Wednesday, June 17, 2009

ஜுகல்பந்தி 17/06/2009, ஒரு கப்ஸா, சில கேள்விகள்

போன மாதம் நடந்த சம்பவத்தை அடுத்து தொடர்ந்து ஜுகல்பந்தி எழுத முடியல. இப்பத்தான் கொஞ்சம் எல்லாம் சீரடைந்து வண்டி ஒரு சீரான நிலமைக்கு வந்திருக்குது. அதனால ஸ்டார்ட் மீஜிக்.
நகரம்: போபால், (ஏரிகளின் நகரம்).

மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரம். நகரத்தை சுற்றியும் ஏரிகள் நிறைந்திருப்பதால் இதை ஏரிகளின் நகரம் என்று அழைக்கிறார்கள். மலைகள், கோட்டைகள், மசூதிகள், கோவில்கள், ராணுவ முகாம்கள், இந்திய அரசின் முக்கிய ஆராய்ச்சி மையங்கள் என்று பலவகையில் ஒரு அழகிய நகரத்துக்கான சிறப்புகளுடன் திகழ்கிறது.

பதினோராம் நூற்றாண்டில் 55 வருடங்களாக (ஏ யப்பா, நம்மாளுங்களுக்கு 5 வருஷம் முடிக்கறதுக்குள்ள நாக்கு தள்ளிப் போகுது) நல்லாட்சி புரிந்த போஜராஜனின் நினைவாக இதற்கு போபால் என்று பெயர் வந்தது. இந்த மன்னனுக்கு மரியாதை செய்யும் வண்ணம் அவரது பெயரின் போஜையும், அவர் ஏரிகளை உருவாக்குவதற்காக கட்டிய அணையின்(பால்) நினைவாகவும் இந்நகரம் முதலில் "போஜ்பால்" என்றழைக்கப்பட்டு, நாளடைவில் போபாலாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானத்திலிருக்கும் "ஒர்கஸாய்" வம்சத்திலிருந்து (இதுக்கும் இப்ப இருக்கற நாட்டாமை "அமிர் கஸாய்"க்கும் இன்னா கனிக்ஷன் அப்டீன்னெல்லாம் கேக்கப்படாது) வந்த தோஸ்த் முகம்மது கான் என்ற அரசன், (இந்தியாவில் முகலாய சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ஔரங்கசீப்பின் மறைவுக்குப் பிறகு) கி.பி. 1707 ல் ஒரு முழு முகலாய சிற்றரசை போபாலை தலைநகராகக் கொண்டு துவக்கினார். அதற்குள் போஜராசனனின் வாரிசுகள் சிவலோக பிராப்தி அடைந்திருந்தார்கள். நம்ம தோஸ்த் கான் துவக்கிய அரசின் சிறப்பம்சம் என்னவென்றால், சற்றேறக் குறைய ஒரு நூறு வருஷ காலம் இந்த சிற்றரசு பெண்களால் ஆளப்பட்டிருக்கிறது. எப்படி அரசனுக்கடுத்து இளவரன் அரசனாவது வழக்கமோ, அப்படி ராணிக்கு அடுத்ததாக இளவரசிகள் ராணிகளாகியிருக்கிறார்கள். கி.பி. 1819 லிருந்து 1926 வரை ஆண்ட இந்த அம்மணிகளின் ஆட்சிக்காலம் தான் போபாலின் சரித்திரத்தில் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த அம்மணிகள அனைவரும் முகம்மதிய பேகம்கள் என்பது இதன் சிறப்பு. இந்த சிற்றரசின் எல்லைகளுக்குட்பட்டிருந்த நீர் வளத்தை சரியாக நிர்வகித்தது, ரயில் வழித்தடங்களை அமைத்தது, முறையான அஞ்சல் துறையை நிர்வகித்தது என அம்மணிகள் கலக்கியிருக்கிறார்கள். (அம்மணிகளை உட்டா என்னைக்குமே இப்படித்தான் கலக்குவாங்களோ). 1947 க்கு அப்புறம் இந்தியாவுடன் தன்னை இணைத்துக்கொண்ட கடைசி சிற்றரசுகளில் இதுவும் ஒன்று.


1984 - ல் கார்பைடு தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவினால் நிகழ்ந்த உயிரிழப்புகளின் வடு ஒருபக்கம் இருந்த போதிலும், இந்நகரம் புது பொலிவுடன், அகன்ற சாலைகள், வண்ணப் பூங்காக்கள், புராதன கோட்டைகள், நவீன அடுக்கு மாடி குடியிருப்புகள், முகலாயர்களின் கட்டிடக்கலைக்கு கட்டியம் கூறும் பழங்கால மசூதிகள், இந்திய வான்வெளி ஆராய்ச்சி கழகத்தின் முக்கிய செயற்கை கோள் கட்டுப்பாட்டு அறை, புது தில்லிக்கு அடுத்தபடியாக ஆரம்பிக்கப்பட்ட "All India Institute of Medical Science" என்ற பல சிறப்புகளுடன் திகழ்கிறது.


இதன் பழமையை, அதன் சிறப்பை, ஏரிகளை அதன் அழகு கெடுவதற்கு முன் ஒருமுறை அவசியம் பார்ப்பது கண்ணுக்கு, மூக்குக்கு, நுரையீரலுக்கு, சிறுகுடல், பெருங்குடல் மற்றும் உடலின் எல்லா பாகங்களுக்கும் நல்லதுன்னு கருத்து கந்தசாமி சொல்றாரு.


நாட்டு நடப்புகள்.


போன வாரத்திலிருந்து ஒரு இ மெயில் எல்லாரையும் கலக்கீட்டிருக்குது.

சமீபத்துல பிரேசில் நாட்டுல தொலஞ்சுபோன பிரான்சு நாட்டு விமானத்தின் கடைசி நேர காட்சிகள்னு ரெண்டு போட்டோவை எல்லாருக்கும் நலம் விரும்பிகள் அனுப்பிகிட்டிருக்காய்ங்க . இது தான் அந்த போட்டோ.
இத்துடன் அவுங்க விடுற கப்ஸா இன்னான்னா:
 1. இதை எடுத்த பயணியின் பெயர் பவுலோ முல்லர். ஒரு குழந்தைகளுக்கான நாடக நடிகர்.
 2. பிரான்சு நாட்டு விமானம் ரியோ டி ஜெனீரோ விலிருந்து வானில் சென்ற சிறிது நேரத்தில் வேறோரு விமானத்துடன் மோதியது.பிறகு கட்டுப்பாட்டை இழந்து கடலில் மூழ்கியது.
 3. இநத படங்களை எடுத்தவர் விமான மோதலுக்குப்பின் இவைகளை எடுத்து இருக்கிறார்.
 4. கேமரா உடைந்து விட்டது, ஆனால் அதற்குள் இருந்த மெமொரி சிப் கடலுக்கடியில் கண்டு பிடிக்கப்பட்டது. அதிலிருந்த புகைப்படங்கள் தான் இவை.
 5. விமானத்தின் பின் பகுதி மோதலில் கழன்று போய் ஒரு பயணி காற்றில் இழுக்கப்படுவதை இரண்டாவது படத்தில் பார்க்கலாம்.
 6. பிரான்சு விமானத்துடன் மோதிய விமானம் பத்திரமாக அமேசான் காடுகளுக்குள் இருக்கும் ஒரு விமான தளத்தில் இறங்கிவிட்டது.
இத்தனை கப்ஸாவை கேட்டதுக்கப்புறம், வழக்கம் போல மல்லாக்க படுத்து யோசிச்சப்ப, (மறுபடியுமா)

 1. முதல் படத்துல எல்லாரும் அந்த ஆக்சிஜன் மாஸ்க் வெச்சிருக்காங்களே, அப்ப விமானத்துக்குள் குறைந்த காற்றழுத்தம் உருவானதா?
 2. முதல் படத்துல இடது பக்கத்துல உக்காந்திருக்கற பொம்பளயோட கையில விலங்கு மாட்டி இருக்குதே அது இன்னாத்துக்கு?
 3. விமானம் மோதியதற்குப் பின், தன் கட்டுப் பாட்டை இழந்து விட்ட நிலையில், ஒரு மனிதன் தன் இருக்கையை விட்டு எழுந்து, தன் பையை திறந்து கேமராவை எடுத்து, சக பயணி விமானத்தை விட்டு இழுக்கப்படும்வரை புகைப்படமெடுத்து தள்ளியிருக்கிறாரே, அப்படியென்றால் விமானி இந்த இடைப்பட்ட நேரத்தில் கட்டுப்பாடு அறையை தொடர்பு கொள்ளாதது ஏன்?
 4. எப்பொழுதும் ஒரு விமானம் வான்வெளியில் பறக்கிறதென்றால், தனக்கு அருகில் ஒரு விமானம் வந்து விட்டால் உடனே எச்சரிக்கை செய்யுமே, அந்த எச்சரிக்கை மணி மோதிய இரு விமானங்களிலுமே வேலை செய்யவில்லையா?
 5. அமேசான் காடுகளுக்குள் பத்திரமாக தரையிறங்கிய விமானி உடனடியாக விமான கட்டுப்பாடிற்க்கு தொடர்பு கொண்டு நான் வேறொரு விமானத்தை போட்டுத்தள்ளி விட்டேன் என்று இன்று வரை தகவல் சொல்லாதது ஏன்?
 6. இந்த போட்டோக்கள் பதிவான மெமொரி சிப் கிடைக்க வேண்டுமென்றால், அட்லாண்டிக் பெருங்கடலின் அடிமட்டத்தில் உள்ள கல்லும் மண்ணும் சல்லடை இட்டு சலிக்கப்பட்டதா?
மல்லாக்கப் படுத்தா இப்படி என்னெனமோ கேள்வியெல்லாம் வந்ததினால், இணையத்தில் சல்லடை போட்டு சலித்ததில், இந்த கப்ஸா வுடற போட்டோவைப் பத்தின மேட்டர் கிடைச்சுது.

அது இன்னான்னா,

இது நம்ம ஊர் தொலைக்கட்ட்சிகளில் வர்ற அறிவு பூர்வமான தொடர்களைப் போன்ற ஒரு சீரியல்தான். "Lost" னு பேரு. அதுல வர்ற கதாநாயகிதான் "இவாஞ்சலின் லில்லி" தான் அந்த கைவிலங்கு அம்மணி. கதைப்படி கைதியான அவளை அமெரிக்காவிற்கு அழைத்து வரும் கடமை மிகு அதிகாரிதான் அவுளுக்கு பக்கத்தில் இருக்கிற "எட்வர்ட் மார்ஸ்". இந்த புகைப் படங்கள் உள்ள வீடியோ காட்சிகளை பார்க்கணும்னா இங்கே பாருங்கள்.

இந்த இ மெயில் அனுப்பற ஆளுங்களையெல்லம் ஒரு கேள்வி கேக்கறேன், "ஏண்டா என்னை பாத்தா கேனப் பயலாட்டமே தெரியுதாடா?"

14 comments:

டக்ளஸ்....... said...

அண்ணே. இனிமேல் மல்லாக்க படுக்காதீங்க..!
அம்புட்டுதேன் சொல்லுவேன்.

தராசு said...

டக்ளசு,

டேங்சுப்பா

கார்க்கி said...

// டக்ளஸ்....... said...
அண்ணே. இனிமேல் மல்லாக்க படுக்காதீங்க..!
அம்புட்டுதேன் சொல்லுவே/

அதேதான்.. :))

ஆதிமூலகிருஷ்ணன் said...

போபால் பற்றி ஏற்கனவே படிச்சா மாதிரி இருக்குது. அப்புறம் இந்த ஃபார்வேர்ட் மெயில்களையெல்லாமா நம்புறீங்க.. ஹிஹி.. செவ்வாய் கிரகத்துல டீ குடிக்கிற போட்டோ வேணுமா?

தராசு said...

//@ கார்க்கி said...
// டக்ளஸ்....... said...
அண்ணே. இனிமேல் மல்லாக்க படுக்காதீங்க..!
அம்புட்டுதேன் சொல்லுவே/

அதேதான்.. :))//

சரி, இனிமேல் குப்புற படுத்து யோசிக்கறேன்.

தராசு said...

//@ ஆதிமூலகிருஷ்ணன் said...
போபால் பற்றி ஏற்கனவே படிச்சா மாதிரி இருக்குது. அப்புறம் இந்த ஃபார்வேர்ட் மெயில்களையெல்லாமா நம்புறீங்க.. ஹிஹி.. செவ்வாய் கிரகத்துல டீ குடிக்கிற போட்டோ வேணுமா?//

தலைவா, டேங்சு

Truth said...

Nice :-)

தராசு said...

@ Truth

டேங்சு

நையாண்டி நைனா said...

/*சரி, இனிமேல் குப்புற படுத்து யோசிக்கறேன்.*/

அப்போ... இனி பூமி தாங்காது...

அதிஷா said...

அண்ணே நாங்கூட அந்த போட்டோவ பாத்து நெசமாலுமேனு நெனச்சுப்போட்டேனுங்கண்ணா..

நீங்க சொன்னதுக்கப்பறம்தானுங்ண்ணா தெரிது அது ஒரு டுபாக்கூர் உட்டாலக்கடினு..

டாங்குசுங்கண்ணா

துபாய் ராஜா said...

போபால் தெரிந்த ஊர்.தெரியாத செய்தி

அந்த மெயில் நமக்கும் வந்தது.

நல்லதொரு பகிர்வு

தராசு said...

நைனா,

அடங்க மாட்டீங்கறீங்களே!!!!

தராசு said...

அதிஷா,

வந்ததுக்கு டேங்சுங்கண்ணா

தராசு said...

துபாய் ராஜா,

வந்ததுக்கு டேங்சு.