ஒருவழியா தென் ஆப்பிரிக்கா வாசம் முடிந்து தாய்நாடு திரும்பி விட்டேன். இரண்டரை வருட தென் ஆப்பிரிக்க வாழ்க்கை ஒரு மறக்க முடியாத சகாப்தம் தான். வெவ்வேறு நிற மனிதர்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெளிப்பார்வைக்கு ஒன்றாக சிரித்துப்பழகினாலும், உள்ளுக்குள் இன்னும் நிறவித்தியாசத்தை மனதுக்குள் பதுக்கிக்கொண்டிருக்கும் வெள்ளையர்களும் கருப்பினரும், பின் இவர்களுக்குள்ளாகவே இருக்கும் உட்பிரிவுகளும், எதிலும் சேராத கலப்பின மக்களும், இந்தியக் கலாச்சாரத்தை தொலைத்து விட்ட இந்தியர்களும், சிவன் கோவிலும், தைப்பூசத்துக்கு அலகு குத்தி, காவடி எடுத்து, "அரோகரா" என்ற ஒரே தமிழ் வார்த்தையை உச்சரிக்கும் முருக பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் என தென் ஆப்பிரிக்க வாழ்க்கை எனக்குக் க்ற்றுத் தந்த பாடம் நிறையவே உள்ளது. அதை ஒரு தனி தொடராக எழுதும் எண்ணம் உள்ளது. முடிந்தால் வரும் நாட்களில் பதிவிடுகிறேன்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்த கடைசி நாட்களில் வீட்டுக்குப் போகும் தேதி தெரிந்தவுடன், தொலை பேசியில் மகிழ்ச்சியோடு என் மறுபாதியிடம்:
" டிக்கட் புக் பண்ணியாச்சும்மா, நாளன்னைக்கு கிளம்பறேன்".
"உண்மையாத்தானா, நிஜம்மா சொல்றீங்களா இல்லை, வழக்கம் போல அந்த ஸ்டார் மார்கெல்லாம் போட்டுட்டு சொல்றீங்களா " (* கடைசி நேர மாறுதல்களுக்குட்பட்டது).
"இல்லை, இந்த தரம் கண்டிப்பா வந்துருவேன்"
"சரி, எதுக்கும் உங்க ஆபீஸ்ல விசாரிச்சு கன்ஃபர்ம் பண்ணிக்கறேன்" ( அடிப்பாவி, நான் சொல்றதை ஒரு தரமாவது நம்பமாட்டியா).
"சரி எந்த வழியா வர்ரீங்க" ( இவ்வளவு கரிசனமா, உங்கிட்டிருந்தா, எங்கேயோ பிசிறடிக்குதே)
"Durban - Johannesburg - Dubai - Chennai"
" துபாய்ல எத்தனை மணி நேரம் இருப்பீங்க?" (எனக்குள் ஒரு சந்தேக மணி, எங்கியோ ஒரு பாம் வெடிக்கப் போகுது)
" இரண்டரை மணி நேரம், ஆனா ஏர்போர்டை விட்டு நான் வெளிய போக மாட்டேன்" ( இப்படியாவது குண்டு வெடிக்காம போயிறாதா)
" நீங்க எங்கயும் போக வேண்டாம், நானும் உங்கள போக சொல்லலை, ஏர்போர்ட்டுக்குள்ளேயே அந்த கோல்ட் ஷாப் இருக்குதுல்ல, (அடிப்பாவி, எங்க வர்ரீன்னு தெரியுது), என்ன சத்தத்தையே காணோம், நான் சொல்றது காதுல விழுதா" ( எம்மண்டை மேல அடியா விழுது)
"ம், சொல்லு" (கேக்கறதுக்குத்தான வாழ்க்கைப்பட்டிருக்கோம்)
" இப்பவே நல்லா கேட்டுக்குங்க, அப்புறமா மொபைல் லைனுல எதோ டிஸ்டர்பன்ஸ், நீ சொன்னது சரியா காதுல விழலைன்னெல்லாம் கதை விடக் கூடாது" (சரி, இந்த தரம் புதுசா எதாவது முயற்சி பண்றேன், ஆண்டவா உனக்கு கருணையே இல்லியா, இந்த நேரத்துல அடுப்புல வெச்சிருக்கற பால பொங்கி வழிய விடமாட்டியா, இல்லை எம்பொண்ணு ரிமோட்டை எடுத்து டி.வி சத்தத்தை கூட்ட மாட்டாளா, அல்லது பக்கத்து வீட்டுக்காரங்க எதுவும் இரவல் வாங்க வரமாட்டாங்களா)
"அங்க பாப்பாவுக்குனு ஒரு 19 இன்ச் கோல்டு செயின் வாங்கிட்டு வாங்க". (ஆமா, 19 இன்ச் செயின் போட்டா நம்ம பாப்பாவுக்கு முழங்கால் அளவுக்கு வருமே, ஒருவேளை இந்த மூணு மாசத்துல தமிழ்நாட்டுல ஃபேஷன் மாறிடுச்சா, அல்லது மூணு மாசத்துக்குள்ள பாப்பாவுக்கு அதீத வளர்ச்சியா)
" என்ன நான் சொல்றது, சத்தத்தையே காணோம்"
"ம், சரி, சரி முடிஞ்சா பாக்கறேன்"
" அதெல்லாம் முடியும், கண்டிப்பா வாங்கிட்டு வாங்க"
என் போதாத காலம், எமிரேட்ஸ் விமானம் Johannesburg - ல் கிளம்பும் போதே முக்கால் மணி நேரம் தாமதம். துபாயில் இறங்க வந்தால் ஒரே பனி மூட்டம்னு சொல்லி இறங்கறதுக்கு முன்னாடி துபாய்க்கு மேலேயே ஒரு அரை மணி நேரம் பறந்துட்டு, அதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு, மெதுவா இறங்கி, எதோ துபாய் சிட்டிக்குள்ளேயே ஓட்டிட்டு போற மாதிரி ஏர்போர்ட்டின் மெயின் டெர்மினலை விட்டு எவ்வளவு தூரம் தள்ளி நிறுத்த முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளி நிறுத்தி விட்டு, கொஞ்சம் கூட வஞ்சகமில்லாம வாழ்த்துச்சொல்லி விமானி அனுப்பி வைத்தார். (பாவம் அவரை குத்தஞ்சொல்லி என்ன ஆகப்போகுது, அவருக்கு என்னோட தங்க(மணி) பிரச்சினை தெரிய வாய்பில்லை இல்லையா?)
அப்புறமா ஒரு பஸ்ஸில ஏத்தி துபாய் ஏர்போர்ட்டையே ஒரு சுத்து சுத்திக்காமிச்சு, ஒரு வழியா இறக்கி விட்டாங்க, அப்புறமா பெல்டை கழட்டு, ஷூவை கழட்டுனு ஒரு பாதுகாப்பு சோ(வே)தனையெல்லாம் முடிச்சு, எங்க இருக்கறம்னு பாத்தா, தங்க கடைக்கும் நம்ம நிற்கற இடத்துக்கும் எத்தனையோ கிலோமீட்டர் நடக்கணும் போல இருக்குது, சரி, ரொம்ப கிட்னிய கசக்கி யோசிச், சாரி, சாரி மூளைய கசக்கி யோசிச்சேன், நம்ம இறங்கும்போது பனி மூட்டம்னாங்களே, அப்படித்தான அடுத்ததா புறப்படுற விமானமும் தாமதமா கிளம்பும்னு யோசிச்சுட்டு அறிவிப்பு பலகையை பார்த்தா, சென்னைக்கு போற விமானம் மாத்திரம் சரியான சமயத்துக்கு கிளம்புதாம். அதுல வேற விமானம் புறப்படும் நேரத்துக்கு 30 நிமிடம் முன்கூட்டியே போகாவிடில் நீங்கள் இறக்கிவிடப்படுவீர்கள் என்ற பயமுறுத்தல் வேறு. நம்ம தாமதமா போய், அந்த ஸ்டார் குறி சமாச்சாரத்தை உண்மையாக்கணுமான்னு ஒரு தரம் யோசிச்சுட்டு, தங்கம் வாங்கும் யோசனையை தற்காலிகமாக தள்ளிப்போட்டுவிட்டு சென்னை விமான கவுண்டர் நோக்கி நடந்தேன். ஒரு வழியா விமானத்துல ஏறி அமர்ந்ததுக்கப்புறம்தான், ரொம்ப சாதாரணமா விமானி சொல்றாரு, பனி மூட்டம் காரணமாக Air Traffic Control - ல இருந்து விமானம் கிளம்ப அனுமதி தர தாமதமாகுதாம். (அய்யா, இந்த விமானம் தாமதம்னு வெளியில இருக்கும்போதே சொல்லீருந்தா, இந்த ஏழைக்கு உதவி பண்ணுன புண்ணியமாவது கிடைச்சிருக்குமேயா? ஏய்யா, இப்படி இயற்கையோட சேர்ந்துட்டு மனுஷர்களுமா ஒட்டுமொத்தமா எனக்கு எதிரா கிளம்பிருக்கீங்க)
வழக்கமா துபாய்ல விமானத்துல உக்கார்ந்து தூங்க ஆரம்பிச்சா, சென்னயில் தரைய்றங்கப்போறோம்கற அறிவிப்பை கேட்டுத்தான் கண்முழிப்பேன். ஆனா, இப்ப வீட்டுல என்ன சொல்லி சமாளிக்கலாம்ங்கற நெனப்புல இமைகள் மூட மறுத்தன. (ஆஹா, கவிதை மாதிரியே இருக்குல்ல). கொட்டக் கொட்ட முழிச்சுட்டே உக்கார்ந்து வந்தேன். கலக்கலா ஒரு ஐடியா மனசுல உதிச்சுது, ஆனா எல்லாத்தையும் ஒத்திகை பார்த்த இந்தப் பாவி இந்த ஐடியவோட பக்க விளைவுகளையும் கொஞ்சம் யோசிச்சிருக்கணும். விதி யாரைத்தான் விட்டது.
(தொடரும்)---------
3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்
3 weeks ago
12 comments:
ஹிஹிஹி..
வாங்க கார்க்கி,
ஸ்டார் பதிவரானதுக்கு வாழ்த்துக்கள்.
அனுபவசாலி உங்களுக்கே இப்படினா சின்னப்பசங்க நாங்களெல்லாம் எம்மாத்திர்ம்
//அத்திரி said...
அனுபவசாலி உங்களுக்கே இப்படினா சின்னப்பசங்க நாங்களெல்லாம் எம்மாத்திர்ம்//
வாங்க அத்திரி,
இதுக்கு பதில் பதிவுல இருக்கிற கடைசி வரிகள் தான் " விதி யாரைத்தான் விட்டது"
வந்ததுக்கு டேங்சு.
தெ.ஆப்பிரிக்கா தொடரை மறக்காமல் எழுதவும்.
ஏங்க,துபாய் நகைக்கடையை பற்றி ரீல் விட்டிருக்கீங்க.இங்கு இறக்கும் விமானிகள் அவ்வளவு பேரும் வேண்டுகோள் விடுத்தால் கடைக்கு பக்கத்திலேயே கொண்டுவிடுவார்களே!!நீங்க கேட்கவில்லையோ!
அப்பாடி! போட்டுக்கொடுத்தாகிவிட்டது. :-))
so now u r admitted in a Ortho Hospital?
how many bones fractured?
I can send u some bandage cloths free!
k.pathi
pathiplans@sify.com
ஏங்க 21 வயசுலதான் சட்டப்படி கல்யாணம் செய்யனும். பார்த்து பத்திரமா இருங்க...உங்களை
போலிஸ் புடுச்சுறப் போவுது.
:))))
ஏங்க 21 வயசுலதான் சட்டப்படி கல்யாணம் செய்யனும். பார்த்து பத்திரமா இருங்க...உங்களை
போலிஸ் புடுச்சுறப் போவுது.
:))))
//வடுவூர் குமார் said...
அப்பாடி! போட்டுக்கொடுத்தாகிவிட்டது. :-))//
வாங்க சாமி, இப்ப நிம்மதியா?
உங்களைப்போல் இரண்டு பேர், வேண்டாம் நீர் ஒருவரே போதும்.
நல்லாருங்கப்பு
//ttpian said..//
வாங்க சாமி,
ரொம்ப நல்ல எண்ணம் ஐயா.
நல்லாருங்க
//எம்.எம்.அப்துல்லா said...
ஏங்க 21 வயசுலதான் சட்டப்படி கல்யாணம் செய்யனும். பார்த்து பத்திரமா இருங்க...உங்களை
போலிஸ் புடுச்சுறப் போவுது.
:))))//
அண்ணே, வாங்க,
ஒரு கல்யாணம் பண்ணதுக்கே அனுபவிக்கிறோம், இதுல சட்டப்படி வேற பண்ணிக்கணுமா???
என்ன கொடுமை சார் இது
அதெல்லாம் சரின்ணே, வீட்டுக்கு வந்து டின் கட்டுன கதய சீக்கிரம் சொல்லுங்க, கதைல இனிமே தான் இன்டிரஷ்டிங் சீன் வரும் போல
Post a Comment