தோன்றித்தொலைவது ஒளியின் அழகு.
தோன்றாமல் நிலைப்பது இருளின் அழகு.
அளவுள் அடங்குவது ஒளியின் வலிமை.
அளக்க முடியாதது இருளின் பெருமை.
ஒளியின் உருவத்துக்கு ஒரு நூறு வர்ணம்.
அழிவிலா இருளுக்கு ஒரே ஒரு வர்ணம்.
பொய்யாய் மின்னுவது ஒளியின் குணம்.
உண்மையை உணர்த்துவது இருளின் மணம்.
பொய்யாய் உறவுகள் சிரித்திடும் ஒளியில்.
இல்லறம் கலந்து இனிப்பது இருளில்.
ஒளியினைப் போற்றிடும் ஆறறிவு மானிடா
இருளுக்கு இத்தனை சிறப்புண்டு கேளடா
I, Sharmi, Diamond. Ep 29
1 week ago
13 comments:
அய்யய்யோ..அண்ணாத்த.
நம்ம கலர இன்னாமா எழுதிருக்க..சூப்பரப்பு.
நம்ம கலர நம்மதான் இப்படி புகழனும்.....
நல்ல கவிநயம்.
வாங்க டக்ளஸு, சேம் பிளட். டேங்சு.
// @மயாதி said...
நம்ம கலர நம்மதான் இப்படி புகழனும்.....
நல்ல கவிநயம்.//
வாங்க மயாதி, நம்ம மாத்திரமல்ல, எல்லாரும் புகழ்ந்து தான் பேசறாங்க.
வந்ததுக்கு டேங்சு.
அட நம்ம கலரு..
அந்த பாட்டு ஞாபகம் வந்துடுச்சு..
மளவிகாஆஆஆஆ
//@கார்க்கி said...
அட நம்ம கலரு..
அந்த பாட்டு ஞாபகம் வந்துடுச்சு..
மளவிகாஆஆஆஆ//
யாராவது இவருக்கு கல்யாணம் பண்ணி வைய்ங்கப்பா, தொல்லை தாங்கல, அப்துல்லா அண்ணே, எங்க இருக்கீங்க???
அண்ணாச்சி..........என்ன ஆச்சு???????????அவ்வ்வ்வ்வ்வ்வ்
கருப்பு தான் ...
க்கும் க்கும்
நல்லாயிருக்குங்கோ ...
//@ அத்திரி said...
அண்ணாச்சி..........என்ன ஆச்சு???????????அவ்வ்வ்வ்வ்வ்வ்//
திடீர்னு ஒருத்தரு நான் கொஞ்சம் கருப்புன்னு சொல்லிட்டாரு, வுடுவமா நாங்க, அதான், கிளம்பீட்டோடோடோடோம்
//@ நட்புடன் ஜமால் said...
கருப்பு தான் ...
க்கும் க்கும்
நல்லாயிருக்குங்கோ ...//
வாங்க ஜமால் அண்ணே,
வந்ததுக்கு டேங்சுங்கோவ்.
anna sorry for late. :(
nalla karuppu..chee,chee..karuththu
:)
வாங்க அப்துல்லா அண்ணே,
என்ன இன்னமும் அந்த எக்ஸ்ப்ளோரர் பிரச்சனை சரியாகலையா, பீட்டர் உட்னுக்குறீங்கோ,
வந்ததுக்கு டேங்சு
aadadey enna oru thathuva kavithai karupula
Post a Comment