Monday, October 26, 2009

நமக்கெதுக்குங்க இந்த வம்பு??????

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்று நடுவர்கள், ஒரு தொகுப்பாளினி என்ஆட்டம் நன்றாகத்தான் களை கட்டுகிறது. ஆனால், நிகழ்ச்சியில் பேசப் படும் மொழியை கேட்டால் அருவருப்பாக இருக்கிறது. தமிழ் பாடல்கள் பாடப் படுகின்றன. சித்ரா என்னும் நடுவர், முடிந்தவரை தமிழில் பேசுகிறார். அவர் வேறு மொழிக்காரர் என்பதால் அதை பொறுத்துக் கொள்ளலாம். மனோ என்பவர் தமிழில் பேசுகிறார், ஆனால் கொஞ்சமாவது ஆங்கில கலப்படம் இல்லாமல் பேச திணறுகிறார். மூன்றாவதாக ஒரு நடுவர், அவர் பேசுவது என்ன மொழியென்றெ தெரியவில்லை, ஒரு பாடல் என்றால் அதில் சரணம், அனுபல்லவி, பல்லவி என்பவை இருக்கும். ஆனால் இவர் ச்ச்சரணம் என்று கஷ்டப்பட்டு உச்சரிக்கிறார். அதிகமாக புரியாத ஒரு மொழியில் பேசுகிறார். “ நீங்க நன்னா பாடினேள், அந்த top ல போறச்சே, உங்க voice வந்து flatter ஆகாம, steady ஆ இருக்கறது, அந்த ச்ச்ச்சரணத்தோட third word ஐ pronounce பண்ணும் போது ஒரு குட்டி jerk வர்றது. You will have to take note of these குட்டி குட்டி things.” என்று ஒரு புரியாத மொழியில் பேசுகிறார். சீய் தூ என்று துப்ப வேண்டும் போல் உள்ளது.

ஒரு பெண்குழந்தை போட்டியில் தோற்று விட்டதாக நடுவர்கள் தீர்ப்பு சொன்னதும், குழந்தைக்கே உரிய ஏமாற்றங்களுடன் அந்தக் குழந்தை கண்ணீர் வடிக்க, தொகுப்பாளினி அந்தக் குழந்தைக்கு ஆறுதல் சொல்கிறாராம். “அய்யய்யோ இதுக்கெல்லாமா அழுவாங்க, பாருங்க உங்க beautiful cheeks ல tears எல்லாம் roll ஆகி உங்க make up எல்லாம் வந்து spoil ஆகுது பாருங்க” மறுபடியும் காறி தூ தூ தூ

எது எப்படியோ தொலைக்காட்சி காரங்களுக்கு பணம் வந்தா சரிதானே, நமக்கெதுக்குங்க வம்பு?????

***********************************************************************************
இன்று மறுபடியும் இந்திய ஊடகத்தின் மற்றொரு அதிகப் பிரசங்கித்தனமான லொள்ளு:

அமெரிக்க ராணுவத்துடன் ஒரு கூட்டுப் பயிற்சியில் இந்திய ராணுவத்தினர் ஈடு பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள ஜான்சி நகரின் வெளிப்புறங்களில் ஒரு காடும் மலையும் சார்ந்த பகுதியை தேடிப் பிடித்து பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சியை நேரடியாக தொலைக் காட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. ஒரு இந்திய தலைவரையோ, அல்லது விருந்தினராக வந்துள்ள வெளிநாட்டு அரசாங்க முக்கிய மனிதரையோ, சீருந்தில் போகும் பொழுது, திடீரென தீவிர வாதிகள் தாக்கி விட்டால் அவர்களை எப்படி முறியடிப்பது என்பது இன்றைய நாளின் பயிற்சி. தொலைக்காட்சியின் நேர்முக வர்ணனை, இதோ முக்கிய விருந்தினர் வந்து கொண்டிருக்கிறார். அவரது சீருந்தை நோக்கி தீவிரவாதிகள் போகிறார்கள், தாக்குகிறார்கள், திடீரென ஒரு ஹெலிகாப்டர் வருகிறது, அதிலிருந்து அதிரடிப் படையினர் குதிக்கிறார்கள், அவர்கள் தீவிர வாதிகளை பதிலுக்கு தாக்க எப்படி வியூகம் அமைக்கிறார்கள் என நீங்கள் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதோ துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம், தீவிர வாதிகளை நோக்கி அலை அலையாக அதிரடிப் படையினர் முன்னேறுகின்றனர். கடைசியில் விருந்தினர் மீட்கப் பட்டார்.

அடேய் வெண்ணைகளா, மும்பை உல்லாச ஹோட்டலில் நீங்கள் நடத்திய அருவருப்பான நாடகத்தினால் எத்தனை வீரர்களை நாம் இழந்தோம் தெரியுமா, அதைப் பற்றிய குற்ற உணர்ச்சி ஒரு அணுவளவாவது இருக்கிறதா உங்களுக்கு? இப்பொழுது மறுபடியும் ஒரு ராணுவ நடவடிக்கையை படம் பிடித்து உங்கள் கஜானாவை நிரப்ப கிளம்பியிருக்கிறீர்களே, இந்தக் காட்சியை அந்த தீவிர வாதிகளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றிய கவலை கொஞ்சமும் இல்லையா உங்களுக்கு??? ச்சீய், தூ தூ, தூ, எப்படா திருந்துவீங்க நீங்கெல்லாம். ??????

அதிகமா பேசுனா ஆட்டோ வந்துருமோ, நமக்கெதுக்குங்க இந்த வம்பு????

***********************************************************************************
சமீபத்தில் நடந்து முடிந்த மூன்று மாநில சட்ட சபை தேர்தல்களிலும் வித்தியாசமான செய்தியை மக்கள் அரசியல்வியாதிகளுக்கு சொல்லியிருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று மதர்ப்பில் திரிகிறார்ப் போல் தெரிகிறது. ராகுல் காந்தியின் இளமைக் கவர்ச்சி கொஞ்சம் கை கொடுக்கிறதோ, அல்லது உண்மையாலுமே மக்கள் காங்கிரஸ் கட்சியை நம்ப ஆரம்பித்து விட்டார்களோ தெரியவில்லை. ஆமாம், காங்கிரஸ் ஜெயித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் சந்தடி சாக்கில், மகாராஷ்டிர மக்கள் ராஜ் தாக்கரே என்ற ஒரு பாம்புக்கும் பால் வார்த்திருக்கிறார்கள். எப்படி திராவிடம் பேசியே தங்கள் குடும்பத்தை வளர்க்க தென்னாட்டில் ஒரு கும்பல் உண்டோ, அப்படியே மண்ணின் மைந்தர்கள் என்ற ஒரு பிரிவினை வாதம் பேசி அரசியல் செய்ய ஒரு நச்சுப் பாம்பு கிளம்பியிருக்கிறது. இன உணர்வுகளை தூண்டி விட்டு தீப்பொறி பறக்க பேசி 15 இடங்களில் இந்தப் பாம்பு படமெடுத்திருக்கிறது. என்ன ஆகப் போகுதோ???????

அரசியல்னா அப்பிடி இப்படி இருக்கத்தானுங்க செய்யும். பாத்துட்டு ஒரு ரெண்டு நிமிஷம் புலம்பிட்டு போக வேண்டியது தான். நமக்கெதுக்குங்க இந்த வம்பு??????

************************************************************************************

21 comments:

ஊடகன் said...

super singer மட்டுமல்ல அதே போல் நடக்கின்ற அத்தனை நிகழ்ச்சியும் கேவலமாக தான் தமிழை சித்தரிக்கிறார்கள்..........தொடருங்கள்...........

பிரபாகர் said...

அண்ணே படிச்சிட்டு டென்ஷன் ஆகுதுண்ணே... தனியே ஒரு பதிவு எழுதிகிட்டிருக்கேன். டிவி நம்மள சாகடிக்கறதப்பத்தி...

நானும் உங்க கொதிப்புல சேர்ந்துக்கறேன்.

பிரபாகர்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

படிச்சுட்டு ஏதாச்சும் சொல்லலாம்தான்... ஆனா நமக்கெதுக்குங்க வம்பு :)

தராசு said...

வாங்க ஊடகன்,

வந்ததுக்கு நன்றி.

தராசு said...

வாங்க பிரபாகர்,

எனது கோபமெல்லாம் தமிழ் தெரியாத ஒருத்தர் வந்து தமிழை இப்படி பேசினால், பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு தமிழர் வந்து, உங்க cheeksல tears எல்லாம் roll ஆகுதுன்னா, வெட்டணும் போல இருக்கு.

தராசு said...

வாங்க குருஜி,

நீங்களே இப்படி ஒதுங்கி போனா எப்படிங்க???

வந்ததுக்கு டேங்சு.

கார்க்கி said...

தலைப்பு சரிதான்

நர்சிம் said...

’என்னத்தச் சொல்ல’வும் கரெக்ட்டா இருக்கும் இந்த பதிவுக்கு

அத்திரி said...

//எப்படி திராவிடம் பேசியே தங்கள் குடும்பத்தை வளர்க்க தென்னாட்டில் ஒரு கும்பல் உண்டோ,//

ஆட்டோ அனுப்பட்டுமா

Cable Sankar said...

பின்னூட்டம் போட்டா ஆட்டோ வருமோ..?:(

தராசு said...

வாங்க கார்க்கி,

டேங்சு

தராசு said...

ஆமாம் தலைவரே,

என்னத்தை சொல்ல போங்க

ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க, டேங்சு.

தராசு said...

அத்திரி அண்ணே,

நமக்குள்ள என்னன்னாலும் பேசித் தீத்துக்கலாம்ணே, எதுக்கு இப்படி பயமுறுத்தறிங்க.

தராசு said...

கேபிள் அண்ணே,

பின்னூட்டம் போடலைன்னாதான் ஆட்டோ வரும்.

டேங்சு

நாஞ்சில் நாதம் said...

போட்டியில தோத்தா அழ வேண்டும் அப்படிங்கற கேவலமான கருத்தை திரும்ப திரும்ப காட்டுறானுக. கடுப்பா இருக்கு. குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையே போய்விடும்

//தோற்று விட்டதாக நடுவர்கள் தீர்ப்பு சொன்னதும்//

சில குழந்தைகள் சகஜமாக அதை எடுத்தாலும் இவிங்களே வலிய அழ வச்சுருவாங்க

அனியாயத்தை கண்டா பொங்குறீங்க ஓவர் கோவம் உடம்புக்கு ஆகாது. காமன்மேன் ... காமன்மேன்... காமன்மேன்

தராசு said...

வாங்க நாஞ்சில் அண்ணே,

கோபம் வரத்தாங்க செய்யுது. என்ன பண்றது...., அவங்கள நிறுத்தச் சொல்லுங்க நானும் நிறுத்திக்கறேன்.

டேங்சு.

விக்னேஷ்வரி said...

ஐயோ, தமிழ் இனி மெல்லச் சாகும்ங்குறது சரிதான்.

உங்களோட சேர்ந்து நானும் துப்பிக்கிறேன்.

ராகுல் காந்தியின் அரசியல் பிரவேசம் வரவேற்கும்படியாகவே உள்ளது. அவர் நேரடியாக மக்கள் இருக்கும் இடம் சென்று மக்களோடு கலந்து மக்கள் பிரச்சனைகளை அறிகிறார். இது அவசியம் பாராட்டப்பட வேண்டியது. ஆனால் ராஜ் தாக்கரே கிர்ர்ர்ர்ர்

எல்லா வம்பையும் நீங்களே வாரி அணைச்சிக்கிட்டு நமக்கெதுக்கு வம்பு வேறையா.... ம்ம்

தராசு said...

வாங்க விக்கி,

ஆமாங்க நமக்கெதுக்கு இந்த வம்பு????

வந்ததுக்கு டேங்சு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

த்தூ.! ன்னு தலைப்பு வச்சிருக்கலாம்.

r.selvakkumar said...

மிக்ஸர் . . .நல்லா இருக்கு.

KaveriGanesh said...

நச் நச் நச்