Friday, April 3, 2009

தயவு செய்து உதவுங்கள்

கோடை காலம் வந்தாச்சு, தர்பூசணிப் பழங்கள், குளிர்ச்சி தரும் காய் கறிகள், வெய்யிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க வழிகள், உடல் சூட்டை தணிக்க உணவு வகைகள் என்று என்னென்னவோ திட்டமிட்டிருப்போம்.

ஆனால் வாருங்கள், நம்மை அண்டிப் பிழைக்கும் ஜீவன்களுக்கும் சிறிதே கருணை காட்டுவோம்.


ஆயிரம் முறை சிறகடித்தாவது ஒரு சொட்டுத்தண்ணீரை குடிக்கத்துடிக்கும் இந்தக் குருவியை பாருங்கள். அடுத்த சொட்டு தண்ணீருக்காக வரிசையில் இன்னொரு குருவி. (கார்க்கி, நான் சொல்றது படத்துல தெரியற குருவியை).

இந்தக் கோடையில் ஒரு முடிவெடுப்போம்.

நாம் எந்த வகையான வீட்டில் வசித்தாலும் சரி, ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு திறந்த வெளியில் தினமும் வையுங்கள். தாகமெடுத்த ஒரு பறவையாவது தண்ணீர் பருகட்டும்.

11 comments:

எம்.எம்.அப்துல்லா said...

வாயில்லா ஜீவன்களைக் கண்டபோதெல்லாம் வாடும் வலையுலகின் வள்ளலார் அண்ணன் தராசு நூறாண்டு வாழ்க.

தராசு said...

வாங்கண்ணே,

வந்ததுக்கு டேங்சு.

கார்க்கிபவா said...

/ (கார்க்கி, நான் சொல்றது படத்துல தெரியற குருவியை).//

அந்த குருவியும் படத்துலதான் தெரியும் தல..

ஆனாலும் இந்த மேட்டரு.. சூப்பரு..

எத்தனை பேருக்கு தண்ணி காட்டறோம். நம்ம குருவிக்கு காட்ட கூடாதா?

தராசு said...

@கார்க்கி,
/// (கார்க்கி, நான் சொல்றது படத்துல தெரியற குருவியை).///

//அந்த குருவியும் படத்துலதான் தெரியும் தல..//

அதான், அதான், அதேதான்.

நான் முதலில் எழுதும்பொழுது "கார்க்கி, நான் சொல்றது இந்தப் படத்துல தெரியற குருவியை" னு எழுத நினைச்சேன். ஆனால் கார்க்கிகிட்ட இருந்து இப்படி ஒரு பின்னூட்டம் வரும்னு நெனச்சேன்.

அதுக்காகவே அந்த இந்த வை எழுதவில்லை.

VIKNESHWARAN ADAKKALAM said...

//எத்தனை பேருக்கு தண்ணி காட்டறோம். நம்ம குருவிக்கு காட்ட கூடாதா?//

குருவி படத்துல விஜய் நமக்கு தண்ணி காட்டினாரே அத சொல்ல வரிங்களா :))

அத்திரி said...

இளையதளபதிய சீண்டுறதே வேலையா போச்சு...))))))))))))))

அன்புடன் அருணா said...

எவ்வ்ளோ பண்றோம்????இதைப் பண்ண மாட்டோமா??? தினமும் ஏற்கெனவே தண்ணீர் வைக்கிறேனே!!!
அன்புடன் அருணா

தராசு said...

@vikneshwaran,

//குருவி படத்துல விஜய் நமக்கு தண்ணி காட்டினாரே அத சொல்ல வரிங்களா :))//


அதான், அதான், அதேதான்.

தராசு said...

//அத்திரி said...
இளையதளபதிய சீண்டுறதே வேலையா போச்சு...))))))))))))))//

நாங்க என்ன பண்றது, குருவி போனதுக்கப்புறம் வில்லு வந்துருச்சே, அப்ப நாங்க அம்பு விடத்தான செய்வோம்.

தராசு said...

//அன்புடன் அருணா said...
எவ்வ்ளோ பண்றோம்????இதைப் பண்ண மாட்டோமா??? தினமும் ஏற்கெனவே தண்ணீர் வைக்கிறேனே!!!
அன்புடன் அருணா//

வாங்க அருணா, வந்ததுக்கு டேங்சு,

ஆமா, எவ்வ்ளோ பண்றோம்கறீங்க, அப்ப்டி இன்னாதான் பண்றீங்க????

தேவன் மாயம் said...

குருவி,காக்கைக்கு தண்ணீர்ப் பந்தல்!! அருமையான ஐடியா!!