Tuesday, February 10, 2009

அகம் பிரம்மாஸ்மி - அலசல்களின் அலசல்

அட என்னாங்கய்யா இது,

யாரைப்பார்த்தாலும், "நான் கடவுள்" விமர்சனம் எழுதறாய்ங்க. போற போக்கைப் பார்த்தா இந்தப்படத்துக்கு விமர்சனம் எழுதலைன்னா அவுங்க பதிவரே இல்லைன்னு சொன்னாலும் சொல்வாய்ங்க போலிருக்கு. ஒருத்தர் அகம் பிரம்மாஸ்மி ஆளவுடுங்கடா சாமிங்கறாரு, இன்னும் பல பேர், இசை ஞானி கலக்கீக்கறாரு, ஆர்தர் அசத்திப்புட்டாரு, வில்லன் வெளுத்து வாங்குறாரு, அகோரி அதிகம் வேலை செய்யல, தலயோட தல தப்பிச்சுது, பூஜா பூந்து வெளையாடுது, அந்த சின்னப்பையன் சிரிக்க வைக்கிறான், தாடிக்காரரு தத்ரூபமா இருக்கறாரு, ஜெயமோகன் ஜொலிக்கறாரு, திரைக்கதை தொங்குது, விளிம்பு நிலை மனிதர்களின் வேதனை வெளிப்படுது, சாதுன்னாலே கஞ்சா குடிக்கறவந்தானா, சேதுல செதுக்கிருந்தாரு, நந்தால நச்சுனு சொன்னாரு, பிதாமகன்ல பின்னியெடுத்தாரு, பாலாகிட்டேருந்து நாங்க இன்னும் நெறய எதிர்பார்க்கறோம்.....,,,,,,!!!!!!!!, யே யப்பா, போதுமய்யா, எத்தனை விமர்சனம், எத்தனை அலசலு, அளும்பு.

ஆமா, நீங்கெல்லாம் படம் பார்க்க போனா இது இப்படித்தான் இருக்கணும்னு உக்கார்ந்து யோசிச்சு முடிவு செஞ்சுட்டுத்தான் போவீங்களா? பாலாவுக்கு பாடம் நடத்த பல பேர் கிளம்பிருக்காய்ங்க போல இருக்குது.

14 comments:

கார்க்கிபவா said...

வரும்போதே பிரச்சைனாயா? நல்லாயிருங்க சார்..

எங்க போனிங்க இத்தன நாளா?

தராசு said...

வணக்கம் கார்க்கி,

ஆணி கடப்பாரையாகி, கடப்பாரை இன்னும் என்னெல்லாமோ ஆனாதால நாடு கடத்தீட்டாங்க, நேத்துதான் தாய்மண்ணை மிதிச்சேன்.


ஆமா அது என்ன நீங்க மட்டும் "நான் கடவுளை" ரெண்டு தரம் அலசியிருக்கீங்க

எம்.எம்.அப்துல்லா said...

//வரும்போதே பிரச்சைனாயா? நல்லாயிருங்க சார்..
//

கரெக்ட்டா சொன்னடா கார்க்கி :)))

எம்.எம்.அப்துல்லா said...

//பாலாவுக்கு பாடம் நடத்த பல பேர் கிளம்பிருக்காய்ங்க போல இருக்குது.
//

தராசு அண்ணே நாங்கள்லாம் நான் கடவுளுக்கு விமர்சனம் எழுதிபுட்டு அப்புறந்தா படமே பாக்க போணோம்

:)))

மணிகண்டன் said...

****
தராசு அண்ணே நாங்கள்லாம் நான் கடவுளுக்கு விமர்சனம் எழுதிபுட்டு அப்புறந்தா படமே பாக்க போணோம்
****

அப்துல்லா சார், இந்த விமர்சனம் எழுதினதுல எவ்வளவு பேரு உண்மையா சினிமா பாத்தாங்கன்னு எனக்கும் சந்தேகம் இருந்துச்சு !

ஆனாலும் இந்த படத்துக்கு ரொம்பவே ஓவர் விமர்சனம் ! இதுக்காகவே சினிமா போறாங்க !

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப மண்டை காஞ்சு இருப்பீங்க போல.. இந்த படத்துக்கு நானும் விமர்சனம் எழுதுனதுனால, உங்கள் அலசலைப் பார்த்தா தான் எவ்வளவு நொங்கி நலுங்கு எடுத்திருக்கோம்னு தெரியுது.. பரவா இல்ல விடுங்க..

தராசு said...

//வரும்போதே பிரச்சைனாயா? நல்லாயிருங்க சார்..
//

//கரெக்ட்டா சொன்னடா கார்க்கி :)))


//தராசு அண்ணே நாங்கள்லாம் நான் கடவுளுக்கு விமர்சனம் எழுதிபுட்டு அப்புறந்தா படமே பாக்க போணோம்//

வாங்க அப்துல்லா,

மனசுல பட்டதை பேச வுடமாட்டேங்கறீங்களே!!!

தராசு said...

//ஆனாலும் இந்த படத்துக்கு ரொம்பவே ஓவர் விமர்சனம் ! இதுக்காகவே சினிமா போறாங்க !//


வாங்க மணிகண்டன்.

நீங்களாவது ஒத்துக்கிட்டீங்களே!!

விமர்சனம்னு எதை வேண்ணாலும் எழுதறாய்ங்க!! என்னத்தச்சொல்றது!!!

தராசு said...

வாங்க கார்த்திகைப் பாண்டியன்,

(அப்பா, சரியா உங்க பேருக்கு நடுவுல அந்த"ப்" ஐ போட்டுட்டேன்)

//ரொம்ப மண்டை காஞ்சு இருப்பீங்க போல.. இந்த படத்துக்கு நானும் விமர்சனம் எழுதுனதுனால, உங்கள் அலசலைப் பார்த்தா தான் எவ்வளவு நொங்கி நலுங்கு எடுத்திருக்கோம்னு தெரியுது.. பரவா இல்ல விடுங்க..//

வெஇமர்சனம்கற பேர்ல படுத்தறாய்ங்க!!!

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

எம்.எம்.அப்துல்லா said...

//அப்துல்லா சார், இந்த விமர்சனம் எழுதினதுல எவ்வளவு பேரு உண்மையா சினிமா பாத்தாங்கன்னு எனக்கும் சந்தேகம் இருந்துச்சு !

ஆனாலும் இந்த படத்துக்கு ரொம்பவே ஓவர் விமர்சனம் ! இதுக்காகவே சினிமா போறாங்க !
//

உண்மைதான் மணிகண்டன் அண்ணே. நீங்கள் சொன்னதைதான் நான் என்னுடைய நக்கலில் சொன்னேன். உண்மையில் நான் விமர்சனம் எழுதவில்லை :)))

தராசு said...

ரொம்ப கரீக்டு அப்துல்லாண்ணே!

பதிவர்கள்லயே "நான் கடவுளுக்கு"விமர்சனம் எழுதாத ஒரு பதிவரா இன்னைக்கு வரிக்கும் இருக்கீங்க பாருங்க, அங்க தான் நீங்க நிக்கறீங்க,

ஆமா நான் எப்ப உட்கார்ந்தன்னெல்லாம் எடக்கு மடக்கா கேள்வி கேட்க கூடாது.

Rajalakshmi Pakkirisamy said...

எங்க போனாலும் நான் கடவுள் விமர்சனம் ... தாங்க முடியலங்க ...

nice ... thanks :) :)

தராசு said...

வாங்க ராஜி அக்கா,

வந்ததுக்கு டேங்சு,

விமர்சனங்கள்னால நீங்களும் நொந்து போயிருக்கீங்கன்னு தெரியுது.