தென் ஆப்பிரிக்காவிலிருந்து நான் திரும்பி வரும்பொழுது நடந்த கொடுமையையெல்லாம் இந்தப் பதிவுல சொல்லியிருப்பேன்.
அப்புறம்::::------
சரியா 9:00 மணிக்கு சென்னையில் இறங்கி, கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டிருக்கும் குடியுரிமை சோதனை அதிகாரிகளிடம் இருந்து கடந்து வந்து, பெட்டி வருவதற்காக கன்வேயரில் நின்றால், ஆடி அசைந்து கடைசியில் வந்தது என் பெட்டிகள்.
பயந்த மனதுடன் வீட்டுக்கு வந்தேன். வீடு என்னமோ அமைதியாகத்தான் இருந்தது. அப்பா, அம்மா எல்லோரும் நார்மலாத்தான் இருந்தாங்க. என் மறுபாதியும் அப்நார்மல் புன்னகையுடன் இருந்தாள். (டேய், இப்பவே எல்லோரும் இருக்கும்போதெ உண்மையை சொல்லிடு, அதுதான் உனக்கு சேஃப்னு உள்மனசுல ஒரு பட்சி அடி அடின்னு கிடந்து அடிச்சுக்குது) அது என்னமோ நமக்கு அப்பல்லாம் தைரியம் வரல.
அடுத்ததா வழக்கம்போல என் பொண்ணு லக்கேஜ் இன்ஸ்பெக்ஷன் நடத்துனா, (டேய், இப்பவாவ்து சொல்லீற்ரா, எதொ கொஞ்ச நஞ்ச டேமேஜோட மேட்டர் முடிஞ்சுரும்னு மறுபடியும் பட்சி), ம்ஹூம் , செய்வமா நாங்க. இப்பத்தான சிங்கமாட்ட இருப்போம்.
வழக்கமா என் பொண்ணு பையையெல்லாம் பரிசோதனை ப்ண்ணுனா, அதுல எதெல்லாம் அவளுக்கு புடிச்சிருக்குதோ அதெல்லாம் ரைட் ராயலாக பறிமுதல் செய்து விடுவாள். புது பேனாக்கள், ரைட்டிங் பேட்கள், நண்பர்களுக்குனு எதாவது கிஃப்ட் வாங்கிட்டு வந்தா, அது என் பொண்ணு விட்டு வைச்சாத்தான் நண்பனுக்கு போய் சேரும். ஆனா, இந்தத்தரம் அவ எதோ ஒரு பொருளை குறிவெச்சே சோதனை நடத்தற மாதிரி தெரிஞ்சுது.
" பாப்பா, இங்க பாரும்மா, நீ சொன்னியே, அந்த கங்காரு பொம்மை"
"ம், சரி, அதை வையுங்க , நான் அப்புறமா எடுத்துக்குறேன்"
" அட, இங்க பார்றா, நீ கேட்ட சாக்லேட்டு"
முக்கியமான எதிர் திசையில் இருந்து மௌனம். இந்த மௌனம் வரப்போகும் சுனாமிக்கு அறிகுறியோ என பயந்திருந்த பொழுதுதான், பாப்பா முழு பரிசோதனையை முடித்துவிட்டு ஒரு தினுசா உதட்டை பிதுக்கினாள். அங்க கண்களிலேயே இல்லையா என்ற கேள்வியும், அதற்கு கண்சாடையிலேயே இல்லை என்ற பதிலும். ஆஹா, இனி தாமதிக்கறதுல பிரயோசனம் இல்லடா, ஒழுக்கமா சொல்லிப்புடுன்னு பட்சி சொன்னதுக்கப்புறம் மெதுவாக ஆரம்பித்தேன்.
"பாப்பா, என்னம்மா தேடறே"
"அம்மா, ஒரு பொருளை வாங்கிட்டு வரச் சொன்னாங்களே, வாங்கினீங்களா?
"அது வந்தும்மா, துபாயில வந்து......"
நேர்முனைத்தாக்குதல் ஆரம்பம். " அப்ப வாங்கிட்டு வரலை, அப்படித்தானே.."
" வாங்கிட்டு வரக்கூடாதுன்னு இல்லை, என்ன நடந்துதுன்னா......"
"உங்க அண்ணாவுக்கு மாத்திரம் Rayban கண்ணாடி வாங்கிட்டு வந்திருக்கீங்க"
" அது வந்தும்மா, அது துபாய்ல வாங்கல்ல, தென் ஆப்பிரிக்காவுலயே வாங்கிட்டேன்"
"அப்ப உங்க ஃபிரண்டு கேட்டார்னு Johny Walker - Red Label வாங்கிட்டு வந்திருக்கீங்க, அது மட்டும் முடிஞ்சுதா" ( இந்த ஒரு விஷயத்துல மாத்திரம் என் ஃபிரண்டே நாந்தான்னு உனக்கு இன்னும் தெரியாதா).
"இல்லமா, அது துபாய்ல தங்க நகை கடைக்கு போக...."
"எல்லாருக்கும் அவங்க கேட்டதெல்லாம் வாங்கிட்டு வரத்தெரியுது, நான் சொன்னால் மட்டும் முடியாதா"
"ஏய், நான் சொல்றதக் கேளு, துபாய்ல...."
"ம், துபாய்ல....,"
"ஃபிளைட் வரும்போதே லேட்டு"
"தெரியும் 14 மணி நேரம், உக்காந்து யோசிச்சிருப்பீங்க, வித்தியாசமா எதாவது ஒரு சாக்குச் சொல்லலாமுனு"
"அப்படியில்லமா, நான் சொல்றதத்தான் கொஞ்சம் கேளேன்"
"தெரியும், தங்கம் விலை கன்னா பின்னானு ஏறிடுச்சு, இப்ப வாங்குனா அது ஒரு அர்த்தமுள்ள இன்வெஸ்ட்மெண்டா இருக்காதேன்னு நெனைச்சுத்தான நீங்க வாங்கல"
(ஆஹா, இப்படி ஒரு ஐடியா இருக்குதுன்னு தெரியாமயேவா ராத்திரி பூரா முழிச்சிருந்தோம்)
"ஆ, ஆ, ஆமா, ஆமா, அது எப்படிம்மா கரெக்டா சொல்லிபுட்டே"
"எனக்குத்தெரியும், நீங்க இப்படியெல்லாம் யோசிப்பீங்கன்னு" (ஆஹா, உலகம் நம்மை எவ்வளவு அறிவாளினு நெனச்சிருக்கு, உனக்குத்தாண்டா உன்னோட அருமையே தெரியல, கேடு கெட்ட பயலே).
"ஆமா, அதுதான் நாங்க வாங்கிட்டு வர மாட்டம்னு தெரியுதுல்ல, அப்புறம் எதுக்கு இந்த இண்டு இடுக்குலெல்லாம் புகுந்து சோதனை"
" வாங்கிட்டு வான்னு சொல்லீட்டேன், எதோ வீட்டுக்காரி கேட்டுட்டாளேன்னு வெலையும் பாக்காம ஒரு மண்ணும் பாக்காம, எங்க நீங்க வாங்கிட்டு வந்துட்டீங்களோன்னு பயந்து போய்தான் நாங்க சோதனை போட்டோம், நல்ல வேளை நீங்க வாங்கிட்டு வரலை"
அடிப்பாவிகளா, மனுஷன் எதெதுக்கெல்லாம் பயப்பட வேண்டியிருக்கு.
ஆனா மனசுக்குள்ள மாத்திரம், துபாய் விமானி வாழ்க, அந்த பனிமூட்டம் வாழ்கனு ஒரே கூச்சல் போங்க.
3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்
2 weeks ago
11 comments:
என்ன தல? தமிழ்மனத்துல கூட இணைக்காம என்ன செய்றீங்க? நான் செஞ்சிட்டேன்
தல,
நன்றி. கொஞ்சம் உங்க மெயில செக் பண்ணுங்க
//அடிப்பாவிகளா, மனுஷன் எதெதுக்கெல்லாம் பயப்பட வேண்டியிருக்கு.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
//"அப்ப உங்க ஃபிரண்டு கேட்டார்னு Johny Walker - Red Label வாங்கிட்டு வந்திருக்கீங்க, அது மட்டும் முடிஞ்சுதா" ( இந்த ஒரு விஷயத்துல மாத்திரம் என் ஃபிரண்டே நாந்தான்னு உனக்கு இன்னும் தெரியாதா).//
இந்த ரணகளத்துலயும்......... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
வாங்க அத்திரி,
வந்ததுக்கு டேங்சு.
//இந்த ரணகளத்துலயும்......... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//
என்ன ஆனாலும் காரியத்தில் கண்ணா இருப்பம்ல
:-)))))))))))))))
வாங்க யாத்ரீகன்,
வந்ததுக்கு டேங்சு.
அட பாவமே...
//அடிப்பாவிகளா, மனுஷன் எதெதுக்கெல்லாம் பயப்பட வேண்டியிருக்கு.//
எல்லா ஊட்டுலயும் இப்படிதானா.........இந்த //எதெதுக்கெல்லாம்// -ம்ல பெரிய லிஸ்ட்டே இருக்குங்க....
வாங்க விக்கி,
வந்ததுக்கு டேங்சு
வாங்க அனானி,
//எல்லா ஊட்டுலயும் இப்படிதானா.........இந்த //எதெதுக்கெல்லாம்// -ம்ல பெரிய லிஸ்ட்டே இருக்குங்க....//
சரியா சொன்னீங்க
Post a Comment