Wednesday, May 20, 2009

உன் சுவடுகள் அனைத்தும் சரித்திரம் தான்.

இந்த வாரம் ஜுகல்பந்தி எழுதவில்லை. மற்ற பதிவுகளையும் அதிகம் படிக்க முடியவில்லை.

1921 ம் ஆண்டு இவ்வுலகில் தோன்றிய ஒரு மனிதன், கடந்த மே மாதம் 14 ம் தேதி கடைசியாக சுவாசித்தான். விவசாயி, முன்னாள் ராணுவ வீரன், போதகன் என்ற பல்வேறு முகவரிகளில் இவ்வுலகம் இவனை வாசித்து வந்தது. அவனது செயல்களை, எண்ணங்களை, பேச்சுகளை ஒரு கூட்டம் நேசித்து வந்தது.

என் வாழ்விலும் இவன் அனுதினமும் குறுக்கிட்டான். அருகிலிருந்தான், அடித்து போதித்தான், அரவணைத்து முத்தமிட்டான், ஆனந்தத்தில் சிரித்தான், அன்பாய் வருடி விட்டான், தடைகளை தாவி வியக்க வைத்தான். இன்பத்தில் ஆர்ப்பரிக்கவில்லை இவன். துன்பத்தில் துவண்டு விடவில்லை இவன்.

எனக்கு எல்லாவற்றிலும் எல்லாமுமாய் இருந்த என்னைப் பெற்ற என் தகப்பன் 14ம் தேதி மாலை 5 மணியளவில், என் கரங்களில் அவனை நான் ஏந்தியிருக்க புன்னகையுடன் விடைபெற்றான்.

சென்னையிலிருந்து கொங்குநாட்டிற்கு அவனை சுமந்து சென்றேன். "எனக்கு மண்படுக்கை நான் பிறந்த மண்ணில் இருக்கட்டுமென" அவன் எனக்கு ஆணையிட்டதால், கடந்த‌ 15 ம் தேதி, அவன் தன் வாழ்வில் சேற்றில் கால்வைத்து முதன்முதலில் ஏர்பிடித்த அதே மண்ணில் உறங்க வைத்தோம்.

அன்பனே, என் அப்பனே,

உன்னை கிறிஸ்தவ போதகனென்று உலகம் சொல்லியது.
ஆனால் எனக்கு வாழ்க்கையை போதித்தவன் நீ.

மண் உன் சதையைத் தின்னலாம்.
ஆனால் உன் சுவடுகள் அனைத்தும் சரித்திரம் தான்.

11 comments:

எம்.எம்.அப்துல்லா said...

கர்த்தருக்குள் நித்திரை அடைந்த அவரது உறக்கம் அமைதியாகட்டும்

:(

தராசு said...

நன்றி அப்துல்லா அண்ணே.

பரிசல்காரன் said...

என் அஞ்சலிகளும், ஆறுதல்களும்.

Thamira said...

உங்கள் துக்கத்தில் நானும் பங்கெடுக்கிறேன் தராசு.! உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இரங்கல்கள்.

அத்திரி said...

ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை

தேவன் மாயம் said...

மண் உன் சதையைத் தின்னலாம்.
ஆனால் உன் சுவடுகள் அனைத்தும் சரித்திரம் தான்.///

என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்!!

Cable சங்கர் said...

அவரின் ஆன்மா சாந்தியடைவதாக..

தராசு said...

பரிசல்,
ஆதி,
அத்திரி,
Thevanmayam,
கேபிள் அண்ணன்

அனைவருக்கும் நன்றி

கார்க்கிபவா said...

இந்த துக்கத்தை மிக விரைவிலே பெற்றவன் நான். எதுவும் சொல்ல முடியல தல..

நையாண்டி நைனா said...

அவரது ஆன்மா அமைதி அடையட்டும்.
உங்களின் மனம் தெம்பு பெறட்டும்.
ஆண்டவன் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதிக்கட்டும்.

Unknown said...

aruthal solla ennuku varthaigai illai.