Tuesday, November 17, 2009

தங்கமணிக்கு பத்து விதிகள்

ஆதி மாத்திரம் தான் தங்கமணி ரங்கமணி பதிவு போடுவாரா என்ன, இதா நாங்களும் போடறம்ல,

பரிசல் மாத்திரம் தான் பத்து பத்தா எழுதுவாரா என்ன, நாங்களும் எழுதறம்ல.

தங்கமணிக்கு பத்து விதிகள் :

உனக்கு என்ன வேணுமோ அதை நேரடியா கேளு, இந்த குறிப்பாலுணர்த்துதல், பார்வையிலயே பேசறது, அடைமொழியில பேசறது, சங்கேத வார்த்தைகள், சமையல்ல மறதிகள்ங்கற விளையாட்டே வேணாம். எதுன்னாலும் நேரா சொல்லித் தொலை.

கடந்த 17 மாசமா உனக்கு அடிக்கடி தலைவலின்னு சொல்லிகிட்டிருக்கியே, அதுக்கு ஒரே மருந்து உடனே போய் டாக்டர பார்க்கறதுதான். அதுக்காக பரிதாபப் படுவது கூட மருந்துதான் அப்டீன்னு நெனச்சியானா, அந்த மருந்து உன் ஃபிரண்ட்ஸ் கிட்டதான் கிடைக்கும்.


வீட்ல என்ன வேலை செய்யணும்னு மாத்திரம் சொல்லு, அதை எப்படி செய்யணும்னு உனக்குத் தெரியும்னா, அதை நீயே செஞ்சிடேன். அல்லது நான் செய்யும்போது அமைதியாவாவது இரேன். ஏன்னா, நாங்கெல்லாம் கொலம்பஸ் பரம்பரை, எங்க போகணும்கறதை மாத்திரம் சொல்லுங்க, எப்படி போகணும்கறதை நாங்க பாத்துக்குவோம்.


எல்லா ஆம்பளைக்கும் கண்ணு வந்து Windows default setting மாதிரித்தான். 16 கலரைத்தான் புரிஞ்சுக்கும். மயில் கழுத்து நீலம்னா அதுல ரெண்டு மேட்டர் இருக்கு, ஒண்ணு ஒரு பறவையோட கழுத்து, இன்னொண்ணு கலர், இதுல உனக்கு புடவை எந்த மாதிரி வேணும்??? காஃபி ப்ரௌன்னுன்னா ஆமா, காஃபி எப்பவுமே ப்ரௌன்தான். வெங்காயத் தோல் கலர்னா, நீ எந்த வெங்காயத்தை சொல்ற, சாம்பார் வெங்காயமா, பெரிய வெங்காயமா?????


6 மாசத்துக்கு முன்னால எதாவது சொல்லீருந்தா, அதையெல்லாம் இன்னைக்கு உதாரணமா சொல்லக் கூடாது. உண்மையிலயே, நாங்க சொல்ற கருத்துகள் எல்லாம் 7 நாளைக்குத்தான். அதுக்கப்புறம் சிந்தனைச் சிற்பிகளாகிய எங்களுக்குள்ளதான் புதுக் கருத்து வந்துரும்ல.


நான் சொல்ற ஒவ்வொரு கருத்துக்கும் ரெண்டு அர்த்தமிருக்கும். இதுல ஒரு அர்த்தம் உனக்கு புடிக்கலைன்னா, நான் எப்பவுமே அந்த அடுத்த அர்த்தத்தைதான் சொன்னேன்னு அர்த்தம்...


நீ குண்டா இருக்கியோன்னு உனக்கு தோணிச்சுன்னா, ஆமா, நீ குண்டா தான் இருக்கே. அத என் வாயால சொல்ல வெச்சு ஒரு புது பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட வேண்டாம்.


நான் என்னைக்குமே ஒரு நல்ல ஷேப்புலதான் இருக்கேன். ரவுண்டா இருக்கறது கூட ஒரு ஷேப் தான. அதையெல்லாம் அடிக்கடி சொல்லிக் காமிக்க கூடாது.


நீ விளம்பர இடைவேளைகளில் பேசற ஒவ்வொரு மேட்டரும் எவ்வளவு சூப்பரா இருக்குது தெரியுமா…. மத்த நேரங்கள்ல நீ எதையாவது சொல்லீட்டு, அடுத்த சண்டைல அத ஆதாரமா காமிக்க கூடாது.


என்னம்மா பிரச்சனைன்னு நான் கேட்டா, நீ ஒண்ணும் இல்லன்னு சும்மா சொல்லீட்டேன்னா, நாங்க அத ஒண்ணும் இல்லன்னுதான் எடுத்துக்குவோம். எங்களுக்குத் தெரியும் நீ பொய் சொல்றேண்ணு, ஆனா இந்த ஒண்ணும் இல்லைங்கற பதில் எவ்வளவு தெளிவா இருக்கு தெரியுமா……

32 comments:

Raju said...

அன்ணே, அந்த கடைசி.." ஒண்ணுமில்லை" மேட்டர்...!
அடி தூள்.

எம்.எம்.அப்துல்லா said...

கிளம்பிட்டார்யா :)

அமுதா கிருஷ்ணா said...

good....

நாஞ்சில் நாதம் said...

ஹா ஹா..... சொம்பு ரெம்ப அடி வாங்கிருக்கு போல.

பிரபாகர் said...

அனுபத்த புழிஞ்சு விட்டிருக்கீங்க...?

அருமை அண்ணே...

பிரபாகர்.

Thamira said...

யுனிவர்சல் சப்ஜெக்ட்டு தல.. யாரு வேணா பூந்து ஊடுகட்டலாம். நல்லாவே கட்டிருக்கீங்க. தலைப்புதான் புரியலை.. அதென்ன விதிகள்.?

நான் என்னைக்குமே ஒரு நல்ல ஷேப்புலதான் இருக்கேன். ரவுண்டா இருக்கறது கூட ஒரு ஷேப் தான. அதையெல்லாம் அடிக்கடி சொல்லிக் காமிக்க கூடாது.//

இது கலாசல்.!

அத்திரி said...

உங்க வீட்ல இந்த பதிவ படிக்காம இருந்தா சரி......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

அடி பலமோ..??

அன்புடன் மலிக்கா said...

அனுபவம் அருமை...

http://niroodai.blogspot.com

http://kalasairal.blogspot.com

தராசு said...

வாப்பா ராஜூ,

டேங்சு.

தராசு said...

அப்துல்லா அண்ணே,

நாங்க கிளம்பற வரைக்கும் தான் காத்து, கிளம்பீட்டம்னா புயலுதான்.

தராசு said...

வாங்க அமுதா,

டேங்சு.

தராசு said...

வாங்க நாஞ்சில்,

ஏங்க இப்படியா பொதுவுல கேக்கறது???

தராசு said...

வாங்க பிரபாகர்,

அனுபவமாயிருந்தாலும் டெரரா ரூல்ஸ் போடறம்ல.

தராசு said...

தல ஆதி,

தன்கமணிக்கு 10 ரூல்ஸ், அதான் தலைப்பு.

தராசு said...

அத்திரி அண்ணே,

அவிங்க படிச்சாலும் நாங்கெல்லாம் டெரரா இருப்போம் தெரியுமுல்ல,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தராசு said...

வாங்க பட்டிக் காட்டான்,

எதிராளி 100 ரூல்ஸ் போடும் போது, நம்ம ஒரு 10 ஆவது போட வேண்டாமாண்ணே

தராசு said...

வாங்க மல்லிகா,

டேங்சு.

விக்னேஷ்வரி said...

சமையல்ல மறதிகள்ங்கற விளையாட்டே வேணாம். //
ஹாஹாஹா... அனுபவம் பேசுதோ..

நாங்கெல்லாம் கொலம்பஸ் பரம்பரை, எங்க போகணும்கறதை மாத்திரம் சொல்லுங்க, எப்படி போகணும்கறதை நாங்க பாத்துக்குவோம். //
தெரியும் நீங்கல்லாம் எப்படி வேலை பார்ப்பீங்கன்னு.

கலருக்கெல்லாம் இப்படி விளக்கம் கேட்டா என்ன சொல்றது, அவ்ளோ தான் தெரிஞ்சதுன்னு நாங்க நினைச்சுக்க வேண்டியது தான்.

நீ குண்டா இருக்கியோன்னு உனக்கு தோணிச்சுன்னா, ஆமா, நீ குண்டா தான் இருக்கே. அத என் வாயால சொல்ல வெச்சு ஒரு புது பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட வேண்டாம். //
ஹாஹாஹா


ஒன்னுமில்லைன்னா தான் நிறைய இருக்கு. நீங்க மாட்டிக்கிட்டீங்கனு அர்த்தம். :)


பதிவு முழுக்க ரசிச்சு, சிரிச்சு படிக்க முடிந்தது. நல்ல பதிவுங்க.

Unknown said...

அத்தனையும் உண்மை தானே...

கலக்கிடீங்க போங்க...

தராசு said...

வாங்க விக்கி,

இந்த ஒண்ணுமில்லைங்கற வார்த்தை இருக்குது பாருங்க, அதுக்காகவே ஒரு பதிவு போடலாம். அவ்வளவு பெரிய வார்த்தை அது. ஆமா, வெங்காயத் தோல் கலருங்கறத எப்படி விளக்குவீங்க.

தராசு said...

ஹலோ பேநா மூடி,

வாங்க, வந்ததுக்கு டேங்சு.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஆஹா... தூள்!

ஹுஸைனம்மா said...

//தராசு said...

நாங்க கிளம்பற வரைக்கும் தான் காத்து, கிளம்பீட்டம்னா புயலுதான்.//

அதாவது வீட்டுக்குள்ள காத்து, வீட்டில இருந்து கிளம்பி வெளியே வந்தப்புறம் புயலு, அப்படித்தானே?

தராசு said...

வாங்க சுந்தர்ஜி,

நன்றி.

தராசு said...

வாங்க தென்றல்

வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

ஹுசைனம்மா,

எங்களை கிளப்பி விட்டுட்டாய்ங்கன்னா அப்புறம் புயலுதான்.

பா.ராஜாராம் said...

:-))))))

GIYAPPAN said...

சும்மா சொல்லக்கூடாது. நல்ல யோசிச்சிருக்கீங்க. சில சமயங்களில் என்னன்னே புரியாம இடி மாதிரி இறங்கும்போது மலைச்சுப்போய் நிற்கும் நேரத்தில் அதற்க்கான மூல காரணம் உப்பு புளிக்கு உதவாத விஷயமாக இருக்கும் .
இது அனுபவித்த உண்மை. நீங்களும் அனுபவித்து எழுதியிருகிறீர்கள்.

CS. Mohan Kumar said...

தராசு சார் செம கலக்கல். நம்ம கஷ்டம் யாருக்கு புரியுது? நான் கூட கணவன் மனைவி சண்டை பற்றி ஒரு மேட்டர் blog-ல் எழுதி இருக்கேன். முடியும் போது வாசிங்க

பெசொவி said...

//நான் சொல்ற ஒவ்வொரு கருத்துக்கும் ரெண்டு அர்த்தமிருக்கும். இதுல ஒரு அர்த்தம் உனக்கு புடிக்கலைன்னா, நான் எப்பவுமே அந்த அடுத்த அர்த்தத்தைதான் சொன்னேன்னு அர்த்தம்...//
சூப்பர்....!
என்னோட தங்கமணிகிட்ட நான் பேசினதை, என் வலைப்பூவில வந்து படிங்க, பாஸு!
http://ulagamahauthamar.blogspot.com/2009/12/blog-post_02.html

நசரேயன் said...

முடியலை.. முடியலை.. இன்னும் சிரிச்சி முடியலைன்னு சொன்னேன்