Wednesday, November 11, 2009

ஜுகல்பந்தி – 11 – 11 – 2009 – அமெரிக்க பொங்கல்.

அமெரிக்காவில் பொங்கல் விழா

17 ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் பல பகுதிகளில் கிளம்பிய பகுத்தறிவு வாதிகள், மத குருமார்களை கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். பாரம்பரியங்கள், சடங்குகள், மூட நம்பிக்கைகள் என சர்ச்சின் குருக்களால் போதிக்கப்பட்ட எல்லாமுமே கேள்விக்குள்ளாக்கப் பட்டன. இப்படியே கருத்து வேருபாடுகள் தொடர்ந்து, நீயா, நானா வரை வந்த இந்த பகுத்தறிவு வாதம், சர்ச்களில் பிரிவினைக்கு வித்திட்டது. அதே சமயத்தில் அமெரிக்க கண்டத்தையும் சில முதலாளிகள் புரட்டிப் பார்க்க ஆரம்பித்த காரணத்தால் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் பெருகிக் கொண்டிருந்தது. இங்கிலாந்தில் சர்ச் எழுதும் கவிதைக்கு எதிர்கவிதை எழுதி யாரும் உயிரோடு இருக்க முடியாது என்ற காரணத்தினாலும், அமெரிக்காவின் நிலத்திலிருக்கும் சிறப்புகளைப் பற்றி அவ்வப்பொழுது அங்கு சென்று வரும் கப்பல்கள் கதை கதையாய் சொல்வதாலும், இங்கிலாந்தின் ஒரு கூட்டம், அலை கடலென ஆர்த்தெழுந்து அமெரிக்கா கிளம்பியது. இங்கிலாந்திலிருந்து கிளம்பியதின் உண்மை நோக்கமென்னவோ சர்ச் உடனான பிணக்கு தான் காரணமென்றாலும், அமெரிக்க கனவும் (ஹூக்கும், அப்பயுமா) சம அளவில் வசீகரித்ததென்னவோ உண்மைதான்.

1620 ஆம் ஆண்டு, செப்டெம்பர் 6 ம் தேதியோ அல்லது 16 ம் தேதியோ,(சரியான தேதியைக் குறித்த குழப்பங்கள் வரலாற்றுப் பக்கங்களில் இன்னும் இருக்கிறது) இங்கிலாந்திலிருந்து கிளம்பிய “மே ஃபிளவர்” என்ற கப்பலில் ஏறிய 102 பயணிகள் தங்கள் பயணத்தை துவக்கினர். கடும் பனிப் பொழிவு, கப்பலை புரட்டிப் போட துடிக்கும் கடல் காற்று என எல்லா சிரமங்களுக்கு மத்தியிலும் 66 நாட்கள் பயணித்து, அமெரிக்காவின் கிழக்கு பகுதியிலிருக்கும் பிளை மவுத் என்ற ஊருக்கு இவர்கள் வந்து சேர்ந்தனர். இந்த 66 நாட்களில் கப்பலிலேயே இருந்த ஒரு நிறைமாத கர்ப்பிணி ஒரு குழந்தையையும் பெற்றிருந்தாள்.

தரை இறங்கியதும், அங்கு உறைந்து கிடந்த பனியும், வெற்றிடமும் மட்டுமே அவர்களை வ்ரவேற்றது. உண்ண உணவு இல்லை, குவியலாக வைக்கப் பட்டிருந்த மணற்குன்றுகளின் மீது படிந்திருந்த பனிக்கட்டிகளை எப்படியோ உடைத்தெடுத்து, மண்ணைக் கிளறி பார்த்தால், அதனுள் மக்காச்சோள கதிர்கள் புதைத்து வைக்கப் பட்டிருந்தன. அடித்ததடா லாட்டரி என குதூகலித்தவர்களுக்கு ஒரு சில குன்றுகளிலிருந்து எலும்புக் கூடுகளும் கிடைத்தன. எப்படியோ, உண்ணக் கிடைத்ததை எண்ணி சந்தோஷப் பட்டு உண்டு களித்து, பசியின் தாக்கம் போன பின் தான் அந்த பயங்கரம் அவர்களுக்கு உறைத்தது. மண்ணுக்குள் புதைக்க வேண்டுமென்றால், அதை புதைத்தவர்கள் இங்குதான் இருக்க வேண்டும். ஆஹா, பசி மயக்கத்தில் அடுத்தவன் சோத்தை ஆட்டையப் போட்டுட்டமா, இனி என்னவெல்லம் நடக்கப் போகுதோ என பயந்திருந்தவர்கள் மீது, அந்த மண்ணின் மைந்தர்களான வெள்ளந்தி மனிதர்கள் அன்பையே பொழிந்தனர். ஒரு வழியாக அவர்களின் தயவில் உயிர் பிழைத்த ஆங்கிலேயர்கள், அந்த பயணத்தின் வெற்றிக்காகவும், உள்ளூர் ஆசாமிகளின் கண்களில் கிடைத்த தயவிற்காகவும், இறைவனுக்கு நன்றி சொல்லி ஆரம்பித்ததுதான் ‘நன்றி சொல்லும் பண்டிகை”. பின்னாளில் இவர்களுக்கு சோறு போட்டு கட்டி அணைத்த அந்த வெள்ளை மனசுக் காரர்களை, குத்தி வகுந்தெடுத்து விட்டு, ஆங்கிலேயர்களுக்கே உரிய அந்த குரூர புத்தியுடன் எல்லாவற்றையும் கபளீகரம் செய்தது வேறு கதை.

இப்படியாய் ஆரம்பித்த “Thanks Giving Day” கொண்டாட்டங்கள் பின்னாளில் ஒரு அறுவடைப் பண்டிகையாக மாறிப் போனது. விளை நிலத்தின் பலன்களை கடவுளுக்கு படைப்பது என்பது ஒரு சம்பிரதாயமாகிவிட்டது. மே ஃபிளவர் கப்பல் வந்து இங்கு கரை சேர்ந்தது ஒரு நவம்பர் மாதத்து வியாழக் கிழமையாயிருந்ததோ என்னவோ, ஒவ்வொரு நவம்பர் மாதத்தின் கடைசி வியாழக் கிழமைகளிலும் இந்தப் பண்டிகை கொண்டாடப் படுகிறது.

முழு வான்கோழியை அப்படியே தீயில் வாட்டி எடுத்து, வீட்டில் உள்ள அனைவரும் குடும்பமாக குளிருக்கு இதமாயிருக்க இரவில் தீமூட்டி ஒரு வட்டத்தில் அமர்ந்து, பழங்கள், காய்கறிகள், மதுவகைகள் என எல்லாவற்றையும் புசிப்பதும் குடிப்பதும் மட்டுமே இன்று நிலைத்திருக்கிறது.

புசிப்பதற்கும், குடிப்பதற்கும் இது ஒரு காரணமும் தருணமுமாயிருப்பதினால், நம்மூர் பொங்கலைப் போலவே நிலத்தில் அறுவடை செய்தவனும் சரி, செய்யாதவனும் சரி எல்லாரும் கொண்டாடுகிறார்கள்.

பாகிஸ்தானா- பட்டாசுக்கடையா

எதோ தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கறமாதிரி, குண்டு வெடிச்சுகிட்டிருக்காங்க. பெஷாவர் நகரில் நகர மேயரே சிவலோக பிராப்தி அடைந்திருக்கிறார். இங்குதான் என்பது இல்லை, இதில்தான் என்பது இல்லை. காரில், பஸ்ஸில், சைக்கிளில், ராணுவ முகாமுக்கு அருகில், இன்னும் மக்கள் கூடும் இடங்கள் எல்லாவற்றிலும் குண்டுகள் வெடிக்கின்றன. மரணமும், ஓலங்களும், அறிக்கைகளும் த்தூ…..,

அங்குள்ள அரசியல் வியாதிகள் மக்கள் கவனத்தை திசை திருப்ப, இந்தியா தீவிரவாதிகளுக்கு துணை நின்று பாகிஸ்தானில் குண்டு வைக்கிறார்கள் என்று கத்திப் பார்த்தார்கள். ஆனால் எதுவும் எடுபடவில்லை. குண்டுகள் வெடிக்கத்தான் செய்கிறது, காமன் மேன் கதறத்தான் செய்கிறான்.

இதைத்தான் அய்யன் வள்ளுவன் சொன்னானோ::

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் – தமக்கின்னா
பிற்பகல் தாமே விளையும்.
சாப்பாடு

கேபிள் அண்ணன் மாத்திரம் கொத்துப் புரோட்டாவுல எப்பப் பார்த்தாலும் சாப்பாடு சாப்பாடுன்னு ஒரு ஐட்டம் போட்டற்ராரு, இதா நாங்களும் எழுதுவம்ல….,

இங்க வட நாட்ல நொந்துகிட்டிருக்கறததான் எழுத முடியும். கடவுள் மாத்திரம் உருளைக்கிழங்கை படைக்காம இருந்திருந்தார்னா, வட இந்தியாவுல முக்காவாசிப்பேர் பசியிலயே செத்துப் போயிருப்பான். அய்யய்யோ, எதுக்கெடுத்தாலும் ஆலு, ஆலு, ஆலு, ச்சே, ரம்மி ஆட்டத்துல ஜோக்கர் சொருகுறமாதிரி, எதுல வேண்ணாலும் உருளைகிழங்கை சொருகி விட்டற்ராய்ங்க. எத்தனை நாளைக்குத்தான் மனுஷன் இந்த ஒரே ஐட்டத்த சாப்பிட முடியும். ம்ஹூம், கார்க்கிய மாதிரி கூடிய சீக்கிரம் எஸ்கேப்பாகலாம்னு பார்க்கிறேன்.

ங்கொய்யால பக்கங்கள்

நாலுகாசு கையில இருந்தா பணக்காரங்கறான்,
நாலு வார்த்தை பேசிப்புட்டா மேதாவிங்கறான்,
நாலு எழுத்து சேர்த்து எழுதுனா எழுத்தாளர்ங்கறான்,
நாலு பேரு கூட நடந்தா தலைவருங்கறான்,
ங்கொய்யால
மொபைலு எத்தனை பெருசா இருந்தாலும்
சிம்கார்டு ஒரே சைசுதாண்டா.

12 comments:

Raju said...

தல, "ங்கொய்யால பக்கங்கள்" வெற்றி நடைபோடுகிறது.
மெய்யாலுமே டாப் டக்கரு.

எம்.எம்.அப்துல்லா said...

ஏன்ணே வடநாட்ல வாய்வுத் தொல்லை யாருக்குமே இல்லையா??

:)

Muthukumar said...

ங்கொய்யால பக்கங்கள் Super anne....

Unknown said...

//.. ம்மி ஆட்டத்துல ஜோக்கர் சொருகுறமாதிரி, ..//

அடடா என்னா ஒரு கற்பனை..

ங்கொய்யால, ங்கொய்யால தான்..

தராசு said...

ராஜூ,

டேங்சு.

தராசு said...

அப்துல்லா அண்ணே,

அது ஒரு தனி வேதனண்ணே.

தராசு said...

வாங்க நாஞ்சில் அண்ணே,

டேங்சு

தராசு said...

வாங்க முத்துகுமார்

டேங்சு.

தராசு said...

வாங்க பட்டிக்காட்டான்.

டேங்சு.

விக்னேஷ்வரி said...

கடவுள் மாத்திரம் உருளைக்கிழங்கை படைக்காம இருந்திருந்தார்னா, வட இந்தியாவுல முக்காவாசிப்பேர் பசியிலயே செத்துப் போயிருப்பான். //
ஹாஹாஹா... சரி தான். நானும் தினமும் சாப்பிட்டு நொந்து போறேன்.

அனைத்துத் தகவல்களும் அருமை. ங்கொய்யால பக்கங்களும் தான்.

தராசு said...

வாங்க விக்கி

டேங்சு.

DHANS said...

ரம்மி ஆட்டத்துல ஜோக்கர் சொருகுறமாதிரி, எதுல வேண்ணாலும் உருளைகிழங்கை சொருகி விட்டற்ராய்ங்க.//


supera soneenga...... one of my colleague used to say the same when we stayed together..

me: hey XXX what we will do tonight

he: we will do aaloo yaar

me: poda....... ( neengale fillpanikonga, he dont know tamil)