Thursday, July 1, 2010

மல்லிகைப் பூவும், குல்ஃபி ஐஸும்

போன ஞயிற்றுக் கிழமை மதியம், லீவு நாளாச்சேன்னு கொஞ்சம் மெதுவா எந்திரிச்சு, மெதுவா சாப்பிட்டு, மத்தியானம் ஒரு குட்டித் தூக்கம் போட்டுட்டு இருந்தப்ப, திடீர்னு போன். நல்ல தூக்கத்துல யாராவது இப்படி போன் போட்டா நமக்கு ஒரு ஃபீலிங்க்ஸ் வரும் பாருங்க, அதே ஃபீலிங்ஸோட போனை எடுத்தேன்.

“ஹலோ, சார், மண்டையப் பிச்சுகிட்டிருக்கேன் சார்”

“ஏன், என்னாச்சு”

“சார், பொம்பளைங்க மல்லிகைப் பூ ஏன் சார் வைக்கறாங்க”

(ஆஹா, இந்தப் பாண்டிய மன்னனுக்கு இப்படி ஒரு சந்தேகமா, இனி நான் எந்த மடத்துக்கு போய், யாருகிட்ட பாட்டு எழுதி வாங்கிட்டு வர்றது??)

“ஏம்பா அது நல்ல வாசமாயிருக்கும், மேலும் கரிய அடர்ந்த நீள கூந்தல் இருக்கறவங்க வெள்ளையான இந்த மல்லிகைப் பூவை அடர்த்தியா கட்டி, கூந்தல்ல வெச்சுகிட்டாங்கன்னா, அது அவங்க கூந்தலுக்கே ஒரு தனி அழகு கூட்டும். அதுக்காகத்தான் வெச்சுக்கறாங்க”

“சார், அது இல்ல சார், வேற என்னவோ காரணம் இருக்குது சார்”

“ஏம்பா, உனக்கு இந்த விபரீத ஆராய்ச்சியெல்லாம்???”

“இல்ல சார், நான் தினமும் சென்னைல பார்க்கறேன், பூக்கார அம்மாவெல்லாம் கூடை கூடையா வெச்சு விக்கறாங்க, அது கொஞ்ச நேரத்துலயே தீர்ந்து போகுதே சார், அப்பிடி தினமும் வாங்கி தலைல வெச்சுட்டா, அதனால என்னதான் உபயோகம்??”

(டேய், இதெல்லாம் கொஞ்சம் ஓவரு)

“சரிப்பா, விடு, பூஜைக்கு வாங்கிட்டு போவாங்களா இருக்கும்”

“சார், அங்க பூ வாங்க வர்றவங்களையெல்லாம் பார்த்தா பூஜைக்கு வாங்கிட்டு போறவங்க மாதிரியா இருக்காங்க??”

“சரி, அப்ப நீயும் ஒரு முழம் வாங்கி வெச்சுட்டு, என்ன மாதிரி இருக்குன்னு சொல்லு”

“ சார் நானென்ன பொட்டப் புள்ளயா, என்ன மாதிரி தனிக் கட்டைங்கெல்லாம் பூ வாங்குனா வேற மாதிரி நெனச்சுக்குவாங்க சார், ஆமா நீங்க இந்த மாதிரி பூவெல்லாம் வாங்கிட்டு போனதில்லையா ??”

(டேய், நீ எங்க வ்ர்றேன்னு தெரியுது, சரி டாபிக்கை மாத்துவோம்)

“அப்புறம், எப்பிடிப்பா இருக்க, வேலையெல்லாம் எப்பிடி பரவால்லையா??”

“சார் அப்புறம், இன்னொண்ணு, ரொம்ப நாளா உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்னுட்டு இருந்தேன்”

(டேய், நீ இன்னும் அடங்கலையா)

“இந்த குல்ஃபி ஐஸ் விக்கறவங்க நாள் முழுதும் எங்க இருக்காங்கன்னே தெரியல, ஆனா, ராத்திரி பத்துமணிக்கு மேல கிணிகிணி ன்னு மணி அடிச்சுட்டு விக்கறாங்களே அது ஏன் சார்??”

(டேய், உனக்கு ஏண்டா புத்தி இப்பிடியெல்லாம் வேலை செய்யுது)

“அது ராத்திரி சாப்பாட்டுக்கு அப்புறம் குல்ஃபி ஐஸ் சாப்பிட்டா நல்லா ஜீரணம் ஆகும் அப்பிடீங்கற ஒரு ஐதீகம் எதாவது இருக்கும், ஆமா, சென்னைல ஆராய்ச்சி பண்றதுக்கு எத்தனையோ விஷயம் இருக்கும் போது, நீ ஏண்டா இதையெல்லாம் ஆராய்ச்சி பண்ற??”

“அதில்ல சார், இந்த குல்ஃபி ஐஸுக்கு வேற எதோ பவர் இருக்குதாம்மே??”

(டேய், நான் உனக்கு என்ன துரோகம்டா பண்ணுனேன், தூங்கிட்டிருந்தவனை எழுப்பி ஏண்டா இப்பிடி ஆராய்ச்சி கட்டுரையெல்லாம் படிச்சு காமிக்கறீங்க)

“என்ன பவருப்பா?’

“பாருங்களே, எவனாவது என்னை மாதிரி தனியா திரியறவனுங்க அதை சாப்படறாங்களா, எல்லாம் ராத்திரி சாப்பாடு முடிஞ்சதுக்கப்புறம் காலார ஒரு ரவுண்டு நடந்துட்டு வருவோம்னு நடக்கற ஜோடிங்கதான் சாப்புடுது, அதையும் ராத்திரில ஏன் சாப்படறாங்க??”

(டேய், நல்லதா எதாவது சொல்லீரப் போறேன், இப்பவே தெரிச்சு ஓடிப் போயிரு)

“இல்ல சார், இன்னும் பாத்தீங்கன்னா குல்ஃபி ஐஸ் விக்கறதும் கூட இந்த பஸ்ஸ்டேண்டுல, மார்க்கெட்டுலெல்லாம் விக்க மாட்டேங்கறான், இந்த குடும்பங்க இருக்கற ஏரியாவா பாத்து விக்கறான், இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு என்ன தோணுதுன்னா…….”

“டேய், ங்கொய்யால போனை வெய்டா”

அடச்சே, நிம்மதியா தூங்கிட்டிருந்த மனுஷனை எப்பிடியெல்லாம் வறுத்தெடுக்கறானுகப்பா…..

அப்ப என்னவோ அவனை திட்டீட்டு போனை வெச்சுட்டாலும், ஒரு மூணு நாளா எனக்கும் இந்த சந்தேகம் வந்திடுச்சு, நெஜமாவே மல்லிகைப் பூவுக்கும் குல்ஃபி ஐஸுக்கும் எதாவது பவர் இருக்குதா???

ஹலோ, ஹலோ, அப்பிடி எல்லாம் பார்க்க கூடாது…, நோ, நோ பேட் வேர்ட்ஸ் பிளீஸ்………..

17 comments:

♠ ராஜு ♠ said...

இதுக்கே இப்பிடின்னா, கிட்டத்தட்ட 20 வருஷமா பதில் கண்டிபிடிக்காத கேள்வி ஒன்னு இருக்குண்ணே!

கார் வச்சிருந்த சொப்பனசுந்தரியை யாரு வச்சிருந்தது?

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

கார் வச்சிருந்த சொப்பனசுந்தரியை யாரு வச்சிருந்தது?
ராஜுண்ணே, தங்கம் தியேட்டர கட்டுனவரு தான்!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

தல உங்க போன் நம்பர குடுங்க!! :))

தராசு said...

ராஜு,

ஏம்ப்பா இப்பிடி??

மல்லிகைப் பூவைப் பத்தி சொல்லச் சொன்னா, ...... சரி வேண்டாம் விடு.

தராசு said...

வாங்க பால குமாரன்,

ஆமா, இது ரொம்ப அவசியம்

தராசு said...

வாங்க ஷங்கர்,

டேங்சு.

கண்டிப்பா அனுப்பி வைக்கிறேன்

♠ ராஜு ♠ said...

\\ராஜுண்ணே, தங்கம் தியேட்டர கட்டுனவரு தான்!\\

பாலாண்ணே, அது தங்கம் தியேட்டரில்லைன்னு நெனைக்கிறேன்!

soundr said...

எச்சுஸ் மீ.
இந்த புனிதமான தேடல்ல என் பங்களிப்பும் இருக்கணும்னு என் அடி மனசு பிராண்டுது....
May i come in please..?

தராசு said...

சரிப்பா ராஜு,

ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வந்து இந்த இருபது வருஷ குழப்பத்தை தீத்து வைங்கப்பா???

தராசு said...

soundr,

வாங்க, தாராளமா வாங்க.

இப்ப சொல்லுங்க பாக்கலாம்,

மல்லிகைப்பூ எதுக்கு?

குல்ஃபி எதுக்கு??

ஆதிமூலகிருஷ்ணன் said...

யோவ்.. இன்னா.. இப்பிடி ஆராய்ச்சியில இறங்கிட்டீங்க.? வெளங்குச்சு போம்.

கார்க்கி said...

raittu

தராசு said...

வாங்க ஆதி,

டேங்சு

தராசு said...

கார்க்கி,

டேங்சு

தராசு said...

சோதனைப் பின்னூட்டம்

Wilson said...

அடச் சே!!! எனக்கும் ரொம்ப நாள் இதே டவுட்டு தான். இங்க வந்தா அதுக்கு விடை கிடைக்கும்னு பார்த்தா . . . இப்டி ஆளாளுக்கு வறுத்து எடுக்கிறீங்க? பதிலை சொல்லுங்க பாஸ்

Venkat S said...

என்ன தல...பதிலே காணூம்...யாராவது பதில் சொல்லுங்கோ தயவு செய்து