எத்தனைதான் உதறினாலும்
என் காலை விட்டு போவதில்லை அது
உயரமாயும் ஒல்லியாவும் என்னை
தொட்டுக் கொண்டே தொடர்கிறது.
தொல்லை தருவதில்லை ஆனால்
தொலைந்தும் போவதில்லை
என் உடலில் உடையில் வர்ணங்கள்
இருப்பினும் அது மட்டும் ஒரே வண்ணத்தில்.
எப்படியாவது என்னை எனக்குக் காட்டும்
அதை ஒழித்து விட வேண்டும்.
ஒளியில் என்னோடு தினமும் வரும் அது
இரவில் ஒளிந்து விடுமாம்.
ஆமாம், இரவு வரட்டும்.
I, Sharmi, Diamond. Ep 29
2 weeks ago
25 comments:
வரட்டும் இரவு.... வறட்டும் வாழ்வதில் இல்லாமல்போனால்....
நல்ல கவிதைங்க...
என்னதிது திடீர்னு கவிதைல்லாம்? ஏன், உங்க நிழல் மேலயே உங்களுக்கு இவ்வளவு கோபம் :)
aamaa.. ivuru periya pinnaveena kavingar.! nizhalnu simplaa solratha vittuttu emmaa build-uppu.! hum.
ச்சே.. நிழலா..?
நான் வேற ஒன்னு நெனைச்சேன்!!
பின்நவீனத்துவ கவிஞர் ஆகிட்டீங்கண்ணேய்ய்ய்ய்!
Appuram munthina pathivukku comment pOdalaamnu pOnEn. yammaa.. evLO periya pOstu.. me tha eskEppu.!
வாங்க பாலாஜி,
டேங்சு
இந்த நிழல் மாதிரியே நிறைய மேட்டர் ஒட்டிகிட்டு போகமாட்டேங்குது சுந்தர்ஜி, அதை எல்லாம் ஓட்டணும்னுதான்.
வந்ததுக்கு டேங்சு.
ஹலோ,
நிழலை நாங்க சிம்பிளாதான் சொல்லீருக்கோம். இன்னும் பின்நவீனத்துவ பாணில சொல்றதுண்ணா இப்படி சொல்லுவோம்,
பிரபஞ்சத்தின் பிரளயங்களில் ஒளிந்திருக்கும் வண்ணக்கலவைகளின்
கருவறையில் மறைந்திருக்கும் சூட்சுமங்களின் முனைதேடி
பிரசவிக்காத பிறைநிலவின்
கூரிய முனையெடுத்து
காலடியில் நழுவிச்செல்லும்
பூமிப்பந்தில் வகிடெடுத்து
ஆழத்தின் அசைவுகளில்
அழியாது அமர்ந்திருக்கும்
அடர்ந்த இடம் தேடி
கூவிக் குலவையிட்டும்
தொலைவதில்லை என் நகல்.
எப்பூடி.......
ராஜூ,
டேங்சு. சும்மா கண்டதையெல்லாம் நினைச்சுட்டிருக்கப்படாது, பேட் பாய்.
பதிவை சுருக்கி எழுதுனா, ஹலோ இது கமெண்ட்டா இல்லை பதிவாங்கறாங்க, பெருசா எழுதுனா ஏன் இப்பிடிங்கறாங்க,
என்னதான் பண்றது?????
நிழலோடு ஏன் இந்த சண்டை?
aathikku periyya repeat
நிழல் கவிதை மிக அருமை.... ஆனா பின்நவீனத்துவம் அது புரிய மாட்டேங்குதுங்க .... வேணாம்.
வாங்க குண சீலன்,
டேங்சு
கார்க்கி,
இன்னாபா ஆதியும் சரி, நீயும் சரி, பின்னூட்டத்துல ஒரே பீட்டரா உட்னுகுறீங்கோ....
வாங்க கருணாகரசு,
டேங்சு
இரவு கவிதை அருமை. வாழ்த்துக்கள்
அண்ணே என்னண்ணே திடீருனு கவிதையெல்லாம்..................அவ்வ்வ்வ்வ்
வாங்க மதுரை சரவணன்,
டேங்சு
அத்திரி அண்ணே,
நான் வளர்கிறேனே மம்மி..........
கவிஞரே, சூப்பரு.
பிரபஞ்சத்தின் பிரளயங்களில் ஒளிந்திருக்கும் வண்ணக்கலவைகளின்
கருவறையில் மறைந்திருக்கும் சூட்சுமங்களின் முனைதேடி
பிரசவிக்காத பிறைநிலவின்
கூரிய முனையெடுத்து
காலடியில் நழுவிச்செல்லும்
பூமிப்பந்தில் வகிடெடுத்து
ஆழத்தின் அசைவுகளில்
அழியாது அமர்ந்திருக்கும்
அடர்ந்த இடம் தேடி
கூவிக் குலவையிட்டும்
தொலைவதில்லை என் நகல்.
Super Sir
வாங்க விக்கி,
டேங்சு
வாங்க மனோஜ்
டேங்சு
நிழலை உதாசீனம் செய்யாதீர்கள் தோழரே..
அதையே ஒரு மரம் உங்களை போல் வெறுத்தால்
வெயில் காலத்தில் குளிர்வேது நமக்கு?
நம் நிழலின் அருமை நமக்கு தெரியாது
அது இன்னொருவருக்கு குடையாகும் வரை!
அழகான கவிதை!
Post a Comment