Wednesday, April 29, 2009

ஜுகல்பந்தி 29 /4/2009

காக்டெய்ல், அவியல், கொத்துபுரோட்டா, கதம்பம், சுண்டல், தம்பியின் டைரிக் குறிப்பு இது போன்ற வரிசைகளில் ஜுகல்பந்தியும் ஒன்று.

இந்த ஜுகல்பந்தின்னா இன்னான்னா........, வேணாம், நீங்களே எதாவது அர்த்தம் தேடிக்கோங்க.

நகரம்:

சண்டிகர் என்ற நகரத்தைப்பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள், மிகவும் திட்டமிட்டு கட்டப்பட்ட ஒரு நகரம். காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரின் உருவமான "சண்டி" தேவியின் கோட்டை என்று பொருள்படும்படியாய் இது சண்டிகர் என்று அழைக்கப்படுகிறது. இந்த தேவிக்கான கோவில் நகரத்தை அடுத்து அமைந்துள்ள ஹரியானாவின் "பஞ்ச்குலா" மாவட்டத்தில் அமைந்துள்ளது. "சண்டி மாதா மந்திர்" என்பது இதன் பெயர். இந்த நகரத்தின் மொத்த பரப்பளவான 114 சதுர கிலோமீட்டர்களில், மொத்தம் 46 செக்டர்களாக இந்த நகரம் விரிந்துள்ளது. செக்டர் 1 முதல் செக்டர் 47 வரை உள்ள ஒவ்வொரு செக்டரின் பரப்பளவும் மிக நேர்த்தியாக 800 மீட்டர் x 1200 மீட்டராக கேக் வெட்டியதைப் போல கன கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. (மொத்தம் 46 செக்டருன்னா, 47 எப்டி வந்துதுன்னு கேக்கறீங்களா, இங்க 13வது செக்டரே இல்லீங்கோ, அத்து ரொம்ப பேஜார் புட்ச நம்பருன்னு அல்லாரும் நம்பறதுன்னால அத்த கடாசிட்டாங்கோ). இந்தியாவின் நகரங்களிலேயே அதிக தனி நபர் வருமானம் உள்ள நகரம் என்பதால் (சராசரியாக ஒருநபரின் வருமானம் 90 ஆயிரத்துக்கும் மேல்) இது இந்தியாவின் பணக்கார நகரம் என்று அழைக்கப் படுகிறது. பாறைகளாலும், உடைந்த வீட்டு உபயோகப்பொருள்களாலும் சிலைகள் வடிக்கப்பட்ட "ராக் கார்டன்", விதவிதமான ரோஜாப் பூக்கள் பூத்துக்குலுங்கும் "ரோஸ் கார்டன்" என எங்கு நோக்கினும் தோட்டங்களாகவே உள்ளது. நான் சமீபத்தில் போயிருந்த பொழுது, ஒரே செடியில் ஒரு கிளையில் சிவப்பும், இன்னொன்றில் மஞ்சளும், இன்னொன்றில் வெள்ளையுமாக விதவிதமாக ரோஜா பூக்களை காண முடிந்தது. துடைத்து விட்டாற்போன்ற சாலைகளும், கோதுமை நிற பஞ்சாபி பெண்களும், விலையுயர்ந்த கார்களும், அதற்கு நேர்மாறாக சைக்கிள் ரிக்ஷாக்களுமாக இந்நகரம் ஒரு கதம்பம் தான்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நாட்டு நடப்புகள்

நேற்று எங்கள் அலுவலகத்தில் ஒரு மின்னஞ்சல் சுற்றிக் கொண்டிருநதது. நிர்வாகம் மெக்சிகோ நாட்டுக்கு யாரும் செல்ல வேண்டாமென எச்சரித்திருந்தது. போச்சா, இங்கயும் குண்டு வைக்க ஆரம்பிச்சுட்டாய்ங்களாவென மெக்சிகோவில் இருக்கும் நண்பர்களை தொடர்பு கொண்டேன். "ஸ்வைன் இன்ஃபூளயன்ஸா" ன்னு எதொ ஒரு வியாதியாம். பன்றிகளிடமிருந்து பரவுதாம். ஏறக்குறைய 3400 பேர் பாதிக்கப்ப்ட்டிருக்காங்களாம். இது மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவாதாம், ஆனா பன்றியிலிருந்து மனிதனுக்கு பரவுமாம். மெக்சிகோவில இப்பல்லாம், போலீசே முக மூடி கொள்ளைகாரனைப் போல், முகமூடி போட்டுகிட்டுத்தான் போறாங்களாம். இந்த நோயின் அறிகுறிகள் இன்னான்னு, நம்ப கம்பவுண்டர் கனகவேலுகிட்ட கேட்டா, தலைவலி, குளிருகாய்ச்சலு, தொண்டை வலி, கை காலெல்லாம் எதோ பிசையறாப்புல வலி, இருமலு, வாந்தி, ஒரு மாதிரி ஏப்பம் வர்றது, உடம்பு சோம்பலு, பசிக்காம இருக்கறது (ஏயப்பா, போதும், கம்பவுண்டர், இத்தோட நிறுத்திக்க) இதெல்லாம் அல்லது எதாவது ஒண்ணு இருந்தாலும் அது இந்த வியாதியின் அறிகுறிங்கறான். ங்கொய்யால, இதுல எதுனா ஒண்ணு கூட இல்லாத இந்தியன் எவண்டா?????? எதுக்கும் உஷாரா வாட்ச்சிங்ல இரு நைனா!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

தென் ஆப்பிரிக்காவுல மறுபடியும் "ஆப்பிரிக்கன் நேஷனல் காங்கிரஸ்" ங்கற கட்சி தேர்தல்ல மிகப் பெரும்பான்மை பெற்று வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. ஜேக்கப் ஜூமா என்பவர் அதிபராக பொறுப்பேற்க்கவுள்ளார். இந்திய காங்கிரஸின் அரசியல் கவிழ்ப்பு நாடகங்களுக்கு சற்றும் சளைக்காத கவிழ்ப்பு நாடகங்களை நடத்தி, இதற்கு முந்திய அதிபராயிருந்த தபோ ம்பேக்கி என்பவரை ஒரே இரவில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தனது கைப்பாவையான கலீமா முட்லாண்டே என்பவரை அதிபர் ஆசனத்தில் அமர வைத்தவர் தான் இந்த ஜூமா. இந்த முட்லாண்டே தான் IPL கமிஷனர் லலித் மோதியுடன் அமர்ந்து கேப் டவுன் மைதானத்தில் குலாவிக் கொண்டிருந்தவர்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கடைசியா ஒரு IPL மேட்டரு,

ராஜஸ்தான் ராயல் அணிக்கும், கல்கத்தா நைட் ரைடருக்கும் நடந்த ஆட்டத்திற்கு முன் ஷாரூக் கானை மந்திரா பேடி பேட்டி எடுக்கிறார்.

"ஷாருக், உங்கள் அணி ஷில்பா ஷெட்டியின் அணிக்கு எதிராக விளையாடுகிறது, சினிமாவில் நீங்கள் இணந்து நடித்திருக்கிறீர்கள், இப்பொழுது அணியினராக எதிரும் புதிருமாக இருப்பது எப்படி இருக்கிறது?"

ஷாருக்கின் பதில் " மந்திரா, உன்னையும் சரி, ஷில்பாவையும் சரி, நாந்தானே முதலில் திரையில் இறக்கினேன்"

அந்த கேள்விக்கும் இந்த பதிலுக்கும் இன்னா கனிக்ஷன் இக்குதுன்னு யாருன்னா சொல்லுங்கப்பா....

26 comments:

எம்.எம்.அப்துல்லா said...

:)

எம்.எம்.அப்துல்லா said...

ஜீகல்பந்தில மொத இலையில நம்ம உக்காந்தாச்சு :)

எம்.எம்.அப்துல்லா said...

//இந்நகரம் ஒரு கதம்பம் தான்.


//

ஆஹா...ஜிகல்பந்தில நீங்க எழுதுன மொத மேட்டரே கதம்பம்...என்னா கோஇன்சிடெண்ட்

:))

எம்.எம்.அப்துல்லா said...

//எதுக்கும் உஷாரா வாட்ச்சிங்ல இரு நைனா!!! //

மெய்யாலுமாப்பா???

எம்.எம்.அப்துல்லா said...

//அந்த கேள்விக்கும் இந்த பதிலுக்கும் இன்னா கனிக்ஷன் இக்குதுன்னு யாருன்னா சொல்லுங்கப்பா....

//

போன் போடுங்க...சொல்றேன்

:))

தராசு said...

அண்ணே,

வந்ததுக்கு டேங்சு,

//@எம்.எம்.அப்துல்லா said...
ஜீகல்பந்தில மொத இலையில நம்ம உக்காந்தாச்சு :)//

அண்ணே, இது சாப்பிடற ப்ந்தி இல்லண்ணே.

தராசு said...

//@ எம்.எம்.அப்துல்லா said...
//எதுக்கும் உஷாரா வாட்ச்சிங்ல இரு நைனா!!! //

மெய்யாலுமாப்பா???//

அப்டிதான் அல்லாரும் சொல்னிக்குறாங்கோ

தராசு said...

//@ எம்.எம்.அப்துல்லா said...
//அந்த கேள்விக்கும் இந்த பதிலுக்கும் இன்னா கனிக்ஷன் இக்குதுன்னு யாருன்னா சொல்லுங்கப்பா....

//

போன் போடுங்க...சொல்றேன்//

நம்பரை அனுப்புங்கண்ணே

வேந்தன் said...

நல்லா இருக்கு... :)

தராசு said...

// @வேந்தன் said...
நல்லா இருக்கு... :)//

டேங்சு வேந்தன்

Suresh said...

ஜுகல்பந்தி நல்லா தான் இருக்கு ;) ஹா ஹா

டக்ளஸ்....... said...

ஏங்க நீங்க IPL அ விடவே மாட்டீங்களா..!

Suresh said...

//ஷாருக்கின் பதில் " மந்திரா, உன்னையும் சரி, ஷில்பாவையும் சரி, நாந்தானே முதலில் திரையில் இறக்கினேன்"//

அவரு திரை மறைவு என்று சொல்லி இருப்பார் ;)

தராசு said...

வாங்க சுரேஷ்

வந்ததுக்கு டேங்சு

தராசு said...

//@ டக்ளஸ்....... said...
ஏங்க நீங்க IPL அ விடவே மாட்டீங்களா..!//

அத்த நெனைக்க நெனைக்க வெறியாக்குது.

Cable Sankar said...

ஜுகல் பந்தி சுருதி சுத்தமாய் இருந்தது..

ஆதிமூலகிருஷ்ணன் said...

நல்லாருந்துது.. பாஸ்.!

எம்.எம்.அப்துல்லா said...

//அண்ணே, இது சாப்பிடற ப்ந்தி இல்லண்ணே //

இன்னா நைனா...நம்ப கையிலயே மீஜிக் பத்தி சொல்லுறியே!!!

சும்மா டமாஷீக்கு சொன்னா சீரிஸா வெலக்கம் குடுக்கிறியேப்பா :)))

தராசு said...

//@ Cable Sankar said...
ஜுகல் பந்தி சுருதி சுத்தமாய் இருந்தது..//

டேங்சுண்ணே.

தராசு said...

//@ ஆதிமூலகிருஷ்ணன் said...
நல்லாருந்துது.. பாஸ்.!//

வந்ததுக்கு டேங்சு

தராசு said...

// @எம்.எம்.அப்துல்லா said...

இன்னா நைனா...நம்ப கையிலயே மீஜிக் பத்தி சொல்லுறியே!!!

சும்மா டமாஷீக்கு சொன்னா சீரிஸா வெலக்கம் குடுக்கிறியேப்பா :)))//

நான் சீரியஸா சொன்னதா நீங்க எப்படி நினைக்கலாம்?????

கார்க்கி said...

..

தொடங்கட்டும் துஷ்ட தனங்கள்

நடக்கட்டும் நாச வேலைகள்

தராசு said...

//@ கார்க்கி said...
..

தொடங்கட்டும் துஷ்ட தனங்கள்

நடக்கட்டும் நாச வேலைகள்//

இது என்ன பின் நவீனத்துவ பின்னூட்டமா????? இல்லை இந்த பச்சை மண்ணு மேல ஏன் இந்த கொலைவெறி?????

அத்திரி said...

//கோதுமை நிற பஞ்சாபி பெண்களும், //

ம்ம்ம்ம்ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தராசு said...

//அத்திரி said...
//கோதுமை நிற பஞ்சாபி பெண்களும், //

ம்ம்ம்ம்ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//வந்துட்டீங்களா, எங்கடா காணமேன்னு பார்த்தேன்

எம்.எம்.அப்துல்லா said...

//நான் சீரியஸா சொன்னதா நீங்க எப்படி நினைக்கலாம்????? //

:)))