Wednesday, July 22, 2009

ஜுகல்பந்தி - 22 - 07 - 2009,





நகரம் - பரோடா - நாகரீகத்தின் நகரம்.

பரோடா, வடோத்ரா, சாயாஜி நகரி, சன்ஸ்கரி நகரி என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த நகரமும் ஒரு நதிக்கரையில் தான் அமந்துள்ளது. மனிதன் நாடோடி வாழ்வு வாழ்ந்து அலுத்து, இனி அலைந்தது போதும், ஒரு வீடு, நிலம் என்று எதையாவது சொந்தமாக்கி நிரந்தரமாக ஒரு இடத்தில் தங்கி விடலாம் என யோசித்த பொழுது, எல்லாவற்றிற்கும் வசதியான இடங்களாக கண்ணில் பட்டது நதிக்கரைகள் தான் போலும். அப்படி நதிக்கரைகளில் தங்கியதால் தான் இன்றும் மிகச்சிறந்த நாகரிகங்கள் ஆற்றங்கரையில் தோன்றியவையாகவே காணப் படுகின்றன. அப்படி அமைதியாகவும், அழகாகவும், பருவப் பெண்ணின் இடுப்பு வளைவுகளைப் போல் வளைந்தும் நெளிந்துமென இன்றைய குஜராத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நதி தான் விசுவாமித்திர நதி. இதற்கு விசுவாமித்திர நதி என ஏன் பெயர் வந்தது என்று கேட்பீர்களானால் பரோடாவை விட்டு வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கும், இப்போதைக்கு இது விசுவாமித்திர முனிவரின் ஞாபகார்த்தமாக பெயரிடப்பட்டது என்ற ஒரு தகவல் மாத்திரம் போதும். இந்த நதியின் கரையில் தான் பரோடா நகரமும் ஆதி மனிதனால் நிர்மாணிக்கப்பட்டது,

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த விசுவாமித்திர நதியின் மேற்குக்கரையில் இருந்த ஒரு சிறிய பட்டணத்திற்கு அங்கோட்டக் என்று பெயர். (இது இன்று அகோட்டா என அழைக்கப்படுகிறது). மனிதன் இந்த பூமியை சகல சௌகர்யங்களும் நிறைந்தது என்றுகண்டு அங்கு குடியேறி பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்து வந்தான். கி.பி. 600 - ம் ஆண்டு இந்த விசுவாமித்திர நதியில் வந்த ஒரு வெள்ளம் இந்த அங்கோட்டக் நகரை வெகுவாக பாதித்தது. இப்பொழுது மாதிரி வெள்ள நிவாரண நிதியும், வெள்ளம் நிறைந்த பகுதிகளில் தலைவர்களின் படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர் கட்டிய பிரியாணி வழங்கும் மையங்கள் எதுவும் இல்லாததால், மனிதன் பாதுகாப்பான பகுதியை நாடிப் போன பொழுது நதியின் கிழக்குக் கரையில் "வடபத்ரகா" என்ற ஒரு கிராமத்தை கண்டு பிடித்தான். (வடபத்ரகா என்றால் ஆலமர இலை என்று அர்த்தம், ஆனால் சமஸ்கிருதத்தில் ஆலமர இதயம் என்றும் பொருள் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, ஒரு வேளை கன்னா பின்னாவென்று ஆலமரங்கள் எழுந்து நின்றிருந்ததோ என்னவோ) இந்த கிராமம் நதியின் கரையை விட கொஞ்சம் உயரமான இடத்தில் இருக்கவே, வெள்ளம் வந்தாலும் பாதகமில்லை என இங்கு குடியேறி, மறுபடியும் பதினாறும் பெற்று, பெரு வாழ்வு வாழ்ந்தான். இந்த வடபத்ரகா தான், நாளடைவில், வடோத்ராவாக மாறி பரோடாவாகிவிட்டது.

வளம் கொழிக்க ஆரம்பித்தாலே ஆள்வதற்கென்று அரசியல்வாதிகளும், மன்னர்களும் முளைத்து விடுவார்களே. இந்த சூத்திரத்திலிருந்து சற்றும் மாறாமல், வடக்கே இருந்த ராஜபுத்திர மன்னர்கள் இந்த நகரத்தையும் ஆண்டிருக்கிறார்கள். அவர்களில் இருந்த ராஜா சந்தன் என்பவரின் நினைவாக இது மிக சொற்ப காலத்துக்கு சந்தனாவதி என்றும் அதற்குப் பின் சிறிது நாட்கள் ராஜபுத்திர வீரர்களின் புகழ்பாடும்படி வீர்ஷேத்திரா அல்லது வீர்வாடி என்றும் அழைக்கப்பட்டது. பிறகு என்னவோ இந்த ஆலமர மேட்டரை மட்டும் விட்டுக் கொடுக்க விரும்பாத மக்கள், மறுபடியும் வடபத்ரகாவுக்கே மாறி, பின் ஆங்கிலேயர்களால் பரோடா என அழைக்கப்பட்டு, கடைசியில் 1974 ஆம் ஆண்டு இறுதியாக இந்திய அரசால் வடோத்ரா என பெயரிடப் பட்டது.

இந்த நகரை, ராஜபுத்திரர்களிடமிருந்து கைப்பற்றி, டெல்லி சுல்தான்கள் ஆண்டிருக்கிறார்கள்.பிற்பாடு முகலாய சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் இருந்த இந்த நகரத்தை, கி.பி. 1732 ஆம் ஆண்டு முகலாயர்களிடம் இருந்து மராட்டிய கெய்க்வாட் வம்சத்தினர் கைப்பற்றியிருக்கிறார்கள். 1734 ம் வருடத்திலிருந்து 1948 வரை இந்த ராஜ்ஜியம் கெய்க்வாட் மன்னர்களின் கைகளிலேயே இருந்து பின்னர் சுதந்திர இந்தியாவில் இணைந்து விட்டது. இதில் இன்றும் போற்றப்படும் மன்னரான மகாராஜா மூன்றாவது சாயாஜி ராவ் கெய்க்வாட் என்பவரின் காலத்தில் தான் (1875 - 1939)கட்டாய ஆரம்பக்கல்வி,பல்கலைக் கழகம், நூலகம், என கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மருத்துவதுறை, துணி தயாரிப்பு, கல் குவாரிகள் என தன் ஆட்சிக்காலத்தில் நிஜமாகவே ஒரு பொற்காலத்தை வழங்கியிருக்கிறார் சிவாஜிராவ். இவரது ஆட்சிக்காலத்தை பற்றி அதிகம் படிக்க அன்பர் முகில் எழுதி வரும் " அகம், புறம், அந்தப்புரம்" படிக்கவும். இவர் கட்டிய அரண்மனைகள், லக்ஷ்மி விலாஸ், பிரதாப் விலாஸ், நஸர்பாக் மற்றும் மகர்புரா அரண்மனைகள் இவரது கலை நயத்தை ரசனையை பறை சாற்றுபவை.

இந்நாளில் பரோடாவில் இந்தியாவின் தொழில் நிறுவனங்களான ரிலையன்ஸ், IPCL, GAIL, ONGC போன்ற துட்டு பார்ட்டிகள் இங்கு தொழில் புரிகிறார்கள்.

நாட்டு நடப்புகள் - இந்தோனேஷியா.

ஜூலை 17 ம் தேதி, காலையில் இந்தோனேஷிய தலைநகரான ஜகார்த்தாவில் மெகா குனிங்கன் என்ற பகுதியில் உள்ள மேரியட் ஹோட்டலின் உள்ளே இருந்து ஒரு வெடிச்சத்தம் கேட்கிறது. அதே போல வெடிச்சத்தம் அந்த ஹோட்டலின் முன்னால் உள்ள ரிட்ஸ் கார்ல்டன் என்ற நட்சத்திர ஹோட்டலையும் தாக்குகிறது. கடைசியில் சாவு எண்ணிக்கை 7 என்றும், காயமடைந்தோர் 50 க்கும் மேல் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த மேரியட் ஹோட்டலில் தான் 2004 ம் ஆண்டில் ஒரு ஐந்து மாதம் தங்கியிருந்தேன். ஒரு ஈ, காக்கை கூட அங்கு அத்து மீறி நுழைந்து விட முடியாது. அவ்வளவு பாதுகாப்பு சோதனைகள் இருக்கும். அதையும் மீறி உள்ளே குண்டு வைத்திருக்கிறார்களென்றால் எதோ ஒரு மூன்றாந்தர ரவுடிக் கும்பல் செய்த வேலையாயிருக்காது. உடனே ஊடகங்கள் வழக்கம் போல தங்கள் ஊகங்களை கிளப்பி, இது ஜமா இஸ்லாமியாவா என்றபடி விரல்களை நீட்ட, வேறொரு ஊடக கும்பல் இது அவர்களல்ல, நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் கடுப்படைந்த லோக்கல் அரசியல்வாதிகள் மலேசிய தீவிரவாதியான நூருத்தின் முகம்மதுவோடு இணைந்து அல்லது அவன் கூட்டளிகளோடு இணைந்துதான் இந்த ஆட்டம் ஆடியிருக்கிறார்கள் என கிளப்பி விட்டுள்ளார்கள். சரி அது யாரோ, பா. ராகவன் பின்னொரு நாளில் இதைப் பற்றி எழுதுவார் என நம்புகிறேன்.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் எனது ஒரு நல்ல நண்பரும் உயிரிழந்தார். தீமோத்தேயு மெக்கேய் என்ற (எல்லோரும் அவரை "டிம்" என்று செல்லமாக அழைப்பார்கள்) ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் உயர் அதிகாரி, (நான் இந்தோனேஷியாவில் இந்த நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்காகத்தான் சென்றிருந்தேன்). மிகவும் அமைதியான குணமுடைய இந்த ஐரோப்பியர், அன்றும் வழக்கம் போல மேரியட் ஹோட்டலின் நுழைவாயிலுக்கு நேர் மேலிருக்கும் அறையில் தங்கியிருந்திருக்கிறார். நான் அங்கிருந்த நாட்களில் இருவரும் பலமுறை இரவு உணவை ஒன்றாகவே உண்டிருக்கிறோம். நுழைவாயிலுக்கு மேலே உள்ள அறையில் தங்கியிருக்கிறீர்களே, எவ்வளவுதான் தடித்த திரைகள் இருந்தாலும், இரவில் கார் வரும் பொழுதெல்லாம் கார் விளக்குகளின் ஒளி அறைக்குள் விழுந்து தொந்தரவு செய்யுமே என்று கேட்டதற்கு, எனது முக்கிய பொழுது போக்கே வருவோர் போவோரை பார்த்துக் கொண்டிருப்பதுதான் என் சிரித்துக் கொண்டே சொன்னார். அந்த பொழுது போக்குதான் அவருக்கு எமனாயிருக்கிறது. ஹோட்டலின் முன் பாகம் தான் சேதமடைந்திருக்கிறது, பின் பாகத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்ச நேரம் கழித்து தான் குண்டு வெடித்ததே தெரியுமாம்.

எப்படியோ தீவிரவாதம் மறுபடியும் ஒரு முறை தன் கோரப் பற்களைக் காட்டி சிரித்திருக்கிறது.

ங்கொய்யால பகுதி:

நீ மொக்கை போட்டா அது டிஸ்கஷன்
நான் பேசுனா அது மொக்கைங்கற

நீ நெட் பாத்தா அது கம்பெனி வேலை
நான் நெட் பாத்தா அது பர்சனல்லுங்கற

நீ லேட்டா வந்தா, நீ பிஸிங்கற
நான் லேட்டா வந்தா ஒழுக்கமில்லைங்கற

நீ ஒரு ஃபிகர்கிட்ட பேசுனா அது கம்பெனி மேட்டருங்கற
அதே நான் பேசுனா அது கடலைங்கற

ங்கொய்யால,
உன்னையெல்லாம் எவண்டா பாஸ்ஸுன்னு சொன்னது.

17 comments:

Raju said...

\\பருவப் பெண்ணின் இடுப்பு வளைவுகளைப் போல்\\
அண்ணே.. நீங்க யூத்துண்ணே..!

உஙக நண்பருக்கு அஞ்சலிகள்..மற்றூம் ஆழ்ந்த அணுதாபங்கள் அண்ணே..!

ரைட்டு பாஸூ...(ங்கொய்யால வுக்கு).

நையாண்டி நைனா said...

நீ டிவி பார்த்தா அது குடும்பத்துலே நடக்குறது
நான் பார்த்தா அது மொக்கைங்குற

நீ ரொம்ப நேரம் தூங்குனா அது ரெஸ்டு
நான் தூங்குனா அது சோம்பேறித்தனங்குறே

நீ லேட்டா வந்தா, நீ பிஸிங்கற
நான் லேட்டா வந்தா ஒழுக்கமில்லைங்கற

நீ ஒரு ஃபிகர்கிட்ட பேசுனா அது கம்பெனி மேட்டருங்கற
அதே நான் பேசுனா அது கடலைங்கற

ங்கொய்யால,
உன்னையெல்லாம் எவன்டீ பொண்டாட்டின்னு சொன்னது.

நையாண்டி நைனா said...

எப்பூடி....

நையாண்டி நைனா said...

"டெர்ரர் தங்கமணி"ய நெனச்சனா அதனாலே பதிவை பற்றி சொல்ல விட்டு போச்சி...

பதிவு தகவல்கள் அபாரம் பாசு.
இந்த தீவிரவாத செயல்களுக்கு நாம் இன்னும் என்ன என்ன இழக்க போகிறோமோ, சீக்கிரம் ஒரு விடிவு காலம் வரவேண்டும்.

தராசு said...

டக்ளசு,

டேங்சு.

தராசு said...

//ங்கொய்யால,
உன்னையெல்லாம் எவன்டீ பொண்டாட்டின்னு சொன்னது.//

நைனா, என்னாதிது,

ஒவ்வொரு தடவையும் எதிர்கவிதை, தூள் கிளப்பறேள்.

கலக்குங்கோ, மிகவும் ரசித்தேன்.

தராசு said...

// நையாண்டி நைனா said...
"டெர்ரர் தங்கமணி"ய நெனச்சனா அதனாலே பதிவை பற்றி சொல்ல விட்டு போச்சி...//

உங்க வீட்லயும் தங்கமணி டெரர் தானா, சொல்லாதீங்க, அத்திரின்னு ஒரு நலம் விரும்பி ரொம்ப துக்கப் படுவாரு.

நாஞ்சில் நாதம் said...

உஙக நண்பருக்கு அஞ்சலிகள்..

தராசு said...

வாங்க நாஞ்சில்

டேங்சு

எம்.எம்.அப்துல்லா said...

மெய்யாலுமே ங்கொய்யால நல்லாருக்கு

:))

தராசு said...

அப்துல்லா அண்ணே,

டேங்சு

VIKNESHWARAN ADAKKALAM said...

ஆஹா அசத்தல்...

நிகழ்காலத்தில்... said...

\\நீ மொக்கை போட்டா அது டிஸ்கஷன்
நான் பேசுனா அது மொக்கைங்கற

நீ நெட் பாத்தா அது கம்பெனி வேலை
நான் நெட் பாத்தா அது பர்சனல்லுங்கற

நீ லேட்டா வந்தா, நீ பிஸிங்கற
நான் லேட்டா வந்தா ஒழுக்கமில்லைங்கற

நீ ஒரு ஃபிகர்கிட்ட பேசுனா அது கம்பெனி மேட்டருங்கற
அதே நான் பேசுனா அது கடலைங்கற

ங்கொய்யால,
உன்னையெல்லாம் எவண்டா பாஸ்ஸுன்னு சொன்னது.\\


பாஸ்ஸு ஆவதுக்கு முன்னாடி அப்படித்தான்.,
பாஸ்ஸீ ஆனபின்னாடி இப்படித்தான்

கார்த்திக் said...

*/ அந்த பொழுது போக்குதான் அவருக்கு எமனாயிருக்கிறது. */

எமனின் தீராத பசி.. கண்களில் காட்சியாக வந்தது..

தராசு said...

வாங்க விக்கி, டேங்சு

தராசு said...

நிகழ்காலத்தில்,

(என்னமா பேரு வெக்கறாய்ங்கய்யா)

வந்ததுக்கு டேங்சு

தராசு said...

// கார்த்திக் பதிவுகள் said...
*/ அந்த பொழுது போக்குதான் அவருக்கு எமனாயிருக்கிறது. */

எமனின் தீராத பசி.. கண்களில் காட்சியாக வந்தது..//

டேங்சு கார்த்திக்