Wednesday, May 6, 2009

ஜுகல்பந்தி - 6/5/09

நகரம்கவ்ஹாத்தி - (GAWAHATI).பிரம்மபுத்திரா நதிக்கரையோரம் அமர்ந்திருக்கும் ஒரு அழகான நிலப்பரப்பு. வடகிழக்கு இந்தியாவுக்கு முகவரி தரும் ஒரு நகரம். அஸ்ஸாமிய மொழியில் "க்குவா" (GUWA) என்றால் பாக்கு என்றும், "ஹாட்டி" என்றால் சந்தை என்றும் பொருள். பாக்குச்சந்தையின் நகரமாக திகழ்ந்ததால் இதை "க்குவாஹாட்டி" என அழைக்க ஆரம்பித்து பின்னர் பெயர் மருவி இன்று கவ்ஹாத்தி என அழைக்கப்படுகிறது. இதற்குக் சாட்சியம் கூறும் வண்ணம் நகரத்தின் வெளிப் புறங்களில் உயர்ந்து நிற்கும் பாக்குத் தோப்புகள் உண்டு. பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் காணப்படும் தேயிலைத் தோட்டங்கள் அநேகர் வீட்டின் அடுப்பெரிய ஒரு காரணமாயிருந்தாலும், இதே தோட்டங்கள் தான் கல்கத்தாவின் முதலாளி வர்க்கத்தை வளர்த்தெடுக்கவும், அதைக் கண்டு உள்ளுக்குள் குமுறிய மண்ணின் மைந்தர்களை ஆயுதம் தூக்கவும் வைக்கிறது. மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்திய நகரங்களில் 5 ல் ஒன்றாகவும், மிக வேகமாக வளரும் உலக நகரங்களில் 100 ல் ஒன்றாகவும் இது உள்ளது. தான் இருக்கும் மாநிலத்தின் தலைநகரத்தையே தன்னுள் கொண்ட ஒரு நகரமிது. யுவான் சுவாங் என்ற சீனரின் டைரிக் குறிப்புகளை ( அப்துல்லா அண்ணனின் தம்பியின் டைரிக் குறிப்புகள் அல்ல) தூசி தட்டி விட்டுப் பார்த்தால், 7ம் நூற்றாண்டில் இந்த பிரதேசத்தை ஆண்ட பாஸ்கரவர்ம மன்னனின் கால்த்தில் 30,000 போர் படகுகளுடன் ஒரு மாபெரும் கடற்படையே வைத்திருந்தாராம். இப்படி பழம் பெருமைகள் நிறைய இருந்தாலும் அநேக புதுமைகளுடன் தினமும் வளர்ந்து வரும் ஒரு நகரம் இது.

இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் IIT போன்ற கல்லூரிகள் ஒருபுறம் இருந்தாலும் மிகவும் பிரசித்தி பெற்ற நூறு வருட புரதானமான " Cotton College" என்ற ஒரு கல்லூரியும் இங்கு உள்ளது. பெயரைக் கேட்டதும் எதோ பஞ்சு சம்பந்தப்பட்ட மேட்டர்னு நினைக்காதீர்கள். இதை ஆரம்பித்தவர் பெயர் "Sir Henry Cotton". நகரத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கும் கோவில்களில் எம்பெருமான் உமாநந்தனென்றும், சுக்ரேஷ்வரென்றும், ருத்ரேஷ்வரென்றும் பல ரூபங்களில், பல கோணங்களில் வியாபித்திருக்கிறார். இந்திய கலாச்சாரங்களிலிருந்தும், ஆச்சாரங்களிலிருந்தும் முற்றிலும் வேறுபட்ட ஆனால் ரசிக்கத்தகுந்த ஒரு வாழ்வியல் முறைகளுடன் அஸ்ஸாமி, திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மக்கள் கலந்து வாழும் ஒரு நகரம். கலைகளுக்கும் நடனத்துக்கும் பேர் போன ஒரு நகரம் இது. ஒரு முறை குடும்பத்தினருடன் சென்று காண வேண்டிய ஒரு நகரம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நாட்டு நடப்புகள்

நேபாளத்தில் அமைதி திரும்பி விட்டது. இனி வெள்ளைப் புறாக்கள் மட்டுமே பறக்கும் என நினைத்திருந்த அத்தனை பேரின் எண்ணங்களிலும், மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது சமீபத்தில் அங்கு இரு தனி மனிதர்களுக்குள் ஏற்பட்ட மோதல். துரதிஷ்ட வசமாக இந்த இரு பிரகஸ்பதிகளும் ஆளும் வர்க்கத்தில் இருந்து தொலைத்தது விட்டார்கள்.

படைத்தளபதியான ரூக்மங்கத் கட்டாவால் என்பவரை நீக்க பிரதம மந்திரி பிரசந்தா இட்ட உத்தரவை, நேபாள ஜனாதிபதி ராம் பரன் யாதவ் ரத்து செய்து விட, ஏற்கனவே உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த நெருப்பு பற்றிக்கொண்டது. பிரதம மந்திரி ராஜினாமா செய்து விட்டார். இந்த தளபதி கட்டாவால், மாவோயிச தீவிர வாதிகளை ராணுவத்தில் சேர்க்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த நாடகம் அரங்கேறி இருக்கிறது. ஜனநாயகம் என்பது அவ்வளவு லேசான விஷயமல்ல என்பதை நேபாள மக்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சொந்த செலவில் சூனியம்

போன வாரம் என் நண்பி ஒருவர் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். இது 2008 ம் ஆண்டில் அதிக பெண்களால் விரும்பி ரசிக்கப்பட்ட ஒரு மின்னஞ்சலாம்.

ஒரு கணவன் தன் மனைவி வீட்டோடு தானே இருக்கிறாள், அவள் என்ன பெருசா வேலை செய்யறா, நான் ஆபீசுக்கு போய் எவ்வளவு கஷ்டப் படறேன்னு மனசுல நெனச்சுட்டு, கடவுள் கிட்ட ஆண்டவா ஒரு நாளைக்கு என்னை அவளாகவும், அவளை நானாகவும் மாற்றிவிடு, அவள் ஒரு நாளாவது ஆபீஸுக்கு போய் ஆணி புடுங்கி பார்க்கட்டும், நான் என்ன நாய் படாத பாடு படுகிறேன் என உணரட்டும் என வேண்டினானாம். பரம்பொருளும் தாதாஸ்து என கூறிவிட, காலையில் அவன் அவளாகவும், அவள் அவனாகவும் கண்விழித்தார்கள். அவனான அவள் அலுவலகம் போய் விட, அவளான அவன், குழந்தைகளை குளிப்பாட்டி, பள்ளிக்கு அனுப்பி, சமைத்து, துணி துவைத்து, வீடு கூட்டி, இன்னும் அது, அப்புறம் இது, அப்புறம் அதுஅது, அப்புறம் இதுஇது எல்லாம் செஞ்சு முடுச்சு, குழந்தைகளை கூட்டிட்டு வந்து சோறு குடுத்து, தூங்க வைத்து, கணவனுக்கு சோறு குடுத்து எல்லாத்தையும் ஏறக்கட்டிட்டு படுக்கையில் வந்து அக்கடான்னு விழுந்தா, அவனாயிருக்கிற அவள் அவளாயிருக்கிற அவன் மேல வந்து விழுந்து, ...........வேண்டாம் நீங்களே புரிஞ்சுக்கோங்க. எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் அவளாயிருக்கற அவன் கடவுள்கிட்ட வேண்டினானாம், ஆண்டவா ஒரு நாளுக்கே நான் டரியலாகிட்டேன், என்ன மறுபடியும் ஆம்பளையாவே மாத்திரு எம்பெருமானேன்னா, அவ்ரு சொன்னாராம், இப்ப ரெண்டு பேரும் கசமுசா பண்ணீங்களே, அதுல நீ கர்ப்பமாயிட்ட, அதுனால இன்னும் பத்து மாசத்துக்கு முடியாதுன்னுட்டாராம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இந்த மாதிரி பதிவு எழுதுனாலே கடைசியில ஒரு கவிதை எழுதணுமாமே, அதுனால

" பரம்பொருளின் புதல்வர்களே,
ஒருவன் உங்கள் மீது கல்லை எறிந்தால்,
அவன் மீது பூவை எறியுங்கள்,
இறையன்பை உணரட்டும்.

அவன் மறுபடியும் கல்லை எறிந்தால்
இந்த முறை பூ ஜாடியையே எறியுங்கள்
ங்கொய்யால சாகட்டும்"

14 comments:

கார்க்கி said...

// பரம்பொருளின் புதல்வர்களே,
ஒருவன் உங்கள் மீது கல்லை எறிந்தால்,
அவன் மீது பூவை எறியுங்கள்,
இறையன்பை உணரட்டும்//

இப்போதைக்கு பூவை மட்டும் எறிஞ்சிட்டு போறேன்.. :)))

தராசு said...

// @கார்க்கி said...
// பரம்பொருளின் புதல்வர்களே,
ஒருவன் உங்கள் மீது கல்லை எறிந்தால்,
அவன் மீது பூவை எறியுங்கள்,
இறையன்பை உணரட்டும்//

இப்போதைக்கு பூவை மட்டும் எறிஞ்சிட்டு போறேன்.. :)))//


தெரியும், இந்த மாதிரி எதாவது குண்டக்க மண்டக்கன்னு எதாவது சொல்வீங்கன்னு,

அது சரி, உங்க ஏழுமலை இன்னா ஆனாரு

டக்ளஸ்....... said...

நேபாளத்தையே கலாசீட்ட மாமேய்ய்...!
கவித படிச்சு மெர்சலாப்பூட்டேன்பா..!

எம்.எம்.அப்துல்லா said...

//அவன் மறுபடியும் கல்லை எறிந்தால்
இந்த முறை பூ ஜாடியையே எறியுங்கள்
ங்கொய்யால சாகட்டும்"

//அண்ணே.....
நீங்க நல்லவரா?கெட்டவரா??

தராசு said...

//@ டக்ளஸ்....... said...
நேபாளத்தையே கலாசீட்ட மாமேய்ய்...!
கவித படிச்சு மெர்சலாப்பூட்டேன்பா..!//

இத்துக்கே மெர்சலான எப்டி,
இன்னும் எத்தினியோ இக்குது

தராசு said...

//@ எம்.எம்.அப்துல்லா said...
//அவன் மறுபடியும் கல்லை எறிந்தால்
இந்த முறை பூ ஜாடியையே எறியுங்கள்
ங்கொய்யால சாகட்டும்"

//
அண்ணே.....
நீங்க நல்லவரா?கெட்டவரா??//

வாங்கண்ணே,

எனக்கு சுய விளம்பரம் புடிக்காதுண்ணு உங்களுக்கே தெரியும்.

Suresh said...

ஜீகல்பந்தி சூப்பர்

Cable Sankar said...

//அவன் மறுபடியும் கல்லை எறிந்தால்
இந்த முறை பூ ஜாடியையே எறியுங்கள்
ங்கொய்யால சாகட்டும்" //

ha..ha..haa..

தராசு said...

//@ Suresh said...
ஜீகல்பந்தி சூப்பர்//

சுரேசு, டேங்சு

தராசு said...

//@ Cable Sankar said...
//அவன் மறுபடியும் கல்லை எறிந்தால்
இந்த முறை பூ ஜாடியையே எறியுங்கள்
ங்கொய்யால சாகட்டும்" //

ha..ha..haa..//

அண்ணே, டேங்சு

நையாண்டி நைனா said...

/*" பரம்பொருளின் புதல்வர்களே,
ஒருவன் உங்கள் மீது கல்லை எறிந்தால்,
அவன் மீது பூவை எறியுங்கள்,
இறையன்பை உணரட்டும்.

அவன் மறுபடியும் கல்லை எறிந்தால்
இந்த முறை பூ ஜாடியையே எறியுங்கள்
ங்கொய்யால சாகட்டும்" */

நேத்து என் வீட்டு பூச்செடியும், பூ ஜாடியும் சிதைஞ்சி போய் இருந்ததே
உங்க வேலைதானா அது.

இதோ அனுப்புறேன் பில்லு கொஞ்சம் செட்டில் பண்ணிடு ராசா.

தராசு said...

//@ நையாண்டி நைனா said...
/*" பரம்பொருளின் புதல்வர்களே,
ஒருவன் உங்கள் மீது கல்லை எறிந்தால்,
அவன் மீது பூவை எறியுங்கள்,
இறையன்பை உணரட்டும்.

அவன் மறுபடியும் கல்லை எறிந்தால்
இந்த முறை பூ ஜாடியையே எறியுங்கள்
ங்கொய்யால சாகட்டும்" */

நேத்து என் வீட்டு பூச்செடியும், பூ ஜாடியும் சிதைஞ்சி போய் இருந்ததே
உங்க வேலைதானா அது.

இதோ அனுப்புறேன் பில்லு கொஞ்சம் செட்டில் பண்ணிடு ராசா//

அதை உங்க மேலதான எறிஞ்சேன். அடிபட்டுதே, ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்திட்டீங்களா???

வித்யா said...

கவிதை (அ) கவுஜ டாப்பு:)

தராசு said...

வாங்க வித்யா,

டேங்சு