இந்த மேட்டரை சத்தியமா நான் எழுதவில்லை. எனக்கு ஒரு நண்பி இதை மின் அஞ்சலில் அனுப்பியிருந்தார்.  அதை அப்படியே தந்துள்ளேன். ஒருவேளை நீங்கள் இதை ஏர்க்னவே படித்திருப்பீர்கள். இருந்தாலும் இன்னொருதரம் ENJOYYYYYYYYYYYYYYYநகைச்சுவை குரு பெயர்ச்சி  பலன்கள்:                                                                                                                                                                                                                                                            மேஷ ராசி மக்களே!                                                                                                                                                                                                                  ஏலேய் மக்கா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூணாவது மாடிக்கு குரு பெயர்ச்சி ஆகறதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா 0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ்  போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில போய் ஒளிஞ்சிக்கோங்க! மேலும் நீங்க இங்கிலீசுல    'a,e,i,o,u', அப்புறம் தமிழில 'கசடதபற'ல ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள்    பேசக்கூடாது. ஜோடி நெம்பர் ஒன்னோ, மானாட மயிலாடவோ மாங்கு மாங்குன்னு  பார்த்தா, கல்யாணம் ஆகாதவங்களுக்குக்கூட விவாகரத்து நடக்க வாய்ப்பிருக்கு.                                                                                                                          
பரிகாரம்: ராமராஜனையோ, ஜே.கே. ரித்தீஷையோ உங்க காஸ்ட்யூம் டிசைனரா நியமிச்சு , அவங்க சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம்.                                                                                                            
ரிஷப ராசி மக்களே!                                                                                                                                                                                                      நீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிர்ந்து நடக்கக்கூடாது. 98.3டிகிரி      
        சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. நடக்கறப்போ முக்கியமா உங்க வலதுகாலும், இடதுகாலும்  உரசவே கூடாது. அப்படி நடக்காலேன்னா என்ன ஆகும்னு கேக்கறீகளா,  நடக்கக்கூடாததெல்லாம் நடந்துரும். யோகாதிபதியான குரு, பாதகாதிபதியான   சனியோட வீட்டுல வலுக்கட்டாயமா தொடர்வதால, உங்க புள்ளைக்கு எந்தக் கல்லூரியில    இடம் கிடைக்கலைன்னாலும், சட்டக் கல்லூரியிலயாவது இடம் கிடைக்கும்.                                                                                                                                                                    
பரிகாரம்: உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, 'நாலரை பால்' குடிக்கிறது   நல்லது.                                                                                                                                                                                                                   
மிதுன ராசி மக்களே!                                                                                                                                                                                                  எஸ்.எம்.எஸ் அனுப்பி அனுப்பியே, முடக்குவாதம் வந்த மிதுன மக்களே, அடுத்த    குருபெயர்ச்சிவரை நீங்க செல்லைக் கையால தொடக்கூடாது, காதாலயும் தொடக்கூடாது.   குரு ஆறுல இருந்து பாஸாகி ஏழுக்கு வந்தாலும், சனி எட்டாம் பாதத்துலயிருந்து    தொடர்ந்து 'நோக்கியா'. அதனால செல்லோட யாரும் பக்கத்துல வந்தாக்கூட  கல்லைக்  கண்ட நாய் மாதிரி தறிகெட்டு ஓடுறது நலம். இல்லாட்டி சனி ரிங்டோனா  'சங்கு  சவுண்டை' அனுப்பி வைக்கும்.                                                                                                                                                                                                   
பரிகாரம்: ரிலையன்ஸ் அம்பானிக்கு வாராவாரம் ஞாயித்துக்கிழமை நெய் விளக்கு போடணும்
        .                                                                                                                                                                                                                     
கடக ராசி மக்களே!                                                                                                                                                                                                       
சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வித்தியாசம் தெரியாம திரியுற நீங்க, இன்னும்   ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, நியூஸே பார்க்கக்கூடாது. அதுவும்  அடியில் ப்ளாஷ் நியூஸ் ஓடிச்சுன்னா, தெறிச்சு தெற்குப் பக்கமா ஓடுறது நல்லது.  ஏன்னா, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு. உங்க ராசியோட அஞ்சாவது வீட்டை  குரு குத்துமதிப்பா பார்க்குறதால, மதுரைக்குப் போய் மறந்து தினகரன் வாங்கிடப்   போறீங்க, கவனம்.                                                                                                                                                                                                            
பரிகாரம்: டேபிள்ல குரு இருந்தாலும் வீட்டுக்குள்ள வர்ற கேபிள்ல சனி இருக்கறதால,  உங்க வீட்டு ரிமோட்டை உடனடியா எடுத்துட்டுப் போய், பேங்க் லாக்கர்ல வைச்சிருங்கோ!  முரசொலியில் ராசிபலன் வருகிறதா என்று தேடிப்பாருங்கோ!                                                                                                                                                                           
சிம்ம ராசி மக்களே!                                                                                                                                                                                                         குருவும் ராகுவும் ஒரே நேரத்துல நாலாம் பாதத்துக்கு 'Login' ஆகியிருக்கறதால,  இன்னும் 222 நாளுக்கு நீங்க இமெயில் செக் பண்ணக்கூடாது. சாட் ஆகவே ஆகாது.  'orkut, facebook' பக்கம் தலை, கை, கால் எது வைச்சும் படுக்கக்கூடாது.  முக்கியமா  வலைப்பதிவை கொலைவெறியோட பண்ணுறவங்க, அந்தப்பக்கமே வரக்கூடாது.   ஜூன்,  ஜூலை மாதத்துல குரு லாப வீட்டுல குந்தப்போறதால, மேட்ரிமோனியல்ல  
பதிஞ்சு வைச்சுருக்கிற கன்னிப்பசங்களுக்கு உடனடியா சஷ்டியப்த பூர்த்தி ப்ராப்திரஸ்து !                                                                                                                                                  
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் இட்லிவடையைத் தேடிக் கண்டுபிடிச்சு வடைமாலை   சாத்தறது உத்தமம்.                                                                                                                                                                                                           
கன்னி ராசி மக்களே!                                                                                                                                                                                 ஹைக்கூ.. பைக்கூ.. கொக்கரக்கூ.. இப்படி எந்தவித கவிதைகளையும் உங்க வாழ்க்கையில   நீங்க இன்னும் அரை வருசத்துக்கு நுழையவிடக்கூடாது. வைரமுத்து, வாலி  வகையறாக்களை பாத்தா உங்க வாய் 'வாய்தா' வாங்கிட்டு போயிடறது நல்லது. முக்கியமா பின்நவீனத்துவக்காரங்ககிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கறது நல்லது. இதையெல்லாம் மீறி   நீங்க காதல் கவிதை படிச்சீங்கன்னா, குருவே தடுத்தாலும் உங்க கண்ணை 'சனி பகவானோட'    காக்கா வந்து கொத்திரும்.                                                                                                                                                                                                    
பரிகாரம்: வாரம் ஒருமுறை மூணு கிலோ 'கவித' பொஸ்தகம் வாங்கி, 'கழுதை'க்கு  தானம் பண்ணனும்.                                                                                                                                                                                                              
துலாம் ராசி மக்களே!                                                                                                                                                                                                    கார்ப்பரேட் கம்பெனிகள் எடுக்குற எந்த சினிமாவுலயும் கதையே இல்லாததால உங்க    வாழ்க்கைக் கதையில எதிர்பாராத யூ-டர்ன் வர வாய்ப்பிருக்கு. ஆகவே நீங்க இன்னும்   நாலேகால் மாசத்துக்கு நயன்தாராவைப் பார்க்கக்கூடாது. ஸ்ரேயா ஆகவே ஆகாது.  மல்லிகா ஷெராவத்தை மனசால நினைச்சாகூட எதிர்த்த வீட்டு ஆயா, ஆப்பக்கரண்டியால   அடிக்க வாய்ப்பிருக்குது. முக்கியமா, தியேட்டர், டி.வி, விசிடி இப்படி எதுல  சினிமா பாத்தாலும் உங்களுக்கு சனிமா!                                                                                                                                                                                         
பரிகாரம்: வடபழனி அருகே கோடம்பாக்கத்தில் அருள்பாலிக்கும் நமீதாம்பாளை வடக்கே   சூலம் இருக்கும் நாளில் சென்று வணங்குதல் நல்லது.                                                                                                                                                                                  
விருச்சிக ராசி மக்களே!                                                                                                                                                                                                    யார் எதைச்சொன்னாலும் கேட்காத விருச்சிக மக்களே, நான் இப்ப சொல்லுறதையும்  நீங்க   கேட்கப்போறதில்ல. அதனால நானும் எதுவும் சொல்லப் போறதில்ல!                                                                                                                                                                       
பரிகாரம்: யார் என்ன பரிகாரம் சொன்னாலும் செய்யாமலிருப்பது.                                                                                                                                                                       
தனுசு ராசி மக்களே!                                                                                                                                                                                                       நீங்க 'i'ல ஆரம்பிக்கிற பேங்குல அக்கௌண்ட் வைச்சிருந்தா உடனே அதை வேற   எங்கேயாவது மாத்திடுங்க. இன்னும் 8 மாசத்துக்கு 'i'யோட சகவாசமே ஆகாது. இவ்ளோ  நாள் ஒஸாமா லக்கினத்துல இருந்த குரு இப்போ ஒபாமா லக்கினத்துக்கு கம்பி    நீட்டியிருக்கிறதால உங்களுக்கு கார்டுல கண்டம். கிரெடிட் கார்டை கிழிச்சுப்   போடுங்க. டெபிட் கார்டை டெலிட் பண்ணுங்க. ரேஷன் கார்டை 'ஒரு ரூபாய்'க்கு  வித்துருங்க.                                                                                                                                     
பரிகாரம்: தினமும் ஒரு ஆளுக்கு ஒபாமா ஹேர்கட்டிங் செஞ்சு விடுறது நல்லது.                                                                                                                                                           
மகர ராசி மக்களே!                                                                                                                                                                                                       
வாஸ்துப்படி குரு உங்களுக்கு குண்டக்க மண்டக்க பெயர்ச்சி அடைஞ்சிருக்கறதால,  இன்னும் 7 மாசத்துக்கு நீங்க உங்க வீட்டுக்குள்ள முன்வாசல் வழியா நுழையக்கூடாது.    பின்வாசலும் ஆகாது. அதனால சன்னல் வழியா போனா இன்னல் இருக்காது. டூ பாத்ரூம்    டாய்லெட்ல போகாதீங்க. கோலத்தை வாசல்ல போடாதீங்க. மீறினா, தேற மாட்டீங்க.                                                                                                                                                             
பரிகாரம்: பேசாம கொஞ்ச நாளைக்கு ஃப்ளாட்பாரத்துல வாழுங்க!                                                                                                                                                                        
கும்ப ராசி மக்களே!                                                                                                                                                                                                     இப்ப 'கரண்ட்'ஆ நடந்திருக்கிற குரு பெயர்ச்சியால, உங்களுக்கு 'கரண்டுல' கண்டம்.   அதனால வீட்டுல உள்ள எலெக்ட்ரிக் ஐயிட்டத்தையெல்லாம் வித்துடுங்க. ஜீரோ வாட்ஸ்  பல்பு  கூட இருக்கக் கூடாது. சொல்லப்போனா, பேப்பர்ல வர்ற 'கரண்ட்' நியூஸைக்கூட   படிக்கக்கூடாது.                                                                                                                                                                                                            
பரிகாரம்: அமாவாசை அன்னிக்கு மின்சார வாரியம் புள்ளையார் கோயில்ல ஆற்காட்டார்    பெயருல அர்ச்சனை பண்ணுங்க.                                                                                                                                
மீன ராசி மக்களே!                                                                                                                                                                                                             குரு நார்த் ஈஸ்ட்டுக்கும், சௌத் வெஸ்ட்டுக்கும் இடையில ஈஸ்ட்வெஸ்ட்டுல ரெண்டு  டிகிரி நகர்ந்து இருக்கிறதால, நீங்க அடுத்த பஸ்ஸையோ, ட்ரெயினையோ அல்லது அடுத்த சந்திராயனையோ புடிச்சு வியாழன் கெரகத்துக்கு போயிடுறது நல்லது.   கடமையைச் செய் பலனை எதிர்பாருன்னு பகவத் கீதையில சொல்லாததால, தேமுதிக  மஞ்சக்கலர்ல முண்டா பனியன் போட்டுக்கிட்டா, கலைஞர்கள் வாழ்வில் விடிவு ஏற்படும்.                                                                                                                                                         
பரிகாரம்: எந்த ஜோசியக்காரனைப் பாத்தாலும் வெக்கப்படாம கடன் கேளுங்க!
 
11 comments:
//சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வித்தியாசம் தெரியாம திரியுற நீங்க, இன்னும் ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, நியூஸே பார்க்கக்கூடாது. அதுவும் அடியில் ப்ளாஷ் நியூஸ் ஓடிச்சுன்னா, தெறிச்சு தெற்குப் பக்கமா ஓடுறது நல்லது. ஏன்னா, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு. உங்க ராசியோட அஞ்சாவது வீட்டை குரு குத்துமதிப்பா பார்க்குறதால, மதுரைக்குப் போய் மறந்து தினகரன் வாங்கிடப் போறீங்க, கவனம்.//
இதுக்கு சிரிச்சி மாளலை!(சரியான தமிழ் தானே!)
உங்க நண்பிக்கு இந்த மாதம் ஏழரைநாட்டுச் சனியன் பிடிக்கிறது. தவிர்க்கவேண்டிய சொல் லூசு.
நல்லா சிரிச்சேன்...
வயிறு வலிக்க வலிக்க சிரிச்சுட்டேன் ..
உண்மையிலே அருமை நண்பரே
வந்ததுக்கு நன்றி நல்ல தந்தி,
ஜாக்கிரதையா இருங்க, தமிழ் தப்பா எழுதுகிறவர்களுக்கு கைவிரல் வீக்கம் வருமாம்.
வாங்க அனானி,
என் நண்பி சனியையெல்லாம் பனிபிரதேசத்துக்கு அனுப்புறவங்க. ஏன்னா அவுங்க முதல்லயே லூசுதான்
வயிறு வலிக்க சிரிக்கப்படாது அணிமா,
ராகுவும் கேதுவும் வடகிழக்கு மூலைல வர்ற நாளா பார்த்து, வயிற்று மேல சந்தனம் தடவிட்டு, கிழக்கையும் வடக்கையும் ஒண்ணு போல பார்த்து கும்பிட்டுக்கோங்கோ,
வயிற்று வலி போயிரும்.
ஒலக நக்கலு :))
வாங்க அப்துல்லா அண்ணே,
நல்லதச் சொன்னாலும் நக்கலுண்ணு சொல்ற உங்க கிரக நிலை எப்படி இருக்குனு பாத்தா,
வேண்டாம் நான் சொல்லலை
நண்பருக்கு,
இந்தக்கட்டுரையின் நதிமூலம் & ரிஷிமூலம்
http://www.writermugil.com/?p=128
http://nhm.in/printedbook/27/Lollu%20Darbar
அண்ணே, முகில் அண்ணே,
தகவலுக்கு டேங்சு.
நீங்கதான அது, இப்படியெல்லாம் சிரிக்க வெச்சது.
நான் ஆரம்பத்துலயே டிஸ்கியோடதான் ஆரம்பிச்சிருக்கேன். அதுனால கொவிச்சுக்காதீங்க.
அப்புறம் அந்த "யூதர்கள்" ங்கற புத்தகம் எழுதுனது நீங்க தானா, அதுல யூதாஸ் "ஸெனுசரேத்" ங்ற மரத்துல தூக்கு மட்டிகிட்டதா எழுதி இருக்கீங்க, ஆனா இந்திய வேதாகம சங்கம் வெளியிட்டுள்ள பைபிள்ல அவன் தற்கொலை செய்து கொண்டதாகத்தான் எழுதியிருக்குதே அல்லாமல், தூக்கு அதுவும் ஸெனுசரேத்தப்பத்தி ஒண்ணுமே சொல்லலையே
Post a Comment