Monday, April 6, 2009

தமிழ்மணம் கால் சென்டர்

டிஸ்கி : இது முழுவதும், மறுபடியும் நகைச்சுவைக்காகவே எழுதப்பட்ட பதிவு, யாருடைய மனதையும் புண்படுத்தவோ, படைப்புகளை ஏளனம் செய்யவோ அல்ல. அப்படி யாரையாவது புண்படுத்துமானால் தயவு செய்து பொறுத்தருள்வீர்.

சரி இனி மேட்டருக்கு வருவோம்.இப்பொழுதெல்லாம் எந்த ஒரு சேவைக்காகவும் ஒரு நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டால், நொந்து நூலாகிப்போகுமளவிற்கு பதிவு செய்யப்பட்ட வர்ணனைகள், அல்லது எதாவது ஒரு சேவைக்காக காத்திருக்கச் சொல்லிவிட்டு எதாவது ஒரு பாடலைப் போட்டு மணிக்கணக்கில் ஓடவிடுகிறார்கள். முடிவில் ஒரு அரை மணி நேரம் கழித்து மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நிற்போம்.

இப்படி தமிழ்மணத்திற்கென ஒரு அழைப்பு மையம் (Call Center) இருந்தால் எப்படி இருக்கும் :

அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ள வேண்டுமானால் முதல் நிபந்தனை நீங்கள் கைபேசியில் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.

"வணக்கம், தமிழ்மண வலைதிரட்டியின் அழைப்பு மைய சேவைக்கு வந்திருக்கும் உங்களை வரவேற்கிறோம். தமிழில் தொடர 1ஐ அழுத்தவும். திருநெல்வேலி தமிழில் கேட்க இரண்டை அழுத்தவும். மதுரை தமிழில் கேட்க 3 ஐ அழுத்தவும். கோவைத்தமிழில் கேட்க 4 ஐ அழுத்தவும். சென்னைத்தமிழில் கேட்க 5ஐ அழுத்தவும்."

நீங்கள் 5 ஐ அழுத்த,

மறுபடியும் பதிவு செய்யப்பட்ட குரல்,

"அல்லாரும் எயிதிக்கறதை லுக் வுடறதுக்கு வந்துக்குறீங்கோ, வந்ததுக்கு டேங்சு. நான் சொல்றதை கரீக்டா கேட்டுனு, அத்தே மாதிரி அயித்திகினே இருங்கோ, அல்லாம் கரீக்டா தெரியும், எதுனா தப்பு பண்ணிகினு, இன்னாட நம்ப ஒண்ணு கேக்க, அத்து இன்னாவோ டபாய்க்குதேன்னு நீங்களா மெர்சலாயினிருந்தா, அது எந்தப்பு கடியாது"

தமிள்மணத்துல ஆளாளுக்கு இன்னா இன்னாவோ எளுதுனிக்குறாங்கோ, அது அல்லாத்தையும் பட்சினிருந்தா, நீ டரியல் ஆயிருவே மாமு, அதுனால நாங்களா அத்த பிர்ச்சு வெச்சுக்கறொம். நாங்க சொல்ல சொல்ல உனக்கு இன்னா படிகணுமோ, அத்த டைப் அட்சுகினே இரு, அதுவா வரும். இப்ப ஸ்டார்ட் மீஜிக்"

அந்த காலத்துல எந்த ராஜா எந்த ராணியோட எப்படி குஜால் பண்ணாரு, கல்யாணமே பண்ணிக்காம இருந்த கவிஞருங்கோ லேடீஸை பத்தி இன்னா இன்னா கனவு கண்டாங்கோ, ஒரு பொம்பிளிய தலையிலிருந்து கால்வரைக்கும் எப்படியில்லாம் எளுத்துலயே டாவு உட்டாங்கோ, இந்த மாதிரி மேட்டரெல்லாம் தெரியணுமா, " யாவரும் கேளிர்"னு டைப் அடிங்கோ, "பதிவுலக கம்பர்"னு ஒருத்தர் வருவாரு, அவருகிட்ட அந்தப் பனை ஓலைல எழுதுன மேட்டரெல்லாம் பேசுங்க. சும்மா அவுத்து உட்டுகுனே இருப்பாரு. ஆனா, இரு, இரு இரு வர்றேன், திடீர் திடீர்னு இவுரு திருடன் போலீஸ் கத எல்லாம் எழுதினிருப்பாரு, அத்த எல்லாம் நீயா பட்சுகினு, நீயா புரிஞ்சுக்கோ,

அப்பாலிக்கா, எந்நேரமும் வூட்டுக்காரியாண்ட டாவு உட்டுகுனே ஒருத்தர் இருப்பாரு, இப்ப திடீர்னு பேரெல்லாம் மாத்திகினிக்கறாரு, அவுரு கடக்கி போனியான தங்கமணி, ரங்கமணினு இன்னா இன்னாவோ எளுதியிருப்பாரு, அத்த பட்சா நீ பேஜாராயிடுவ, அத்து இன்னாண்னா, டிவி பொட்டியில எப்பவுமே ஒரு எலியும் பூனையுமா ஒரு பிலிம் காட்னிக்குறாங்க பாரு, அதுல பூனை எப்பவுமே எலியை அட்சுகினே இர்க்கும், திடீர்னு எலி ஒரு தபா திர்ப்பி அடிக்கும் பாரு, பூனை அவ்வ்வ்வ்வ்வ்னு கத்திகினு ஆஃப் ஆயிரும். அதான் மேட்டரே, இந்த மேட்டர ஒரு குஜால சொல்லீருப்பாரு. பட்சிகினே இர்க்கலாம், அப்பாலிக்கா முதுகு வழியா நெஞ்ச தொடற மாதிரி டச்சிங்கா நெறய மேட்டர் எழுதீக்கறாரு, அத்த பட்சதுக்கப்புறம், கவுஜ, அவுரு புடுங்கற ஆணினு இன்னாஇன்னாவோ எழுதீக்கறாருப்பா, ஆனா அவுரு கடைக்கு பேரு மாத்திரம் "புலம்பல்கள்" னு வெச்சிக்கறாரு, சரி, சரி லூசுல வுடு, பேருக்கும் அவுருக்கும் இன்னா கனிக்ஷனெல்லாம் யோசிச்சு மெர்சலாவாத.

அப்பிடியே கடை கடையா லுக் வுட்டுகுனே போனியானா, திடீர்னு சினிமா பத்தின அத்தினி மேட்டரும் உள்ள ஒரு கடை வரும். ஷோக்கா குட்டிங்க படமெல்லாம் போட்டு, அப்பாலிக்கா இன்னாவோ கட்டங்கட்டமா போட்டு, அதுக்குள்ளாற நெறய கலர் கலரான மேட்டரெல்லாம் ஒரே பீட்டரா உட்டுனு, நாளைக்கு ரிலீஸாகற பிலிமுக்கு இன்னைக்கே கமெண்ட்ரி குட்த்துகுனு ஒரு கடை இர்க்கும், அதை பாத்து அப்பிடியே வாயப் பொளந்துனு நிக்காத, அது வேற யாருமில்ல, நம்ப கேபிள் அண்ணந்தான். அவுரு எங்க போய் ஒருதபா கொத்து பரோட்டா சாப்டாரோ தெரியல, அதெ மாதிரி ஒரு ஐட்டம் வெச்சிக்கறாரு,அதுல பாருப்பா, கடேசில ஒரு செக்ஸ் மேட்டரை தொட்டுக்கறதுக்குனு குடுப்பார் பாரு, ஆஹா, சூப்பர்பா!!!!

அப்பாலிக்கா, ஒரு கட வரும்பாரு, ஒரே பத்து பத்தா இருக்கும், இந்த கடைக்கு போகணும்னாலே படகு உட்டுகுனுதான் போவணும். அவுரு கேள்வி கேட்டா பத்து, புத்தகம் பட்சா பத்து, அல்லாமே பத்துதான், எங்க போய் வாங்கி கட்டிகினு, அத்துக்காக பத்து போட்னுகுறாரோ, ஆனா ஷோக்கா எயிதினுக்கறார்பா, அவியல்னு ஒரு ஐட்டம் வெச்சினிக்றாரு, சும்மா கம கமனு ஒரே டேஸ்டாக்குது. ஒரு வாரத்துக்கு நெறயா தபா எதுனா சரக்குள்ள மேட்டரா இறக்குவாரு, நம்ம பனியன், அண்ட்ராயர் எல்லாம் பண்ற கம்பெனிங்க நெறய இக்கற ஊர் இல்லை, அத்துல தான் இவுரும் இர்க்காராம்.

எல்லாம் பட்ச்சு, பட்ச்சு ஒரு மாதிரி நிக்கறயே, இன்னா மேட்டரு, இன்னாது புச்சா எதுனா படிக்கணுமா, ஆங், அப்டி வா, இந்த புச்சா எழுத்றேன், புச்சா எழுத்றேன்னுட்டு ஒரு கும்பலா கிளம்பியிருக்கங்கபா, இன்னா எழுதுறாங்கன்னு அவுங்களுக்கு புரியிதோ இல்லியோ, உன்னோட மூளைய வறுத்து உன்கே சர்விங் ப்ண்ற பார்டிங்களா ஒரு சில கடயில குந்தினுக்குறாங்கோ, "மொழி விளையாட்டு"னு ஒரு கடை இர்க்கும் பாரு, கவுஜயா 83 தரம் இன்னதுதான்னு இல்லாத எல்லா மேட்டரையும் எள்தீக்கறாரு, இன்னாடான்னு பாத்தா "விடுபட்ட வரிகள் காணாமலே போனது, ஆறு ஓடிச் சேருமிடம் கடல்" ங்கறாரு, இன்னா, எதுனா தெர்தா, இல்ல எதுனா தெர்தானு கேக்கறேன். அதான், அதான், அத்தேதான், எல்லாம் புர்ஞ்ச மாதிரி கமுக்கமா போய்கினே இரு. இதுக்கு இன்னா மீனிங்னு கேட்டியனா, ங்கொய்யால, இத்து கூட தெரியாம இன்னாத்துக்குடா கவுஜ படிக்க வர்றீங்க? கைநாட்டு கம்னாட்டிங்களா!!!!!!!

அப்பாலிக்கா "ஒண்ணுமில்ல ச்சும்மா" னு ஒரு கட இர்க்கும். அந்தக் கடக்காரரு புதுக்கோட்டக் காரரு, சிங்கப்பூரு, துபாய்னு பொசுக்கு, பொசுக்குனு போய்கினும் வந்திகினுமே இர்ப்பாரு, எந்தக் கடையவாவது எனிமீஸ் அட்டாக் பண்ணிக்கறாங்களா, கடைங்களுக்குள்ள எதுனா மேட்டர் பிகுருஸலா ஆயினுக்குதானெல்லாம் அப்பப்ப வானிலை அரிக்கை மாதிரி எள்திக்கினே இர்ப்பாரு, எல்லா கடையிலும் பூந்து அண்ணே, அண்ணே னு எதினா கும்மிக்கிட்டிருப்பாரு, ஆனா, ஆளு மாத்திரம் தங்கம்ப்பா!!!!!!!!!!!!!!????, பளசு, புச்சுனு சிங்கப்பூரைப்பத்தி எதோ எள்தறதுக்கு ஒரு மூணு மாசம் முன்னாடி ஸ்டார்டிங் பண்ணாரு, அது இன்னாவோ அனுமார் வால் கணக்கா, தமிழ் சீரியல் கணக்கா போய்கினேக்குது, ம்ஹூம், பாப்போம், எத்தினி ஃபாஸ்டா போனாலும் தண்டவாளம் இருக்கறவரையும் தான ரயிலு போவும்.

அட இன்னாபா, எல்லாத்தையும், நானே சொல்னிக்குறேன், வெறுங்கொடலோட எத்தினி அவுரு பேசினிக்கறது, கொஞ்சம் தொண்டைய கூல் பண்ணிக்கறேன். அது வரை நீ 3 ஆம் நம்பரை அமுக்கு, மதுரைக்கார பார்ட்டி லைன்ல வரும், அது கைல மத்த கடைங்களை பத்தி கேட்டுக்க...., இன்னா வர்ட்டா!!!!!

22 comments:

கார்க்கி said...

இன்னா நைன்னா இப்பி மெர்சிலாக்கிட்டா... கைய கொடு குமாரு.. டவுசரு எல்லாம் கீஞ்சு நஞ்சி போச்சுப்பா.. அட்ச்சு ஆடு மாமே.. முட்ஞ்சா அட்த்த பார்ட்டு போடு...

டக்ளஸ்....... said...

செம ரகளையான பதிவுண்ணே...
கலக்கீட்டீங்க..
நம்ம பக்கமும் அப்பப்ப வந்து போங்க!
கார்க்கி அண்ணே முந்திக்கிட்டாப்ல...

தராசு said...

@ கார்க்கி,

டேங்சு. அட்த்த பார்ட் இன்னும் ரெண்டு நாள்ல போடரேன்.

தராசு said...

@டக்ளஸ்...

தம்பி, வந்ததுக்கு டேங்சு,

வர்றோம், உங்க கடைக்கும் வர்றோம்.

எம்.எம்.அப்துல்லா said...

இன்னா நைனா இந்தோ வாரு வாரீகீற.. எத்தினி தபா நூலுவுட்டாலும் இஸ்த்து சேராதமேரி டவுசர கீச்சிட்டியேபா. அத்தொட்டு இன்னோன்னும் சொல்லிகிறேன், மெய்யாலுமே சூப்பராகீதுபா

:)

narsim said...

செம கலக்கல் தலைவா. எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.

மிக ரசித்துச் சிரித்தேன் தலைவா, யாவரும் கேளீர் டவுசர் கிழிக்கப்பட்டது..

தராசு said...

@எம்.எம்.அப்துல்லா,

//இன்னா நைனா இந்தோ வாரு வாரீகீற.. எத்தினி தபா நூலுவுட்டாலும் இஸ்த்து சேராதமேரி டவுசர கீச்சிட்டியேபா.//

அண்ணே,

கோவிச்சுக்காதீங்கண்ணே, டிஸ்கிய வேண்ணா, ரெண்டு மூணு தபா போடுற்றேன்.

தராசு said...

//narsim said...
செம கலக்கல் தலைவா. எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.

மிக ரசித்துச் சிரித்தேன் தலைவா, யாவரும் கேளீர் டவுசர் கிழிக்கப்பட்டது..//

வந்ததுக்கு ரொம்ப டேங்சு தல

ஆ.ஞானசேகரன் said...

கலக்கல்

தராசு said...

வாங்க ஞான சேகரன்,

வந்ததுக்கு டேங்சு.

அத்திரி said...

இது தராசு அண்ணே கட தானே............

எம்.எம்.அப்துல்லா said...

/அண்ணே,

கோவிச்சுக்காதீங்கண்ணே, டிஸ்கிய வேண்ணா, ரெண்டு மூணு தபா போடுற்றேன்.
//

சம்பந்தப்பட்டவர் மனம் கோனாத அளவிற்கு அவர்களையும் இணைத்து சிரிக்க வைப்பது பெரும் கலை. அது உங்களுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கின்றது. யாரும் உங்களை கோவித்துக் கொள்ளமாட்டார்கள்.

அசத்தலைத் தொடருங்கள்

:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஆர கலாய்ச்சுகிறே.. தட்னா தாராந்துருவ.. மவனே நம்ம பேட்ட பக்கம் வராமயா பூடுவே.. அப்ப வெச்சிகிறேன் ஒன்ன..

ஆதிமூலகிருஷ்ணன் said...

சிக்கிய நல்ல ஐடியாவை பிரமாதமா பண்ணிட்டீங்க தராசு.. ரசித்தேன்.!

Cable Sankar said...

என்னா தலீவா ஒரே மெர்சலாக்கிட்யே.. எல்லார் டவுசரையும் இளுத்து வுட்டேன்னா நம்ம டவுசரையும் >>>???. ஆனா சொம்மா சொல் கூடாது.. சூப்பராகீது மாமே.. ஓரே குஜாலாகீது.. டாங்க்ஸுபா.. வர்டா..

பரிசல்காரன் said...

எல்லாரும் சொல்ற மாதிரி டவுசர் கிழியலெல்லாம் இல்ல. கொஞ்சம் பழசாயி அங்கங்க கிழிஞ்சு போயிருக்கற எங்க டவுசர எல்லாம் ஒட்டுப் போட்டு தைச்ச ஃபீலிங்தான் எனக்கு வருது.

நண்பா.. இந்தப் பதிவைப் படிச்சதும் ரொம்ப மனசு லேசான மாதிரி தோணுது. என்னதான் எழுதிட்டிருந்தாலும் நம்மளை குறிப்பிட்டு ஒருத்தர் பதிவு போடறதுன்னா அது ஸ்பெஷல்தான் தல. நர்சிம் மாதிரி, கேபிள் சங்கர் மாதிரி, அப்துல்லா மாதிரி மூத்த பதிவர்களா இருந்தாலும் அவங்களுக்கும் இது அளவில்லா சந்தோஷத்தைத்தான் தந்திருக்கும்.


அவிங்ககூட என்னையும் சேர்த்து எழுதினதுக்கு டாங்ஸூப்பா!

தராசு said...

//@அத்திரி said...

இது தராசு அண்ணே கட தானே............//

வாங்கண்ணே, இன்னா இத்தினி லேட்டா வந்துகுரீங்கோ,

உங்களுக்கு இந்த மாதிரி டவுட் இன்னாத்துக்கு வருது....,,,,

தராசு said...

//@ எம்.எம்.அப்துல்லா said...
/அண்ணே,

கோவிச்சுக்காதீங்கண்ணே, டிஸ்கிய வேண்ணா, ரெண்டு மூணு தபா போடுற்றேன்.
//

சம்பந்தப்பட்டவர் மனம் கோனாத அளவிற்கு அவர்களையும் இணைத்து சிரிக்க வைப்பது பெரும் கலை. அது உங்களுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கின்றது. யாரும் உங்களை கோவித்துக் கொள்ளமாட்டார்கள்.

அசத்தலைத் தொடருங்கள்//

டேங்சு.

தராசு said...

//@ஆதிமூலகிருஷ்ணன் said...

ஆர கலாய்ச்சுகிறே.. தட்னா தாராந்துருவ.. மவனே நம்ம பேட்ட பக்கம் வராமயா பூடுவே.. அப்ப வெச்சிகிறேன் ஒன்ன..//

பாத்தியா, பாத்தியா, நமக்குள்ளெ எதுனாலும் பேசித்தீத்துக்கலாம் அண்ணே, இப்பிடி சட்டைய கழட்டினு சவுண்ட் உட்றீங்களே....

தராசு said...

//@ஆதிமூலகிருஷ்ணன் said...

சிக்கிய நல்ல ஐடியாவை பிரமாதமா பண்ணிட்டீங்க தராசு.. ரசித்தேன்.!//

டேங்சு

தராசு said...

// @Cable Sankar said...

என்னா தலீவா ஒரே மெர்சலாக்கிட்யே.. எல்லார் டவுசரையும் இளுத்து வுட்டேன்னா நம்ம டவுசரையும் >>>???. ஆனா சொம்மா சொல் கூடாது.. சூப்பராகீது மாமே.. ஓரே குஜாலாகீது.. டாங்க்ஸுபா.. வர்டா..//

டேங்சு

தராசு said...

// @ பரிசல்காரன் said...

அவிங்ககூட என்னையும் சேர்த்து எழுதினதுக்கு டாங்ஸூப்பா!//

அண்ணே, வந்ததுக்கு டேங்சுண்ணே,

இன்னம் நிறைய பேர கோத்துவுட வேண்டியது பாக்கி இக்குது.