உங்க கைப்பையில அப்படி என்ன குப்பையைத்தான் வெச்சிருப்பீங்க, அதுல இருக்கற அந்த 32 ஜிப்புகளை எப்ப திறந்தாலும், எது தேவையோ அதைத் தவிர மத்ததெல்லாம் எடுக்கறீங்களே?
ரூபா நோட்டை ரெண்டா மடிச்சு பிடிக்கத் தெரியாதா? அது ஏன் எல்லாத் தங்கமணியும் ஒவ்வொரு நோட்டையும் சுருட்டி உருட்டி 24 மடிப்பு மடிச்சு பிடிக்கறீங்க?
அரைச்ச சட்னில ரெண்டு மொளகாய ஜாஸ்தியா போட்டுட்டு, அவனவன் கண்ணுல தண்ணிவர அவஸ்தைப்பட்டா, “கொஞ்சம் காரமா இருந்தா விரும்பி சாப்பிடுவீங்களேன்னுதான் வெச்சேன்” னு எப்படி மனசாட்சி இல்லாம சொல்ல முடியுது? (ஆனா உண்மையில அளவு தெரியாம போட்டதை எங்க போய்ச் சொல்ல)
பேஸ்கெட்பால் விளையாடு, டிராயிங் கிளாஸ் போ, இன்டர்நெட் பழகு, ஹேரி பாட்டர் படி, பரத நாட்டியம் பழகுன்னு அந்த பச்ச மண்ண இந்தப் பாடு படுத்தறீங்களே, அவ வயசுல நீங்க அ,ஆ,இ, ஈ ஒழுக்கமா எழுத பழகீருப்பீங்களா?
குழந்தைக்கு யூனிஃபார்ம் தான் வாங்கப் போறோம், அப்பவும் எதுக்கு மத்த துணியெல்லாம் பாத்துட்டு அப்புறமா யூனிஃபார்ம் வாங்கறீங்க?
எங்க சொந்தக்காரங்க கிட்ட நாங்க ஃபோன்ல பேசும் போது மட்டுமே ஏன் நீங்க மிக்ஸில மசால் அரைக்கறீங்க?
உங்களுக்கு புடவை வாங்கணும்னா நீங்க ரெண்டு மணி நேரம் வேண்ணாலும் நின்னு வாங்கிக்கங்க, ஆனா நீங்க பாக்கற 237 புடவையையும் நானும் பாக்கணும்னா, இதெல்லாம் அராஜகமாத் தோணலயா?
எங்க வெளீல கெளம்புனாலும் நாங்க கிளம்பி ஒரு கால் மணி நேரம் கழிச்சுதான் நீங்க ரெடியாகணும்கறது ஒரு சடங்காவே வெச்சிருக்கீங்களா? (அந்த கால் மணி நேரத்துல கேஸ் ஆஃப் பண்ணு, சன்னலை சாத்து, சாம்பாரை ஃபிரிட்ஜுல வைன்னு ஒரு 34 வேலைகள லிஸ்ட் போட்டு செய்ய வெக்கறீங்களே அது ஏன்)
பாத்ரூம் ஷெல்ஃபுல போதை வஸ்துக்கள் மாதிரி ஒரு 25 டப்பால கலர் கலரா கடந்த ஒரு நூற்றாண்டா என்னென்னமோ இருக்குதே, இதுல ஒரு ஐட்டத்தையாவது கடந்த மூன்று மாதங்கள்ல ஒருதரமாவது யூஸ் பண்ணீருக்கீங்களா?
எந்த கடை முன்னால காரை நிறுத்த முடியாதோ, கண்டிப்பா அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு எப்படி கண்டு பிடிக்கறீங்க?
I, Sharmi, Diamond. Ep 29
2 weeks ago
41 comments:
ஹேய் அண்ணே..எந்த நேரத்துல எந்தப் பதிவு..!?!
ஆணாதிக்கவாதின்றுவாங்கண்ணேய்ய்.!
சூது வாது தெரியாம வளர்ந்துட்டீங்க போங்க.
:-)
ஹாஹாஹா... சூப்பர் கேள்விகள்.
எங்க சொந்தக்காரங்க கிட்ட நாங்க ஃபோன்ல பேசும் போது மட்டுமே ஏன் நீங்க மிக்ஸில மசால் அரைக்கறீங்க? //
இது டாப்பு.
ஆனா, இதுக்கெல்லாம் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். பார்த்துக்கோங்க.
அனுபவம்..சூப்பர்..இந்த பச்சை மிளகாய் எப்பவும் ஒரே மாதிரி சைஸிலும்,காரத்திலும் வராது. கடித்து பார்த்தா சட்னியில் போட முடியும்..மத்தது எல்லாம் சொல்றதுக்கில்ல...
ம்.. தைரியசாலி தராசு
நியாயமான கேள்விகள்தான் :)
lols, karam tavirthu matthathu super
inniku annanuku no dinner
வாப்பா ராஜூ,
இப்படி வேற ஒரு சிக்கல் இருக்கல்ல,
இருந்தாலும் பாத்துருவோம்.
டேங்சு
வாங்க விக்கி,
இந்த மாதிரி எத்தனை எதிர்வினைகளை பாத்துருக்கோம்.
நாங்கெல்லாம் டெரர், தெரியுமல்ல.
ஹலோ, யாருங்க, யாரோ தெரிஞ்சவங்க கூப்படறாங்க, இருங்க வரேன்.
வாங்க அமுதா கிருஷ்ணன்,
டேங்சு.
வாங்க மோகன் குமார்,
டேங்சு
வாங்க ராபின்,
நீங்கதான் தல நம்மள சரியா புரிஞ்சிருக்கீங்க.
டேங்சு
ஹாஹாஹா :)
நல்லா கேக்கறாங்கய்யா கேள்விகளை :)
வாங்க LK,
நாங்க இதுக்கெல்லாம் பயப்படரவீங்களா, நாங்கதான் டெரர் ஆச்சே.
டேங்சு.
குருஜி,
வாங்க, ரொம்ப நாளைக்கப்புறம் வந்துருக்கீங்க,
டேங்சு.
எல்லா கணவர்க சார்பாகவும் கேட்டுட்டீங்க போலருக்கு. சரீஈஈஈ கேக்கணும்னு நினைச்சீங்களே ஒருதரமாவது கேட்டுருப்பீங்களா? :))
நேரிலதான் கேக்க முடியலை; அவங்களுக்கு எழுதின லெட்டரையாவது போஸ்ட் பண்ணலாம்ல!! இங்க வந்து கேட்டுகிட்டு.. சின்னப்புள்ளத்தனமா...
இது ஒவ்வொண்ணுத்துக்கும் பதில் எழுதணுன்னு கை நமநமங்குது... இருக்கட்டும், பொழச்சு போங்க!!
வாங்க டி.பி.ஆர்,
டேங்சு
ஹுஸைனம்மா,
ஒரு கேள்விக்காவது ப்தில் சொல்லுங்களேன். முடியாது. தெரியும்.
:))
\\அமுதா கிருஷ்ணா said...
இந்த பச்சை மிளகாய் எப்பவும் ஒரே மாதிரி சைஸிலும்,காரத்திலும் வராது. கடித்து பார்த்தா சட்னியில் போட முடியும்..\\
அதானே. சமைச்சுப் போடறதே பெரிய விஷயம். ஹூக்கும்.
கார்க்கி,
டேங்சு.
வாங்க வித்யா,
டேங்சு.
ஆனா, காரம் ஜாஸ்தி ஆயிடிச்சேன்னா, சரி, அடுத்த தடவைல இருந்து சரியா போடறேன்னு இதுவரை ஒரு தங்கமணியாவது சொல்லீருக்காங்களாங்கறத தமிழ் கூறும் நல்லுலகம் தெளிவு படுத்த கடமைப் பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆணாதிக்க வாதி.. தராசு.. ஒழிக.. பதிவர்கள் இவரை என்ன செய்யலாம்..?:)
Tharaasu.. "Kelvi ketkaradhu unga urimay; badhil solaradhu avanga kadamai.." nu Ipadi yaaravadhu unga usupethi irupanga pola. Neengalum chinnapilla thana kettuputinga..
Jagiradhangayya.. Jagiradha.. Veetuku pona soru thani kidaikama, mudhaluke mosama aida pogudhu..
Boss, nalla hotel aah parunga sappatukku!. inimel ungaluku veetule sappadu noooooooooo..
.வாங்க துளசி டீச்சர்,
டேங்சு.
கேபிள் அண்ணே
டேங்சு
வாங்க Ŝ₤Ω..™
டேங்சு
வாங்க குமார்,
டேங்சு
sir ippa enga irukeenga?
சார் வீட்டுக்கு சின்ன கார மிளகாய் ஆட்டோல பார்சேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏல்.
அம்மணி தங்கமணிக்கு அதை "எப்ப" அரைக்கணும், எப்படி அரைக்கணும்னு தெரியும் போலிருக்கு, பதிவிலியே சொல்லிட்டீங்க, அதுனால மிளகாயை என்ன செய்யணும்னு நான் சொல்லத் தேவையில்ல.
ஒரு கூட்டத்தையே தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பிருக்கீங்க. சொந்த செலவுல சூன்யம்.
:-)
வாங்க கெக்கே பிக்குணி,
டேங்சு.
//தராசு said...
ஒரு கேள்விக்காவது ப்தில் சொல்லுங்களேன். முடியாது. தெரியும்//
ஒண்ணு என்னங்ண்ணா... எல்லா கேள்விக்கும் பதில் உண்டுங்கோ... இங்க போட்டா எடம் பத்தாதுன்னு பதிவாவே போட்டுடனுங்ண்ணா ..... இங்க போய் பாருங்கணா...
http://appavithangamani.blogspot.com/2010/07/blog-post.html
குறைந்தபட்சம் ஒரு கேள்வியையாவது தங்கமணிகிட்டே நேரடியா கேட்டிருக்கீங்களா :-))))))))))))))
அட்டகாசம் தல.. ஒவ்வொரு கேள்வியும் ஒவ்வொரு ரங்கமணிகளோட மனசு..
//ஹுஸைனம்மா said...
நேரிலதான் கேக்க முடியலை; அவங்களுக்கு எழுதின லெட்டரையாவது போஸ்ட் பண்ணலாம்ல!! இங்க வந்து கேட்டுகிட்டு.. சின்னப்புள்ளத்தனமா...
//
இது அட்டகாச எதிர்கேள்வி...
ஒய் பிளட் ... சேம் பிளட்...
நாங்க இந்த மாதிரி பதிவு போட்டாக்கூட வீடம்மனிகிட்ட கும்மு வாங்க வேண்டிவரும்னு, கமுக்கமா இருக்கோம், எங்களோட மனக்குறைய தீர்த்துவச்ச மஹராசன் நீ, 100 வருசம் நல்லாருபே சாமி. உங்க்ளுக்கு ஃபாலொவர் ஆயிடேன்:), தமிழ்மனத்துல ஓட்டும் போட்ருக்கேன்:)
அட்டகாசம்
அட்றா சக்க..அட்றா சக்க..அட்றா சக்க..அட்றா சக்க..
:))
அட்றா சக்க..அட்றா சக்க..அட்றா சக்க..அட்றா சக்க..
:))
Post a Comment