Tuesday, October 20, 2009

மூச்சு முட்ட முப்பது நாட்கள்

பன்னாட்டு நிறுவனமாம்,
பல மொழிகள் பேசுவார்களாம்,
பளபளக்கும் மேசைகளும்,
உடல் சிறுத்த கணிணிகளும்,
கண்ணாடி அறைகளுக்குள்
கைதிகளாய் மனிதர்களும்.

வாடகைக்கு உடல்கள் இங்கு
வரிசையாய் நிற்பதுண்டு.
மூளையை முடக்கி வைத்த
முண்டங்கள் முக்கியங்கள்.
சொல்வதை செய்து விடு
சொல்ல நினைத்ததை மறந்து விடு.

சுயம்புகள் தூரப் போங்கள்,
சிந்திப்பவர் ஒழுக்கம் கெட்டவர்,
ஆமாம் சாமி தாரக மந்திரம்,
சாப்பிட மட்டும் வாயைத்திற,
குலுக்க மட்டுமே கையை உயர்த்து,
அவசியப்பட்டால் அசைந்து கொள்.

கைநாட்டு போட வேண்டாம்,
கழுத்திலொரு பட்டை தருவோம்.
புவியின் சுழற்சி முப்பது முடிந்தபின்
முடிந்து தருவோம் முடிப்பு ஒன்று,
மூச்சு விடாமல் வாங்கிக் கொள்.

11 comments:

பிரபாகர் said...

அண்ணே சொல்றதெல்லாம் சரி. ஆனாலும் நல்ல சம்பளம் வாங்கிட்டு சந்தோஷமாத் தானே இருக்காங்க...

பிரபாகர்.

Yousufa said...

ஏன் அவ்வளவு மூச்சுமுட்டற மாதிரியான இடத்தில இருந்து கஷ்டப்பட்டுகிட்டு இருக்கீங்க‌? பேசாம விட்டுட்டு வெளியே வந்துற வேண்டியதுதானே!!

தராசு said...

வாங்க பிரபாகர்,

வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

வாங்க ஹுசைனம்மா,

வெளில வர்ற வழி தெரியாம நிறைய பேர் முழிச்சுகிட்டிருக்காங்க.

Cable சங்கர் said...

வேலைன்னா மூச்சு முட்றதும்.. வேணம்னா காசு இல்லா முழி பிதுங்கறதும், சகஜம் தானேப்பா.. விட்ரா..விட்ரா

Unknown said...

//.. மூளையை முடக்கி வைத்த
முண்டங்கள் முக்கியங்கள்.
சொல்வதை செய்து விடு
சொல்ல நினைத்ததை மறந்து விடு. ..//

:-(

தராசு said...

கேபிள் அண்ணே,

டேங்சு.

தராசு said...

வாங்க பட்டிக் காட்டான்,

டேங்சு

anujanya said...

ஆமா, எப்ப எங்க ஆபிசுக்குள் வந்து என்னை பார்த்தீங்க?

அனுஜன்யா

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லா இருக்கு. ரொம்ப...

Thamira said...

அனுஜன்யா said...
ஆமா, எப்ப எங்க ஆபிசுக்குள் வந்து என்னை பார்த்தீங்க?//

ரிப்பீட்டு.! ரசனையான பின்னூட்டங்களையெல்லாம் தொகுக்கவேண்டுமய்யா.! என்னா டைமிங்.

அப்புறம் எதுக்கு இப்ப இந்த பதிவு.? ஏற்கனவே நொந்துபோய் கிடக்குறேன். வேற டாபிக்கே கிடைக்கலையாய்யா.. சை.!