Monday, June 8, 2009

வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாதவனா இந்தியன்?????

ஹைதராபாத்தில் 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல் (Swine Flu) இருப்பதாக செய்தி, இந்த மூவரும் அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள்.
இன்னும் இந்தியாவின் பல பாகங்களில் இந்தவகை நோய் அடிக்கடி கண்டறியப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் இந்த நோயை கொண்டு வருபவர்கள் வெளி நாட்டுப் பயணிகளே, குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் சென்று வரும் பயணிகளே ஆவர்.

சற்றே காலச் சக்கரத்தை பின்னே உருட்டினோமென்றால், 1994 ம் ஆண்டு குஜராத்தின் சூரத் நகரம் "பிளேக்" என்னும் நோயினால் பாதிக்கப்பட்டது. எலிகளின் மூலம் பரவும் இந்த நோயால் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தார்கள். மருத்துவமனைகள் நிரம்ம்ம்ம்பி வழிந்தன. மத்திய, மாநில அரசுகள் பம்பர வேகத்தில் சுழன்று நோயின் விளைவுகளை கட்டுக்குள் கொண்டு வந்தன. சூரத் நகரமே சுத்தப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சமயத்தில் உலக நாடுகள் நடந்து கொண்ட விதம் ஒவ்வொரு இந்தியன் மீதும் சாட்டையடிகளாய் விழுந்து கூனிக் குறுகி நின்றோம்.

இங்கிலாந்து : (1994 ல் )ஏர் இந்தியா விமானம், மும்பையிலிருந்து லண்டனுக்கு சென்றபொழுது, விமானத்தை விமான நிலையத்தின் கடைசி மூலையில் நிற்கவைத்து, அதை சுற்றிலும் ஒரு பெரிய பாதுகாப்பு வளையம் அமைத்து, இறங்கிய ஒவ்வொரு பயணியையும் எதோ ஒரு விரும்பத்தகாத அருவருப்பான ஜந்துவை பரிசோதிப்பதுபோல் சோதித்து எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்தனர்.

அமெரிக்கா: இந்திய கப்பல்கள் அமெரிக்க துறைமுகங்களில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. கடலுக்குள் தொலை தூரத்தில் கப்பல்கள் நிறுத்தப்பட்டு, பல்வேறு சுகாதார சோதனைகள் என்ற பெயரில் மாலுமிகளும், கப்பல் ஊழியர்களும் அவமானப்படுத்தப்பட்டு, சரக்குகளை அங்கிருந்தே சிறிய சரக்கு கப்பல்களில் மாற்றி எடுத்து சென்றனர். மாலுமிகள் ஓய்வு எடுப்பதற்காக வழக்கம்போல் கரைக்கு வர அனுமதி மறுக்கப் பட்டது.

ஆனால், கடந்த வருடங்களில் வாய்புண் நோயால் (Foot and Mouth Disease) இங்கிலாந்தின் பெரும்பாலான கால்நடைகள் பாதிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களாலேயே அவை கொல்லப்பட்டு, கனரக இயந்திரங்களைக் கொண்டு ஆழமான குழிகள் பறித்து, அதில் ஒட்டு மொத்தமாக இந்த விலங்குகளை தள்ளி மூடினார்கள். இந்த வாய்புண்ணை உருவாக்கும் கிருமி மாமிச உணவின் மூலம் பரவக் கூடிய அபாயம் இருந்த போதும், நமது நாட்டு விமான நிலையங்களில், இங்கிலாந்து விமானங்களை சர்வ சாதாரணமாக அனுமதித்தோம். எந்த இங்கிலாந்து பயணியும் சுகாதார சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. ஏன், ஏன், ஏன் வெள்ளைக்காரன் என்றால் அவன் மூலம் கிருமிகள் பரவாதா?????

பறவைக் காய்ச்சல் வந்த பொழுது, அமெரிக்க நாடுகளில் அதன் தாக்கம் பரவலாக இருந்த பொழுதும், அமெரிக்க கப்பல்கள் சர்வ சாதாரணமாக இந்திய துறைமுகங்களில் வந்து போய்க்கொண்டு தான் இருந்தன. தான் ஒரு இந்தியன் என்ற ஒரே காரணத்துக்காக பிளேக் வந்த சமயத்தில், இந்தியாவில் ஆறு மாதங்களாக வசிக்காமலிருந்த பொழுதிலும், லண்டனின் விரைவு ரயிலில் பயணம் செய்த பொழுது, காவலர்களாலும் இன்னும் ஆங்கிலேயர்களாலும் பெண் என்றும் பாராமல் அநாகரீகமாக சோதனைக்குட்படுத்தப் பட்டதையும், அவமானப்படுத்தப் பட்டதையும் அழுது கொண்டே என் ஒரு தோழி கூறியபொழுது அவருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.

இந்தியனுக்கு மாத்திரம் தான் இந்த சூடு சொரணையில்லா தன்மையிருப்பது ஏன் என்று தெரியவில்லை?

ஆஸ்திரேலியாவில் அடிக்கிறார்களா, அடிவாங்குவோம். அதை அந்த நாட்டு அரசு பட்டவர்த்தனமாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் மறைக்கிறது. இந்த அடிதடிஎல்லாம் யாரையும் குறிவைத்து நடப்பதல்ல, எதோ இரண்டு பேட்டை ரவுடிகள், பிளேடு பக்கிரிகள் அடித்துக் கொள்கிறார்களென ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் உலகின் முன் தைரியமாக பொய் சொல்கிறார். அதை கேட்டு விட்டு நமது மக்கள் அடுத்த சீரியல் எத்தனை மணிக்கு என்பது போன்ற கவலையில் ஆழ்ந்து விடுகிறோம். நமது மாண்புமிகுக்கள் அடுத்த கூட்டணி யாருடன் என்று கவலைப்பட போய் விடுகிறார்கள்.

அடேய், இந்தியனே, என் நண்பனே,

வருமுன் காப்போமென சுவற்றில் எழுதி வைத்தால் மட்டும் போதாது, கொஞ்சம் செயலில் காட்டு. அமெரிக்க மற்றும் இங்கிலாந்து விமானங்களையும் கப்பல்களையும் முற்றிலும் சுத்தம் செய்தபின் நம்து மண்ணில் அனுமதி, இல்லையேல் இந்த கொடிய வியாதியால் அவன் நாட்டில் ஒரு சதவீதம் செத்தால், சில ஆயிரம் பேர் சாகலாம். உனது நாட்டில் ஒரு சதவீதம் செத்தாலும் ஒரு கோடிப்பேர் சாவார்களே, கொஞ்சமாவது உணர்வு கொள்.

ஆஸ்திரேலியாவில் அடிபடும் எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லையேல் எங்கள் கைகளும் பூப்பறித்துக் கொண்டிருக்காது நண்பா என்று ஒரு முறையாவது அவர்களது அரசாங்கத்துக்கு சொல்.

ஈழப் படுகொலையில் எப்படி கண்மூடித் திரிந்தாயோ அப்படியே இப்பொழுதும் திரியாதே, உன் கண் விழிக்கும் முன் எத்தனையோ மாணவச் செல்வங்கள் கடைசி முறையாக சுவாசித்திருப்பார்கள், இன வெறி என்பது அவ்வளவு கொடூரமானது, விழித்திடு, இந்தியனே, இந்த ஒரு முறையாவது விழித்து வீறுகொள்.

24 comments:

அத்திரி said...

நல்லாவே கேட்டிருக்கீங்க...

நையாண்டி நைனா said...

அட..ச்சே... போப்பா தூர.... நமீதா கூட சூப்பாரா கனவு கண்டுகினு இருந்தேன்... கெடுத்து போட்டுச்சி இந்த தராசு....

கொர்ர்... கொர்ர்ர்....

==============================
"வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாதவனா இந்தியன்?????"
YES

எம்.எம்.அப்துல்லா said...

அட்...றா.....சக்கை1
அட்றா சக்கை!
அட்றா சக்கை!
அட்றா சக்கை!

Venkatesh Kumaravel said...

என்னத்த சொல்லி... என்னத்த செஞ்சி? இன்னும் இங்க ஆங்கில மோகமும், அமெரிக்க கனவுகளும் அமிழ்வதாயில்லை... என்ன நேர்ந்தாலும் இது மாறாது...

தராசு said...

வாங்க அத்திரி அண்ணே,

அதோ நம்மளால இப்படி வாய்விட்டு புலம்ப மட்டும்தான் முடியுது.

தராசு said...

//@ நையாண்டி நைனா said...
அட..ச்சே... போப்பா தூர.... நமீதா கூட சூப்பாரா கனவு கண்டுகினு இருந்தேன்... கெடுத்து போட்டுச்சி இந்த தராசு....

கொர்ர்... கொர்ர்ர்....

==============================
"வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாதவனா இந்தியன்?????"
YES//

வா நைனா,

டேங்சு. கனவு காங்கறதுக்கு வேற மேட்டரே கெடக்கிலியா

தராசு said...

//@ எம்.எம்.அப்துல்லா said...
அட்...றா.....சக்கை1
அட்றா சக்கை!
அட்றா சக்கை!
அட்றா சக்கை!//

டேங்சுண்ணே

தராசு said...

//@ வெங்கிராஜா said...
என்னத்த சொல்லி... என்னத்த செஞ்சி? இன்னும் இங்க ஆங்கில மோகமும், அமெரிக்க கனவுகளும் அமிழ்வதாயில்லை... என்ன நேர்ந்தாலும் இது மாறாது...//

சரியாகச் சொன்னீர்கள் வெங்கி ராஜா, டேங்சு.

VIKNESHWARAN ADAKKALAM said...

ரொம்ப டெரரா சிங்கம் களத்துல இறங்கிடுச்சு....

தராசு said...

//@ VIKNESHWARAN said...
ரொம்ப டெரரா சிங்கம் களத்துல இறங்கிடுச்சு....//

வாங்க விக்கி, வந்ததுக்கு டேங்சு.

Raju said...

விவேக் ஒரு படத்துல சொல்ற டயலாக் ஞாபகம் வருதுண்ணே...
வி.ஐ.பி வீட்டு கக்கூஸ் மட்டும் மணக்குமா என்ன?

சரியான சாட்டையடி..!

தராசு said...

//@ டக்ளஸ்....... said...

சரியான சாட்டையடி..!//

வாங்க டக்ளஸு, டேங்சு.

கார்க்கிபவா said...

நான் ஹைதைல தான் இருக்கேன்.. இப்ப என்ன செய்யட்டும்?

தராசு said...

// @கார்க்கி said...
நான் ஹைதைல தான் இருக்கேன்.. இப்ப என்ன செய்யட்டும்?//

நீ ஒண்ணியும் மெர்சலாவாத, உன்னையா பாத்தா அந்த காய்ச்சலுக்கே காய்ச்சல் வந்துரும்.

தீப்பெட்டி said...

இந்தியாவிடம் இருக்கும் ராசதந்திரிகள் சர்வதேசத்தால் ஒதுக்கப்பட்டவர்கள். இவர்களின் ராசதந்திர கோட்பாடு சர்வதேசத்தால் தோற்கடிக்கப்பட்ட கோட்பாடு. அதுதான் அவர்களது இளக்காரத்திற்கு காரணம். தவறு அவர்கள் மேல் இல்லை.

வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகளின் அபரிமிதமான ஆசையிலும் படுத்துவிட்ட ஆண்மையிலும் இருக்கிறது...

தீப்பெட்டி said...

நமக்கு குனிபவனைத்தான் நாம் உயரதிகாரியாய் ஆக்குகிறோம். நமக்கே குனிபவன் வல்லரசுக்கு குனியமாட்டானா.. அவன் சும்மாப் போனாலும் கூப்பிட்டு குதிரையேறச் சொல்லுவான். அப்புறம் வல்லரசுகள் குதிரையேறுதே.. என நாம் இங்கே கவலைப்பட்டு என்ன ஆக போகிறது?

Thamira said...

நாயமான கேள்வி.. இன்னா பண்ணலான்றே.?

Cable சங்கர் said...

/அட்...றா.....சக்கை1
அட்றா சக்கை!
அட்றா சக்கை!
அட்றா சக்கை!////

அண்ணே சொன்னது அப்பிடியே ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

ஜானி வாக்கர் said...

Mr tharasu, unless a top ranking political dog get affected by this deadliest diseas no govt/political pikkaris will bother. Apart from that stopping and scanning planes and ships is not under our control the same to be decided by so called "health minister of cental govt", he will not take any serious action unles his wife/daughter/mother in law or atleat their dog gets this disease.

as you said we do not care unless it reaches our door. After reaching we could do nothing but cry alone.

தராசு said...

//வல்லரசுகள் குதிரையேறுதே.. என நாம் இங்கே கவலைப்பட்டு என்ன ஆக போகிறது?//

அஹிம்சையை மதிக்காதவனிடத்தில் தான் அஹிம்சை பேசுகிறோம். ஒரு கன்னத்தில் அறிந்தால் அவனது இரண்டு கன்னத்திலும் அறைந்து பாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்.

தராசு said...

//@ ஆதிமூலகிருஷ்ணன் said...
நாயமான கேள்வி.. இன்னா பண்ணலான்றே.?//

தீப்பெட்டிக்கு பதில் சொல்லியிருக்கிறேன். அதேதான்.

தராசு said...

//@ Cable Sankar said...
/அட்...றா.....சக்கை1
அட்றா சக்கை!
அட்றா சக்கை!
அட்றா சக்கை!////

அண்ணே சொன்னது அப்பிடியே ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்//

கேபிள் அண்ணே, டேங்சு.

தராசு said...

கவுண்டரே,

வந்ததுக்கு டேங்சு.

//as you said we do not care unless it reaches our door. After reaching we could do nothing but cry alone.//

கரீக்டு. எதுனா செய்யணும் பாஸ்.

தீப்பெட்டி said...

//இரண்டு கன்னத்திலும் அறைந்து பாருங்கள்//

அறைய வேண்டியவன் அவன் கையில ஒட்டியிருக்கிற தேன நக்கிட்டு இருக்கான். சரி நாம அறையலாம்னு சொன்னா என்கவுண்டர் போட்டுறான்..

அப்புறமா நாம அரசியலமைப்பு சட்டப்படி அறையுறதுக்கு நமக்கு உரிமையிருக்கா? இல்லாட்டி அறையணும்னு பேசுறதுக்காவது உரிமையிருக்கானு கோர்ட்டுக்கு எழுதிப்போட்டீங்கனா நம்ம பேரன் காலத்துல தீர்ப்பு வரும். அப்போ நம்ம பேரனுக்கு என்ன கதியிருக்கோ.. யார் கண்டா...