Thursday, March 5, 2009

நீ கர்ப்பமாயிருக்கிறாயா??

என் அலுவலக சக நண்பர் ஒருவர் சமீபத்தில் தொலை பேசியில் கார சாரமாக பேசிக்கொண்டிருந்தார். அவரது குரலின் சத்தம் அதிகரிக்கவே நாங்கள் பயந்து போய் விட்டோம். என்ன ஏது என்று விசாரிப்பதற்குள் அவர் எதிர் முனையிலிருந்த பெண்ணிடம் " நீ, கர்ப்பமாயிருக்கிறாயா, இல்லையா சொல்" என ஆங்கிலத்தில் வற்புறுத்திக் கொண்டிருந்தார்.

ஒரு வழியாக அவரை சாந்தப்படுத்தியவுடன் என்ன நடந்தது என விசாரித்தேன். ஒரு பெண்ணிடம் இப்படி பேசுவது நாகரிகமில்லையே என கேட்டேன். அவர் கூறிய பதிலில் அவர் எவ்வளவு நொந்து போயிருக்கிறார் என தெரிந்தது.

அவர் இரண்டு வருடத்துக்கு முன் ஹைதராபாத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்திருக்கிறார். அங்கு ஒரு வீடு வாங்குவதற்காக ஒரு வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியிருக்கிறார். மாதாமாதம் அவருடைய சம்பளத்திலிருந்து ஒழுங்காகத்தான் தவணை கட்டிவந்திருக்கிறார். அவரது சேமிப்பு கணக்கு இருந்த அதே வங்கியில் கடனும் வாங்கியதால் சம்பளத்திலிருந்து நேரடியாக வீட்டுக்கடனுக்கு தவணைப்பணம் சென்று வந்திருக்கிறது. இவர் சென்னையில் உள்ள எங்கள் நிறுவனத்தில் சேர்ந்த பின்னும் ஒவ்வொரு மாதமும் சரியாக ஹைதராபத்தில் உள்ள வங்கிக் கிளைக்கு தவணைப்பணத்தை காசோலை மூலம் செலுத்தி வந்திருக்கிறார்.

ஆனால் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவில் நாங்கள் வேலை செய்வதால், திடீரென ஏதாவது மூலை முடுக்கில் இருக்கும் நாட்டுக்கெல்லாம் பயணம் செய்ய நேரிடுவதால் ஒவ்வொரு மாதமும் சரியாக தவணைப்பணத்தை ஹைதராபாத் வங்கிக் கிளையில் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க நண்பர் அந்த வங்கியின் சென்னை கிளையை அணுகி உள்ளார். என் வீட்டுக்கடன் கணக்கை சென்னையில் உள்ள வங்கிக் கிளைக்கு மாற்ற முடியுமா எனக் கேட்டிருக்கிறார். வங்கியின் வாடிக்கையாளர் சேவையில் இருந்த பெண்மணி, கண்டிப்பாக முடியும், இந்த சான்றுகளையெல்லாம் கொண்டு வாருங்கள் என்று சொல்லி ஒரு பெரிய பட்டியலை கொடுத்துள்ளார். அந்த பட்டியலை வாசித்தால் இவர், இவரது மனைவி, பெற்றோர், மற்றும் குழந்தைகளின் ஜாதகங்களைத்தவிர மற்ற எல்லா ஆவணங்களையும் கேட்டிருக்கிறார்கள். நண்பர் ஹைதராபாத்துக்கு சென்று அனைத்து ஆவணங்களையும் திரட்டி கொண்டு வந்து (நொந்து நூலாகி) வங்கியில் கொடுக்கும் பொழுது அங்கிருந்த பெண்மணியிடம் கணக்கை மாற்ற எவ்வளவு நாளாகும் என்று கேட்டிருக்கிறார். அவரும் புன்முறுவலுடன் 15 பணி நாட்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார்.

இந்த பதினைந்து நாட்களுக்குள் நண்பரை அல்ஜீரியா நாட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அங்கிருந்து இரண்டு மாதங்கள் கழித்து வந்து வங்கியில் சென்று விசாரித்தால், உங்களிடமிருந்து ஆவணங்களை வாங்கிய அந்தப் பெண் பிரசவ விடுப்பில் சென்றுவிட்டார், அவர் ஆவணங்களை என்ன செய்தார் என்று தெரியவில்லை, எதற்கும் இன்னொரு முறை ஆவணங்களை சமர்ப்பியுங்கள், சீக்கிரத்தில் மாற்றி விடுகிறோம் என்று பொறுப்பாக பதில் சொல்லியுள்ளார்கள். மறுபடியும் நொந்து நூலாகி அனைத்து கத்தை காகிதங்களுடன் போனால், இப்பொழுதும் அதே பதினைந்து பணி நாட்களுக்குள் என்ற பல்லவியை பாடியிருக்கிறார்கள். இந்த பதினைந்து நாட்களுக்குள் இவர் சீனா செல்ல வேண்டியாகிவிட்டது. அங்கிருந்து இரண்டு மாதங்களுக்குப்பிறகு வந்து கேட்டால், உங்களிடமிருந்து ஆவணங்களை வாங்கிய பெண் பிரசவ விடுப்பில் சென்று விட்டார், தற்பொழுது உங்கள் கோரிக்கை எந்தளவில் இருக்கிறது என்பதை நாளை சொல்கிறோம் என்று சொல்லி விட்டார்கள்.

இவரும் நொந்து போய் வந்து அமர்ந்திருக்கும் வேளையில் தான் ஒரு பெண் தொலைபேசியில் தேனொழுகும் குரலுடன் "சார், உங்களின் ஆவணங்கள் கிடைக்கவில்லை, நீங்கள் மறுபடியும் ஒரு முறை சான்றுகளை கொடுத்து விடுங்கள், நாங்கள் ஆவன செய்கிறோம்" . என்று சொல்லியிருக்கிறார். நண்பரின் முகத்தில் கொலைவெறி.

இனி அந்த தொலைபேசி உரையாடல்:

" ஹலோ, சார், காலை வணக்கம், நான் ................. உடன் தான் பேசுகிறேனா?"

" ஆமாம், சொல்லுங்கள்"

" சார், நான் .............. வங்கியிலிருந்து பேசுகிறேன். உங்கள் சான்றுகள் கிடைக்கவில்லை, நீங்கள் மறுபடியும் ஒருமுறை எல்லா நகல்களையும் சமர்ப்பித்து விடுங்கள், பதினைந்து பணி நாட்களுக்குள் உங்கள் கணக்கை ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு மாற்றி விடுகிறோம்"

" நீ கர்ப்பமாயிருக்கிறாயா??"

மறுமுனையில் அதிர்ச்சியுடன் " What??"

" நீ கர்ப்பமாயிருக்கிறாயா??"

" சார், அதற்கும் உங்கள் காகிதங்களுக்கும் என்ன சம்பந்தம்"??

" நிறைய தொடர்பிருக்கிறது, நீ கர்ப்பமாயிருக்கிறாயா?"

" சார் எனக்கு இன்னும் கல்யாணமாகவில்லை"

" பிரச்சனை உன் கல்யாணத்தைப் பற்றியல்ல, நீ கர்ப்பமாயிருக்கிறாயா??"

மறு முனையில் தொலைபேசி டொக்!!!!!!!!!!!!!

இப்பொழுது சொல்லுங்கள் என் நண்பர் கேட்டது சரிதானே!!!!!

30 comments:

FunScribbler said...

ஹாஹா...சாரி சார், எனக்கு சிரிப்பு தாங்க முடியல.

ஆனா, பாவம் சார் உங்க நண்பர்!

அது எப்படி அந்த அதிகாரிகள் பெண்களாகவே இருக்காங்க... ஒரு ஆண் அதிகாரி அந்த இடத்தில் இருந்திருந்தால், இந்த கேள்விக்கே இடம் இருந்திருக்காதே!
:)

சந்தனமுல்லை said...

:-))

தராசு said...

வாங்க தமிழ்,

//அது எப்படி அந்த அதிகாரிகள் பெண்களாகவே இருக்காங்க... ஒரு ஆண் அதிகாரி அந்த இடத்தில் இருந்திருந்தால், இந்த கேள்விக்கே இடம் இருந்திருக்காதே!//

உண்மைதான், ஆனால் இவரிடத்திலிருந்து காகிதங்களை வாங்கும் அனைத்து பெண்களும் ஏன் அடுத்த ஒரு மாதத்தில் பிரசவ விடுப்பில் போகிறார்கள் என்பது புரியவில்லை.

தராசு said...

வாங்க சந்தன முல்லை,

வருகைக்கு நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

//உண்மைதான், ஆனால் இவரிடத்திலிருந்து காகிதங்களை வாங்கும் அனைத்து பெண்களும் ஏன் அடுத்த ஒரு மாதத்தில் பிரசவ விடுப்பில் போகிறார்கள் என்பது புரியவில்லை.
//

இதுல ஏதோ உள்குத்து இருக்க மாதிரி இருக்கே!!!!

தராசு said...

// எம்.எம்.அப்துல்லா said...
//உண்மைதான், ஆனால் இவரிடத்திலிருந்து காகிதங்களை வாங்கும் அனைத்து பெண்களும் ஏன் அடுத்த ஒரு மாதத்தில் பிரசவ விடுப்பில் போகிறார்கள் என்பது புரியவில்லை.
//

இதுல ஏதோ உள்குத்து இருக்க மாதிரி இருக்கே!!!!//

வந்துட்டாங்கையா, வந்துட்டங்கையா,
ஏன் எப்பவுமே இப்படி விவகாரமாவே பேசறீங்க,

வந்ததுக்கு டேங்சு.

ஆ.ஞானசேகரன் said...

சிரித்தேன்! யோசித்தேன்!

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்???? உங்க பதிவுக்கு ஃபாலோயராகுறது எப்படி???

தராசு said...

வந்ததுக்கு நன்றி, ஞான சேகரன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிக நாயமான கேள்வி!
இந்த இடத்தில் இது பொருந்தும்...
அண்ணாவின் வாழ்வில் நடந்ததாகப் படித்தேன்.
அண்ணா லண்டன் சென்ற போது ஒரு மந்திரியைச் சந்திப்பதாக இருந்ததாம்; இரவு விடுதியில்
தங்கும் போது வானொலியில் அந்த மந்திரி காலமான செய்தி கூறியுளார்கள். அண்ணா! துயில் எழுப்பும் மணிக்கூட்டை அணைத்து விட்டுப் படுத்துவிட்டாராம்.
காலை கூறிய நேரத்திற்கு மந்திரியின் வண்டியும் வரவேற்பாளரும் வந்துள்ளார்கள்.
அண்ணா நித்திரையால் எழுந்து...மந்திரி இறந்ததற்கு வருத்தத்தை தன் இரவுடையில் இருந்து கூறியுள்ளார்.
அப்போ வரவேற்பாளர்" சரி..திரு . அண்ணாத்துரை நீங்கள் இன்னும் தயாராகவில்லையா??
என்ற போது... அண்ணா...சந்திக்க இருந்த மந்திரிதானே ...காலமாகிவிட்டார் என்றுள்ளார்.
வரவேற்பாளர் கூறினாராம்... ஆம் மந்திரி இறந்துவிட்டார்..ஆனால் எங்கள் உதவி மந்திரி
உங்களுக்காகக் காத்திருக்கிறார்.
அண்ணா! அரக்கப் பறக்க தயாரானாராம்... நம் நாட்டை மனதில் நினைத்துக் கொண்டு...
இது இந்தியா;இலங்கை; பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குப் பொருந்தும்.
இதுவே நாம் ஒளிரப் போவதன் அடையாளம்.
hi hi

தராசு said...

அப்துல்லா அண்ணே,

கேக்கறதுக்கே சந்தோஷமா இருக்கு, ஆனா எப்படின்னு தெரியலயே, கொஞ்சம் டைம் குடுங்க, கிட்னிய கசக்கி, சாரி சாரி, மூளைய கசக்கி சொல்றேன்.

தராசு said...

வாங்க யோகன்,

வந்ததுக்கு டேங்சு,

//இந்த இடத்தில் இது பொருந்தும்...///

தராசு said...

அப்துல்லா அண்ணே!

இனி நீங்க என்னை தொரத்தலாம்

கணேஷ் said...

சான்ஸே இல்லை.. சிரிச்சிகிட்டே இருக்கேன்..

தராசு said...

வாங்க கணேஷ்,

முதல் தடவையா நம்ம கடைப் பக்கம் வந்திருக்கீங்க,

வந்ததுக்கு டேங்சு

Rajaraman said...

இது போல இந்த மாடர்ன் ஏஜ் பேங்க் என்று சொல்லி கொள்கிற வங்கிகள் செய்கிற அட்டகாசங்கள் ஏராளம். இவர்களுக்கு கடிவாளம் போடத்தான் ஆளில்லை.

தராசு said...

வாங்க ராஜாராமன்,

வந்ததுக்கு டேங்சு,

சரித்திரம் சொல்கிறது, ஆனைக்கும் அடி சறுக்கும்

VIKNESHWARAN ADAKKALAM said...

ஹா ஹா ஹா...

என்னங்க அநியாயம் இது... என்ன இருந்தாலும் கல்யாணம் ஆகாத பொண்னுகிட்ட அப்படி கேட்டிருக்கக் கூடாது... உங்கள் நண்பரின் ஜாதக டாக்குமெண்டையும் சேர்த்துக் கொடுத்திருந்தால் காலதாமத்திற்காக காரணத்த பார்த்து சொல்லி இருப்பாங்க... ஆமா மறுபடியும் டாக்குமெண்ட் கொடுத்தாரா இல்லையா?

Anonymous said...

aaaahaaakzz.......


TAPPE ILLE. :P

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஒரு ஆண் அதிகாரி அந்த இடத்தில் இருந்திருந்தால், இந்த கேள்விக்கே இடம் இருந்திருக்காதே! //



கேட்டாலும் கேட்கக் கூடும். ஒரு முன்னெச்சரிக்கைதானே

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//.ஆனால் எங்கள் உதவி மந்திரி
உங்களுக்காகக் காத்திருக்கிறார்.//


இதற்கும் அந்தப் பெண் கர்ப்ப கால விடுப்பு எடுப்பதற்கும்.....
ஒன்றும் புரியவில்லை.

சரவணகுமரன் said...

:-)

VIKNESHWARAN ADAKKALAM said...

ஹலோ என்னங்க இது... என்னுடைய பின்னூட்டம் கீழ இருக்கு உங்க பதில் மேல இருக்கு... தீர்க்கதரிசி மாதிரி என் கேள்விய நீங்க முதல்லயே தெரிஞ்சிகிட்டு பதில் சொன்ன மாதிரி இருக்கு...

கார்க்கிபவா said...

தல,

நம்ம பதிவை பார்த்திங்களா? சேம் ப்ளட் தேர் ஆல்சோ.. :((((

கார்க்கிபவா said...

தல,

சேம் ப்ளட்

என்ன செய்றது?

தராசு said...

வாங்க விக்னேஷ்,

மறுபடியும் ந்ண்பர் எல்லா ஆவணங்களையும் கொடுத்து, அந்த பதினைந்து பணி நாட்களுக்காக காத்திருக்கிறார்.

உங்களுடைய பின்னூட்டத்திற்கு முன் உள்ள என் பதில் வேறொருவரின் கேள்விக்கானது. என்னை ஓவரா புகழ்றீங்க.

தராசு said...

// viji said...
aaaahaaakzz.......


TAPPE ILLE. :P//

வந்ததுக்கு டேங்சு விஜி

தராசு said...

//SUREஷ் said...
//ஒரு ஆண் அதிகாரி அந்த இடத்தில் இருந்திருந்தால், இந்த கேள்விக்கே இடம் இருந்திருக்காதே! //



கேட்டாலும் கேட்கக் கூடும். ஒரு முன்னெச்சரிக்கைதானே//

வழிமொழிகிறேன் சுரேஷ்,

வந்ததுக்கு டேங்சு

தராசு said...

//சரவணகுமரன் said...
:-)
//

வந்ததுக்கு டேங்சு சரவணகுமரன்

தராசு said...

//கார்க்கி said...
தல,

நம்ம பதிவை பார்த்திங்களா? சேம் ப்ளட் தேர் ஆல்சோ.. :((((//

//கார்க்கி said...
தல,

சேம் ப்ளட்

என்ன செய்றது?//

ஆமா தல, இவிங்க பண்ற அளும்பு தாங்க முடியல, இன்னொரு கதை எனக்கு HDFC பேங்க் கூட ஓடிகிடிருக்கு, ஒரு நல்ல ஆப்பா சீவி அவிங்களுக்கு வெச்சுட்டு அப்புறமா அதை எழுதறேன்.

வந்ததுக்கு டேங்சு.