Monday, July 6, 2009

ஆதி, அப்துல்லா, நர்சிம் கம்பைன்ஸ் வழங்கும்......!!!!!!!!!!!!!

கடந்த ஏப்ரல் 2009 - ல் ஆதி, அப்துல்லா, மற்றும் நர்சிம் மூவரும் இணைந்து வழங்கிய, கார்க்கி கதாநாயகனாக நடித்த "நீ எங்கே?" என்ற படத்தின் அடுத்த பாகமாக தயாரிக்கப்படும் "ங்கொய்யால, நான் இங்கே" என்ற படத்தின் கதை டிஸ்கஷன் நடக்கிறது. கூடியிருப்போர், ஆதி, அப்துல்லா, நர்சிம், கார்க்கி, கேபிள் சங்கர், முரளி கண்ணன் ஆகியோர்.

தல நர்சிம் மொபைலில் பிஸி. கேபிள் சங்கரும் முரளியும் சினிமா அரட்டையில் பிஸி. ஆதி விட்டத்தை பார்த்தபடி அமர்ந்திருக்க, கார்க்கி வழக்கம் போல் "கொர், கொர்"

அப்துல்லா : அண்ணே, இப்படியே எல்லாரும் உக்காந்திருந்தா எப்பிடி, கதையை ஆரம்பிங்கண்ணே.

ஆதி : இங்க பாருங்க, இந்த முறை கொஞ்சம் வெயிட் உள்ள கதையா குடுங்க, பத்து நிமிசத்துக்கு மேட்டர் தேத்தறதுக்கே நாக்கு தள்ளிப் போகுது.

கேபிள் : அப்பிடி எல்லாம் விட்ருவமா, நாங்க எதுக்கு இருக்கோம். ஒரு புது தீம் கொண்டு வந்திருக்கம்ல.

நர்சிம் : (செல்போனை காதில் இருந்து எடுத்தவாறே), ம்..., சரி ... சரி... சொல்லுங்க.

கேபிள் : அதாவது, ஒரு வயசான பாட்டி........,,,,,,

கார்க்கி : (தூக்கத்திலிருந்து திடீரென முழித்து), என்னது ஒரு வயசுலயே பாட்டி ஆயிட்டாங்களா?????

அப்துல்லா: அடிங்ங், டேய் அடங்குடா, கதை என்னவார்ந்தாலும் நீ நடிக்கற, இப்போதைக்கு அடங்கு.

கேபிள் : இந்த பாட்டிய முதல் ஃபிரேம்ல காண்பிக்கும் போதே அப்படியே கேமரா மேல போய் வானத்துல சூரியன் மறையறத காமிக்குது. அதாவது இந்த பாட்டியின் முகத்தில் இருக்கும் சுருக்கங்களுக்கு ஒரு விளக்கம். இது வந்து அஸ்தமிக்கப் போகும் ஒரு சுடரின் கதைங்கறத முதல் ஃப்ரேமுலயே சொல்லீர்றம்.

ஆதி : (மனதுக்குள்), ம்..... விளங்குனாப்புலதான். இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, அதுக்குள்ள அஸ்தமனமா??????

நர்சிம் : தல, தொடங்கும்போதே ஒரு முடிவை ஏன் காமிக்கணும், ஒரு பூ மொட்டிலிருந்து விரியற மாதிரியோ, அல்லது சூரிய உதயத்தையோ காண்பிங்களேன்.

முரளி : அதாவது எண்பதுகள்ல எடுக்கப்பட்ட படங்களை எல்லாம் பாத்தீங்கண்ணா, பாரதி ராஜாவாகட்டும், பால சந்தர் ஆகட்டும் எல்லாரும் ஒரு பாசிட்டிவ் விஷயங்களதான் துவக்கமா காமிச்சுருப்பாங்க.

கார்க்கி : ஆமா, ஒரு மரச்சேரை காமிச்சு, கேமிரா அதையே சுத்தி சுத்தி வர்ற மாதிரி எடுத்துட்டு, என் இனிய தமிழ் மக்களேன்னு சொன்னா அது பாசிட்டிவ்வா?

அப்துல்லா : அண்ணே, எது பாசிட்டிவ் அப்டீங்கறதாண்ணே இப்ப மேட்டரு, கதைக்கு வாங்கண்ணே.

கேபிள் : (கார்க்கியை முறைத்தவாறே) கதாநாயகனும் இந்த பாட்டியுந்தாங்க படத்துல மெயின் ரோல்ல இருப்பாங்க.

கார்க்கி : தல, இந்த வெளயாட்டுக்கு நான் வர்ல, ஹீரோயின் இல்லண்ணா கூட பரவாயில்ல, ஒரு பாட்டி கூடவெல்லாம் எப்படி தல!!!

அப்துல்லா : சொல்றத முழுசா கேளுப்பா, அதுக்குள்ள ஏண்டா குதிக்கற?

கார்க்கி : இல்ல, இதுல எதோ ஒரு உள்குத்து இருக்கு,

ஆதி : இப்ப நீ அடங்கலீன்னா, உம் மூஞ்சி மேல ஒரு வெளிகுத்து இருக்கும்,

(கார்க்கி அவ்வ்வ்வ்வ்வ்வ்வுனு அடங்க, கேபிளார் தொடர்கிறார்.)

கேபிள் : அதாவதுண்ணே, வைரமுத்துவோட கருவாச்சி காவியம் படிச்சிருக்கீங்களா, அதுல வர்ற கதாநாயகியாட்டம், நம்ம பாட்டி வாழ்க்கையில எப்பவுமே கஷ்டத்தை மாத்திரம் அனுபவிச்சு மேல வந்தவங்க.

நர்சிம் : ஏண்ணே, இது ஒரு நாவலைத்தழுவுற மாதிரி இருக்காது!!!!!

கார்க்கி : மொதல்ல ஒரு ஹீரோயின தழுவற சீன் வைய்ங்கப்பா, அப்புறமா நாவலை தழுவலாம்.

இப்ப நர்சிம்மும் சேர்ந்து முறைக்க, கார்க்கி மறுபடியும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,

முரளி : நாவல்களை தழுவி எடுக்கப்பட்ட நிறைய படங்கள் வெற்றி அடைஞ்சிருக்குங்க நர்சிம், குறிப்பா பாத்தீங்கண்ணா........

அப்துல்லா : அய்யய்யோ, அண்ணே, அண்ணே கொஞ்சம் பொறுங்கண்ணே, இங்க கதையே என்னன்னு தெரியல.

முரளி அமைதியாக, கேபிள் ஆரம்பிக்கிறார்.

கேபிள் : அதாவதுண்ணே, இந்த பாட்டி ஒரு வடை சுட்ற கடை வெச்சிருக்காங்க,

ஆதி : இந்த கேசட்ட எங்கியோ கேட்ட மாதிரி இருக்குதே, இதுதான் கதைன்னா காக்காய்க்கு எங்க போறது?

கேபிள் : இப்படி வாய தொறக்கறதுக்கு முன்னால கமெண்ட் அடிச்சா எப்படிண்ணே,

அப்துல்லா : இங்க பாருங்கண்ணே, எல்லாருக்கும் ஒரு பேப்பரும் பேனாவும் குடுத்துர்றேன். கேபிள் அண்ணன் சொல்லி முடிக்கற வரைக்கும் யாரும் ஒண்ணும் பேசக்கூடாது. வேண்ணா எங்ககெங்கெல்லாம் டவுட் வருதோ அங்க குறிச்சு வெச்சுக்கங்க, அப்புறமா பேசலாம், கேபிள் அண்ணே, ஸ்டார்ட் ம்யூஜிக்.

கார்க்கி : இன்னும் பேப்பரே குடுக்கல அதுக்குள்ள ஸ்டார்ட் ம்யூஜிக்கா? எனக்கு பேப்பரெல்லாம் பத்தாது, ஒரு பெரிய லெட்ஜர் புக்கே குடுங்க.

அப்துல்லா ஓடிப்போய் ஒரு ரெஜிஸ்டரை எடுத்து வந்து கார்க்கியின் கையில் கொடுத்து, தன் பேனாவையும் தந்து : இப்ப அடங்குவியா, மவனே இனிமே எதாவது பேசுன, அப்புறம் டயலாக் பேசறதுக்கு வாயே இருக்காது, சொல்லீட்டேன்.

ஆதி கார்க்கியைப் பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு சிரிக்க,

நர்சிம் : ஏம்பா, அவுரு எவ்வளவு சீரியஸா கதை சொல்லிட்டிருக்காரு, அவரைப்போயி இப்படி காமெடி பண்றீங்களேப்பா,!!!!!!!!!!!!!! சரி, தல சொல்லுங்க தல,

கேபிள் கொஞ்சம் நிம்மதி அடைந்தவராக : அதாவதுண்ணே, ஒரு நல்ல கிராமத்து வீதியில இந்த பாட்டி வடை சுட்ற கடை இருக்கு, அந்த கடையில பாட்டி கொதிக்கற எண்ணையில வடையை தட்டி போட்டு, அந்த எண்ணை அப்பிடியே சொய்ய்ய்ங்ங்ங்க்குண்ணு பொங்கி வரும் பாருங்க, அந்த எண்ணையின் நுரையிலிருந்து க்ளோசப்புல கேமராவை வெச்சு அப்பிடியே லாங் ஷாட்ல எடுத்துட்டு போறோம். பாட்டியினுடைய பிற்கால வாழ்க்கையில...........!!!!!!!!!!!!!

கார்க்கி : (மனதுக்குள்) கொதிக்கற எண்ணையில கேமராவ வெச்சா அது கருகி போயிருமேன்னு யோசிச்சு, அந்த சந்தேகத்தை எழுத நோட்டைத்திறக்க, ஆதி இவனுக்கு இப்பவே சந்தேகம் வந்துருச்சான்னு எட்டிப்பார்க்க, இவர்கள் ரெண்டு பேரும் என்னவோ கண்ணாலயே பேசிக்கறாங்களேன்னு முரளியும் எட்டிப் பார்க்க, அப்துல்லா அங்க என்ன சைடுல ஒரு தனி டிராக் ஓடிட்டிருக்கேன்னு திரும்பி பார்க்க, நர்சிம் அவரது மொபைலை பார்க்க,

கேபிள் : பாட்டி எவ்வளவு வசதியான் வீட்ல இருந்தாங்கன்றத காமிக்க காரைக்கால் பக்கத்துல இருக்கற ஒரு செட்டிநாடு ஸ்டைல் வீட்டை காமிக்..............,,,,,,,, என்னண்ணே இது மறுபடியும் எல்லாரும் காமெடி பண்றீங்க,..,,,,,,,,,,,

இதைக்கேட்டு எல்லோரும் அடக்கி வைத்திருந்த சிரிப்பை அடக்க முடியாமல் ஓஹோஹோவென சிரித்து விடுகின்றனர். கேபிளாரும் சேர்ந்து சிரிக்க,

அப்துல்லா : அண்ணே, விடுங்கண்ணே, எனக்கு பசிக்குது, நம்ம எல்லாரும் சாப்பிட்டுட்டு வந்து மறுபடியும் ஆரம்பிக்கலாம், எங்கண்ணே போலாம் சாப்பிட????

ஆளாளுக்கு ஒரு இடத்தை சொல்ல, அவை கலைகிறது.

டிஸ்கி : சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இந்தப்பதிவு சுருக்கப்படுகிறது. நீக்கப்பட்ட பகுதியைக் குறித்த பின்னூட்டங்களும் என்னால் அழிக்கப்படுகின்றன.
பின்னூட்டங்களிட்ட பதிவர்கள் தயவு செய்து என்னை தவறாக நினைக்க வேண்டாம். என்னோடு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

45 comments:

ஜோசப் பால்ராஜ் said...

ஹலோ, எங்க குசும்பனுக்கு போட்டியா கடைய திறந்துருக்கீங்க? நீங்க யாரு?
முழு விவரத்தையும் உடனே மெயில்ல அனுப்புங்க. பசங்கள விட்டு விசாரிக்க சொல்றேன்.

அறிவிலி said...

அசத்தல்.. சான்ஸே இல்ல.

அறிவிலி said...

//கார்க்கி : தல, இந்த வெளயாட்டுக்கு நான் வர்ல, ஹீரோயின் இல்லண்ணா கூட பரவாயில்ல, ஒரு பாட்டி கூடவெல்லாம் எப்படி தல!!!//

அய்யோ... பாவம்

தராசு said...

//@ ஜோசப் பால்ராஜ் said...
ஹலோ, எங்க குசும்பனுக்கு போட்டியா கடைய திறந்துருக்கீங்க? நீங்க யாரு?
முழு விவரத்தையும் உடனே மெயில்ல அனுப்புங்க. பசங்கள விட்டு விசாரிக்க சொல்றேன்.//

அண்ணே, வந்ததுக்கு டேங்சு. நான்கெல்லாம் குசும்பனுக்கு போட்டியா வரமுடியுமாண்ணே, அவுரு எங்க நாங்க எங்கஅண்

தராசு said...

//@ அறிவிலி said...
அசத்தல்.. சான்ஸே இல்ல.//

அண்ணே, டேங்சுண்ணே

சென்ஷி said...

செம்ம கலக்கல்:))))

அறிவிலி said...

//கார்க்கி : இல்ல, இதுல எதோ ஒரு உள்குத்து இருக்கு,

ஆதி : இப்ப நீ அடங்கலீன்னா, உம் மூஞ்சி மேல ஒரு வெளிகுத்து இருக்கும்,

(கார்க்கி அவ்வ்வ்வ்வ்வ்வ்வுனு அடங்க, கேபிளார் தொடர்கிறார்.)//

:))))))))))))))

குசும்பன் said...
This comment has been removed by a blog administrator.
டக்ளஸ்....... said...

இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்...!
முரளி அண்ணனுக்கு மட்டும் எல்லாரும் எங்க இருந்துய்யா கமெண்ட் பிடிக்கிறீங்க...?
ஆதி அங்கிளுக்கும் வெயிட்டான ரோலும்மா...!
:)

டக்ளஸ்....... said...
This comment has been removed by a blog administrator.
தராசு said...
This comment has been removed by the author.
Cable Sankar said...

அண்ணே.. சிரிச்சு.. ம்முடியல.. சூப்பர்.

Anonymous said...

வாய்ப்பே இல்ல சகா. இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்க்கென்.

தராசு said...

//@ Cable Sankar said...
அண்ணே.. சிரிச்சு.. ம்முடியல.. சூப்பர்.//

அண்ணே, டேங்சுண்ணே, இதெல்லாம் சும்மா டமாசுக்குத்தான், தப்பா எடுத்துக்காதீங்கண்ணே.

தராசு said...

//@வடகரை வேலன் said...
வாய்ப்பே இல்ல சகா. இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்க்கென்.//

அண்ணாச்சி, வந்ததுக்கு டேங்சு, அடிக்கடி வந்துட்டு போங்க.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கலக்கல்!

தராசு said...

//@ ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கலக்கல்!//

நன்றி குருஜி.

முரளிகண்ணன் said...

கலக்கல் தராசு. கார்க்கியின் கமெண்டுகள் அருமை.

தராசு said...

//@ முரளிகண்ணன் said...
கலக்கல் தராசு. கார்க்கியின் கமெண்டுகள் அருமை.//

தலைவரே, வந்ததுக்கு டேங்சு.

நர்சிம் said...
This comment has been removed by a blog administrator.
கார்க்கி said...

அறிவிலிக்கும், முரளிக்கும் இருக்கு கச்சேரி..

தராசண்னே நைட்டு நல்லா தூங்குவிஙக்ளா?

நாஞ்சில் நாதம் said...

தராசு
கலாஸ்யா.

தராசு said...
//அண்ணே, டேங்சுண்ணே, இதெல்லாம் சும்மா டமாசுக்குத்தான், தப்பா எடுத்துக்காதீங்கண்ணே//

விலா வலிக்கிற அளவுக்கு எழுதிக்கிட்டு டமாசுக்குத்தான் சொன்னா எப்படி?.

நர்சிம் said...

கலக்கல் தலைவா..நிறைய இடத்தில் சிரிப்பை அடக்க முடியவில்லை. கலக்கல்..நிறைய எழுதுங்கள் இதுபோல.

நர்சிம் said...

கலக்கல் தலைவா..நிறைய இடத்தில் சிரிப்பை அடக்க முடியவில்லை. கலக்கல்..நிறைய எழுதுங்கள் இதுபோல.

செல்வேந்திரன் said...

ஹா...ஹா சூப்பர்...

கோபிநாத் said...

அட்டகாசம் தல :)))

பரிசல்காரன் said...

க்ரேட் தராசு!

கலக்கலோ கலக்கல்!

குசும்பன் said...

கமெண்டை டெலிட் செய்யும் அளவுக்கு என்ன தப்பா போட்டு இருந்தேன்:((((

ஷாகுல் said...

செம்ம கலக்கல்

வெட்டிப்பயல் said...

தல,
பதிவு கலக்கல் :)

மிகவும் ரசித்தேன்...

காலைல ஆபிஸ் கிளம்பற அவசரத்துல பாதி தான் படிச்சேன். இப்ப பார்த்தா எடிட் பண்ணிட்டீங்க :(

வெட்டிப்பயல் said...

//குசும்பன் said...
கமெண்டை டெலிட் செய்யும் அளவுக்கு என்ன தப்பா போட்டு இருந்தேன்:((((
//

குசும்பா,
அப்படி என்ன கமெண்ட் போட்டனு தனி மடலில் அனுப்பவும்.. இருந்தாலும் உங்கிட்ட இருந்து இப்படி ஒரு கமெண்டை எதிர்பார்க்கல :( ;)

ஆதிமூலகிருஷ்ணன் said...

கார்க்கி, கேபிள் வசனங்கள் அட்டகாசம்.. பின்னிட்டீங்க.. இந்த மாதிரி இன்னும் கலக்குங்க அடிக்கடி.!!

அப்புறம் என்ன பிரச்சினை? ஏன் எடிட்டிங்? பின்னூட்ட அழிப்புகள்.? புர்லையே.?

எம்.எம்.அப்துல்லா said...

சிரிச்சு கண்ணுல தண்ணி வருது

இதுக்காக தனியா ஒரு தண்ணி தர்றேன் :)

cheena (சீனா) said...

ஓகோ ஓகோ - குசும்பனின் தம்பியா - வாழ்க - வளர்க

தராசு said...

//@ கார்க்கி said...
அறிவிலிக்கும், முரளிக்கும் இருக்கு கச்சேரி..

தராசண்னே நைட்டு நல்லா தூங்குவிஙக்ளா?//

இப்படியெல்லாம் பயமுறுத்துனா அப்புறம் நாங்க எப்பத்தான் மொக்கை போட்றது???

தராசு said...

//@ நாஞ்சில் நாதம் said...
தராசு
கலாஸ்யா.

தராசு said...
//அண்ணே, டேங்சுண்ணே, இதெல்லாம் சும்மா டமாசுக்குத்தான், தப்பா எடுத்துக்காதீங்கண்ணே//

விலா வலிக்கிற அளவுக்கு எழுதிக்கிட்டு டமாசுக்குத்தான் சொன்னா எப்படி?.//

சொன்னாலும் சொல்லாட்டியும் இது டமாசுக்குதாண்ணே,

தராசு said...

// @நர்சிம் said...
கலக்கல் தலைவா..நிறைய இடத்தில் சிரிப்பை அடக்க முடியவில்லை. கலக்கல்..நிறைய எழுதுங்கள் இதுபோல.//

டேங்சு தல.

தராசு said...

டேங்சு செல்வேந்திரன்,

டேங்சு கோபிநாத்.

பரிசல் தலைவா, நட்சத்திரங்களெல்லாம் நம்ம கடைக்கு வந்திருக்கீங்க, டேங்சு.

தராசு said...

//@ குசும்பன் said...
கமெண்டை டெலிட் செய்யும் அளவுக்கு என்ன தப்பா போட்டு இருந்தேன்:((((//

அண்ணே,

கோவிச்சுக்காதீங்க அண்ணே, இப்படி ஜாம்பவான்களெல்லாம் கோவிச்சுகிட்ட எப்படி?

தனியா மின்னஞ்சல் அனுப்பி இருக்கறேன் பாருங்க.

தராசு said...

வாங்க ஷாகுல் டேங்சு,

அண்ணே வெட்டிப்பயல் அண்ணே, டேங்சு. காரணத்தை குசும்பன் அண்ணனுக்கு அனுப்பி உள்ளேன்.

தராசு said...

//@ஆதிமூலகிருஷ்ணன் said...
கார்க்கி, கேபிள் வசனங்கள் அட்டகாசம்.. பின்னிட்டீங்க.. இந்த மாதிரி இன்னும் கலக்குங்க அடிக்கடி.!!

அப்புறம் என்ன பிரச்சினை? ஏன் எடிட்டிங்? பின்னூட்ட அழிப்புகள்.? புர்லையே.?//

ம்,,ம். இப்படித்தான் கடைசில வர்றதா, இங்க எல்லரும் அடிச்சு தொவச்சு காயப்போட்டுட்டாங்க,
சும்மா டமாசுக்கு தல,

வந்ததுக்கு டேங்சு. மின்னஞ்சல் படியுங்கள்.

தராசு said...

//@ எம்.எம்.அப்துல்லா said...
சிரிச்சு கண்ணுல தண்ணி வருது

இதுக்காக தனியா ஒரு தண்ணி தர்றேன் :)//

இது நியாயம். எப்ப வர்றதுன்னு சொல்லுங்கண்ணே.

தராசு said...

//@ cheena (சீனா) said...
ஓகோ ஓகோ - குசும்பனின் தம்பியா - வாழ்க - வளர்க//

ஐயா, ஆசீர்வாதத்துக்கு நன்றி ஐயா.

வெங்கிராஜா said...

Sema comedy saar neenga!

தராசு said...

வாங்க வெங்கிராஜா,

வந்ததுக்கு டேங்சு.