Friday, March 6, 2009

எனக்கு ஒரே இதுவா இருக்குதுங்க!!!!

முதல்முதலா தமிழ்மண வலைதிரட்டிக்கு வந்தப்பவே எனக்கு ஒரு இதுவாதான் இருந்துச்சு. அப்புறம் நிறைய பதிவர்களோட இதுவையெல்லாம் படிச்சதுக்கப்புறம், எனக்குத் தோணுன இதுவே போயிடுச்சுன்னு வெச்சுக்கோங்களேன். நான் என்னுடைய கடை தனியா தொறக்கணும்ங்கற ஒரு இதுவே ரொம்ப நாளா தோணல. தமிழ்மணத்துல வந்து சும்மா எல்லா கடைக்கும் போய் ஒரு இது பண்றதோட நிறுத்திகிட்டிருந்தேன். ஆனா நிறைய கடைகளையெல்லாம் பார்த்ததுக்கப்புறம் எப்படியும் ஒரு இது ஆரம்பிச்சே ஆகணும்கற ஒரு இது வந்துருச்சு. இந்த இது வந்ததுக்கப்புறம் நெறய நாள் ராத்திரி பகலா மனசுல ஒரு இதுவாவே இருந்துச்சு, அப்புறம் முடிவா ஒரு இது எடுத்ததுக்கப்புறம், ஒரு நல்ல நாளா பார்த்து ஒரு இது ஆரம்பிச்சுட்டேன்.

ஆனா பாருங்க, ஆரம்பத்துல நம்ம இது பக்கம் ஒருத்தர் கூட வரலீங்க. கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொருத்தர் கடையிலயும் உள்ள புகுந்து ஒரு இது பண்ணதுக்கப்புறம்தான், நம்ம கடைப்பக்கமா ஒரு சிலர் இது பண்ண ஆரம்பிச்சாங்க.

திடீர் திடீர்னு நம்ம ஆபீஸ்ல வேற நம்மள நாடு கடத்தீற்ராங்களா, நம்மனால ஒரு இதுவாவே எழுத முடியறதில்லீங்க. இருந்தாலும் அப்பப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம் இது பண்ணலாம்னு முயற்சி பண்ணீட்டுதான் இருக்கேன்.

ஆனா இதெயெல்லாம் உங்ககிட்ட சொல்லும்போது எனக்கு ஒரு இதுவாத்தான் இருக்கு. ஆனா நீங்க தயவு செஞ்சு எந்த இதுவும் நெனச்சுக்காதீங்க. ஆனா உங்களோட இதையெல்லாம் பார்க்கும் போது நான் இன்னும் இது பண்ண வேண்டிய நிறைய இது இருக்குதுங்க, நான் கொஞ்சம் கொஞ்சமா என்னை இது பண்ணிக்கறேன். நீங்க வழக்கம் போல என்னோட இதுக்கு வந்திட்டும் போயிட்டும் இருங்க.

ரொம்ப டேங்சுங்க, உங்களுக்கு டேங்சு சொல்லும்போது கூட எனக்கு ஒரே இதுவாதான் இருக்கு, இருந்தாலும் ரொம்ப ரொம்ப டேங்சுங்க.

15 comments:

நாமக்கல் சிபி said...

நாந்தான் முத இதுவா?

Thamizhmaangani said...

நீங்க ஒரு இதுவா தான் எழுதுறீங்க:)

VIKNESHWARAN said...

எனக்கு பின்னூட்டம் போடவே ஓரே இதுவா இருக்குங்க... இதுவா இன்னும் இன்னும் எழுதுங்க...

அன்புடன் அருணா said...

ஓ உங்களுக்கு இது ப்ராப்ளமா???
அன்புடன் அருணா

அத்திரி said...

ஐயா உங்களுக்கும் ஒரு இதுவா ஆயிடிச்சா??

எம்.எம்.அப்துல்லா said...

உங்க இத படிக்கையில எனக்கு ஒரே இதாப் போச்சு. இதுக்கு எந்த மாதிரி நம்ப இது போட முடியும்னு ஒரே இது பண்ணுனேன்.

RAHAWAJ said...

இத படிக்கும் போது என்னக்கும் ஒரே “இதுவா” இருக்குங்க நல்லா இதுவாவே எழுதுங்க

newspaanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

தராசு said...

வாங்க சிபி,

ஆமா, நீங்கதான் முதல் இது.

வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

//Thamizhmaangani said...

நீங்க ஒரு இதுவா தான் எழுதுறீங்க:)//

வாங்க, தமிழ்,

வந்ததுக்கு டேங்சு,

தராசு said...

//VIKNESHWARAN said...

எனக்கு பின்னூட்டம் போடவே ஓரே இதுவா இருக்குங்க... இதுவா இன்னும் இன்னும் எழுதுங்க...//

வாங்க விக்கி, வந்ததுக்கு டேங்சு, நீங்க பின்னூட்டம் போடவே ஒரு இது பட்டீங்கன்னா எப்படி

தராசு said...

//அன்புடன் அருணா said...

ஓ உங்களுக்கு இது ப்ராப்ளமா???
அன்புடன் அருணா//

வாங்க அருணா, வந்ததுக்கு டேங்சு,

அய்யய்யோ, எனக்கு அதுவெல்லாம் ப்ராப்ளம் இல்லை, நீங்க எதாவது கற்பனை பண்ணிக்காதீங்க, ஆனாலும் உங்களுக்கு ஒரே இதுதாங்க

தராசு said...

//அத்திரி said...

ஐயா உங்களுக்கும் ஒரு இதுவா ஆயிடிச்சா??//

வாங்க அத்திரி,

ரொம்ப நாளா ஆளையே காணோம்.

வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

//எம்.எம்.அப்துல்லா said...

உங்க இத படிக்கையில எனக்கு ஒரே இதாப் போச்சு. இதுக்கு எந்த மாதிரி நம்ப இது போட முடியும்னு ஒரே இது பண்ணுனேன்.//

கடைசியில எப்படியோ ஒரு இது போட்டீங்களே,

அதுக்கு டேங்சு.

தராசு said...

//RAHAWAJ said...

இத படிக்கும் போது என்னக்கும் ஒரே “இதுவா” இருக்குங்க நல்லா இதுவாவே எழுதுங்க//

வாங்க, வந்ததுக்கு டேங்சு.