Monday, April 20, 2009

IPL போட்டிகள் - இந்திய அரசுக்கு செருப்படி.

மேல்தட்டு வர்க்க குழந்தைகள் இந்திய அரசைப் பார்த்து எள்ளி நகையாடிவிட்டு, எங்கள் ஆட்டம்தான் எங்களுக்கு பெருசு என்று சென்றுவிட்டன. என்னிடம் பணம் இருக்கிறது, "என் வீட்டு விஷேஷத்துக்கு காவலாளியாய் வந்து நில்" என்று சொல்லி ஒரு இறையாண்மை மிக்க அரசை மிரட்ட முடிகிறது. அரசும் "அப்படி இல்லப்பா, கொஞ்சம் பொறுத்துக்குங்களேன், எங்கள் கோட்டையில் கொடியேற்றி விட்டு வருகிறோம்" என்று சொன்னவுடன், "டேய், மரியாதையா நான் சொன்ன நேரத்துக்கு சொன்ன இடத்துல வந்து நில்லு, நிக்கல நடக்கறதே வேற" என்று பேட்டை ரவுடியைப் போல் மிரட்ட முடிகிறது. "எங்க வூட்டு விஷேஷத்துக்கு வெளியூர் மாப்பிள்ளைகள் எல்லாம் வராங்க, அவுங்க காலை கழுவுறதுல இருந்து, அவுங்களுக்கு படுக்கறதுக்கு பாய் போட்டு, தூங்கும் போது கால் அமுக்கி விட்டு,கண்விழிச்சா வெந்நி வெச்சு, பசியெடுத்தா பந்தி வெச்சு சேவுகம் பண்ண முடியுமா முடியாதா" என உலகின் மிகப் பெரிய மக்களாட்ச்சியை பார்த்து கொக்கரிக்க முடிகிறது. முடியாது போல
தோணுதுப்பா என்றவுடன், இரு உன்னை என்ன செய்கிறேன் பார் என்று சொல்லி "அய்யோ உலகமே இந்த அநியாயத்தை கேக்க மாட்டிங்களா, எங்க வீட்ல எனக்கே பாதுகாப்பில்லைங்கும் போது நான் இங்க எதுக்கு இருக்கணும்" அப்படின்னு கூவிவிட்டு, பக்கத்து வீட்டைப்பார்த்து" ஏனுங்க, நம்மூட்ல கொஞ்ச எடம் இருக்குதுங்களா, நாளைக்கு மாப்பளேக வர்ராங்கங்க, அவிய அப்பிடி இப்பிடின்னு ஆடோணுங்களாமா, அவிய ஆட்டத்தைப் பாக்கறதுக்கு எங்கூட்ல கேடு கெட்ட இளிச்சவாயனுக இருக்கறாங்க, ஆனா மாப்ளேகளுக்குத்தேன் ஆடறதுக்கு எடமில்லீங்களாமா, கொஞ்சம் உங்கூட்டு வாசல்ல ஆடீட்டு போகுட்டுமுங்க, ஏனுங்க, சரிதானுங்களா" என்று அடுத்த வீட்டுக்காரனையும், என்னிடம் பணம் இருக்கிறது பார், என்ன சொல்ற என்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு திமிராய் கேட்க முடிகிறது.

வேதனை என்னவென்றால், இதை அனைத்தையும் செய்வது சமுதாயப் பொறுப்புள்ள இந்தியக் குடிமகன்கள்தான். என் இந்தியத்திருநாட்டில் ஒரு படத்தில் நடித்து விட்டாலே அவர் வருங்கால பிரதமராகும் கனவு காணும் உரிமையை பெற்று விடுகிறார். அப்படிப்பட்ட சினிமா கும்பல் தங்களது கும்மாளத்திற்கென ஒரு சூதாட்டத்தை உருவாக்கி, அதை சர்வதேச அளவில் பிரபலபடுத்தி இருக்கிறது என்றால் இதில் வரும் வருமானம் எவ்வளவு என்று பாருங்கள்.

எனது நாட்டில் தேர்தல் வருகிறது, நான் இங்கு இருந்து எனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் துளியும் மனதிலில்லாமல், என் பொழப்பு தான் எனக்குப் பெருசு, வேணுன்னா, எங்க வீட்டு திருவிழா முடிஞ்சதுக்கப்புறம் நீ கொடியேத்து என்று ஒரு அரசின் இறையாண்மையை எதிர்த்து கேவலப்படுத்தும் அளவுக்கு, ஜனநாயகமும், பணமும் இந்த திமிர் பிடித்த அணி உரிமையாளர்களுக்கும், போட்டி நிறுவனத்தாருக்கும் தைரியம் கொடுத்துள்ளதா?????

ஒரு நாட்டின் மிகச்சிறந்த விருது அளிக்கப் பட்டாலும், (எத்தனையோ தகுதியுள்ள வீரர்களுக்கு இன்னும் இந்த விருதுகள் ஒரு கனவுதான்) அந்த விருது வழங்கும் விழாவுக்கு அரசு தானாக முன்வந்து அப்பா, ராசா , வரமாட்டேன்னு மாத்திரம் சொல்லாதடா, வந்து வாங்கிக்கடா என்று கெஞ்சினாலும், தளபதியைப் போல " "ஏய், சைலன்ஸ், நான் விளையாண்டுட்டு இருக்கன்ல" என்று ஒதுக்கித்தள்ளும் தைரியத்தை எது தருகிறது????

தென் ஆப்பிரிக்காவில் தேர்தல் இல்லையா, அவர்கள் நாட்டிலும் இதோ இப்பொழுதுதான் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அப்படி இருப்பினும் "என்னால் உங்கள் மாப்பிள்ளைகளுக்கு வாசலில் விளையாட இடம் தர முடியும், நீ வா" என்று சொல்லி எப்படி அழைக்க முடிகிறது?????

எல்லாம் என்னால் தானா? ராத்திரி பன்னிரண்டு மணி ஆனாலும் கண்முழித்து மாப்பிள்ளைகள் ஆடுவதை பார்க்கிறேனே, அதனால் தானா??? அவன் எங்க போனா என்ன, யாரை அவமானப்படுத்துனா என்ன, நான் பாக்கறத பார்த்துட்டேதான் இருப்பேன் என சொரணை கெட்ட ஜென்மமா வாழ்றனே, அதனால்தானா???

நிறைய சொல்லணும்னு தோணுதுபா, ஆனா சொன்னா எல்லாரும் திட்றாய்ங்க, அதுனால சொ.செ.சூ. நஹி.

21 comments:

மஞ்சூர் ராசா said...

சாட்டையடி கேள்விகள். விளக்கங்கள்.
ஆனா யாருக்கு உறைக்கப்போகுது?

தராசு said...

// @மஞ்சூர் ராசா said...
சாட்டையடி கேள்விகள். விளக்கங்கள்.
ஆனா யாருக்கு உறைக்கப்போகுது?//


அப்படி விட்ற முடியுமாண்ணே, என்னன்னாலும் நம்மதான கேக்கணும்

வந்ததுக்கு டேங்சுண்ணே

Raju said...

\\எனது நாட்டில் தேர்தல் வருகிறது, நான் இங்கு இருந்து எனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் துளியும் மனதிலில்லாமல், என் பொழப்பு தான் எனக்குப் பெருசு, வேணுன்னா, எங்க வீட்டு திருவிழா முடிஞ்சதுக்கப்புறம் நீ கொடியேத்து என்று ஒரு அரசின் இறையாண்மையை எதிர்த்து கேவலப்படுத்தும் அளவுக்கு, ஜனநாயகமும், பணமும் இந்த திமிர் பிடித்த அணி உரிமையாளர்களுக்கும், போட்டி நிறுவனத்தாருக்கும் தைரியம் கொடுத்துள்ளதா?????\\

நானும் இதை யோசிச்சேன்பா....
ஒருவேளை "தபால் ஓட்டு " போடுவாங்களோ..!
"எல்லாரும் ஓட்டு போடுங்க" அப்டினு ஒரு விளம்பரம் எடுக்கப் போறாங்களாம்.அதுக்கு மாடலே நம்ம டோனிதானாம்..!
அண்ணாத்தையே எலெக்ஷனப்ப விளையாடிக்கினு இருப்பாப்ல...!

Raju said...

உலகத்துல இருக்குற
"கிரிக்கெட் வீரர்கள்" அப்டின்னு சொல்லிக்கிற எல்லா ரிடையர்டு கேசுகளும் ஒன்ன சேர்ந்து தென்னாப்ரிக்காவுல‌,
பிரிட்டீஷ்க்காரன் கண்டுபிடிச்ச விளையாட்டு விளையாடுவாங்களாம்...!
அதுக்கு பேரு மட்டும் "Indian Premier League"..
ஆக மொத்ததுல த்மிழன் மாட்டும் முட்டாள் கிடையாது..எல்லா இந்தியனும் முட்டாள்தானா?

Raju said...

இந்த கருமத்துக்கு நம்மளோட வரிப்பணம் அவங்களுக்கு சம்பளமாம்..
இதுல கொடுமை என்னான்னா...
நாட்டை காப்பாத்துற ஒரு ராணுவ வீரனுக்குக் கூட அவ்வளவு சம்பளம் இல்லை...இவங்களுக்கு அவன விட‌
எத்தனை மடங்க சம்பளம்..
தோத்தாலும் ஜெயிச்சாலும் காசு..
நினைச்சு பாத்தா வயிறு எறியுதுண்னே...!

எம்.எம்.அப்துல்லா said...
This comment has been removed by the author.
எம்.எம்.அப்துல்லா said...

//அதுனால சொ.செ.சூ. நஹி.


//

என்ன ரெசிஷனா??? உங்க செலவுல வைக்க கஷ்டமா இருந்தா சொல்லுங்க...என் செலவுல வச்சுவுட்டுற்றேன்..

ஹி..ஹி..ஹி..

அத்திரி said...

ரொம்ப டென்சன் ஆகாதிங்கண்ணே.......... உடம்ப பாத்துக்குங்க

Thamira said...

நமக்குப் பிரியமானவர்களுக்கெல்லாம் பிரியமானதாய் இருப்பதுதான் பிரச்சினையே.. இல்லைன்னா என் வாயில வண்டி வண்டியாய் வந்துரும்.!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல உதாரணம்

தராசு said...

டக்ளசு டேங்சு.

இவுனுங்க ஓட்டு போட்டு தன்னுடைய கடமையை நிறைவேத்தணும்னு நெனச்சிருந்தா இப்படி செஞ்சிருப்பாங்களா என்ன??
விடுப்பா, கொஞ்ச நேரம் புலம்பத்தான் நம்மனால முடியும்.

தராசு said...

// @எம்.எம்.அப்துல்லா said...
//அதுனால சொ.செ.சூ. நஹி.


//

என்ன ரெசிஷனா??? உங்க செலவுல வைக்க கஷ்டமா இருந்தா சொல்லுங்க...என் செலவுல வச்சுவுட்டுற்றேன்..//

ஹலோ, ஆணி அதிகம் அப்படி இப்படின்னு கடைய தொறக்கறதே இல்ல, இதுல சூனியம் வெக்கறதுக்கு மட்டும் முந்திகிட்டு வருவீங்களோ??

தராசு said...

//@ஆதிமூலகிருஷ்ணன் said...
நமக்குப் பிரியமானவர்களுக்கெல்லாம் பிரியமானதாய் இருப்பதுதான் பிரச்சினையே.. இல்லைன்னா என் வாயில வண்டி வண்டியாய் வந்துரும்.!//

அடுத்தவங்க பிரியமும் வெறுப்பும் அவங்களோட தல. நம்ம ஃபீலிங்ஸ், ஃபீலிங்ஸ்தான்.

வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

//@SUREஷ் said...
நல்ல உதாரணம்//

வாங்க சுரேஷ், வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

//@அத்திரி said...
ரொம்ப டென்சன் ஆகாதிங்கண்ணே.......... உடம்ப பாத்துக்குங்க//

டேங்சுண்ணே.

Suresh said...

நல்ல பதிவு

i liked ur blog and have become ur follower.

You can also visit my blog and if you like it u can be my follower :-)

Hope u like it

தராசு said...

hai suresh,

that Sarath Babu post was excellent.

Becoming a follower - done.

Ka. Balaji said...

Sir,

Nalla pathivu. Vashthukkal.

Indha nerathil naam ondru purindhukolla vendum. evan sir indhiya iraiyanmaiyai mathikkiran. arasiyal endra porvaiyil nammudaiya panathai entha mudhalum illamal pidungi thinnum paradesigal irukkum indha nattil iraiyanmaya. pathmasri virudhu yarukku kodukkuranga. thoppula katturavangalukku kalaimamani, iduppa aatturavangalukku pathmasri. aapasa vasanam irattai artha vasanam pesi nadikkiravangalukku pathmasri. enga poikkittu irukku sri namma panpadu, kalacharam. ivaigal ellathodum oppidum podhu IPL ICL oru periya indhiya irayanmaikku ethirana seyala theriyala.

nandri sir,

ka. balaji

க. பாலாஜி said...

"இந்த கருமத்துக்கு நம்மளோட வரிப்பணம் அவங்களுக்கு சம்பளமாம்..
இதுல கொடுமை என்னான்னா...
நாட்டை காப்பாத்துற ஒரு ராணுவ வீரனுக்குக் கூட அவ்வளவு சம்பளம் இல்லை...இவங்களுக்கு அவன விட‌
எத்தனை மடங்க சம்பளம்..
தோத்தாலும் ஜெயிச்சாலும் காசு..
நினைச்சு பாத்தா வயிறு எறியுதுண்னே...!"

டக்ளஸ் சார்.
உங்க ஊருக்குள்ள இருந்து, உங்க ஓட்ட வாங்கிகிட்டு உங்களுக்கே ஆப்பு அடிக்கிற அரசியல்வாதிகள்தான் சார் இதுக்கெல்லாம் காரணம்.

தராசு said...

//@ Ka. Balaji said...

pathmasri virudhu yarukku kodukkuranga. thoppula katturavangalukku kalaimamani, iduppa aatturavangalukku pathmasri. aapasa vasanam irattai artha vasanam pesi nadikkiravangalukku pathmasri//

யாருக்குத் தெரியும், இந்த விருதுகளிலும் உள்குத்து வேலைகள் நடக்கிறதோ என்னவோ????

தராசு said...

//@க. பாலாஜி said....


டக்ளஸ் சார்.
உங்க ஊருக்குள்ள இருந்து, உங்க ஓட்ட வாங்கிகிட்டு உங்களுக்கே ஆப்பு அடிக்கிற அரசியல்வாதிகள்தான் சார் இதுக்கெல்லாம் காரணம்.//

இல்லை இல்லை, அந்த அரசியல் வாதியை தேர்ந்தெடுத்த நான் தான் காரணம்.