ்ச பஞ்சமல்ல, (அடேயப்பா, என்னா ஞ்ச ஞ்ச ஞ்ச). பத்து வருடங்கள் நீடித்த இந்த பஞ்சத்தில் மக்கள் நொந்து நூலாகிப்போனார்கள். அப்பொழுது வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக, இந்த கட்டிடத்தை கட்டியிருக்கிறார்கள். அப்பொழுதும் இந்த பெரிய தனக்காரர்கள் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என முறுக்கிக் கொண்டு கட்டிட வேலை செய்ய மாட்டோம் என வறட்டு கௌரவத்தில் இருந்த பொழுது, பஞ்சம் அடித்த அடியில் நிலை குலைந்து போனார்கள். அரசனிடம் சென்று எங்கள் கௌரவத்திற்கு இழுக்கு வராத வகையில் ஒரு வேலை கொடுங்கள் மன்னா என சொல்ல, மன்னரும் தனது மீசைக்குள் புன்னகைத்தவாறே, சரி சரி, பகல் வேளையில் கட்டிட காரர்கள் கட்டி முடிப்பார்கள். இரவில் வந்து நீங்கள் அதை உடைத்து விடுங்கள் என்றாராம். இப்படி பத்து வருடங்கள் தொடர்ந்து கட்டுவதும் இடிப்பதுமாகவே இருந்து கட்டப்பட்டது தான் இந்த பாரா இமாம்பாரா.


பின்னாளில், அந்த அரசர், இந்த பேரரசர், பின் பிரிட்டிஷார் என இந்த சமவெளியை பலர் கூறு போட்டுக்கொண்டும், பின் சக்திக்கு தகுந்தபடி விஸ்தரித்துக் கொண்டுமென ஆண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தனை மாற்றங்களுக்கும் இங்கிருக்கும் கலைக்கு எந்த சேதத்தையும் விளைவிக்கவில்லை. இன்றும் அதே ஆடலும் பாடலும், பட்டம் விடும் திருவிழாவும், தேனொழுகும் மொழியும் மாறாமலிருக்கிறது. லக்னௌ மக்கள் மாத்திரம் யாரையாவது திட்ட வேண்டுமென்றால் கூட " உங்களுக்கிருக்கிற திமிர் இருக்கிறதே, அதை அடிச்சுக்கவே முடியாதுங்க" என்று மென்மையாகவே பேசுகிறார்கள். இன்னும் நாவாபி உணவு வகைகளான கபாப், மற்றும் கொஃப்தா, போன்றவைகளுக்கு லக்னௌவின் ருசியே தனி ருசிதான்.


நாட்டு நடப்புகள்: அட்றா சக்கை, சச்சின், காம்பிளி


அரை டவுசர் போட்டு பள்ளிகூடம் போன நாட்களிலிருந்து இருவரும் நண்பர்கள். இருவரும் கிரிக்கெட் விளையாட பழகினார்கள். ரஞ்சி போட்டிகளிலும் இருவரும் வெளுத்து வாங்கியவர்கள். இன்று வரை நல்ல நண்பர்கள். ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியில் நிலையான இடம் பிடித்து விட்டார், இன்னொருவர், கொஞ்ச நாள் கூடவே பயணித்தவர், பிறகு விலகி விட்டார், அவர் விலகி விட்டாரா அல்லது விலக்கப் பட்டாரா என்பது நாடறிந்த விஷயம். ஆனால் பாருங்கள் இந்த காம்பிளி கொஞ்சம் சின்னத்திரை பக்கம் தலையை காட்ட ஆரம்பித்து, நடிகைகளுடன் நடனமாடி, கொஞ்சம் சிரிக்க வைத்து, காமெடி ஷோக்கள் செய்து என ஜாலியாக் பொழுதை போக்க ஆரம்பித்தார். மறுபடியும் ஊடகத்தின் கண்களில் பட்டுத் தொலைத்தார். யாருக்கு சிண்டு முடியலாம் என காத்துக் கிடந்து வெறு வாயை மென்று கொண்டிருந்த ஊடகத்தாருக்கு காம்பிளி மாட்டினார் வகையாக.


இவர் ஒரு ரியலிட்டி ஷோ செய்யப்போக, அதில் வேண்டுமென்றே சச்சினைப் பற்றிய கேள்வி கேட்கப்பட்டு, "சச்சின் உங்களுக்கு நிறைய உதவி செய்திருக்கலாமே" என்பது போன்ற விவகாரமான் கேள்வி கேட்கப் பட்டு, விரித்திருக்கும் வலை எத்தனை பேரின் போதைக்கு ஊறுகாய் ஆகப் போகிறது என்பது தெரியாமலே காம்பிளி வாய் சொல்லை விட்டுவிட, இன்று கிரிக்கெட் போர்டு இனவெறி கொண்டதாகவும், காம்பிளி ஒரு பின்தங்கிய வகுப்பினர் என்பதால் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும், சச்சின் அவருக்கு உதவி செய்ய முடிந்தும் செய்யாமல் விட்டது கூட இந்த இனவெறியால் தானா என்றும், கவாஸ்கர் மேல்ஜாதி என்பதால் சச்சினை மட்டுமே உயர்த்தி பேசுகிறார், இன்று வரை பல வெற்றிகளை பெற்ற தோனியை கூட அவர் அங்கீகரிக்கவில்லை என்றும், அப்பப்பா, போதுமடா சாமி, ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி, அதை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை " Breaking News" என்றும் " Flash News" என்றும், ஆஹாஹாஹாஹா, என்னே இந்திய ஊடக தர்மம். ஜெய் ஹோ.


ங்கொய்யால பக்கங்கள்


சென்ற வார ஜுகல்பந்தியில் எழுதியிருந்த கவுஜய படிச்சுட்டு, வடகரை வேலன் அண்ணன், ங்கொய்யால பகுதின்னே ஒண்ணு ஆரம்பிச்சுருண்ணு சொன்னாரு, பெரியவங்க பேச்சுக்கு மதிப்பு குடுத்து, இதா அடுத்த ங்கொய்யால,

தோல்ல வரி இருந்தா அது வரிக்குதிரை,
தோல்ல புள்ளி இருந்தா அது புள்ளி மான்,
தோல்ல முள் இருந்தா அது முள்ளம்பன்றி,
தோல் கருப்பா இருந்தா அது கருஞ்சிறுத்தை,
ஆனா,
தோல் கருப்போ, வெள்ளையோ, சிவப்போ,மஞ்சளோ
ங்கொய்யால, நல்ல மனசு இருந்தாதாண்டா அவன் மனுசன்.

14 comments:

எம்.எம்.அப்துல்லா said...

/தோல் கருப்போ, வெள்ளையோ, சிவப்போ,மஞ்சளோ
ங்கொய்யால, நல்ல மனசு இருந்தாதாண்டா அவன் மனுசன்.

//

நீ மனுஷன்னே :)

எம்.எம்.அப்துல்லா said...

ஹையா மீ த ஃபர்ஷ்ட்டா :)

தராசு said...

அப்துல்லா அண்ணே,

எங்க போனீங்க இவ்வளவு நாளா???

வந்ததுக்கு டேங்சு

நாஞ்சில் நாதம் said...

ஜுகல்பந்தி ,நாட்டு நடப்புகள் ,
ங்கொய்யால பக்கங்கள் - ங்கொய்யால சூப்பர்

நையாண்டி நைனா said...

தண்ணி மஞ்சளா இருந்தா விஸ்கி
தண்ணி பிரவுனா இருந்தா ரம்மு
தண்ணி வெள்ளையா இருந்தா வோட்கா
தண்ணி பொன்னிறமா இருந்தா பீரு...
ஆனா சரக்கு கருப்போ, வெள்ளையோ, பிரவுனோ, மஞ்சளோ
ங்கொய்யால நல்லா
கிக்கு ஏறுனா தாண்டா அது சரக்கு....

தராசு said...

வாங்க நாஞ்சில் அண்ணே,

வந்ததுக்கு டேங்சு

தராசு said...

நைனா,

உங்களுக்கு ஒரு சல்யூட்டு.

டக்ளஸ்... said...

ஆமா தலைவரே, நானும் ரொம்ப நாளா கேக்கனும்னு நெனெச்சேன்..
இந்த நகரங்களப் பத்தின மேட்டர எங்க இருந்து புடிக்கிறீங்க..?

அண்ணே, "ங்கொய்யால" சூப்பரு..!
இருந்தாலும் இன்னும் "பூந்தொட்டி ங்கொய்யால "வ மட்டும் மறக்கவே முடியல..!
இப்பக் கூட சிரிப்பு வர்ய்து.

டக்ளஸ்... said...

\\தண்ணி மஞ்சளா இருந்தா விஸ்கி
தண்ணி பிரவுனா இருந்தா ரம்மு
தண்ணி வெள்ளையா இருந்தா வோட்கா
தண்ணி பொன்னிறமா இருந்தா பீரு...
ஆனா சரக்கு கருப்போ, வெள்ளையோ, பிரவுனோ, மஞ்சளோ
ங்கொய்யால நல்லா
கிக்கு ஏறுனா தாண்டா அது சரக்கு....\\

ஹைய்யா, இன்னைக்கி தராசு அண்ணனா..?
ஜாலி.

நையாண்டி நைனா said...

தண்ணி மஞ்சளா இருந்தா விஸ்கி
தண்ணி பிரவுனா இருந்தா ரம்மு
தண்ணி வெள்ளையா இருந்தா வோட்கா
தண்ணி பொன்னிறமா இருந்தா பீரு...
ஆனா சரக்கு கருப்போ, வெள்ளையோ, பிரவுனோ, மஞ்சளோ
ங்கொய்யால நல்லா
கிக்கு ஏறுனா தாண்டா அது சரக்கு....

அண்ணே... இந்த மேட்டரை என்னோட பதிவுலே போட்டுக்கவா.....???

தராசு said...

நைனா,

இதெல்லாம் ஒரு கேள்வியா?

போட்டு விளாசுங்க

தராசு said...

//@டக்ளஸ்... said...
ஆமா தலைவரே, நானும் ரொம்ப நாளா கேக்கனும்னு நெனெச்சேன்..
இந்த நகரங்களப் பத்தின மேட்டர எங்க இருந்து புடிக்கிறீங்க..?//

ஏம்பா, நல்லா இல்லியா?

இப்படியா ரகசியத்தை எல்லாம் கேப்பாங்க? ரொம்பத்தான் குறும்பு.
தனியா சொல்றேன்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//இன்று கிரிக்கெட் போர்டு இனவெறி கொண்டதாகவும், காம்பிளி ஒரு பின்தங்கிய வகுப்பினர் என்பதால் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும், சச்சின் அவருக்கு உதவி செய்ய முடிந்தும் செய்யாமல் விட்டது கூட இந்த இனவெறியால் தானா என்றும், கவாஸ்கர் மேல்ஜாதி என்பதால் சச்சினை மட்டுமே உயர்த்தி பேசுகிறார், இன்று வரை பல வெற்றிகளை பெற்ற தோனியை கூட அவர் அங்கீகரிக்கவில்லை//
உண்மையை தானே கூறினார் அண்ணே !

ஆமாம் பெரிய தப்பு செய்து விட்டார் !

இன்றைய மீடியா தர்மபடி உண்மையை பேசக்கூடாது அல்லவா .

இது கூட தெரியலையே காம்ப்ளிக்கு !

தராசு said...

வாங்க பாஸ்கர்,

வந்ததுக்கு டேங்சு.