Thursday, December 23, 2010

நிறங்கள் - ஏன் இப்படி????


நாம் பேசும் பொழுது எதாவது ஒரு விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வர்ணிப்பதற்கு பதிலாக, ஒரே வார்த்தையில் அதை புரிய வைக்க ஒரு நிறத்தை குறிப்பிடுகிறோம். இப்படி நிறங்களின் குறியீடு ஏன் வந்தது???

1. ஒரு குழுவாய் செயல்படும் மனிதர்கள் மத்தியில் நல்லவன் போல் நடித்து, ஆனால், குழுவுக்கு எதிராய் செயல்படுபவனை ”கறுப்பு ஆடு” என்கிறோமே, இதில் ஏன் கறுப்பு நிறம் சொல்லப் படுகிறது????

2. ஆபாசமாக எழுதி, வக்கிரங்களினால் வாசகர்களை கவர்ந்து தன் விற்பனையை பெருக்கிக் கொள்ளும் பத்திரிகைக்கு ”மஞ்சள் பத்திரிக்கை” என்ற பெயர் எப்படி வந்தது??? இந்த மஞ்சளுக்கும் ஆபாசத்துக்கும் என்ன சம்பந்தம்???

3. ஆண் பெண் உடல் உறவுக் காட்சிகளை படமெடுத்து, அவற்றை காட்சிப் பொருளாக்கி விற்பனை செய்யும் படங்களை “நீலப் படம்” என்கிறோமே, நீலமும் காமமும் எப்படி இணைந்தன???

4. ஒருவரை திட்டும் பொழுது அதீத கோபத்தால் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட அந்தரங்க அல்லது ரகசிய விஷயங்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவதற்காக அப்புறம் நான் உன்னைப் பத்தின மேட்டரெல்லாம் “பச்சை பச்சையா” சொல்லீருவேன் என மிரட்டுகிறோமே, பச்சைக்கும் ரகசியத்துக்கும் என்ன சம்பந்தம்???

5. ஒருவர் கையும் களவுமாக பிடிக்கப் பட்டார் என சொல்வதற்கு ஆங்கிலத்தில் “Caught by RED HAND” என்று சொல்கிறோமே, இந்த சிவப்பு நிறமும், களவும் எந்த கோணத்தில் இணைகிறது???

6. அவுருக்கென்னப்பா ”வெள்ளைக் காலர் வேலை” என அலுவலகங்களில் வேலை செய்யும் ஆபீசர்களைக் கூறுகிறோமே, வெள்ளை நிறமென்ன அவ்வளவு உசத்தியா???

7. ஒருவரை ஒரு நிறுவனம் பணியிலிருந்து நீக்கி, பணி நீக்க உத்தரவை வழங்குகிறதென்றால், ஏன் அதை “Pink Slip” என சொல்லுகிறோம். பின்க் நிறத்திற்கும் பணி நீக்கத்திற்கும் இன்னா கனிக்‌ஷன்???

தெரிந்தவர்கள் நிற வாரியாக பதில் சொல்லுங்கள்.

8 comments:

DHANS said...

ஜிங்குச்சா ஜிங்குச்சா சிகப்பு கலரு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்குச்சா பச்சை கலரு ஜிங்குச்சா

DHANS said...

ஒரே பதிவு மலைய பொழியுது ஆணி அதிகம் இல்லையோ?
இதெல்லாம் கேட்ட நம்ம செவப்பு சட்டைக்காரன் என்று சொல்லிடுவாங்க பார்த்து

Anonymous said...

ஸப்பா.. ஏன்? ஏன் இந்த வில்லத்தனம்?

ஹுஸைனம்மா said...

இந்த ஆராய்ச்சியும் நல்லாருக்கே. போலீஸ் ஸ்டேஷன்ல ஒண்ணரை மணி நேரம் காத்துகிட்டிருந்தீங்களே அப்போ யோசிச்சீங்களோ? :-)))))

நீங்க கேட்டதுக்காக, எனக்குத் தெரிஞ்ச, சரின்னு நினைக்கிற ஒரே ஒரு கேள்விக்கான பதில் இங்கே:

பெரிய மனிதர்கள்தான் பெரும்பாலும் வெள்ளை நிற உடை அணிவார்கள். அழுக்காக வாய்ப்பில்லை என்பதால் இருக்குமோ? நேரடியாகக் களங்களில் வேலை பார்க்கும் மனிதர்கள் வெள்ளை ஆடை அணிந்தால் அழுக்கடைந்துவிடும். “ஆள் பாதி, ஆடை பாதி” அல்லவா? அதனால், அழுக்குப் பட வாய்ப்பில்லாத, மேல்தட்டு வேலைகள் “White-collared job" என்று சொல்லப்படுகிறது போல!!

அதுவே, கீழ்நிலை ஊழியர்களின் (உடல் உழைப்பு தேவைப்படும்) வேலைகள் "blue-collared jobs" என்பது ஏன்?

அப்புறம், இந்த “வெள்ளை மனசு”, “பச்சைக் குழந்தை”, "Yellow pages", “ரெட் சிக்னல்”, “கிரீன் சிக்னல்”... இதுகளுக்கும் உங்க ஆராச்சில காரணம் கண்டுபுடிங்கோ!! :-))))))

அஹமது இர்ஷாத் said...

கேள்வியின் நாய‌க‌னுக்கு..,ப‌தில‌ சொல்ற‌ 'வில்ல‌ன்' யாருப்பா?

♠ ராஜு ♠ said...

ஆஹா,அண்ணனுக்கு இன்னா அறிவு!

kadar said...

1. karupu atoda wool is cheaper than white wool. (pacha manjal blue wool ellam illay. tamizhan than irukan)
2. maja mallika kathai first first yellow colour attai puthahathilathan vanthuchu athunala antha peree ninnu pochu. (maja mallika pathi theriyumnu ninaikiren...)
3.in the beginning times nightlamp potu arakoraya kamichithan bluefilm edupanga. apo blue light than use pannuvanga. (ippo mathiri 1000w light illama...)
4.pachayaga ndrathu pothuva naturalla ullatha solrathu..inka nee sonnatha cook pannama apdiye pachaya soliduvendrathu....
5.red handed na kaiku ulla sivapu ratham ooduthula apdiye pudichiduvennu solrathu...(sattaiku mela ellam avru pudika matar. apdi pudicha sattaicolour hand nu sollikunga)
6.white colour na entha colour eduthalum antha sayam poga nalla thuvainga colour vellay aahidum apdiyum aahalaya bleeching potu veyila podunga aahidum athan white color.(white colour mattum thanmela enna colour adichalum appidiye accept pannikum. avlo nallavaru...)
7.pink vanthu gals colour. athan porathu pora santhosama aishwarya raya ninaichikitu pogatumnu...

balak said...

எனக்கு தெரிந்த "வெள்ளைக் காலர் வேலை" mean is காலரில் கறை ஏறாமல் வேலை செய்வது, வெளியே சுற்றும் வேலையில் கறை படியும் அல்லவா, அதனால் தான்