Wednesday, June 30, 2010

ஜுகல்பந்தி – 30 ஜூன் 2010 – சத்தாயிஸி


சத்தாயிஸி

ஜோசியர்கள் குழந்தை பிறந்த நேரத்தை வைத்து அந்த குழந்தையின் எதிர்காலத்தை கணித்து சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஆனால், அந்த குழந்தை இந்த நேரத்தில் பிறந்ததால் குழந்தையின் அப்பனுக்கு கிரகம் பிடித்து ஆட்டுவதாக புரளி கிளப்பி அதற்கு பரிகாரம் செய்து, துட்டு வசூலிக்கும் ஒரு வினோத பழக்கம் இருக்கிறது.

இதற்கு சத்தாயிஸியில் பிறந்த குழந்தை என்று சொல்லுகிறார்கள். (சத்தாயிஸ் = இருபத்தி ஏழு). இந்த குழந்தையை அதன் தகப்பன் 27 நாட்களுக்கு பார்க்கக் கூடாதாம். பார்த்தால் தகப்பனுக்கு ஏழரை ஆரம்பிச்சுருமாம். இந்த 27 நாளும் அவன் விரதம் இருக்கணும், கட்டிங், சேவிங்கெல்லாம் பண்ணக் கூடாது. டாஸ்மாக், மிலிட்டரி ஹோட்டல் சமாச்சாரமெல்லாம் தொடவே கூடாது. அவன் மனைவி பக்கத்துலயே போகக் கூடாது, (அங்கதான் குழந்தை படுத்திருக்குமே). அப்படீன்னா அவன் மனைவியையும் பார்க்கக் கூடாது. ஒரு சோகத்தோடயே தாடி வளர்த்துகிட்டு அவன் திரியணும்.

அந்த 27வது நாள்தான் அவன் மனைவி முகத்தை பார்க்க முடியும். அப்புறமா ஒரு பூஜைல ரெண்டு பேர்த்தையும் உக்கார வெச்சு, அவங்களுக்கு முன்னால ஒரு கண்ணாடிய வெச்சுருவாங்க. அந்த கண்ணாடிக்கு முன்னால ஒரு பெரிய அகலமான தட்டுல கடுகு எண்ணையை ஊத்தி வெச்சிருப்பாங்க. ஜோஸியர் சொல்ற நேரத்துக்கு கரெக்டா குழந்தையை கொண்டு வந்து இவங்களுக்கு பின்னால நின்னு முகத்தை மாத்திரம் திருப்பி கண்ணாடில காமிப்பாங்க, அந்த கண்ணாடில படும் பிம்பம் முன்னால இருக்கற கடுகு எண்ணைல தெரியும். குழந்தைக்கு அப்பனானவன், முதல்ல அந்த கடுகு எண்ணைல தான் குழந்தையோட முகத்தை பார்க்கணும் அப்புறம் தான், நேருக்கு நேர் பார்க்கணும்.

இப்பிடி இந்த 27 வது நாள் அவனால வீட்டுல இருக்க முடியாம எதாவது வேலையா வெளிய போயிட்டான்னா, தொலைஞ்சான். அடுத்ததா 54 வது நாள்தான், அதுவும் முடியலைன்னா 108 வது நாள். இத்தனை நாளும் முடிவெட்டாம ஷேவிங் பண்ணாம இருக்கற ஒருத்தனை ஒரு பச்சைக் குழந்தை பாத்துச்சுன்னா எப்பிடிங்க இருக்கும்………

இந்த நம்பிக்கையும் சடங்கும் இன்னும் மத்தியப் பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்களிலும், சத்தீஸ் கட், ஜார்கண்ட், பீகார் மாநிலத்தின் தெற்கு மாவட்டங்களிலும் நிறைய வீடுகளில் கடைப் பிடிக்கப் படுகிறது. அதனால் அடுத்த முறை இந்த பிராந்தியாங்களில் யாராவது தாடி மீசையுடன் மந்திரிச்சு விட்ட மாதிரி சோகமா திரிஞ்சா, அவரு ஒருவேளை இந்த சத்தாயிஸி குழந்தைக்கு அப்பனா கூட இருக்கலாம். என்ன கொடுமை சார் இது?????

நாட்டு நடப்புகள் : மறுபடியும் மாவோக்கள்

நேற்றும் ஒரு முறை ரத்தத்தில் ஹோலி விளையாடி இருக்கிறார்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்.இதில் அதிகம் பங்கேற்றது பெண் மாவோ வாதிகள்தான்.மாவோவாதிகளுக்கெதிராக அரசாங்கம் அமைத்திருக்கும் படையின் தலைவரான ராம் நிவாஸ் கூறுகையில் அவர்களிடம் இருக்கும் ஆயுதங்களைப் பார்த்தால் பிரமிக்க வைக்கிறது என்று கூறுகிறார்.

பன்னாட்டு பண முதலைகளுக்கு, கனிம வளங்களை தாரைவார்த்து கொடுத்து, மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து, அவர்களின் உணவுக்கும் உணர்வுக்கும் கேடு விளைவிக்க மத்திய அரசு வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கியிருக்கிறது என்ற வாதம் ஒரு நிதர்சனமான உண்மை என்ற போதிலும், அதை எதிர்க்கிறோம் என ரயில் பாதைகளில் குண்டு வைத்து பொது மக்களை கொல்வதும், காக்கையை சுடுவது போல் பாதுகாப்பு படையினரை சுடுவதும் மேலும் வன்மம் வளர்க்கும் ஒரு செய்கையே தவிர, தீர்வுக்கு அடி கோலாது என்பது ஏனோ மாவோ வாதிகளுக்கு தெரிவதில்லை.

ஒரு கேள்வி : பாதுகாப்பு படையினர் கொல்லப்படும் போதெல்லாம் கேமராவை தூக்கிக் கொண்டு போய் அவர்களின் சடலங்களையும், அவர்கள் குடும்பத்தினரின் கண்ணீரையும் படம் பிடித்து சில்லரை சேர்க்கும் கேவலப் பிறவிகளான ஊடக ஓநாய்கள், இருபுறமும் சமரசம் செய்து வைக்கும் நாட்டாமை பணியை ஏன் செய்யக் கூடாது.??? அடச் சே, விடுங்கய்யா.. பணத்துக்காக தரம் தாழ்ந்து கிடக்கும் ஊடக கும்பலுக்கு என்ன யோக்கிதை இருக்கிறதென்று நாட்டாமை பண்ண அழைப்பது.????

ங்கொய்யால பக்கங்கள்

கட்சி மாநாடு நடக்கறதில்லை
காசு பண்ண வழியில்லை

வெள்ள நிவாரணம் வாங்கலாம்னா
மழை வர்றதுக்கு வழியில்லை

முதியோர் பென்ஷன் வாங்கலாம்னா
வயசு கொஞ்சம் பத்தாதுதான்

ங்கொய்யால,

ஒரு தேர்தல் வந்தா காசு வந்துரும்,
அரசியல்ல எவனும் சாக மாட்டேங்கறானே

6 comments:

♥ ℛŐℳΣŐ ♥ said...

\\சத்தாயிஸி -இது வடக்கில் , நம்ம ஊரில் குழந்தை மாலை சுற்றி பிறந்தால் தாய் மாமனுக்கு ஆகாது என்று சொல்வார்கள். இதே போல தான் நடை முறைதான் , என்ன 3 அல்லது 5, 7, 9 இப்படி ஏதாவது ஒற்றை படை நாட்களில் அதே சடங்கு நடத்துவார்கள்.

ஹுஸைனம்மா said...

//இருபுறமும் சமரசம் செய்து வைக்கும் நாட்டாமை பணியை ஏன் செய்யக் கூடாது.???//

யாரையாவது கடத்தி வச்சுகிட்டா, செய்வாங்களா இருக்கும்!!

//மேலும் வன்மம் வளர்க்கும் ஒரு செய்கையே தவிர, தீர்வுக்கு அடி கோலாது என்பது ஏனோ மாவோ வாதிகளுக்கு தெரிவதில்லை//

எந்தத் தீவிரவாத கும்பலுக்குத்தான் தெரியுது? கடைசியில அவங்க சார்ந்த மக்கள்தான், மத்தளமாகிடுறாங்க!!

தராசு said...

வாங்க ரோமியோ,

இங்கயாவது மாமனுக்கு ஆகாதுங்கறாங்க, ஆனா பெத்த அப்பனே 27 நாள் காத்திருக்கணும்னா, கொடுமை சார்

தராசு said...

ஹுஸைனம்மா,

வாங்க

//யாரையாவது கடத்தி வச்சுகிட்டா, செய்வாங்களா இருக்கும்!!//

இதையும் மாவோ வாதிங்க செஞ்சுட்டாங்களே,

ஆதிமூலகிருஷ்ணன் said...

கரெக்டு பாஸு.!

முரளிகண்ணன் said...

சத்தாயிஸி - தகவலும் நடையும் அருமை