Thursday, July 16, 2009

அசத்தும் ஆதி மூல கிருஷ்ணன்!!!!!!!!


பதிவர் வட்டத்தில் நகைச்சுவையுடனும், அசத்தும் நயத்துடனும், உருக்கும் உணர்வு பூர்வ பதிவுகளாலும், குறிப்பாக துறை சார்ந்த பதிவுகளாலும் நம் நெஞ்சில் நிறைந்திருப்பவர், தாமிரா என்றறியப்பட்ட, ஆதி என்கிற ஆதிமூல கிருஷ்ணன்.

இவர் சமீபத்தில் தனது வலைப்பூ வடிவத்தை மாற்றி, சில கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது சமீபத்திய பதிவில் ஒரு அன்பர் இட்ட பின்னூட்டம்:

வாழவந்தான் said...
side bar voting-ல் துறை சார்ந்த பதிவுகள் option இல்லை. (இதை குறிப்பிட காரணம் நடந்து முடிந்த univ exam-ல் six sigma and S5 பதிவுகளால் தப்பித்தேன்... நன்றி...)இந்த பின்னூட்டத்தை படிக்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நாம் எழுதும் பதிவுகள் ரசிக்கப்படுகிறதா என்பதில் அதிக கவனம் செலுத்தும் என்னைப் போன்றவர்கள், அது வாசிப்பவருக்கு பிரயோஜனமுள்ளதாய் இருக்கிறதா என அதிகம் யோசிப்பதில்லை. பிரபலமடையவேண்டும் என்ற வேட்கை எனக்குள்ளதே தவிர பிரயோஜனமாயிருக்க வேண்டும் என்ற தாகம் உள்ளதா என்றால், Honestly Speaking இல்லை என்றே சொல்லுவேன்.

மொக்கை பதிவுகள், சர்ச்சைக்குரிய பதிவுகள், வாசகனை வேறு தளத்துக்கு அழைத்துச் செல்ல முயலும் பதிவுகள் என வலையுலகில் பதிக்கப்படும் பதிவுகளை வகைபடுத்த எத்தனையோ வார்த்தைகள் இருந்தாலும், அடுத்தவருக்கு உபயோகமுள்ள பதிவுகள் என ஒரு சிலவற்றையே சொல்ல முடியும். அந்த வகையில் ஒரு மாணவனின் வாழ்க்கையில் அவரது முக்கியமான கட்டமான பல்கலைக்கழக தேர்வுக்கு உதவும் தரத்திற்கு உங்கள் பதிவுகள் உள்ளது என நினைக்கையில் பெருமையாயிருக்கிறது அன்பரே.

பதிவர்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துள்ளீர்கள், வாழ்த்துக்கள் நண்பனே.

இன்னும் அதிகம் எழுது, இன்னும் அனேகருக்கு உன் எழுத்துக்கள் உதவிக்கரங்களாய் இருக்கட்டும், ஒரு சிறந்த முன் மாதிரியாய் இருக்கட்டும்.

மனம் நிறைய பெருமையுடன்

தராசு

13 comments:

கார்க்கி said...

ஆதியின் பெரும்பாலான பதிவுகள் மற்றவர்களுக்கு உபயோகமானவையே.. தங்கமணி பதிவுகளை சொல்கிறேன் தல :)))

எம்.எம்.அப்துல்லா said...

உங்கள் மகிழ்வில் நானும் இணைகின்றேன்.

:)

நர்சிம் said...

நல்ல பதிவு.

டக்ளஸ்... said...

நான் அதை அவருடைய தளத்திலேயே சுட்டிக்காட்டியிருந்தேன்...
இங்கேயும் அங்கிளுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்.
:)

நாஞ்சில் நாதம் said...

/////////இந்த பின்னூட்டத்தை படிக்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நாம் எழுதும் பதிவுகள் ரசிக்கப்படுகிறதா என்பதில் அதிக கவனம் செலுத்தும் என்னைப் போன்றவர்கள், அது வாசிப்பவருக்கு பிரயோஜனமுள்ளதாய் இருக்கிறதா என அதிகம் யோசிப்பதில்லை. பிரபலமடையவேண்டும் என்ற வேட்கை எனக்குள்ளதே தவிர பிரயோஜனமாயிருக்க வேண்டும் என்ற தாகம் உள்ளதா என்றால், Honestly Speaking இல்லை என்றே சொல்லுவேன்.\\\\\\\

/// அடுத்தவருக்கு உபயோகமுள்ள பதிவுகள் என ஒரு சிலவற்றையே சொல்ல முடியும். அந்த வகையில் ஒரு மாணவனின் வாழ்க்கையில் அவரது முக்கியமான கட்டமான பல்கலைக்கழக தேர்வுக்கு உதவும் தரத்திற்கு உங்கள் பதிவுகள் உள்ளது என நினைக்கையில் பெருமையாயிருக்கிறது அன்பரே.\\\\

வாழ்த்துக்கள் தோழர் உங்களுக்கும் ஆதிமூல கிருஷ்ணன் அவர்களுக்கும்

பரிசல்காரன் said...

எவ்வளவோ கனவுகளோடு பதிவுலகத்திற்கு வந்து, வேறு வழியின்றி அவ்வப்போது மொக்கைகளும் எழுதிக் கொண்டிருக்கிறார் ஆதி. அவரது திறமையே வேறு.

எதிர்ப்பதிவுகளில் இவரைப் போல எழுதுவது மிகச் சிலரே.

இன்னும் பல வெற்றிகளை அவர் பெறுவார் என்பது திண்ணம்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

என்ன கூத்து இது.? சொல்லவேயில்ல..

தராசு, என்னை மிகவும் பெருமை செய்துள்ளீர்கள் (உள்ளதுக்கு அதிகமாகவே). வார்த்தையற்று நிற்கிறேன். நன்றிகள் உங்களுக்கும், நண்பர்களுக்கும்.

(பாருங்க, ஒரு ஆளக்காணோம்..)

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

Anonymous said...

ஏம்பா ஆப்பு,

அந்த மனுசன் ஒரு நல்ல பதிவு எழுதி அதைப் படிச்சு ஒருத்தன் பரிச்சையும் எழுதியிருக்கான். உபயோகமா இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னதைப் பாராட்டுனா, ஆப்பு சொருகுவேன்னு எழுதுறியே, உனக்கு ஏதும் மன வியாதியா?

என்னமோ போப்பா வடிவேலுக்கு அப்புறமா ஆப்ப இப்படிக் கேவலமாக்குனது நீதான்.

நல்லா இரு.

Anonymous said...

ஆதி, நான் முன்பே சொன்னது ஞாபகம் வருதா? துறைசார் பதிவுகளில் நீ எழுதியது டாப் கிளாஸ்.

அறிவிலி said...

ஆம்.. அவருடைய துறை சார்ந்த பதிவுகளுக்கு நான் ஒரு தீவிர ரசிகன்.

வாழவந்தான் said...

ஒரு பின்னூட்டம்..
பதிவாகி விட்டதே!!

சுரேகா.. said...

ஆதிக்கு வாழ்த்துக்கள் !