Thursday, January 8, 2009

வழிவிடு மானிடா !!!!!!

மனைவி குழம்பு வைத்தாள்
பருப்பு மட்டும் பார்த்து சிரித்தது
என்னவென்றேன்
லாரி ஓடவில்லை - காய் கறி வரவில்லை.

வழியில் கடையில் பார்த்தேன்
ஆத்திரக் குரலுடன் அதிகமாய் தாய்மார்கள்
என்னவென்றேன்
லாரி ஓடவில்லை - எரிவாயு வரவில்லை.

எரிபொருள் நிரப்பச் சென்றேன்.
எரிபொருள் நிலையத்தில் காற்று மட்டுமே காத்திருந்தது.
என்னவென்றேன்
லாரி ஓடவில்லை - எரிபொருள் வரவில்லை.

ஆனால் சாலையில் பார்த்தேன்
அரசுப்பணியில் - அவசரம் என்ற முகவரி தாங்கிய முகங்களுடன்
அசுர வேகத்தில் லாரிகள் ஓடியது.
லாரி தான் ஓடுகிறதே - என்னவென்றேன்,

பதில் வந்தது,

வழிவிடு மானிடா, அவை டாஸ்மாக் கடையின் சரக்கு லாரிகள்.
அரசுப்பணியல்லவா அவை அவசரமாக செல்ல வேண்டும்.
எத்தனை கடைகளில் இருப்பு தீர்ந்ததோ,

வழிவிடு மானிடா - அரசுப்பணியில் - அவசரம்.

8 comments:

புதுகை.அப்துல்லா said...

மீ த ஃபர்ஷ்ட்டு....டாஸ்மார்க்கு மட்டும் இல்லை, உங்க பதிவுக்கும் :))

புதுகை.அப்துல்லா said...
This comment has been removed by the author.
புதுகை.அப்துல்லா said...

சும்மா நடு மண்டையில் நச்சு நச்சு அடிச்ச மாதிரி இருக்கு. கவித...கவித...

தராசு said...

வந்ததுக்கு ரொம்ப டேங்சு.

டாஸ்மாக்குக்கு மொதல் ஆளா இருக்கறதை வெளில சொல்லலாமா

புதுகை.அப்துல்லா said...

//டாஸ்மாக்குக்கு மொதல் ஆளா இருக்கறதை வெளில சொல்லலாமா
//

:)

அத்திரி said...

தமில் நாட்டுல இருந்துட்டு இதெல்லாம் பாத்துட்டு நீங்க டென்சன் ஆகக்கூடாது அண்ணாச்சி

புதுகை.அப்துல்லா said...

அண்ணே என்னாச்சு ஆளேகாணோம். ஆணி அதிகமா??

அளவில்லா அக்கரையோடு(?)
அப்துல்லா

தராசு said...

ஆமாம் அப்துல்லா அண்ணே,

கொஞ்சம் வட நாட்டு பக்கம் போயிருந்தேன்.