Tuesday, June 16, 2009

மல்லாக்கப் படுத்து யோசிச்சப்போ !!!!!!!

நண்பர் ஒருத்தரு ஒரு இ மெயில் அனுப்பி இருந்தாரு. (என்னது ஒரு ஊர்ல ஒரு ராஜாங்கற மாதிரி இருக்கா, இருங்கையா, சொல்லி முடிக்கறதுக்குள்ளா நொய் நொய்ன்னுட்டு),

அதாவது, ATM ல பணம் எடுக்கும் பொழுது,

  1. யாராவது உங்களை பயமுறுத்தி பணம் பிடுங்க பார்த்தாலோ,
  2. துப்பாக்கி கொண்டு பயமுறுத்தி, உங்களின் தனி அடையாள எண்ணை உங்களிடமிருந்து பெற முயற்சித்தாலோ,
  3. உங்கள் கார்டை பலவந்தமாக உங்களிடமிருந்து பறித்தாலோ,
  4. வில்லு பட CD ஐ காட்டி பயமுறுத்தினாலோ,

இன்னும் நிறைய லோ, லோ, லோ,

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உங்கள் தனிநபர் அடையாள எண்ணை பின்புற வரிசையில் அழுத்துங்கள். அதாவது உங்கள் எண் 1234 என்று இருந்தால், நீங்கள் 4321 என்று அழுத்தி விடுங்கள். அப்பொழுது ATM இயந்திரத்திலிருந்து பணம் வெளியே வருமாம். ஆனால் பாதியில் சிக்கி நின்றுவிடுமாம். அது மட்டுமில்லாமல் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு மின்னல் வேகத்தில் தானாகவே " எங்கள் வாடிக்கையாளர், இந்த நகரத்தின், இத்தானாவது தெருவில், இத்தனாவது ATM இயந்திரத்தின் அறைக்குள் சமூக விரோதிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார்" என்று செய்தி அனுப்பி விடுமாம். இதத்தான் அந்த இ மெயில்ல எழுதி இருந்தாரு.

மல்லாக்கப்படுத்து இதை இப்படியே கற்பனை பண்ணிப் பாத்தா,

  1. எனக்கு நம்பரு 1234 ன்னு இருந்தா, வேற யாருக்காவது 4321 ன்னு இருக்காதா, அப்ப நான் 4321ன்னு அமுத்துனா, நம்பரை சரியா அடிடா பேமானின்னு ATM திட்டாதா?
  2. பணம் பாதி வெளில வந்து சிக்கிக்கிடுச்சுன்னா, எந்தலையில துப்பாக்கி வெச்சிருக்கற அன்பு சகோதரர் கபாலி, "சரிடா இது இவன் தப்பில்ல, மெஷினோட தப்பு"ன்னுட்டு, என் கூட கை குலுக்கிட்டு போயிருவாரா?
  3. எத்தனை காவல் நிலையங்கள் அருகிலிருக்கும் ATM இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன?
  4. எனது நண்பரான (அதாங்க காவலர் உங்கள் நண்பன்) உடனே கிளம்பி வந்து "டாய் எவண்டாவன் என் சக சகோதரனை துன்பப்படுத்துவது" அப்பிடீன்னு கேப்பாரா?
  5. எத்தன போலீஸ் டேசன்ல இருக்கற காவலர்களுக்கு அவசர அழைப்புகளுக்கு எப்படி இயங்க வேண்டும் என்று தெரியும்?

ஆனா பாருங்க மல்லாக்க படுத்து யோசிக்கறப்போ இன்னும் எத்தனையோ இந்த மாதிரி கேள்விகள் வருது.

19 comments:

Cable சங்கர் said...

எதுக்கும் மல்லாக்க படுத்து யோசிக்காம... செஞ்சி பாருங்க.. எதுனாச்சும் பிரச்சனைன்னா என்னை கூப்பிடுங்க.. ;)

அகமது சுபைர் said...

என்னோட ATM நம்பர் 1111..இதை எப்படி திருப்பி அடிக்கிறது??

தராசு said...

//@ Cable Sankar said...
எதுக்கும் மல்லாக்க படுத்து யோசிக்காம... செஞ்சி பாருங்க.. எதுனாச்சும் பிரச்சனைன்னா என்னை கூப்பிடுங்க//

அண்ணே, வாங்கண்ணே, நம்க்கு யோசனையே மல்லாக்க படுக்கறப்பதாண்ணே வருது,
டேங்சு.

தராசு said...

//@அகமது சுபைர் said...
என்னோட ATM நம்பர் 1111..இதை எப்படி திருப்பி அடிக்கிறது//

அட்றா சக்கை, புடிச்சுட்டாருய்யா பாயிண்ட, நீங்களும் மல்லாக்க படுத்தாண்ணே யோசிச்சீங்க. வந்ததுக்கு டேங்சுண்ணே.

சுவாதி said...

துப்பாக்கி மிரட்டலெல்லாம் இங்க கெடையாது. அப்புடியே அலாக்கா ஏ.டி.ம் மெஷினையே தூக்கிக்கிட்டு போன கத தெரியாதா?

Madhavan said...

The mail which u received is not having correct information. No ATM is having such facility of capturing reversal PIN. As I am working in Banking Technology, I can confirm this.

தராசு said...

//@சுவாதி said...
துப்பாக்கி மிரட்டலெல்லாம் இங்க கெடையாது. அப்புடியே அலாக்கா ஏ.டி.ம் மெஷினையே தூக்கிக்கிட்டு போன கத தெரியாதா?//

இங்க பார்றா, இப்பிடி வேற கிளம்பிட்டாய்ங்களா,

வந்ததுக்கு டேங்சு சுவாதி

தராசு said...

//@ Madhavan said...
The mail which u received is not having correct information. No ATM is having such facility of capturing reversal PIN. As I am working in Banking Technology, I can confirm this.//

ஆமாம் தல, இந்த மேட்டர
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Reference_desk/Archives/Miscellaneous/2009_February_25

இங்க போய் பார்த்துட்டேன்.
வருகைக்கும் தகவலுக்கும் டேங்சு.

Raju said...

அய்யோ..அண்ணே..!
நீங்க தெய்வன்ண்ணே.ய்ய்..
படிச்சு ,இன்னமும் சிரிச்சுக்கிட்டு இருக்கேன்.

தராசு said...

டக்ளசு,

டேங்சு

கார்க்கிபவா said...

//வில்லு பட CD ஐ காட்டி பயமுறுத்தினாலோ//

ங்கொய்யால.. உங்க பணம் இன்னும் ஒரு மாதத்தில் களவாடப்பட வேண்டுமென எல்லாம் வல்ல மகர நெடுங்குழகாதனை வேண்டிக் கொள்கிறேன்

தராசு said...

//@ கார்க்கி said...

//வில்லு பட CD ஐ காட்டி பயமுறுத்தினாலோ//

ங்கொய்யால.. உங்க பணம் இன்னும் ஒரு மாதத்தில் களவாடப்பட வேண்டுமென எல்லாம் வல்ல மகர நெடுங்குழகாதனை வேண்டிக் கொள்கிறேன்//

இப்ப எதுக்கு ,,,,, இல்ல எதுக்கு டென்ஷன் ஆகறீங்க, உண்மையை தான சொன்னேன்.

KARTHIK said...

// அகமது சுபைர் said...

என்னோட ATM நம்பர் 1111..இதை எப்படி திருப்பி அடிக்கிறது??//

எப்புடி இப்படி எல்லாம்.கலக்கல் சுபையர்

எம்.எம்.அப்துல்லா said...

/./மல்லாக்கப் படுத்து யோசிச்சப்போ !!!!!!! //

அடடா...நம்ப வியாதி உங்கலையும் தொத்திக்கிச்சா???

:)))

தராசு said...

// கார்த்திக் said...
// அகமது சுபைர் said...

என்னோட ATM நம்பர் 1111..இதை எப்படி திருப்பி அடிக்கிறது??//

எப்புடி இப்படி எல்லாம்.கலக்கல் சுபையர்//

வாங்க கார்த்திக், என்னமா யோசிக்கறாய்ங்க பாருங்க. ம்.....

தராசு said...

//@ எம்.எம்.அப்துல்லா said...
/./மல்லாக்கப் படுத்து யோசிச்சப்போ !!!!!!! //

அடடா...நம்ப வியாதி உங்கலையும் தொத்திக்கிச்சா???//


ஹி...,ஹி..., எல்லாத்தையும் தொடங்கி வைக்கறது நீங்க தானே!!!!!

AvizhdamDesigns said...

அறிவாளிங்க எல்லாம் மல்லாக்க படுத்து தான் யோசிப்பாங்களோ..?


மல்லாக்க படுத்து யோசிக்கற சங்கத்துல என்னையும் சேர்த்துக்கங்க அண்ணே..!

தராசு said...

//@ மீனவன் said...
அறிவாளிங்க எல்லாம் மல்லாக்க படுத்து தான் யோசிப்பாங்களோ..?


மல்லாக்க படுத்து யோசிக்கற சங்கத்துல என்னையும் சேர்த்துக்கங்க அண்ணே//

சேத்தாச்சு, சேத்தாச்சு, எல்லாம் கரெக்டா யோசிங்க.

கோவி.கண்ணன் said...

//எத்தன போலீஸ் டேசன்ல இருக்கற காவலர்களுக்கு அவசர அழைப்புகளுக்கு எப்படி இயங்க வேண்டும் என்று தெரியும்?//

ஏன் ஏன் மீதிப் பணத்தை அவங்க பிடுங்கவா ?
:)