Tuesday, May 5, 2009

பாலபாரதி அண்ணன் கோவிச்சுக்க கூடாது!!!!!!

நேற்று இரவு 9 மணியளவில் NDTV 24 X 7 - ல் தேர்தல் நிலவரத்தைக் குறித்த பிரணாய் ராயின் பேட்டியை காணும் பாக்கியம் (அய்யோ, அய்யோ) கிடைத்தது.

என்னவோ புரியவில்லை, ஊடகத்தில் பணிபுரிவோர், பத்திரிகையாளர் இன்னும் இந்த பேட்டி எடுக்குற ஆசாமிங்க எல்லாம் நாங்க யாரை வேண்ணா அவமதிப்போம், தாய் நாட்ட எவ்வளவு தூரம் அவமதிக்க முடியுமோ, அவ்வளவு தூரம் கேவலப்படுத்துவோம், பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைந்து, எவ்வளவு தூரம் அவர்களை கூனிக்குறுகி நிற்க வைக்க முடியுமோ அவ்வளவும் செய்வோம், எவனும் எங்களை ஒண்ணும் கேக்க கூடாது, மீறி எதாவது கேட்டியானா, மவனே நாங்கெல்லாம் பத்திரிகைக்காரங்க, வகுந்துடுவேன், தில் இருந்தா பேசுடா பார்க்கலாம் என சவால் விடும் அரை பிளேடு பக்கிரிகளாக ஏன் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நேற்று, பிரணாய் ராய் சொன்ன தகவல்கள் :

பொது ஜனங்களே இந்தியாவின் நிலையைப் பாருங்கள்.

  1. ஏழ்மையில் இந்தியா இலங்கை, பாகிஸ்தான் ம்ற்றும் பங்களாதேஷை விட தரம் தாழ்ந்து போயுள்ளது.
  2. மனித வள மேம்பாட்டில் ஆப்பிரிக்க நாடான காங்கோவை விட இந்தியா பின் தங்கியுள்ளது.
  3. ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவன நாடுகளில் பசியால் வாடி மடியும் மக்களை விட அதிகமானோர் இந்தியாவில் பசியால் சாகிறார்கள்.
  4. MalNutrition - சத்தான உணவில்லாமல் இந்தியாவில் பிறக்கும் 50 சதவீத குழந்தைகள் இறந்து விடுகின்றன.
  5. 77 % இந்தியர்களின் தினசரி வருமானம் 20 ரூபாய்க்கு கீழ் தான்.
  6. வறுமை கோட்டுக்கு கீழே 300 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்.
  7. 230 மில்லியன் மக்களுக்கு சரியான உணவு இல்லை.

இந்த செய்திகள் ஒரு 30 வினாடிக்கு ஒருமுறை இந்த தலைப்புகள் அனத்தும் திரையில் பளிச்சென்று வந்து போகும், பின்னர் இந்த பிரகஸ்பதி யாராவது இரண்டு அல்லது மூன்று அரசியல்வியாதிகளிடம் கேள்வி கேட்பார். அவர்களும் எங்க கட்சி ஆட்சியில் இருந்த பொழுது, மாதம் மும்மாரி பொழிந்தது, இந்த கேப்மாறி ஆட்சிக்கு வந்ததும் தான் எல்லம் நின்னு போச்சுன்னு சத்தியம் பண்றாங்க. இதை ஒரு நிகழ்ச்சின்னு ஒளி பரப்பறாங்க,

பிரணாய் ராய்க்கு மாத்திரமல்ல, ஒட்டு மொத்த ஊடகங்களுக்குமே எனது சில கேள்விகள்:

இந்தியாவின் எந்த ஒரு சிறப்புமே உங்கள் கண்களில் தெரிவதில்லையா?

ஒரே விண்கலத்தில் பத்து செயற்கைகோள்களை வைத்து வானவெளியில் அனாயசமாக உலவ விட்டார்களே, உலகம் முழுவதும் மூக்கின் மேல் விரலை வைத்து, பிறகு எடுக்க மறந்து வியந்து போனதே, இதை எத்தனை ஊடகவியலாளர்கள் பாராட்டினீர்கள், கள்ளிக்குப்பத்தில் கள்ளக்காதல் எதிரொலியால் வெட்டிக்கொல்லப்பட்ட வள்ளியப்பனைப் பற்றிய செய்திக்கு தரப்படும் முக்கியத்துவத்தை கூட இந்த சாதனைக்கு தந்தீர்களா என்பது சந்தேகமே!!!

அரசியல்வாதியாகட்டும் அல்லது சினிமா பிரபலமாகட்டும் அல்லது விளையாடு வீரராகட்டும், இவர்களது தனிப் பட்ட வாழ்க்கை என்பது உங்களுக்கு கிள்ளுக்கீரையா? ஒவ்வொரு வருடமும் செய்திகளை உடனுக்குடன், சுடச்சுட, பரபரப்பாக தருவதற்கு விருதுகள் வாங்கிக் குவிக்கும் "ஆஜ் தக்" என்ற ஹிந்தி தொலைக்காட்சியில், இந்தியா டுடே நிறுவனத்தின் தலைமை எடிட்டராக பணி புரியும் பிரபு சாவ்லா என்பவர், ஹிந்தி திரைப்படதுறையின் பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கரை பேட்டி எடுக்கிறார்.

கேள்வி : லதாஜி, நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை, (ஒரு 60 வயது பெண்ணைப் பார்த்து இந்தக் கேள்வி அவசியமா)

பதில் : (மௌனம், ஒரு சிறிய புன்னகை)

கேள்வி : இல்லை, உங்களை திருமணம் செய்ய விடாமல் தடுத்தது எது?

பதில் : எதுவுமில்லை

கேள்வி : நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லையா?

பதில் : (புன்னகை).

கேள்வி : உங்களுக்கு திருமணத்தின் மீது நாட்டமில்லாமல் போனதா??????, அல்லது திருமணத்திற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனதா??????,

பொளேர் என்று அவனை அறைந்து விட்டு, காமிராவின் முன்னேயே அவனை அம்மணமாக்கிவிட்டிருக்க வேண்டும். என்ன தைரியம் இருந்தால் ஒரு பெண்ணைப் பார்த்து அதுவும் பலரால் அறியப்படும் ஒரு பெண்ணைப் பார்த்து இந்தக் கயவர்களால் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை கேள்வி கேட்க முடியும்??

26/11 ல் இந்த மீடியாக்காரர்கள் ஆடிய கேவலமான ஆட்டத்தை பார்த்து தெருநாய் கூட காறித்துப்பியது. ஆனால் அதற்காக ஒரு முறையாவது இவர்கள் வருத்தப்ப்ட்டதாகவோ, அல்லது மன்னிப்பு கோரியதாகவோ தெரியவில்லை.

முஷாரஃப்புடன் நடந்த ஆக்ரா உச்சி மாநாட்டின் போக்கை அரை வேக்காட்டுத்தன அறிக்கைகளால் முற்றிலும் திசைதிருப்பி விட்டது, 26/11 ல் இறந்த மேஜர் சந்தீப்பின் வீட்டாருடைய துக்கம் நிறைந்த தருணங்களைக்கூட கடைச்சரக்காக்கி விற்று காசு பார்த்தது என்று இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த ஊடகங்களின் கோரப்பிடியில் இந்திய மக்கள் சிக்கித் தவிக்க வேண்டுமோ தெரியவில்லை.

பிரணாய் ராயின் புள்ளி விவரங்களின் படி பார்த்தால்:

இன்னும் சில வருடங்களில் நாம் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி செல்ல வேண்டி வரும். இந்த வறியவர்களால் உருவாகும் அரசால் தான், ஆப்கானிஸ்தானின் புனரமைப்புக்கு தனது பங்களிப்பை செய்ய முடிகிறது. ஐ.நா வின் பாதுகாப்பு படையாக சென்று பல ஆப்பிரிக்க நாடுகளில் அமைதியை நிலை நாட்ட முடிகிறது.

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோவில் ஒரு டாலர் நோட்டுக்காக கழுத்து சீவப்பட்டவர்கள் ஏராளம். இதை விட கேவலமான ஒரு சமுதாயத்தில் தான் பிரணாய் ராய் வாழ்ந்து கொண்டிருக்கிறாரா? அல்லது இத்தகைய சமுதாயத்தில் இருந்து வந்த இந்த மனித வளம்தான் உலகத்தின் மென்பொருள் துறையையே கபளீகரம் செய்து விட்டதா???

சத்தான உணவில்லாததால் 50 சதவீத குழந்தைகள் இறக்கின்றனவென்றால் இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஜனத்தொகை பாதிக்கும் மேலாக குறைந்துவிடுமா???

77 சத வீத இந்தியர்கள் 20 ரூபாய்க்கு கீழான தினசரி வருமானத்தில் வாழ்கிறார்களென்றால் 56 சதவீத மக்கள் செல்போன் வைத்திருக்கிறார்களே, 20 ரூபாய்க்கு கீழே சம்பாதிப்பவன் எப்படி செல்போன் வைத்திருக்க்கிறான்??

வறுமை கோட்டுக்கு கீழும், சரியான உணவில்லாமலும் இத்தனை கோடிப்பேர் வாழ்கிறார்களே, அவர்களுக்கு ஒரு சராசரி இந்தியனாக நீ ஒரு துரும்பையாவது நகர்த்தி இருப்பாயா? தங்க நாற்கர சாலைகளாகட்டும், வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்களாகட்டும், புதிதாய் முளைக்கும் நகரங்களாகட்டும், வறுமை கோட்டுக்கு கீழேயும், சோத்துக்கு வழியில்லாதவனும் எப்படி இவைகளை நிர்மாணிக்கிறான்????

இந்தியாவுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் காவல் பலப்படுத்தப் படுகிறது. ஆனால், உள்நாட்டு அதிதீவிரவாதிகளான கடிவாளமில்லாமல் திரியும் இந்த மீடியா காரர்களிடமிருந்து யார் காப்பாற்றுவது??

இறைவா, எங்களை நண்பர்களிடமிருந்து காப்பாற்று, எதிரிகளை நாங்கள் வெல்ல முடியும்.

டிஸ்கி : பால பாரதி அண்ணன் தலைப்பை மறுபடியும் படிக்கவும்.

15 comments:

Raju said...

அண்ணே..உமக்கு இவ்ளோ மேட்டரு தெரிஞ்சுருக்குண்ணே..
நான் கொஞ்சம் தள்ளி நின்னுக்கிறேன்..!

தராசு said...

//@டக்ளஸ்....... said...
அண்ணே..உமக்கு இவ்ளோ மேட்டரு தெரிஞ்சுருக்குண்ணே..
நான் கொஞ்சம் தள்ளி நின்னுக்கிறேன்..!//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளமா ஆக்கிட்டிங்களேப்பா

கார்க்கிபவா said...

அட.. எபப்டிங்க?

என்னவோ போங்க..

அட இந்த பக்கம் வாங்க..

சரி விடுங்க

தராசு said...

//@கார்க்கி said...
அட.. எபப்டிங்க?

என்னவோ போங்க..

அட இந்த பக்கம் வாங்க..

சரி விடுங்க//

என்ன சொல்ல வர்றீங்க?????

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/77 சத வீத இந்தியர்கள் 20 ரூபாய்க்கு கீழான தினசரி வருமானத்தில் வாழ்கிறார்களென்றால் 56 சதவீத மக்கள் செல்போன் வைத்திருக்கிறார்களே, 20 ரூபாய்க்கு கீழே சம்பாதிப்பவன் எப்படி செல்போன் வைத்திருக்க்கிறான்??/

தகவலைச் சரிபார்க்க முடியுமா? எனக்குத் தெரிந்து 56% அலைபேசி வைத்திருக்கவில்லை.

தராசு said...

//தகவலைச் சரிபார்க்க முடியுமா? எனக்குத் தெரிந்து 56% அலைபேசி வைத்திருக்கவில்லை.//

வந்ததுக்கு நன்றி தலைவரே,
சரி பார்த்து திருத்துகிறேன்.

நையாண்டி நைனா said...

அண்ணே...

புள்ளி விவரத்திலே நீங்க ஒரு விவர புலி.

எல்லாம் சரி.... இதுக்கு ஏன் திரு. பாலபாரதி அவர்களோட அண்ணன் கோவிச்சுக்க போறார்??????


ஹி.... ஹி... ஹி... சும்மா தமாசுக்கு தான்...
இதுக்கு நீங்களும் மற்றும் பாலபாரதி அண்ணன் கோவிச்சுக்க கூடாது!!!!!!

தராசு said...

வாங்க நைனா,

வந்ததுக்கு டேங்சு.

Cable சங்கர் said...

என்ன சுகுரா எளூதறீங்க..

தராசு said...

//@Cable Sankar said...
என்ன சுகுரா எளூதறீங்க//

வந்ததுக்கு டேங்சுண்ணே

அத்திரி said...

அண்ணே ஏகப்பட்ட சரக்கு வச்சிருக்கீங்க.............போல

அத்திரி said...

என்னமோ இந்தியாவுல இவங்களுக்குத்தான் எல்லாம் தெரிஞ்சமாதிரி இம்சய கூட்டுவானுக பாருங்க அண்ணே.......... அய்யோ கொடுமை.....

தராசு said...

//@ அத்திரி said...
என்னமோ இந்தியாவுல இவங்களுக்குத்தான் எல்லாம் தெரிஞ்சமாதிரி இம்சய கூட்டுவானுக பாருங்க அண்ணே.......... அய்யோ கொடுமை.....//

வந்ததுக்கு டேங்சு

குசும்பன் said...

//கள்ளிக்குப்பத்தில் கள்ளக்காதல் எதிரொலியால் வெட்டிக்கொல்லப்பட்ட வள்ளியப்பனைப் பற்றிய செய்திக்கு தரப்படும் முக்கியத்துவத்தை கூட இந்த சாதனைக்கு தந்தீர்களா என்பது சந்தேகமே!!! //

அண்ணே இது என்னாது புது நியூஸ் இதுபற்றி கொஞ்சம் மேலதிகவிவரம் சொல்லுங்களேன்:))

(இதுதாங்க நம்ம ஆளுங்க மெண்டாலிட்டி)

பதிவு அருமை!

தராசு said...

//@ குசும்பன் said...
//கள்ளிக்குப்பத்தில் கள்ளக்காதல் எதிரொலியால் வெட்டிக்கொல்லப்பட்ட வள்ளியப்பனைப் பற்றிய செய்திக்கு தரப்படும் முக்கியத்துவத்தை கூட இந்த சாதனைக்கு தந்தீர்களா என்பது சந்தேகமே!!! //

அண்ணே இது என்னாது புது நியூஸ் இதுபற்றி கொஞ்சம் மேலதிகவிவரம் சொல்லுங்களேன்:))

(இதுதாங்க நம்ம ஆளுங்க மெண்டாலிட்டி)

பதிவு அருமை!//

வாங்கண்ணே, முதல் தரமா வந்திருக்கீங்க, டேங்சு