யோவ், எல்லாரும் என்னதான் நெனச்சுகிட்டிருக்கீங்க,
எங்க போனாலும் என்னை சீனியர் சிட்டிசன் ஆக்கி உக்கார வெக்கறீங்க??
இன்னா தான் பண்றது??
ஆதி எதோ ஒரு மோகம், தாகம்னு பதிவு போட்டார், அதுல நம்ம கருத்தைச் சொன்னோம், உடனே இந்த யூத்துக தொல்லை தாங்கலங்கறாங்க,
நாங்களும் யூத்துதான்யா!!!!
உடனே அந்த கார்க்கி வந்து அருமை அண்ணன் அனுஜன்யாவுடன் கோத்திவிட்டாரு. ஆனா அனுஜன்யா அண்ணன் அடிச்சாரு பாருங்க ஒரு அடி, நல்லா சொன்னேள் போங்கோ.
(கார்க்கி : தராசு, உங்களைவிட இரண்டு வருஷம் மூத்தவர் அனுஜன்யானு ஒருத்தர் இருக்கார்.
அனுஜன்யாவின் பதில்: அப்ப தராசுக்கு வயசு இருபத்தி மூணா)
சரி, இதயெல்லாம் போகட்டும்னு விட்டா, இப்ப அத்திரி ஒரு பதிவு போட்டாரு, அதுல போய் ஒரு பின்னூட்டமிட்டால், அவுரும் சீனியர் உங்களுக்கே இப்படின்னா, நாங்கெல்லம் எங்க போகன்னு புலம்பறார்.
எல்லாரும் என்னதான் நெனச்சுகிட்டிருக்கீங்க!!!!!
யோவ் எல்லாரும் பாத்துக்குங்க, நானும் யூத்து தான்யா, யேய் இங்க கவனி, நானும் யூத்து தான்யா!!!!
யேய், சைலன்ஸ், பேசிட்டிருக்கன்ல (கார்க்கி இல்லைங்கற தைரியத்துல தான் இந்த கடைசி வரி)
3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்
2 weeks ago
9 comments:
வெள்ளி இரவு அன்று என் வீட்டில் அமர்ந்து நான்,கார்க்கி,பரிசல்,தாமிரா எல்லோரும் வெள்ளி முளைக்கும்வரை பேசிக்கொண்டு இருந்தோம்.
”தராசு இருக்காரே அவர்தான் இன்னைக்கு தேதில பதிவுலகில் உண்மையான யூத்.அவரோட முதல் பதிவப் பார்த்தபோது யாரோ காலேஜ் பையன்னு நினைச்சேன். நேர்லதான் தெரிஞ்சது அவர் ஸ்கூல் பையன்னு”
இதுதான் நான் அடிச்ச கமெண்ட் உங்களப் பற்றி.
மனதார சொல்கிறேன் யூத் என்பது உடல் சம்பத்தப்பட்டது அல்ல மனம் சம்மந்தப்பட்டது என்பதை உங்களைப் பார்த்துதான் உணர்ந்தேன்.இதே வார்த்தையை கார்க்கியும் சொன்னான். :)
சும்மா சும்மா கமிடி பண்றேல் போங்கோ... தலைக்கு டை அடிக்கனும்னு அன்னிக்கு போன் பேசும் போது சொன்னிங்களே சரிய செஞ்சிங்களா... பாவம் இதுனாலதான் பதிவர் சந்திப்புல நீங்க கலந்துக்கிறது இல்லைனு எத்தனை பேருக்கு தெரியும். பயப்படாதிங்க நான் யார்டயும் சொல்ல மாட்டேன்.
”தராசு இருக்காரே அவர்தான் இன்னைக்கு தேதில பதிவுலகில் உண்மையான யூத்.அவரோட முதல் பதிவப் பார்த்தபோது யாரோ காலேஜ் பையன்னு நினைச்சேன். நேர்லதான் தெரிஞ்சது அவர் ஸ்கூல் பையன்னு”
வாங்க அண்ணே, உண்மையை சொன்னீங்க,
//மனதார சொல்கிறேன் யூத் என்பது உடல் சம்பத்தப்பட்டது அல்ல மனம் சம்மந்தப்பட்டது என்பதை உங்களைப் பார்த்துதான் உணர்ந்தேன்.இதே வார்த்தையை கார்க்கியும் சொன்னான். :)//
உண்மையாகவா!!!!
ரொம்ப டேங்சு கார்க்கி
//தலைக்கு டை அடிக்கனும்னு அன்னிக்கு போன் பேசும் போது சொன்னிங்களே சரிய செஞ்சிங்களா... //
ஹலோ, நான் சொன்னது கழுத்துல டை கட்டணும்னு,
நீங்க சும்மா எதையாவது அர்த்தம் பண்ணிக்காதேங்க
//பாவம் இதுனாலதான் பதிவர் சந்திப்புல நீங்க கலந்துக்கிறது இல்லைனு எத்தனை பேருக்கு தெரியும். பயப்படாதிங்க நான் யார்டயும் சொல்ல மாட்டேன்.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,
நல்லா கவுக்கறாங்கய்யா,
நாங்க ஊர்ல இல்லாத சமயமா பார்த்து பதிவர் சந்திப்பு வைக்கறாய்ங்க, அப்புறம் எப்படிதான் கலந்துக்கறது.
நீங்க யூத்துதாண்னே... யார் இல்லேன்னது? ஏன்னா நாங்களும் யூத்துதான்.... ஹி ஹி ஹி ஹி..
வாங்க மகேஷ்,
வந்ததுக்கு டேங்சு,
நீங்களுமா!!!!
Post a Comment