Wednesday, July 1, 2009

ஜுகல்பந்தி - 1/07/2009 - ரத்தம் ஒரே நிறம்.



நகரம் - கான்பூர்

கங்கைக் கரையில் அமர்ந்து, இந்திய அரசியலின் பல நிகழ்வுகளுக்கு சாட்சி சொல்லும் ஒரு அழகிய நகரம். இதற்கு கான்பூர் என்று பெயர் வந்ததற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று கன்னையாபூர் என்று கிருஷ்ணனின் பெயரால் அழைக்கப்பட்டு, பிறகு கான்பூராக மருவியதாகவும், இன்னொன்று துரியோதனன் தனது நண்பனான கர்ணனுக்கு இந்த ஊரை அன்பளிப்பாக அளித்ததனால் இது கர்ணபூர் என்று அழைக்கப்பட்டு பிறகு கான்பூர் ஆனதாகவும் கதைகள் உண்டு. (இந்தியாவுல மட்டும் ஒரு ஊருக்கு பெயர் வைப்பதென்றால் எத்தனை வில்லங்கம் இருக்குது பாருங்க). இந்த ஊர் எப்போது தோன்றியது என்று அடித்துச் சொல்ல வரலாற்றில் ஆதாரங்கள் இல்லை என்றபோதும், கங்கையின் வழித்தடத்திலிருக்கும் வாழத்தகுந்த பட்டணங்களாயிருந்த ஜஜ்மு மற்றும் பித்தோர் என்ற இரு சிறு ஊர்களுக்கு நடுவில் அமைந்த ஒரு நிலப்பரப்பு என்பதால், மனிதன் இங்கு கால்வைத்திருக்கக்கூடும்.

உலகத்தை படைத்துவிட்டு ஸ்ஸ் அப்பாடா கண்ணைக்கட்டுதே என பிரம்மன் ஓய்ந்திருந்த பொழுது ஒரு அசுவமேத யாகம் ஒன்றை நடத்தியது இந்த பித்தோர் என்ற ஊரில் தானாம். ராமாயணத்தை எழுதி இன்றைய நாளின் தேர்தல் பிரச்சனைகளுக்கெல்லாம் வித்திட்ட வால்மீகி முனிவரின் ஆசிரமம் இந்த பித்தோரில் தான் உள்ளது. சீதா பிராட்டியார் ராமனால் தள்ளி வைக்கப்பட்டபின் தனது மகன்களான லவ்(அந்த லவ் இல்லீங்க) மற்றும் குசா வை பெற்று, வளர்த்தெடுத்தது இந்த ஆசிரமத்தில் தானாம்.

ஜஜ்முவில், பிரம்ம தேவனின் வழித்தோன்றலான சந்திரவம்சி வம்சத்தின் யயாதி என்னும் அரசனுக்கு சொந்தமான ஒரு கோட்டை உள்ளதாம்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியான சிப்பாய்க் கலகத்தில், கான்பூரில் நிகழ்ந்த அவலங்கள், இன்று வரை வரலாற்றின் பக்கங்களில் இந்தியாவின் மீது ஒரு கறையாகவே படிந்துள்ளது. பீபிகர் என்று சொல்லப்படும் சிறிய வீட்டினுள் அடைக்கப்பட்ட 200 ஆங்கிலேய பெண்கள் மற்றும் குழந்தைகளை இந்திய சிப்பாய்கள் ஈவிரக்கமில்லாமல் துண்டு துண்டாக வெட்டி அங்கிருந்த கிணற்றில் வீசினார்கள். இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது திடீரென நிகழ்த்தா என்ற விவாதம் இன்று வரை வரலாற்றின் பக்கங்களில் உண்டு. இந்த சம்பவத்தை சுஜாதா "ரத்தம் ஒரே நிறம்" என்ற கதையில், கொஞ்சம் கற்பனையுடனும், நிறைய நிஜங்களுடனும் எழுதியிருப்பார். இந்த கலவரத்துக்கு மத்தியில், மக்கின்ஸி என்ற ஆங்கிலேய ராணுவ வீரனை கொல்லத் தேடி அலையும் முத்துக்குமரன் என்ற தமிழனையும், இந்த தமிழனை காதலித்து அவன் பின்னே அலையும் பூஞ்சோலை என்ற நாடோடி வித்தைக் கார பெண்ணையும் சர்வ சாதாரணமாக உலாவ விட்டிருப்பார். வாசித்துப் பாருங்கள்.

மற்றபடி, கான்பூர் இந்தியாவின் மான்ஸெஸ்டர் என்று அழைக்கப் படுமளவிற்கு தொழில் துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இரும்பு, தோல், துணி என்று எந்த தொழிலை எடுத்தாலும் வளர்ந்து நிற்கிறது இந்த நகரம். அநேக கல்விக் கூடங்கள், IIT, விவசாய பல்கலைக்கழகம் என ஒரு பெருநகரத்துக்கு சற்றும் குறியாத சிறப்புகளுடன் கங்கைக் கரையில் இருப்பது இதன் சிறப்பு அம்சம்.

நாட்டு நடப்புகள் - பதிவர் வட்டம்

எதுக்குத்தான் பைத்தியக்காரன் சாருவைப்பத்தி பேச ஆரம்பித்தாரோ தெரியவில்லை. பதிவுலகமே அதிர்ந்து கொண்டிருக்கிறது. ஜ்யோவ்ராம் சுந்தர், லக்கிலுக், நர்சிம் என எல்லா ஜாம்பவான்களும் களத்தில் குதித்து விட்டார்கள். அதிஷா அவர் பங்குக்கு ஒரு பதிவே போட்டு விட்டார். நல்லா இருங்க சாமி.

அப்துல்லா அண்ணன் கடந்த 19ம் தேதி ஒரு டைரிக்குறிப்பு எழுதுனதோட சரி. என்ன ஆச்சுன்னே தெரியல, பரிசலின் அவியலையும் காணவில்லை. கொடைக்கானலுக்கு போயிட்டு வந்து கேபிள் அண்ணன் வழக்கம் போல தனது பணியை தொடங்கிட்டாரு. தலைவர் ஆதியின் பக்கத்துல இன்னும் அந்த Page Alignment பிரச்சனை சரியாக மாட்டேங்குது. யாரோ ஒரு கணேஷ்ங்கற புண்ணியவான் பின்னூட்டத்தில், எல்லா பதிவரையும் பின்னங்கால் பிடரியில் பட ஓடுமாறு செய்கிறார். வினவு பக்கங்களில் கடந்த இரண்டு பதிவுகளாக ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாகவே காண முடிகிறது. கேரள பாதிரிகளை சாடிய இவர், ஜீயர்கள் சமூகத்தையும் விட்டு வைக்கவில்லை. உரையாடல் - சிறுகதைப் போட்டிக்கு கதை அனுப்ப கடைசி நாள் முடிந்து விட்டது. இனி நடுவர்கள் கதைகளை தேர்ந்தெடுப்பார்கள். அப்பா சாமிகளா, நல்ல முடிவா சொல்லுங்கப்பா.

12 comments:

Raju said...

ok...!

கார்க்கிபவா said...

பதிவர் வட்டம்ன்னு சொல்லிட்டு என்னை பத்தி இல்லையா? ஆவ்வ்வ்வ்

சப்ராஸ் அபூ பக்கர் said...
This comment has been removed by the author.
சப்ராஸ் அபூ பக்கர் said...

வாழ்த்துக்கள் அண்ணா..... தொடர்ந்து எழுதுங்கள்..... உங்கள் ஆக்கங்களை வாசிப்பதுண்டு. ஆனால் பின்னூட்டல் இடத் தான் நேரம் கிடைப்பதில்லை. (ஐய்யோ....அவ்வளவு வேலைங்க....)

என் வலைப் பக்கமும் வந்து போங்க அண்ணா.....

Cable சங்கர் said...

அதான் எழுத ஆரம்பிச்சிட்டனில்ல.. எங்க நம்ம கதை எழுதுனத பத்தி ஒண்ணுமே சொல்லல..

Anonymous said...

கான்பூர்ல இத்தனை கதை இருக்கா , ரத்தம் ஒரே நிறம் எழுதும்போது சுஜாதாவுக்கு எத்தனை தடைகள்னு அவரோட முன்னுரைல எழுதியிருக்கார். அந்த புத்தகம் நான் வாங்கிட்டேன்.

தராசு said...

டக்ளஸு

டேங்சு.

தராசு said...

//@கார்க்கி said...
பதிவர் வட்டம்ன்னு சொல்லிட்டு என்னை பத்தி இல்லையா? ஆவ்வ்வ்வ்//

ஹலோ, நீங்க இல்லாம பதிவர் வட்டமா தல, ஆனா அந்த "ரத்த பூமிய" விட்டு வெளியவே நிக்கறீங்களே அது ஏன்?

தராசு said...

வாங்க அபூ பக்கர்,

வந்ததுக்கு டேங்சு.

கண்டிப்பா உங்க கடைக்கும் வர்றேன்.

தராசு said...

//@ Cable Sankar said...
அதான் எழுத ஆரம்பிச்சிட்டனில்ல.. எங்க நம்ம கதை எழுதுனத பத்தி ஒண்ணுமே சொல்லல..//

தல, நீங்களும் இருக்கற ஒரு பதிவு வந்துகிட்டே இருக்கு, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

தராசு said...

//@ சின்ன அம்மிணி said...
கான்பூர்ல இத்தனை கதை இருக்கா , ரத்தம் ஒரே நிறம் எழுதும்போது சுஜாதாவுக்கு எத்தனை தடைகள்னு அவரோட முன்னுரைல எழுதியிருக்கார். அந்த புத்தகம் நான் வாங்கிட்டேன்.//

வாங்க அம்மிணி, வந்ததுக்கு டேங்சு.

anujanya said...

கான்பூர் பற்றி நல்ல பதிவு. நீங்க சமீபத்தில் போனீங்களா அங்க?

'இந்தியாவின் மான்செஸ்டர்' என்று அந்தக் கால பம்பாயையும், 'தென் இந்தியாவின் மான்செஸ்டர்' என்று கோவையையும் சொல்வார்கள். கான்பூர் தொழில் நகரம். ஆனால் மான்செஸ்டர் என்று சொன்னது பருத்தி சார்ந்த ஆலைகளுக்காக என்று நினைவு. நான் சொல்வது தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்.

அனுஜன்யா