Friday, February 27, 2009

"ய ர ல வ ழ ள" இடையினம்

அருமை நண்பர் விக்னேஷ்வரனின் "களிமண் தின்னும் கிளிகள்" என்ற இந்தப் பதிவைப் படித்தேன்.

தென் அமெரிக்க நாடுகளில் வாழும் கிளிகளைப் பற்றிய அருமையான பதிவு.

ஆனால், நான் சொல்ல வருவது கிளிகளைப் பற்றிய விஷய்ம் அல்ல. தமிழில் எழுதும் பொழுது "ழ" "ள" "ல" என்ற இந்த மூன்று எழுத்துகளின் பயன்பாட்டில் ஒரு சில பதிவர்களுக்கு ஏற்படும் குழப்பத்தினால், பதிவின் அர்த்தம் கெட்டு விடுவது மாத்திரமல்ல, அழகும் கெட்டு விடுகிறது. விக்கியின் இந்தப்பதிவில் பின்னூட்டமிடும்பொழுது சகோதரி ஹேமாவும் இதை சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

சமீபத்தில் அநேக பதிவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவிக்கும் பொழுது கூட "இதயம் கனிந்த பொங்கள் நல்வாழ்த்துக்கள்" என்று எழுதியிருந்தார்கள். இது கவனக் குறைவினால் ஏற்படுகிறதா, அல்லது இவர்கள் தமிழ் மொழியை புரிந்து வைத்திருப்பதே இவ்வளவு தானா என்று தெரியவில்லை.

அடுத்த குழப்பம் "ண"வுக்கும், "ன"வுக்கும் இடையில் நடப்பது. ஒரு சில திருமண அழைப்பிதழ்களில் கூட இந்த குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதை கண்டிருக்கிறேன்.

திரைப்பட இசைஅமைப்பாளர்களில் பலர் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம் என்று சொல்லி அவர்களின் உச்சரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா என்பது சந்தேகமே. உதாரணத்திற்கு " பச்சைக்கிளி முத்துச்சரம்" என்ற படத்தில் வரும் "காதல் கொஞ்சம், காற்றுக் கொஞ்சம்" என்ற வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டிருப்பதை உன்னிப்பாக கவனித்துக் கேளுங்கள். இந்தப்பாடலை பாடிய பாடகர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இவர் பாடியிருப்பது "காதல் கொஞ்சம், காட்ருக் கொஞ்சம்" என்றுதான் பாடியிருக்கிறார். இன்னும் இதே போல நிறைய வார்த்தைகள் "என்று" என்பது "என் ட்ரு" என்றும், "அன்று" என்பது " அன் ட்ரு" என்றும் பல இடங்களில் உச்சரிக்கப்படுவதை காண முடிகிறது.

தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் மாறாமல் பதிவிடுவதும், உச்சரிப்பதும் பதிவர்களுக்கு அழகுதானே.

அதிகம் பேசிவிட்டேனோ, விக்கி அடிக்க வராதீங்க.

7 comments:

கார்க்கிபவா said...

நீங்கா சொள்ரது சறிதாங்க..

கார்க்கிபவா said...

ச்சும்மா சொன்னேன். நல்ல பதிவு. நான் அதிகம் இல்லாவிடினும் சில நேரம் பிழையாகவே பதிவிடுவதுண்டு. மாற்றிக் கொள்கிறேன் தல

எம்.எம்.அப்துல்லா said...

தராசு அளந்தா அது சரியாத்தான் இருக்கும்

:)


//"காதல் கொஞ்சம், காட்ருக் கொஞ்சம்" //

இப்பல்லாம் மீட்டர்ல இடிக்குதுன்னு சொல்லி இசைஅமைபாளர்களே இதுமாதிரி நீட்டி முழக்கச் சொல்லிடுராங்க.

தராசு said...

வாங்க கார்க்கி,

வந்ததுக்கு டேங்சு.


கார்க்கி said...
நீங்கா சொள்ரது சறிதாங்க

எப்பத்தான் அடங்குவீங்க????

தராசு said...

// கார்க்கி said...
ச்சும்மா சொன்னேன். நல்ல பதிவு. நான் அதிகம் இல்லாவிடினும் சில நேரம் பிழையாகவே பதிவிடுவதுண்டு. மாற்றிக் கொள்கிறேன் தல//

டேங்சு))))))

தராசு said...

எம்.எம்.அப்துல்லா said...
தராசு அளந்தா அது சரியாத்தான் இருக்கும்

:)


////"காதல் கொஞ்சம், காட்ருக் கொஞ்சம்" //

இப்பல்லாம் மீட்டர்ல இடிக்குதுன்னு சொல்லி இசைஅமைபாளர்களே இதுமாதிரி நீட்டி முழக்கச் சொல்லிடுராங்க.//


அண்ணே, வாங்க, வந்ததுக்கு டேங்சு,

அது இன்னா மீட்டருன்னு கொஞ்சம் சொல்லுங்கோ.

எம்.எம்.அப்துல்லா said...

//அது இன்னா மீட்டருன்னு கொஞ்சம் சொல்லுங்கோ.
//

அட அது ஒன்னும் பெரிய மேட்டர் இல்லண்ணா. மீட்டர் என்பது தத்தகாரத்தின் கால அளவு.
தத்தகாரம்னா...

தத்தத்தரதா...தத்ததரதா-இது தத்தகாரம். இதுக்கான பாட்டு “சிட்டுக்குருவி முத்தம்தருது”. சிலவேளைகளில் இந்த கால அளவிற்குள் பொருத்தம் இல்லாமல் கவிஞர்கள் பாட்டெழுதுவதுண்டு. அப்போது இசை அமைப்பாளர்கள் வேறு வழியின்றி வார்த்தைகளின் உச்சரிப்பின் கால அளவை நீடித்து விடுவார்கள்.