Thursday, October 15, 2009

அதாவது என்ன சொல்ல வ்ர்றேண்ணா.....

அதாவது என்ன சொல்ல வ்ர்றேண்ணா, ஒரு கோடு, அது நேரா இருக்குதாண்ணு சொல்றதுக்கு ஒரு கோணயான கோடு பக்கத்துல இருக்கணுமில்லையா, அதாவது கோணையான கோட்டைப் போல இல்லாததுனால இது நேரான கோடா தெரியுது. ஆனா உண்மையா அது நேரா இருக்குதா இல்லயாண்ணு எதை வெச்சு சொல்றது. எனக்கு நேரா தெரியறது உங்களுக்கு கோணலா தெரியுது.

இப்படித்தாங்க இருளும் வெளிச்சமும்னு ஒருத்தர் பேசுனாரு, அய்யா வெளிச்சம் எவ்வளவு இருக்குதுன்னு சொல்லீரலாம், ஆனா இருள் எவ்வளவு இருக்குதுன்னு சொல்ல முடியுமா, ஏன்னா இருள் என்னைக்குமே இருக்கறது, வெளிச்சம்தான் கொஞ்சங் கொஞ்சமா உருவாகி அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சு போகுது, ஆக, வெளிச்சம்னு ஒண்ணை சொல்லணும்னா, இருளின் இல்லாமைதான் வெளிச்சம்னு சொல்லலாமா???

அப்புறம் நல்லவன் கெட்டவன்னு சொல்றாங்க, எவன் நல்லவனோ அவன் முழுசா நல்லவனான்னு எப்படி சொல்றது, அதாவது ஒரு கெட்டவனப் போல இல்லாததுனால அவன் நல்லவனா தெரியறான், ஆனா நல்லவன்னா இன்னான்னா, யாரும் சொல்ல மாட்டேங்கறாங்க, ஆனா, இதுலயும் பாருங்க, ஒரு கெட்டவனப் போல அவன் இல்லாததால அவன் நல்லவனா, இல்ல நிஜமாவே நல்லவனா இருக்குறதுனால அவன் நல்லவனா?????

இதெல்லாம் எதுக்கு சொல்ல வர்றேண்ணா, அதாவது உலகத்துல, அதாங்க நாம வாழற பிரபஞ்சத்துல, தினமும் பாருங்க, அதுக்காக எங்கன்னு திரும்பி பாக்காதீங்க, நேராவே பாருங்க, ஆங், என்ன சொன்னேன், இதை எதுக்கு சொல்றேண்ணா, அதாவது…………………………………….

அட விடுங்க சாமி, போய் புள்ள குட்டிகளோட தீபாவளி கொண்டாடறதப் பாருங்க, நாந்தான் எதோ எழுதிகிட்டே போறேன்னா, நீங்களும் சும்மா வெட்டியா உக்காந்து இதையெல்லாம் படிச்சுகிட்டு……………..

தீபாவளி வாழ்த்துக்கள்.

23 comments:

பிரபாகர் said...

ம்... அண்ணன் எதோ எழுதியிருக்காருன்னு ஆர்வமா படிச்சா, இதுவம் வேணும் இன்னமும் வேணும்...

பிரபாகர்.

கார்த்திகைப் பாண்டியன் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் அண்ணே.. :-)))))))

தராசு said...

வாங்க பிரபாகர், ஏண் கோவிச்சுக்கறீங்க, அதான் லேபிள்லயே மொக்கைன்னு போட்டிருக்கம்ல.

சரி, சரி, தீபாவளியை நல்லா கொண்டாடுங்க.

தராசு said...

அண்ணே,

பாண்டியன் அண்ணே,

டேங்சுண்ணே.

விக்னேஷ்வரி said...

என்னென்னவோ ட்ரை பண்ணிருக்கீங்க. :)
தீபாவளி நல்வாழ்த்துகள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா போடறாங்கய்யா மொக்கை :)

அறிவிலி said...

ஒரு பதிவு நல்ல பதிவா இல்லையானு எப்படி முடிவு பண்றது.ஒரு மோசமான பதிவ போல இல்லைன்னா அது நல்ல பதிவுதான். அப்படி பாக்கும் போது இது நல்ல பதிவுதான். :)))))

தீபாவளி வாழ்த்துகள்

Prathap Kumar S. said...

அய்யா... உங்க அட்ரஸ் தாங்க...ஒரு ஆட்டோ அனுப்பி வைக்கிறேன்...

அத்திரி said...

ஆணியே புடுங்க வேண்டாம்ணே .....


இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்

Radhakrishnan said...

ஹா ஹா! என்ன சொல்றதுனு புரியாமத்தானு பார்த்தா, தீபாவளி வாழ்த்து சொல்றதுக்கா இத்தனை அலப்பறை.

இனிய தீபாவளி வாழ்த்துகள்.

எம்.எம்.அப்துல்லா said...

அவ்வ்வ்வ்வ்வ்

கார்க்கிபவா said...

vetri vetri.. vetri namakke..

Muthukumar said...

ஹ்ம்ம் நல்லாதான போய்கிட்டு இருந்திச்சு...ஏன் இப்பிடி :-)

தீபாவளி வாழ்த்துக்கள்

தராசு said...

வாங்க விக்னேஷ்வரி,

நாங்க இப்படித்தான், எதாவது சொல்லீட்டே இருப்போம்.

தீபாவளி வாழ்த்துக்கள்.

தராசு said...

நாஞ்சில் ஐயா,

வொய் த டெம்ப்ளேட்டு,

வாழ்த்துக்கள்.

தராசு said...

குருஜி,

எப்பவாவது இப்படியும் ஒண்ணு இருக்கணுமில்ல.

வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

அறிவிலி,

அப்படியா,

தீபாவளி வாழ்த்துக்கள்.

தராசு said...

அய்யா பிரதாப்பு,

ஏனப்பு, நம்ம மேல இத்தன காண்டு,

வந்ததுக்கு டேங்சு.

தீபாவளி வாழ்த்துக்கள்.

தராசு said...

அத்திரி அண்ணே,

எங்க போனீங்க இத்தன நாளா?

தீபாவளி வாழ்த்துக்கள்

தராசு said...

ராட்ஸ்,

நாங்க எல்லாத்துலயுமே ஒரு அலப்பறயோடத்தான் இருப்போம்.

வந்ததுக்கு டேங்சு.

தீபாவளி வாழ்த்துக்கள்

தராசு said...

அப்துல்லா அண்ணே,

நல்ல நாளும் அதுவுமா அழுகப்படாது.

தீபாவளி வாழ்த்துக்கள்

தராசு said...

கார்க்கி,

டேங்சு.

தீபாவளி வாழ்த்துக்கள்

தராசு said...

வாங்க முத்துக் குமார்,

வந்ததுக்கு டேங்சு.

தீபாவளி வாழ்த்துக்கள்