Monday, November 9, 2009

வந்தே மாதரம் – வருதய்யா ஆத்திரம்.

1835 ம் ஆண்டில் மேற்கு வங்கத்தின் மிட்நாப்பூர் நகரில், ஆங்கிலேய அரசில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு இந்திய அதிகாரியின் வீட்டில் பிறந்தவர் பங்கிம் சந்தர சட்டர்ஜி. 1891 – ஆம் ஆண்டு வரை, நீதிபதியாக ஆங்கிலேய அரசாங்க உத்தியோகம் பார்த்து விட்டு, தினமும் சாரட் வண்டியில் வீட்டுக்கு போய் சகதர்மிணி செய்து வைக்கும் மீன்குழம்பை ஒரு பிடி பிடித்து விட்டு, ஒழுங்காக தூங்கப் போன இந்த மனிதருக்குள்ளும், ஆங்கிலேய எதிர்ப்பு என்பது மனதுக்குள் கனன்று கொண்டிருந்தது. கவிதைகள் எழுதுவதிலும், புனைவுகள் எழுதுவதிலும் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த இந்த மனிதர், 1882 ஆம் ஆண்டு “அனந்தாமத்” என்ற ஒரு புத்தகம் எழுதினார். ஆங்கிலேயர்களின் வரி வசூலிக்கும் கொள்கைக்கு எதிராக இந்து மற்றும் இஸ்லாமிய துறவிகளால் நடத்தப் பட்ட “துறவிகளின் போரையும்”, அந்நாட்களில் (1770 களில்) வங்காள பகுதியில் தலைவிரித்தாடிய பஞ்சத்தின் கோர விளைவுகளையும் மையப் படுத்தி எழுதிய ஒரு புனைவு இது.

பஞ்சத்தின் பிடியிலிருந்த வங்கத்தில் மனிதர்கள் எல்லாவற்றையும் விற்று விட்டு, கடைசியில் மனிதர்களையும் விற்கத் தொடங்கினார்கள். ஆனால் வாங்குவோர் தான் யாரும் இல்லை. கல்யாணி என்ற வங்கப் பெண் தன் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு ஆள் பிடித்து விற்பவர்களின் கண்களில் தப்பித்து ஓடுகிறாள். ஆனால் வாணலிக்குத் தப்பி நெருப்பில் விழுந்த கதையாய், அவள் ஆங்கிலேய சிப்பாய்களின் காமக் கண்களில் பட்டு விடுகிறாள். உதவி உதவி என்று கதறி அந்த பெண், ஒரு ஆற்றங்கரையில் மூர்ச்சையானதும், அவளை காப்பாற்றும் ஒரு இந்துத் துறவி அவளை பாதுகாப்பு கருதி துறவிகள் கூட்டமாய் குழுமியிருக்கும் இடத்தில் மறைத்து வைக்கிறார். ஏற்கெனவே ஆங்கிலேயர்களின் அடாவடி வரி வசூலிப்பினால் தங்களது புண்ணிய தலங்களுக்கு சுதந்திரமாக சென்று வர முடியாமல் வெறுப்படைந்திருந்த துறவிகள், கல்யாணிக்கு ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட அவமானத்தின் கதையை கேட்டதும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெகுண்டு எழுகிறார்கள் . இதன் விளைவாக நடந்தது தான் துறவிகளின் போர். இதில் நிராயுத பாணிகளாய் வெறும் கோபத்தையும் ஒற்றுமையையும் மாத்திரமே ஆயுதங்களாக கொண்டு போரிட்ட துறவிகளால், ஆங்கிலேய ராணுவம் மற்றும் ஆயுத பலத்துக்கு முன்பாக சில மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. கலகத்தை அடக்கி விட்டோம் என சில ஆங்கில அதிகாரிகள் இங்கிலாந்து அரசியின் கையால், தங்கள் சட்டைகளில் மெடல் குத்திக் கொண்டார்கள். இப்படியாக போகும் அந்தப் புனைவில் இந்திய நாட்டை ஒரு அன்னையாக உருவகப் படுத்தி அந்த அன்னையின் சிறப்புகளை தனக்கே உரிய சமஸ்கிருத மற்றும் வங்க மொழி புலமையின் சிறப்பில் எழுதிய வரிகள் தான் “வந்தே மாதரம்”.

1890களின் பின்பகுதியில், ஆங்கிலேயர்களின் அட்டகாசம் அதிகமாகி, இங்கிலாந்து ராணிக்கு தங்களது விசுவாசத்தைக் காட்ட “ O God, Save the Queen” என்ற பாட்டை இந்தியர்கள் ஒவ்வொருவரும் பாடவேண்டும் என கட்டாயப் படுத்தினார்கள். எங்கேயோ இருந்து வந்து நம்மீது ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்துக் காரனின் ராணி நன்றாயிருக்க வேண்டுமென நான் ஏன் வேண்ட வேண்டும் என ஒவ்வொரு இந்தியனும் வெகுண்டு கொண்டு இருந்த நேரத்தில், 1896 ஆம் ஆண்டு கல்கத்தாவில் அப்போதைய தலைவர் ரஹிமத்துல்லா சயானி என்பவரின் தலைமையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், ராணியின் பாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நம் பாரத தாயைப் பற்றிப் பாட வேண்டும் என தீர்மானித்து முதன்முதலாக வந்தே மாதரம் பாடப் பட்டது. பிறகு இந்தப் பாட்டின் முழு அர்த்தமும், அந்த வர்ணனை வரிகளில் வெளிப்படும் இந்திய மண்ணோடுள்ள உளம் சார்ந்த உணர்வுகளும், ஒவ்வொரு இந்தியனையும் ஈர்க்க, மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் வந்தே மாதரம் ஒலித்தது. குறிப்பாக நாம் அறிய வேண்டியது, அப்பொழுது சுதந்திரப் போராட்டத்தில் வெகுவாக ஈடுபட்டிருந்த இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடையே எந்த வித கருத்து பேதங்களுமின்றி இந்தப் பாடல் பாடப் பட்டு வந்தது.

இதற்கிடையே இஸ்லாமிய அறிவாளர்களால் ஜமாய்த் உலேமா – ஏ – ஹிந்த் (இந்திய அறிவாளிகள் குழுமம்) என்ற ஒரு அமைப்பு, 1919 – ம் ஆண்டு தோறுவிக்கப்பட்டது. இவர்கள் தங்கள் பங்குக்கு ஆங்கிலேய எதிர்ப்பை வெளிப்படுத்த “கிலாஃபத் இயக்கம்” என்ற ஒன்றை நடத்த இந்த இயக்கமும் இஸ்லாமிய மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. பிற்காலத்தில் இவர்கள், கொள்கை ரீதியில் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்து கொண்டனர். இவர்களில் பலர் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்த வேளையில், இவர்களுக்குள்ளேயே ஒரு தனி பிரிவினர் பிரிவினைக்கு ஆதரவாகவும் கிளர்ந்தனர். இந்த பிரிவினை ஆதரவாளர்கள் எல்லாம் சேர்ந்து பின்னாளில் ஜமாய்த் உலேமா – ஏ – இஸ்லாம் (இஸ்லாமிய அறிவாளிகள் குழுமம்) என்ற தனிக் குழுவாய் பிரிந்து போய் விட்டனர்.

இந்திய அறிவாளிகள் குழுமம் அன்றிலிருந்து இன்றுவரை, தங்களை இந்திய இறையாண்மையை முழுதும் மதிப்பவர்களாகவும், மதச் சார்பின்மைக்கு முழுதும் ஆதரவு தருபவர்களாகவும் தான் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தில் அவர்களும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். மற்றும் பிராந்திய ரீதியில் அங்கங்கே இருக்கும் மாநில கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல்களில் பங்கேற்று, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து அரசியல் செய்து என இந்திய அரசியலின் ஒரு அங்கமாகவே திகழ்கிறார்கள்.

இப்படி சாதுவாக குல்லாய் அணிந்து கொண்டும், தாடியை நீவிக் கொண்டு புத்தகங்களை புரட்டிக் கொண்டும், ஐந்து முறை தொழுது கொண்டும் இருந்த இந்த அறிவாளிகள், சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் த்யோபந்த் என்ற இடத்தில் நடந்த அறிவாளிகள் மாநாட்டில் நிறைவேற்றிய ஒரு தீர்மானம் தான் இந்திய அரசியலில் ஒரு புதிய சர்ச்சையை தொடங்கி வைத்திருக்கிறது. தியோபந்தில நடந்த மாநாட்டில் நமது நாட்டுக்கோட்டை வீட்டுக்காரரான மாண்புமிகு ப. சிதம்பரம் அவர்கள் அறிவாளிகளின் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொள்ள, அந்த நேரம் பார்த்து அறிவாளிகளின் அறிவு கோக்கு மாக்காக வேலை செய்து, இஸ்லாமியர்கள் வந்தே மாதரம் பாடக் கூடாது என ஃபத்வா வெளியிட்டு விட்டார்கள். இதென்னடா வம்பு, எக்குத் தப்பாக வந்து மட்டிக் கொண்டோமோ என நினைத்து, சிதம்பரமும் மாநாட்டில் பேசும் பொழுது, மிகுந்த எச்சரிக்கையுடன், இந்த ஃபத்வா மேட்டரை தொடாமலே பேசி விட்டு ஆளை விடுங்கடா சாமி என ஓடி வந்து விட்டார். இங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.

இப்பொழுது இருக்கிற அரசியல் நிலைமையில், இறங்கு முகத்தில் இருக்கும் பாஜக திரும்பிய பக்கமெல்லாம் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தனிக் கொடி பிடிக்க தயாராகி வருகிறார். அத்வானியின் தலைமை என்பது கட்சிக்கு எதிர்பார்த்த கவர்ச்சியை மக்களிடம் தர முடியவில்லை. ஜஸ்வந்து சிங் தனியாக ஜின்னா புராணம் பாடி விட்டு பிரிந்து விட்டார். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கையைப் பிசைந்து கொண்டிருக்கும் வேளையில், நடந்து முடிந்த மாநிலத்தேர்தல்கள் அனைத்திலும் மண்ணைக் கவ்வ வேண்டியதாகி விட்டது. தென்னாட்டில் கால் ஊன்றக் கிடைத்த ஒரே ஒரு இடமான கர்நாடகத்தில், ரெட்டி சகோதரர்கள் தரும் குடைச்சல் வேறு திருகு வலியாய் மாறிக் கொண்டிருக்கிறது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என திரிந்தவர்களுக்கு, இந்த விஷயம் அகப் படவே வானுக்கும் மண்ணுக்கும் எகிறத் தொடங்கி விட்டார்கள்.

உடனே சிதம்பரம் பதவி விலக வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர், பிரவீண்பாய் தொகாடியா அறிக்கை விடுகிறார். சிதம்பரம் மௌனமாய் இருந்தது ஏன் என கேள்விகள், உருவ பொம்மை எரிப்புகள் என அரசியல் மேடை களை கட்டியுள்ளது. ஆனால் ஃபத்வா கொடுத்த அறிவாளிகள் சங்கம் என்ன காரணத்தால் இந்த தடையை விதித்தார்கள் என்றால், இதில் ஒரு பெண் தெய்வத்திற்கான துதிப்பாடல் வரிகள் வருகின்றன, அந்த வரிகளை உச்சரிக்கும் எந்த ஒரு இஸ்லாமியனும் அல்லாவை தூஷிக்கிறான் என திருவாய் மலர்ந்தருளி விட்டார்கள். இதற்கு இந்த அறிவாளிகள் கூட்டத்திலேயே ஒரு சிறு எதிர்ப்பு கிளம்பினாலும், அது திருவிழாக் கூட்டத்தில் ஒலித்த ஒரு குருட்டுப் பாடகனின் குரலாய் அமுங்கிப் போனது.

இந்த அறிவாளிகளுக்கு சில கேள்விகள்:

1919 ம் ஆண்டிலிருந்து நீங்களும் நெஞ்சை நிமிர்த்தி இந்தப் பாடலை பாடினீர்களே, அப்பொழுதெல்லாம் ஒளிந்து கொண்டிருந்த பெண்தெய்வம், திடீரென வெளிவந்தது ஏன்?

இறையாண்மைக்கும் ஆன்மீகத்துக்குமுள்ள வித்தியாசம் அறிவாளிகளான உங்களுக்கு கடுகளவாவது புரியாமல் போனது ஏன்?

ஃபத்வா கொடுப்பது என்பது ஆன்மீக காரணங்களுக்காக மாத்திரம் தானா அல்லது அரசியல் காரணங்களுக்காகவும் கூடவா?

வகுப்புவாத அரசியலின் அருவருப்பான விளைவுகளை சற்றே மறந்து முன்னேற்றம் என்ற பாதையில் எப்படி அடியெடுத்து வைக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் சாமான்ய இந்தியனை இத்தைகைய ஃபத்வாக்கள் எப்படி பாதிக்கும் என அணுவளவாவது யோசித்தீர்களா?

ஆடுகள் முட்டி சண்டை போட்டவுடன், எந்த ஆடு முதலில் மயங்கி விழும் அதில் எத்தனை கறி தேரும் என நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் வெட்கங்கெட்ட இந்திய ஊடக நரிகள், வழக்கம் போல சிண்டு முடியும் வேலையை துவங்கி விட்டன. இது எங்கு போய் முடியுமோ அந்த பாரத மாதாவுக்கே வெளிச்சம்.

வந்தே மாதரம் – வருதய்யா ஆத்திரம்.

44 comments:

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே இந்த பத்வா,புண்ணாக்கு இதையெல்லாம் விட்டுத்தள்ளுங்க.
இந்த பத்வாக்களை அனைத்து இஸ்லாமியர்களும் பின்பற்றுவதில்லை. வந்தேமாதரம் வார்த்தையை உலகளவில் பிரபலமாக்கிய ஏ.ஆர்.ரஹ்மானும் இஸ்லாமியர்தான்.


ஆனால் வந்தேமாதரம் பாடினால்தான் நீ உண்மையான இந்தியன் என்றும்,பாடாவிட்டால் தேசதுரோகி என்றும் இந்த போலி ஹிந்துத்துவ வியாதிகள் அமைப்பு சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

”ஜாரே ஜஹான்சே அச்சா
இந்துஸ்தான் ஹமாரா,ஹமாரா”
பாடல் கவிஞர்.இக்பால் எழுதியதால் நான் பாடமாட்டேன் என்று ஒரு தீவிர ஹிந்துத்துவவாதி சொன்னால் அவர் தேசவிரோதியா??

வந்தேமாதரம்,ஜாரேஜஹான்சே அச்சா, தாயின் மணிக்கொடிபாரீர் போன்ற பாடல்கள் எல்லாம் சுதந்திர காலத்தில் பாடப்பட்ட பாடல்.அவ்வளவே.

தேசிய கீதமாம் ஜனகனமனவுக்கு எதிராக இஸ்லாமிய இயக்கங்கள் பத்வாவோ அல்லது வேறு மத அமைப்புகள் தடையோ சொன்னால் சொல்பவனின் தலையைத் துண்டிக்கலாம்.

எம்.எம்.அப்துல்லா said...

நான் வந்தேமாதரம் பாடமாட்டேன். சவாலாகவே சொல்கின்றேன்...நான் இதுவரை நான் என் தாய்நாட்டிற்கு எதிராக எங்காவது உடலாலோ,மனதாலோ எதிராக செயல்பட்டு இருக்கின்ரேன் என யாராவது நிரூபியுங்களேன் பார்ப்போம்.

நான் இந்தியன் இல்லையா?? நாட்டுபற்று இல்லாதவனா??

எம்.எம்.அப்துல்லா said...

மக்களை பிரித்து அவர்களிடேயே குழப்பம் ஏற்படுத்தி குளிர்காய நினைக்கும் வி.எச்.பி போன்ற சில சக்திகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். இந்த தேசத்தின் நிம்மதியைக் கெடுக்கும் அவர்களே தேசதுரோகி.

எம்.எம்.அப்துல்லா said...

எனது பின்னூட்டங்களைப் படித்துவிட்டு என்னை பாக்கிஸ்தானுக்கு போகச் சொல்லி ஒரு பிரகஸ்பதி எனக்கு மெயில் அனுப்பியுள்ளது. அதில் என் பெயரைக்கூட சற்றே மாற்றி (கொப்துல்லா) அதன் வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளது. என் பாட்டன்,முப்பாட்டன் அவனுக்கும் மூதாதையைன் என அனைவரின் பூமியும் இதுதான். என்னை எங்கும் போகச் சொல்லும் உரிமை எவனுக்கும் கிடையாது. நானும் நேற்றுவரை எந்த மனவேறுபாடுமின்றி வந்தேமாதரம் பாடியவந்தான். ஆனால் வந்தேமாதரம் பாடினால்தான் இந்தியன் என்றும் நாட்டுப்பற்று உள்ளவன் என்றும் அந்தக் கேணைகள் விட்ட அறிக்கைக்குப் பின்னர்தான் இனி பாடுவதில்லை என முடிவு செய்தேன். அதைப் பாடாவிட்டாலும் நான் இந்தியந்தான், நாட்டுபற்று உள்ளவந்தான்.

எனக்கு சம்மந்தமில்லாத பூமியான பாக்கிஸ்தானுக்கு நான் ஏன் போக வேண்டும்?? அத்வானியின் சொந்த ஊர்தான் பாக்கிஸ்தானில் உள்ளது. முடிந்தால் அந்தாளைப் போகச் சொல்.

Thamira said...

உங்கள் மேதைமை தெரிகிற பதிவு. இன்னும் நிறைய வரலாறுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது.

அப்துல்லா சொல்வதைப்போல 'வந்தே மாதரம்' பாடல் குறித்துமட்டுமே இந்தப்பதிவு பேசவில்லை என நான் கருதுகிறேன்.

மேலும் அப்படியிருப்பின் அப்துல்லாவின் கருத்துகளை ஏற்கிறேன்.

அதையும் விட தேசியம் என்பதிலே அவ்வளவு நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஒற்றுமையினால் விளையும் பயன்கள் கருதி மட்டுமே 'இந்திய தேசியம்' என்பதை ஏற்கிறேன் நான்.

ஆனால் இதில் கலக்கும் அரசியல் மற்றும் ஊடக அரசியல் ஆகியவற்றை நினைத்தால்தான் தராசுவைப்போல எனக்கும் கவலையாக இருக்கிறது.

Thamira said...

அனானிகளின் பின்னூட்டங்கள், மெயில்களை புறக்கணியுங்கள் அப்துல்.!

கோவி.கண்ணன் said...

//"வந்தே மாதரம் – வருதய்யா ஆத்திரம்."//

ஆத்திரமோ.....மூத்திரமோ.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாடப்பட்ட வந்தே மாதரத்தின் இன்றைய தேவை என்ன ?

பாரதத்தாயின் புடவைகள் கூட வெளி நாட்டில் இருந்து தான் இறக்குமதியாகின்றன. சீனாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் கதவை திறந்து வைத்துவிட்டு வந்தேமாதரம் பாடுவதனால் பயன் என்ன ?

தற்போதைக்கு அவை 'தேசியம்' தேசிய பற்று என்கிற பெயரில் மீண்டும் சொல்லப்படுவதன் 'இந்து' அரசியல் தவிர்த்து அதைப் பாட வலியுறுத்துவதன் தேவை மதச்சார்பற்ற தேசியத்திற்கான நோக்கமாக இல்லாத போது ....பாடினாலும் பாத்வா கொடுத்தாலும் பயனேதும் இல்லை

கார்க்கிபவா said...

அண்ணா, அவன் கிடக்கிறான் வென்று. முதலில் வந்தே மாதரம், ஜனகனமன இதுக்கெல்லாம் எல்லோருக்கு முழு அர்த்தம் தெரியுமா? அர்த்தமே தெரியாமல் கத்துவதில் என்ன பற்று தேவையிருக்கிறது? ஹவாலாவில் பணம் அனுப்புவதும், டேக்ஸ் கட்டாமல் ஏமாற்ற வழிகள் தேடுவதும், இன்னும் ஆயிராமாயிரம் முறைகள் உன்டு நாட்டின் வளர்ச்சியை தடுக்க. அதையெல்லாம் செய்துவிட்டு வந்தே மாதரம்ன்னு சொன்னா ஆச்சா?

Sketch Sahul said...

அதைப் பாடாவிட்டாலும் நான் இந்தியந்தான், நாட்டுபற்று உள்ளவந்தான்.

கபிலன் said...

ஜமாத் அமைப்பின் மதவெறியைத் தான் இது காட்டுகிறது !
சிதம்பரம் அங்கு போய்ட்டு அமைதியா வந்தது அதை விட கேவலம்!

தராசு said...

அப்துல்லா அண்ணே,

கருத்துகளுக்கு நன்றி.

வந்தே மாதரம் பாடலை வைத்து நடைபெறும் அரசியல் சித்து விளையாட்டுக்கள், மற்றும் இந்த பிரச்சினையை வைத்து பரபரப்பை ஏற்படுத்தி பணம் பண்ணும் ஊடகங்களுக்கு கண்டனம் தெரிவிக்கவே இந்தப் பதிவு.

தராசு said...

அப்துல்லா அண்ணே,

அனானினகளை லூசுல விடுங்க.

தராசு said...

ஆதி,

கருத்துகளுக்கு நன்றி.

முழுவதும் வழி மொழியப் படுகிறது.

தராசு said...

கோவி அண்ணே,

கருத்துக்கு நன்றி.

தேசியம் இங்கு அரசியலாக்கப் படுவது வேதனை தான்.

தராசு said...

கார்க்கி,

கருத்துக்கு நன்றி.

தராசு said...

வாங்க ராஜா,

கருத்துக்கு நன்றி.

தராசு said...

வாங்க கபிலன்,

வெறும் ஜமாத்தை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. வந்தே மாதரத்தை கட்டாயமாக்க எடுக்கப் பட்ட முயற்சிகளை குறித்து கொஞ்சம் வாசியுங்களேன். அதிலிருக்கும் நுண்ணரசியலும் வெறியும் இன்னும் வேதனையளிக்கும்.

Barari said...

kabilanai pondra R.S.S. (viyathi) vathikalidam irunthu ippadippatta pathilkalthaan varum.ithilenna achchiriyam.

எம்.எம்.அப்துல்லா said...

//ஜமாத் அமைப்பின் மதவெறியைத் தான் இது காட்டுகிறது !

//


திரு.கபிலன், அது மதவெறி அல்ல.பப்ளிசிட்டி வெறி. வந்தேமாதரத்தை நாட்டில் அனைவரும் பாடித்தான் ஆகவேண்டும் என்று அரசு எந்த உத்தரவும் போடவில்லை. அப்படி இருக்க ஏன் இந்த திடீர் பத்வா என்று என் போன்ற இஸ்லாமியர்களுக்கே இன்னும் புரியவில்லை.


அதுபோல இந்தப் பாடலை வைத்து சகோதர இனங்களுக்கு இடையே பிரிவினையை உண்டு பண்ண முயலும் ஹிந்துத்துவ, இஸ்லாமிய அமைப்புகளிடையே நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.


//


சிதம்பரம் அங்கு போய்ட்டு அமைதியா வந்தது அதை விட கேவலம்!

//

இதில் என்ன கேவலம். அவர்கள் தேசியகீதத்திற்கு பத்வா போட்டு இருந்து சிதம்பரம் பேசாமல் இருந்தால் கேவலம். வந்தேமாதரம் சுதந்திரப் போராட்ட காலத்தில் பாடப்பட்ட நூற்றுக்கணக்கான பாடல்களில் அதுவும் ஒன்று.அவ்வளவே.

”அல்லாஹ் இந்த நாட்டின் விடுதலையை விரைவாக்குகின்றார்” என்ற பொருளில் ஒரு பிரபலமான உருதுப் பாடல் உருது பேசும் இஸ்லாமியர்களிடையே தேச விடுதலை எழுச்சிக்குப் பாடப்பட்டு வந்தது. இப்போது அந்தப் பாடலுக்கு ஏதேனும் ஒரு ஹிந்து அமைப்பு தடை விதித்து அந்த விழாவில் ஒரு அமைச்சர் கலந்து கொண்டு பேசாமல் வந்தால் கூட என்னளவில் ஒன்றும் தவறேயில்லை. காரணம் நம் அன்னை பூமியோடு சம்மந்தப் படுத்தும்,நாட்டுப்பற்றோடு சம்மந்தப் படுத்தும் ஒரே பாடல் தேசிய கீதம் மட்டுமே. மற்ற அனைத்தும் ஜஸ்ட்லைக்தட் பாடல்களே.அதற்கும் நாட்டுபற்றுக்கும் ஒரு புண்ணாக்கு சம்மந்தமும் கிடையாது.

தராசு said...

பராரி,

தனி மனித தாக்குதல்கள் தயவு செய்து வேண்டாம். கருத்துகளை முன்வையுங்கள்.

தராசு said...

//அதுபோல இந்தப் பாடலை வைத்து சகோதர இனங்களுக்கு இடையே பிரிவினையை உண்டு பண்ண முயலும் ஹிந்துத்துவ, இஸ்லாமிய அமைப்புகளிடையே நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.//

அப்துல்லா அண்ணே,

வழி மொழிகிறேன்.

கபிலன் said...

"Barari said...
kabilanai pondra R.S.S. (viyathi) vathikalidam irunthu ippadippatta pathilkalthaan varum.ithilenna achchiriyam."

ரொம்ப சந்தோஷம். உங்க கண்ணுக்கு அப்படி தெரிஞ்சேன்னா....என்னால ஒண்ணும் பண்ண முடியாது. அப்படியே நினைச்சுக்கோங்க : )

ஹுஸைனம்மா said...

//ஃபத்வா கொடுத்த அறிவாளிகள் சங்கம் என்ன காரணத்தால் இந்த தடையை விதித்தார்கள் என்றால், இதில் ஒரு பெண் தெய்வத்திற்கான துதிப்பாடல் வரிகள் வருகின்றன, அந்த வரிகளை உச்சரிக்கும் எந்த ஒரு இஸ்லாமியனும் அல்லாவை தூஷிக்கிறான் என திருவாய் மலர்ந்தருளி விட்டார்கள்//

காரணம் சரிதான்; ஏக இறைவனைத்தவிர வேறு யாரையும்/எதையும் வணங்கக்கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை.

இந்தப் பாடலும் (நன்றி: ஏ.ஆர்.ஆர்) எல்லோராலும் பாட‌ப்பட்டுக் கொண்டுதான் இருந்தது, 2005ல் அந்த “நூற்றாண்டுக் கொண்டாட்டம்” வரும்வரை.

எட்டி/ரெட்டி பிரச்னைகள் முடிந்துவிட்டதால் பி.ஜே.பி.க்கு அவல் கிடைத்துவிட்டது இந்த ஃபத்வாவின் புண்ணியத்தால்.

கபிலன் said...

"திரு.அப்துல்லா,
திரு.கபிலன், அது மதவெறி அல்ல.பப்ளிசிட்டி வெறி. "

இது சரி தான். ஆனால், இதை வெளிப்படையாக எதிர்க்காமல் பல இஸ்லாமிய அறிஞர்களும், முன்னாள் சிறுபாண்மை இயக்கத் தலைவருமான சையது ஷபாபுதீன் போன்றவர்கள் அவர்களுக்கு ஜால்ரா அடிப்பது ஏன்?

"வந்தேமாதரம் சுதந்திரப் போராட்ட காலத்தில் பாடப்பட்ட நூற்றுக்கணக்கான பாடல்களில் அதுவும் ஒன்று.அவ்வளவே."

இதை ஒப்புக்கொள்ள முடியாதுங்க. "வந்தே மாதரம்" என்ற சொற்றொடர் அல்லது பாடல் என்பது சுதந்திர போராட்டத்தின் வேர். நூற்றுக்கணக்கான பாடல்களையும் வந்தே மாதரத்தையும் கம்பேர் பண்ணாதீங்க... சாகும் போதும், தூக்கு மேடையின் போதும் பெரும்பாலான சுதந்திர போராட்ட தியாகிகளின் கடைசி வீர வார்த்தை வந்தே மாதரம் : )

இந்த சமயத்தில் இதை எடுக்க வேண்டிய கட்டாயம் என்ன ? அதையும் நடுநிலை வாதிகள் எதிர்க்காமல் இருப்பதற்கு காரணம் என்ன ?

கபிலன் said...

"தராசு said...
வாங்க கபிலன்,

வெறும் ஜமாத்தை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. வந்தே மாதரத்தை கட்டாயமாக்க எடுக்கப் பட்ட முயற்சிகளை குறித்து கொஞ்சம் வாசியுங்களேன். அதிலிருக்கும் நுண்ணரசியலும் வெறியும் இன்னும் வேதனையளிக்கும். "

நிஜம் தான் !

எம்.எம்.அப்துல்லா said...

கபிலன் அண்ணே,

//ஆனால், இதை வெளிப்படையாக எதிர்க்காமல் பல இஸ்லாமிய அறிஞர்களும், முன்னாள் சிறுபாண்மை இயக்கத் தலைவருமான சையது ஷபாபுதீன் போன்றவர்கள் அவர்களுக்கு ஜால்ரா அடிப்பது ஏன்?
//

அதை ஜால்ரா அடிப்பவர்களிடம் கேளுங்கள். வெளிப்படையாக எதிர்க்கும் என் போன்றவர்கள் சாதாரண மனிதர்கள். எங்களை எப்படி மீடியா கண்டு கொள்ளும்? அவர்களுக்குத் தேவை காண்ட்ரோவர்சி. எனவே சையது ஷஹாப்தீன் போன்றவர்களைத்தான் கண்டு கொள்ளும். அப்புறம் நேற்று என்.டி. டிவி பார்த்தீர்களா? அதில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இஸ்லாம் மதம் சார்ந்த 20 பேர் பத்வாவையும் எதிர்க்கிறோம், வி.எச்.பிஐயும் எதிர்க்கிறோம் என்று சொன்னதற்கு வி.எச்.பி தலைவர் என்ன சொன்னார்? இதை பாடினால் மட்டுமேதான் தேசப்பற்று என்கின்றார். இது என்ன லூசுத்தனம் என்பதுதான் என் கேள்வி?

//இதை ஒப்புக்கொள்ள முடியாதுங்க. "வந்தே மாதரம்" என்ற சொற்றொடர் அல்லது பாடல் என்பது சுதந்திர போராட்டத்தின் வேர்.

//

அண்ணே ஒரு சுதந்திரப்போராட்டத்தின் வேர் என்பது அதை அடைந்தே தீர வேண்டும் என்கின்ற மக்களின் மன விருப்பமும்,மன உறுதியும் மட்டுமே இருக்க முடியும். பாடல் அல்ல.பொதுவாக இசை என்பது மன உணர்வுகளை கிளர்ந்தெழ்ச் செய்ய உதவுவது. அந்தவகையில் வந்தேமாதரம்,ஜாரா ஜஹான் சே அச்சா எல்லாம் உதவியது. அதற்காக இவைதான் வேர் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. டி.எம்.எஸ் குரல் எம்.ஜி.ஆர். ஆட்சியைப்பிடிக்க உதவியது. அதற்காக டி.எம்.எஸ். குரல் எம்.ஜி.ஆர் கிடையாது. எம்.ஜி.ஆர் = நாட்டுப்பற்று
வந்தேமாதரம் = டி.எம்.எஸ் குரல்.
உனக்கு டி.எம்.எஸ் குரல் கட்டாயம் பிடிக்க வேண்டும்.அப்படி பிடித்தால் மட்டும்தான் நீ எம்.ஜி.ஆர் இரசிகன் என்று ஒத்துக்கொள்ள முடியும் என்பதுபோல இருக்கின்றது உங்கள் வாதம். நான் டி.எம்.எஸ் குரலை இரசிக்க மாட்டேன்.எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நான் எம்.ஜி.ஆர் இரசிகன் என்பது என் வாதம்.


// சாகும் போதும், தூக்கு மேடையின் போதும் பெரும்பாலான சுதந்திர போராட்ட தியாகிகளின் கடைசி வீர வார்த்தை வந்தே மாதரம் : )

//

இல்லை கபிலண்ணே. வந்தேமாதரம் சொல்லி உயிர் நீத்தவர்களுக்கு நிகராக ஜெய்ஹிந்த் சொல்லி உயிர் நீத்தவர்களும் இருக்கின்றனர்.உதாரணம் பகத்சிங் :)



//இந்த சமயத்தில் இதை எடுக்க வேண்டிய கட்டாயம் என்ன ? அதையும் நடுநிலை வாதிகள் எதிர்க்காமல் இருப்பதற்கு காரணம் என்ன ?

//

இந்த ஆதங்கம் நான் அறிந்த வரை 90% இஸ்லாமியர்களிடம் இருக்கின்றது. எதிர்ப்பவர்களை மீடியா கண்டு கொள்ளவில்லை. அவர்கள் பிழைப்பு நடத்தத்தேவை காண்டோவெர்சி மட்டுமே. இதனால் என் போன்றவர்கள் உங்கள் கண்களில் இருந்து மறைக்கப்படுகின்றோம். இது எங்கள் தவறா??

எம்.எம்.அப்துல்லா said...

// கபிலன் said...
"தராசு said...
வாங்க கபிலன்,

வெறும் ஜமாத்தை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. வந்தே மாதரத்தை கட்டாயமாக்க எடுக்கப் பட்ட முயற்சிகளை குறித்து கொஞ்சம் வாசியுங்களேன். அதிலிருக்கும் நுண்ணரசியலும் வெறியும் இன்னும் வேதனையளிக்கும். "

//

நிஜம் தான் !

//


திரு.பராரி,

கபிலன் அவர்களை ஆர்.எஸ்.எஸ். என்று குற்றம் சுமத்தினீர்கள். அவர் ஆர்.எஸ்.எஸ் ஆக இருந்தால் இப்படி பதி சொல்வாரா?? யாரையும் முழுதாய் அறியாமல் குற்றம் சொல்வது எவ்வளவு தவறு என்று இப்போது நீங்கள் உணர்கின்றீர்களா??

கபிலன் said...

i"எம்.எம்.அப்துல்லா said...
கபிலன் அண்ணே,
..."


என்னை விட 15 வயசு பெரியவர் நீங்க....அண்ணென்னு சொல்லி என் வயசை ஏத்தாதீங்கோ : )
அண்ணேன்னு நான் தான் கூப்பிடனும் ; )

"இதை பாடினால் மட்டுமேதான் தேசப்பற்று என்கின்றார். இது என்ன லூசுத்தனம் என்பதுதான் என் கேள்வி?"

இந்தப்பாடலைப் பாடினால் மட்டும் தான் தேசப்பற்று என்பது லூசுத்தனம் தான். இதை இசுலாமியர்கள் பாடக்கூடாது என ஆணையிடுவது என்பதும் லூசுத் தனம் தான். அது அவரவர் இஷ்டம்.


"உனக்கு டி.எம்.எஸ் குரல் கட்டாயம் பிடிக்க வேண்டும்.அப்படி பிடித்தால் மட்டும்தான் நீ எம்.ஜி.ஆர் இரசிகன் என்று ஒத்துக்கொள்ள முடியும் என்பதுபோல இருக்கின்றது உங்கள் வாதம்."

அண்ணே, நீங்க அந்த பாட்டு மேட்டர்ல, ஞாயமா பாட்டு எழுதியவர்களைத் தான் உவமேயப் படுத்தி இருக்க வேண்டும். அப்படி என்றால் கண்ணதாசனின் பாடல் வரிகள், எம்ஜிஆர் ஐ மக்கள் மனதில் செல்வாக்குள்ளவராக மாற்றியது என்று சொல்லலாமே : ) !

"இந்த ஆதங்கம் நான் அறிந்த வரை 90% இஸ்லாமியர்களிடம் இருக்கின்றது. எதிர்ப்பவர்களை மீடியா கண்டு கொள்ளவில்லை. அவர்கள் பிழைப்பு நடத்தத்தேவை காண்டோவெர்சி மட்டுமே. இதனால் என் போன்றவர்கள் உங்கள் கண்களில் இருந்து மறைக்கப்படுகின்றோம். இது எங்கள் தவறா??"

என்ன பண்றதுங்கண்ணே...மீடியால சொல்ற 4 பேரு கருத்து தான், பெருவாரியான மக்கள் கருத்து என்பது போன்ற ஒரு போலித் தோற்றம் இருக்குங்களே.

அண்ணே, உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களால், என்னை போன்றவர்களின் மனமும் புத்தியும் கொஞ்சம் தெளிவடையும் சாந்தமடையும் : )

"உங்கள் கண்களில் இருந்து மறைக்கப்படுகின்றோம்"
"ஞாயிற்றைக் கை மறைப்பார் இல்"
: )

தராசு said...

ஹுசைனம்மா,

எந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களை சொல்லுகிறீர்கள்??

ஃபத்வாக்கள் தனிமனித ஆன்மீக மேம்பாட்டுக்காக கொடுக்கப்பட்டால் அதற்குரிய முக்கியத்துவத்தை அடையும். இல்லையேல் இதுவும் பத்தோடு பதினொன்றாக சில நாட்கள் பரபரப்பாக விவாதிக்கப் பட்டு, பின் காணாமல் போய்விடும்.

தராசு said...

கபிலன்,

அப்துல்லா அண்ணனுக்கு எல்லாரும் அண்ணன் தான்.

கருத்துகளை தெளிவாக முன் வைக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

//எந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களை சொல்லுகிறீர்கள்??//

2006 செப்டம்பரில் (2005 அல்ல) இந்தப் பாடலின் நூற்றாண்டு கொண்டாட்டங்களும், அதன் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளையும் குறிப்பிட்டேன்.

ஃபத்வா என்பது, இஸ்லாம் சம்பந்தப்பட்ட (ஆன்மீகம்/ அரசியல் எதுவாகிலும்) விஷயங்களில் ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவிக்க கற்றறிந்த இஸ்லாமிய அறிஞர்களால் கொடுக்கப்படும் தீர்ப்பு.

Fatwa means a ruling issued on a matter that has no straightforward verdict in Islamic sources.

கபிலன், //அது அவரவர் இஷ்டம்.// மிகச்சரி. ஏனெனில் தேசிய கீதம் பாடுவதுகூட நமது இஷ்டம்தான் என்று சுப்ரீம் கோர்ட்டே 1986ல் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

எம்.எம்.அப்துல்லா said...

//அண்ணே, நீங்க அந்த பாட்டு மேட்டர்ல, ஞாயமா பாட்டு எழுதியவர்களைத் தான் உவமேயப் படுத்தி இருக்க வேண்டும்.

//

haa...haa...haa... தப்புதான் :)))

விக்னேஷ்வரி said...

வரலாறைத் தெரிந்து கொள்ள உதவிய நல்ல பதிவு தராசு.

தராசு said...

//@ ஹுஸைனம்மா said.

ஃபத்வா என்பது, இஸ்லாம் சம்பந்தப்பட்ட (ஆன்மீகம்/ அரசியல் எதுவாகிலும்) விஷயங்களில் ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவிக்க கற்றறிந்த இஸ்லாமிய அறிஞர்களால் கொடுக்கப்படும் தீர்ப்பு. //

ஹுசைனம்மா,

போதனிகளில் இரண்டு வகை உண்டு அவை Dos and Dont's.

மனிதனை நல்வழிப்படுத்தும் ஆன்மீக போதனைகள் அன்பாக சொல்லப் படுபவை Dos.
ஆனால் அவைகளுக்கு சரியான் முக்கியத்துவம் தராமல், மனிதன் போதிக்கப் படுகிற ஆன்மீக நெறிகளிலிருந்து விலகிப் போகையில், கடிந்து கொள்வது தான் Dont's.
இந்த ஃபத்வாகள் Dont's வகை.

ஆனால் 2006 ம் ஆண்டில் இதே தியோபந்த் இந்திய அறிவாளிகள் குழுமம் ஃபத்வாக்கள் கொடுத்து, கூத்தடித்து, அதற்காக இஸ்லாமிய பெரியவர்களே கண்ணீர் விட்டதை அகில உலகமே கண்டது.
(வாசியுங்கள் http://www.sepiamutiny.com/sepia/archives/003827.html)

ஆக இன்றைய நாளில் ஃபத்வா என்பது, அதன் முக்கியத்துவத்தையும், ஒழுக்கத்தை வலியுறுத்தும் கண்டிப்பான போதனை குணத்தையும் விட்டு விலகி, ஒரு சிரிப்பிற்குரிய விஷயமாகி விட்டது. இதைத்தான் சகோதரர் அப்துல்லாவும் சொல்லுகிறார். முதல் பின்னூட்டத்தின் முதல் வரிகளை வாசித்துப் பாருங்கள்.

ஆக ஃபத்வாவில் சொல்லப்படுகிறவைகளையெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு ஆமோதிப்பது நமது ஆன்மீக வாழ்விற்கு நல்லதல்ல.

(இந்த பின்னூட்டத்தில் லிங்க் கொடுப்பது எப்படி என கொஞ்சம் சொல்லுங்களேன்).

தராசு said...

வாங்க விக்கி,

வரலாறு என்பது வாசிக்க, வாசிக்க இன்னும் தேடலை உண்டு பண்ணும் ஒரு சமாச்சாரம்.

ஹுஸைனம்மா said...

//ஆக இன்றைய நாளில் ஃபத்வா என்பது, அதன் முக்கியத்துவத்தையும், ஒழுக்கத்தை வலியுறுத்தும் கண்டிப்பான போதனை குணத்தையும் விட்டு விலகி, ஒரு சிரிப்பிற்குரிய விஷயமாகி விட்டது....//

என் கருத்தும் இதேதான். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற கதையாக யார்யாரெல்லாமோ ஃபத்வா கொடுக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டத்தான் அந்தச் சுட்டியைக் கொடுத்தேன்.

//ஆக ஃபத்வாவில் சொல்லப்படுகிறவைகளையெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு ஆமோதிப்பது நமது ஆன்மீக வாழ்விற்கு நல்லதல்ல.//

ஆமோதிக்கவில்லை என்பது கண்கூடு. இப்போதைய காலத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, மற்ற மதத்தினரும் எந்த விஷயத்தையும் ஆராய்ந்தே ஏற்றுக்கொள்கின்றனர்.

சுட்டி கொடுப்பதற்கு உதாரணம்:

"Visit W3Schools"

ஹுஸைனம்மா said...

தராசு,

சுட்டி கொடுக்க நான் கொடுத்த உதாரணம் சரியாக வரவில்லை.

இங்கே போய்ப் பாருங்கள்: http://www.w3schools.com/tags/att_a_href.asp

தராசு said...

ஹுசைனம்மா,

சுட்டிக்கு நன்றி

நாஞ்சில் நாதம் said...

வரலாறைத் தெரிந்து கொள்ள உதவிய நல்ல பதிவு

நாஞ்சில் நாதம் said...

வரலாறைத் தெரிந்து கொள்ள உதவிய நல்ல பதிவு

மணிகண்டன் said...

ஹுசைனம்மா - நீங்கள் கூறுவது 2007 என்று நினைக்கிறேன். அப்பொழுது நடந்த பிரச்சினையின் போது இந்த அமைப்பினர் தாங்கள் எந்த பத்வாவும் கொடுக்கவில்லை என்றும் / தங்களுக்கும் இந்த பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லையென்றும் கூறியவர்கள்.

இப்பொழுது யாரும் இதைப்பற்றி பேசாதபோது fatwa கொடுத்துள்ளது ஏதோ ஒரு ஆதாயம் கருதியே இருக்கவேண்டும். என்னவென்று தான் தெரியவில்லை.

தராசு said...

வாங்க நாஞ்சிலண்ணே,

வந்ததுக்கு நன்றி.

வரலாறு நமக்கு பிடிச்ச பாடம்ணே.

தராசு said...

வாங்க மணிகண்டன்,

இதுல ஆதாயம் என்னான்னு சொல்றது????

பெசொவி said...

The dictionary meaning of
ANTHEM: n. 1 elaborate choral composition usu. based on a passage of scripture. 2 solemn hymn of praise etc., esp. = *national anthem.

SONG : n. 1 words set to music or meant to be sung. 2 vocal music. 3 musical composition suggestive of a song

We know "Jana Gana Mana" is our National Anthem and "Vande Mataram" is National Song.

So, Anthem is more important for a patriot than a song. So, I feel it is not worthwhile to force a person to sing a National Song to prove his patriotism.

Definitely showing disrespect to the National Anthem is a crime in the course of law while that to the National Song need not be so.

Having said that, we all know majority of Hindus and majority of Muslim Brethren do respect this Country and are showing brotherhood to every other Indian irrespective of his caste, creed or religion.
So, come on, Brethren, let us try to enlighten our illiterates regarding this divisive efforts of the religious fanatics (be it Islam or the Hindutva) to divide us in the name of religion.
LONG LIVE OUR INDIA