கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை, வழக்கம் போலவே டெல்லி வாசிகளுக்கும் அது ஒரு விடுமுறை நாளாகத்தான் விடிந்தது. ஆனால் பெங்களூரில் இருந்த, டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமான பணிகளுக்கான உயர் அதிகாரி ஸ்ரீதரனுக்கு அது தூக்கத்தை கலைத்து மனதை உருக்கிய காலையாக இருந்தது.
டெல்லி நகரில் கட்டப்பட்டு வரும் ஒரு ரயில் பாலத்தில் இரும்பு பாலம் ஒன்றை தூக்கி இணைக்கும் பொழுது அது தவறி விழுந்ததில் 5 பேர் இறந்தார்கள், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள். கட்டுமானத்துறையின் வரலாற்றில் இது ஒரு கருப்புப் புள்ளி.
அடியேனும் கட்டுமானத்துறையிலேயே இருப்பதால் எனக்குள்ளும் ஒரு தோல்வி உணர்வு தொற்றிக்கொண்டது. நடந்தது சந்தேகமில்லாமல் ஒரு விபத்து. தவிர்க்கப் பட்டிருக்க வேண்டிய ஒன்று. ஒப்பந்தக் காரரும் சரி, டெல்லி மெட்ரோ அதிகாரிகளும் சரி, பாதுகாப்பு நடவடிக்கையில் கவனம் அதிகம் செலுத்தியிருக்க வேண்டும். பொருள் சேதம் ஈடுகட்டப் படக் கூடிய ஒன்று என்றாலும், உயிர் சேதங்கள் வேதனையளிக்கிறது.
இனி, நமது மகா கனம் பொருந்திய ஊடகங்கள் இதில் நடத்திய நாடகங்களை பார்ப்போம்.
சரியாக ஞயிறு காலை 10 : 00 மணி,
டெல்லி மெட்ரோவின் அதிகாரி பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். மிகவும் ஒழுங்கான முறையில் தெள்ளத்தெளிவான புள்ளிவிவரங்களுடன் அவர் தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறார். பத்திரிக்கையாளர்கள் அவரை வறுத்தெடுக்கிறார்கள். அவரது அறிக்கையின் விவரங்கள் :
தூக்கப்பட்ட இரும்பு பாலம் எவ்வளவு எடை உடையது?
அதை தூக்குமுன்பு எத்தகைய பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது?
எத்தனை பேர் இறந்தார்கள்?
காயமடைந்தவர்கள் எந்தெந்த மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்?
மேலும் விவரங்களுக்கான ஹெல்ப் லைன் எண் எது?
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
மிக பிரமாதமான அர்த்தமுள்ள பத்திரிக்கையாளர் சந்திப்பு. ஆனால், நமது பத்திரிக்கையாளர்கள் அங்கு நடந்து கொண்ட விதம் ச்சீய், அருவருப்பாக இருக்கிறது. ஊடகத்தாரின் கேள்விகள்:
கேள்வி : இது ஒப்பந்தக்காரரின் கவனக் குறைவா?
பதில் : விசாரித்து வருகிறோம்.
கேள்வி : இதற்கு பொறுப்பு யார்?
பதில் : விசாரணையின் முடிவில் தான் தெரியும்.
கேள்வி : இத்ற்கு முக்கிய காரணமென்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?
பதில் : விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது, அவர்களது விசாரணை ரிப்போர்ட் வந்த பின் தான் சொல்ல முடியும்.
கேள்வி : தரக்குறைவான பொருள்களினால் இது ஏற்பட்டிருக்குமா?
பதில் : விசாரணையில் பொருள்களின் தரமும் பரிசோதனை செய்யப்படும்.
கேள்வி : இது வடிவமைக்கப் பட்டதில் (Design) குறைபாடுள்ளதா?
பதில் : விசாரணைக்கு பிறகு தான் தெரியும்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த இடத்திலிருந்து சில ஆயிரம் மைல்களுக்கப்பால் அமர்ந்திருந்த எனக்கே ரத்தம் கொதித்துக் கொண்டிருந்ததென்றால், அங்கு அமர்ந்து பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்த அந்த அதிகாரிக்கு எப்படி இருந்திருக்கும்.
அடேய் ,வெண்ணைகளா, உங்களுக்கு என்ன வேண்டும் அதையாவது சொல்லித் தொலைங்களேன். ஆமாம், இது முழுமையும் ஊழலினால் நடந்தது, இந்த மந்திரி இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார், பல்லாயிரம் கோடி பணம் ஸ்வாஹா ஆயிருக்கிறது என்பது போன்ற ஒரு பொய்யான அறிக்கை வேண்டுமா? அல்லது ஒரு விபத்து நடந்த மூன்று மணி நேரத்தில் அந்த விபத்து ப்ற்றிய அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு, திருவாளர் ஊடகத்துக்கு வெளிப்படுத்தப் பட வேண்டுமா, அதை எடுத்து தங்களின் சேனலில் போட்டு, முழுவிவரங்களையும் தருகிற ஒரே சேனல் நாங்கள் தான் என்று மார்தட்டிக் கொள்ள பார்க்கிறீர்களா? இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இறந்துபோன 5 பேருக்காகவும் அல்லது காயமடைந்த அனைவருக்காகவும் பத்திரிக்கையாளர்கள் தரப்பில் இருந்து ஊசிமுனையளவும் அனுதாபம் தெரிவிக்கப்படவில்லை. மேலும் யாராவது ஒருவர் மேல் பழியைப் போட்டு, விஷயத்தின் வீரியத்தை திசை திருப்ப இவர்கள் எடுத்துக் கொள்ளும் பிரம்மப் பிரயத்தனத்தின் ஒரு சதவீதத்தைக் கூட, இவர்கள் இறந்து போனவர்களின் விஷயத்தில் அக்கறை காட்டுவதில் எடுத்துக் கொள்ளவில்லை.
அடுத்த சில மணி நேரங்களில், ஊடகங்கள் எல்லாவகையான அருவருக்கத்தக்க யூகங்களை மக்கள்முன் வைக்க சிறிதும் தயங்கவில்லை. 2010 - ல் நடைபெறப் போகும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முழுதும் தடை பட்டுப் போகும் அபாயம் இருக்கிறது, இதனால் அரசுக்கு ப்ல்லாயிரக்கணக்கான கோடிகள் இழப்பு, டெல்லி மக்களின் அனுதின வாழ்க்கையோடு அரசாங்கம் விளையாடுகிறது என்பது போன்ற யூகங்கள் கொஞ்சமும் வெட்கம், மானம் இல்லாமல் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
இந்திய ஊடகங்களுக்கு கடிவாளமிட வரும் அவதார புருஷன், சீக்கிரத்தில் அவதரிக்க பிரார்த்திக்கிறேன்.
3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்
2 weeks ago
20 comments:
நல்ல பதிவு. பத்திரிகை தர்மம் என்ற விஷயம் எல்லாம் காற்றோடு போய் வெகு நாளாகிறது.
-ப்ரியமுடன்
சேரல்
வாங்க சேரல்,
வந்ததுக்கு டேங்சு
ஊடகங்கங்கள் ஏன் இப்படி cynicalஆக மாறவேண்டும். யோசித்துப் பார்க்கலாம்.
ஹைதராபாத்தில் நடந்த விபத்து பற்றி விசாரித்தார்களே, அதன் முடிவு என்ன.? இன்னும் ஒன்றிரண்டு இடங்களில்கூட விபத்து நடந்து ஒரு வருடம் மேல் ஆகிறது. யார்த்தான் இத்தகைய விபத்துகளுக்கு பொறுப்பு?
மூன்று மணிநேரம் இல்லை - மூன்று வருடங்களானாலும் ஒன்றும் நடக்காது :( இதுவும் ஒரு காரணம் அவர்களது நடத்தைக்கு.
ம்ம்.. அவனுங்கள...
நல்ல அலசல் தராசு. ஊடகங்களின் மேல் நம் கோபம் நியாயமானதே.
:(
போக்கிரி படத்துல நடிகர். நெப்போலியன் பேசுற டயலாக்குதான் ஞாபகம் வருது தலைவரே..!
இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது..!
அந்த அவதார புருஷன் சீக்கிரமே அவதரிக்கட்டும்.
//மூன்று மணிநேரம் இல்லை - மூன்று வருடங்களானாலும் ஒன்றும் நடக்காது :( இதுவும் ஒரு காரணம் அவர்களது நடத்தைக்கு.//
ஒத்துக்கறேன் குருஜி, ஆனால் who appointed them to be a police on politicians and celebraties???
தராசு, இந்தக் கேள்வியையும் நாம் கேட்டுக் கொள்வோம் : அதே ஊடகங்கள் உருவாக்கிய புனிதப் பிம்பம்தானே ஸ்ரீதரனும்?
//@ ஜ்யோவ்ராம் சுந்தர் said...
தராசு, இந்தக் கேள்வியையும் நாம் கேட்டுக் கொள்வோம் : அதே ஊடகங்கள் உருவாக்கிய புனிதப் பிம்பம்தானே ஸ்ரீதரனும்?//
அப்படி சொல்வது சரின்னு சொல்றீங்களா? அவரைச் சுற்றி ஏற்பட்டுள்ள புகழ் வட்டத்திற்கு ஊடகங்கள் மட்டுமே காரணம்னு சொல்றீங்களா,
கொங்கண் ரயில்வேயை திறம்பட நிறுவிக்காட்டியதோ, பாம்பன் பாலத்தை குறுகிய காலத்தில் பழுது பார்த்ததோ, இதே டெல்லியில் 65 கிலோ மீட்டருக்கு சவால்களின் மத்தியில் மெட்ரோ ரயிலை நிறுவியதோ, அல்லது, நடந்த விபத்துக்கு உடனடியாக தார்மீகப் பொறுப்பேற்றதோ காரணமில்லையா???
நண்பரே, ‘திறமை' குறித்தல்ல நான் எழுப்பும் கேள்வி. அவரது பிம்ப உருவாக்கலுக்கு ஊடகங்களும் முக்கியக் காரணியில்லையா...
நேற்றுகூட ஊடகங்களில் அவரைப் பற்றிய சாதகமான விஷயங்களே அலசப்பட்டன...
பிம்பம் என்பது எப்பொழுதுமே மற்றவர்களால் உருவாக்கப் படுவதுதான்.
இங்கு நீங்கள் அது ஊடகத்தால் என்று சொன்னால், ம்....ம். ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால், இதே ஊடகத்தால் அவரைப் பற்றி உருவாக்கப்பட்ட பிம்பம் மிகைப்படுத்தப்பட்ட ஒரு பிம்பமல்லவென்று நினைக்கிறேன். ஆனால், மற்ற செய்திகளால் உருவாக்கப்படும் பிம்பங்கள் மிகைப்படுத்தப் பட்டோ அல்லது ஊகங்களின் அடிப்படையிலோ இருப்பதாக எனக்கு படுகிறது.
I am sorry, I hope I am not arguing with you, I am just putting my views.
கொஞ்சம் சீரியாசான மேட்டர்.
கார்க்கி,
டேங்சு
முரளி கண்ணன் அண்ணாச்சி,
டேங்சு
வாங்க தீப்பெட்டி,
வாங்க டக்ளசு
டேங்சு.
நியாயமான கருத்துகள்.
பெரும்பாலான விஷயங்களில் ஊடகங்கள் பொறுப்பற்றவிதத்தில்தான் நடந்துகொண்டிருக்கின்றன.
எத்தனை தொழிற்சாலைகள், எத்தனை கட்டுமானப்பணிகள், எத்தனை போக்குவரத்து.. ஒவ்வொரு நாளும் எத்தனை மனிதர்கள் (சிறிய விபத்துகளிலும் கூட) இறந்துகொண்டுதானிருக்கிறார்கள். விதிமுறைகள், பாதுகாப்புகளை சரிவர கடைபிடிக்காத தனிமனித ஒழுக்கம் சார்ந்ததாகவே இந்த விபத்துகளின் பெரும்பாலான சதவீதம் இருக்கும் எனக்கருதுகிறேன்.
வேற் வழியே இல்லாமல் 'ஒட்டுமொத்த அலட்சியம்.. சமூக வியாதி' என்றுதான் கூறவேண்டியிருக்கும்.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
//@ ஆதி
பெரும்பாலான விஷயங்களில் ஊடகங்கள் பொறுப்பற்றவிதத்தில்தான் நடந்துகொண்டிருக்கின்றன. //
டேங்சு தலைவா
பத்திரிக்கைகள் மிக கேவலமாக நடப்பது நம் நாட்டில் ஒன்றும் புதிதில்லை. மும்பை தீவிரவாதிகளின் தாக்குதலில் அதிரடிப்படையினரின் வியூகங்களைக் கூட ஹோட்டலுக்குள் இருக்கும் தீவிரவாதிகளுக்கு நேரடி ஒளிபரப்பு செய்த பெருமை வாய்ந்தவர்கள் நம் பத்திரிக்கையாளர்கள்.
சரி, நீங்கள் கட்டுமானத் துறையில் இருப்பதால் கேட்கிறேன், இது முழுக்க முழுக்க பாதுகாப்பு குறைபாட்டால் நிகழ்ந்த விபத்து தானே? பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு எந்த அளவு முக்கியத்துவம் தருகின்றார்கள் நம் நாட்டில்?
அந்த பெரும் விபத்திற்கு பின்னரும், ஒரு முறை க்ரேன் இடித்து நசுக்கு ஒருவர் பலியானார் . பாதுகாப்பு ஏற்பாடுகளில் நம்மவர்கள் கவனம் செலுத்துவதேயில்லையா?
Post a Comment