Tuesday, August 4, 2009

மனதைத் திற - மகிழ்ச்சி வரட்டும் - 1

நேற்று நமது நண்பர்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்பினேன். மின்னலென பதில் அனுப்பினார்கள் அனைவரும். அதில் நமது பரிசல் அண்ணா மாத்திரம் வித்தியாசமாக பதில் அனுப்பினார். " Happy our's day" என பதில் அனுப்பினார். நெஞ்சைத்தொடும்படியாய் சில வார்த்தைகளில் தன் அன்பை நட்பை புரியவைத்தார். நன்றி தல.

நம் மனதுக்குள் எத்தனை விஷயங்களை பூட்டி வைத்து விடுகிறோம். தினசரி தண்ணீர் ஊற்றி, மொட்டை மாடியின் பூந்தொட்டியில் மலர்ந்து விரிந்திருக்கும் ஒரு புத்தம் புது பூவை நமது குழந்தை ரசித்து தடவும் பொழுது, அந்த குழந்தையின் சந்தோஷமும் நம்மை தொற்றிக் கொள்கிறது, குழந்தையிடம் அன்பாய் ஒரு வார்த்தை " பூ எவ்வளவு அழகாருக்கல்ல" என்று கேட்டு வையுங்கள். நம்ம அம்மாவும்/அப்பாவும் நம்மள மாதிரியே ரசனை உள்ளவர்கள் தான்னு அந்த பிஞ்சு மனம் பூரிக்கும்.

மனைவி செய்யும் சமையல் வாசனை தூக்கலாய் நாசியை துளைக்க, அந்த பண்டம் அடுப்பில் கொதிக்கும் போதே கமகமக்கும் மணம் உங்களை அதன் சுவையை கற்பனை செய்து நாவில் நீர் வரச் செய்து அலைக்கழிக்கும். அந்த வாசனையை முழுதுமாய் அனுபவித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து எதாவது ஒரு புத்தகத்திலோ அல்லது டி.வி.யிலோ மூழ்கி இருப்பீர்கள். எழுந்து சென்று மனைவியிடம் ஒரு வார்த்தை சொல்லி வாருங்கள் " என்னது, இவ்வளவு கலக்கலா இருக்கு, அப்படி என்னம்மா பண்ற" இது போதும், அங்கு அனைத்து சுவைகளும் ஒரு சேர, ஒரு புன்னகை பூக்கும்.

கணவர் வாங்கி வந்த புடவை/ அல்லது குழந்தைகளுக்கான துணி உங்களுக்குப் பிடித்திருக்கிறது, வெறும் நல்லாருக்கு என ஒற்றை வார்த்தையில் ஒதுங்கிக் கொள்வதை விட, " நீ எதைச் செஞ்சாலும் ஒரு ஸ்டைலாத்தான்யா செய்யற". ஒரு சிறு பாராட்டு.

குழந்தை கிரேயானில் வரைந்த ஓவியம், அப்பா அடுக்கி வைத்த புத்தக அலமாரி, அம்மா பேத்திக்கு பின்னி விட்ட தலை அலங்காரம், அண்ணா வாங்கி வந்த கைக்கடிகாரம், அப்பாவுக்காக குழந்தை கொடுத்த சின்ன அன்பளிப்பு என எங்கெல்லாம் உங்கள் மகிழ்ச்சியை வார்த்தைகளாலும், செயல்களாலும் வெளிப்படுத்த முடியுமோ, கண்டிப்பாக செய்யுங்கள்.

பகிர்வதினால் மகிழ்ச்சி பன்மடங்கடையும். பரிசல் அண்ணன் சொன்ன மாதிரி " Happy our's day" என உங்கள் நட்பாகட்டும் அல்லது அன்பாகட்டும், மனதை திறந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

மனதை திறவுங்கள், மகிழ்ச்சி வரட்டும்.

16 comments:

கார்க்கி said...

:)))

எனக்கு மின்ன்ல் என்றால் பயம் தல

நணபர்கள் தின வாழ்த்துகள்

நாஞ்சில் நாதம் said...

\\\\\ பகிர்வதினால் மகிழ்ச்சி பன்மடங்கடையும். பரிசல் அண்ணன் சொன்ன மாதிரி " Happy our's day" என உங்கள் நட்பாகட்டும் அல்லது அன்பாகட்டும், மனதை திறந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

மனதை திறவுங்கள், மகிழ்ச்சி வரட்டும்.///

ம் ம் ம் ம் ம் ம்

ஆ.ஞானசேகரன் said...

நணபர்கள் தின வாழ்த்துகள்

Cable Sankar said...

நல்ல விஷய்ம் ஆனா எல்லோரும் அப்பிடி எடுத்துக்க மாட்றாஙக் தராசண்ணெ..

இப்படிதான் ஒரு வாட்டி டைட்டான் டீ சர்ட் போட்டுருந்த பொண்ணுகிட்ட போய் அவளை பாராட்டினேன். அதுக்கு அவ அடிக்க வரா.. ஏன்ணே..?

குசும்பன் said...

எந்த பாராட்டும் உள்ளத்தில் இருந்து வரவேண்டும், அப்படி வராத பட்சத்தில் அவற்றை கேட்பவர்களுக்கு ஒரு வித சலிப்பை தந்துவிடும்!

மனைவியிடம் நீங்க என்றுமே பொய் சொல்லமுடியாது மிக சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள்)


கேபிள் நீங்க என்ன சொல்லி இருப்பீங்கன்னு தெரியாதா?:)))

தராசு said...

//@ கார்க்கி said...
:)))

எனக்கு மின்ன்ல் என்றால் பயம் தல

நணபர்கள் தின வாழ்த்துகள்//

தெரியும், இப்படி கோக்கு மாக்கா எதாவது சொல்லுவீங்கன்னு !!!!!!

தராசு said...

//@ நாஞ்சில் நாதம் said...

ம் ம் ம் ம் ம் ம்//

வாங்க, டேங்சு

தராசு said...

//@ ஆ.ஞானசேகரன் said...
நணபர்கள் தின வாழ்த்துகள்//

டேங்சு நண்பரே.

தராசு said...

//@ Cable Sankar said...

இப்படிதான் ஒரு வாட்டி டைட்டான் டீ சர்ட் போட்டுருந்த பொண்ணுகிட்ட போய் அவளை பாராட்டினேன். அதுக்கு அவ அடிக்க வரா.. ஏன்ணே..?//

அந்த லைனை தாண்டி நீங்களும் போயிருக்க கூடாது, அவங்களும் வந்திருக்க கூடாது, பேச்சு பேச்சாத்தான் இருந்திருக்கணும்.

நீங்க அங்கயும் போய் நான் யூத்துண்ணு சொல்லீருப்பீங்க, அதான்.

தராசு said...

//மனைவியிடம் நீங்க என்றுமே பொய் சொல்லமுடியாது மிக சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள்)//

குசும்பன் அண்ணே,

மனதை திறந்து பாராட்டுங்கள்னு தான் சொன்னேன். பொய் சொல்லுங்கன்னு சொன்னனா, பொய் சொன்னா சாத்து சாத்துன்னு சாத்துவாங்க.

நையாண்டி நைனா said...

ஆமா தொறந்து வச்சா... வந்த மகிழ்ச்சி போயிராது...???

ghost said...

பகிர்வதினால் மகிழ்ச்சி பன்மடங்கடையும். நட்பாகட்டும் அல்லது அன்பாகட்டும், மனதை திறந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தராசு said...

நைனா,

ஏன் இந்த பச்சப் புள்ளய இப்படி எல்லாம் வார்றீங்க?????

தராசு said...

வாங்க தோஸ்ட், சாரி, டோஸ்ட், சாரி கோஸ்ட்,

வந்ததுக்கு டேங்சு

அத்திரி said...

அண்ணாச்சி ஹேப்பி அவர்ஸ் டே........

ஆதிமூலகிருஷ்ணன் said...

சரி சரி இவ்வளவு சொன்னப்புறம் பாராட்டலைன்னா நல்லாருக்காது..

நல்லாருந்தது. வாழ்த்துகள். ஆமா எனக்கு ஒரு குறுஞ்செய்தியும் வரலையே..