Wednesday, October 3, 2012

நிறவெறியின் உச்சம் – மடோன்னா ஆடை அவிழ்ப்பு

மடோன்னா – இசை ரசிகர்களின் கனவுக் கன்னி, ஆடை அவிழ்த்து உடலைக்காட்டி ரசிகர்களை தன்வசப்படுத்துவதில் இணையில்லா ராணி. இந்த அம்மணியின் காட்டுக் கத்தலான பாடல்களுக்கு உலகின் பல மூலைகளில் தலையாட்டும் கூட்டம் உண்டு. வார்த்தைகள் புரிகிறதோ இல்லையோ, கவர்ச்சிக்கு மயங்கி, இந்த கட்டழகியின் காட்டுக் கத்தலை ரசிக்கிறோம் என்பதில் பெருமை கொள்பவர் கூட உண்டு.

ஒரு இத்தாலிய அமெரிக்க தகப்பனுக்கும், கனேடிய பிரெஞ்சு தாய்க்கும் பிறந்தவர். பிறப்பில் தான் எத்தனை தேசங்களின் சங்கமம் பாருங்கள். இளவயதிலேயே தாய் மார்பகப் புற்று நோயில் இறந்து விட, தகப்பனோ வீட்டு வேலைக்காரியுடன் கும்மாளம் அடிக்க, இளமையின் துவக்கத்தில் இருந்த மடோன்னாவுக்கு வாழ்க்கை ஒரு குழப்பான பாடமாகவே இருந்தது. சித்தியை கேவலப்படுத்தி பார்ப்பதில் ஒரு குரூர திருப்தி கிடைத்தது. தன் தகப்பன் இல்லாத சமயத்தில் தன் சிற்றன்னையை படு கேவலமாக விமர்சிப்பது ஒரு பொழுது போக்காகவே இருந்திருக்கிறது. வெறும் உடலை காட்டி அண்ட வந்த நீ என்ன ஆனாலும் எங்கள் வீட்டு வேலைக்காரிதானே, இப்படி யார் கூப்பிட்டாலும் முந்தானை விரிப்பாயா என படு கேவலமாக விமர்சித்துள்ளார். (இப்படி விமர்சித்தவர்தான் இன்று திறந்த மேடையில் ரசிகர்களுக்கு முன் ஆடை அவிழ்க்கிறார் என்பது ஒரு வினோத முரண்தான்)

அம்மாவை இழந்தது, அப்பாவின் காதல், பருவமடைந்த மகளுக்கு முன்பாகவே அப்பா வேறொரு பெண்ணுடன் கூடிக் குலாவுவது, அதே சமயத்தின் தன்னுடலில் ஏற்பட்ட வளர்ச்சி, அந்த கவர்ச்சியில் மயங்கி வயது வேறுபாடில்லாமல் தன் பின்னே ஜொள்ளு விடும் ஆண் கூட்டம் என ஒரு குழப்பமான மன நிலை பிறழ்ந்த ஒரு பெண்ணாகத்தான் பருவ வயதின் மாற்றங்களை இந்த அழகியும் கடந்து வந்திருக்கிறார். பள்ளிப் பருவத்திலேயே தன் வகுப்பறையில் தடாலடியாக பாவாடையை உயர்த்தி தன் உள்ளாடையை காண்பித்து மாணவர்களை அதிர்ச்சி கொள்ள வைத்து, அவர்களின் அதிர்ச்சியை கண்டு ரசிப்பதில் ஒரு குரூர திருப்தி கொள்வது இவரது வழக்கம். இத்தனை ஆண்களும் என் உடலழகை ரசிக்கிறார்கள் என்று தெரிந்த பின்புதான் இவருக்கு அந்த பயங்கர யோசனை மனதில் உதித்தது. இந்த சருமம், வெள்ளை நிறம், வளைவு நெளிவுகள், ஏற்ற இறக்கங்கள், தங்கக் கம்பிக் கூந்தல், அன்ன நடை, அங்க அசைவுகள் என அனைத்தும் இந்த ஆண்களால் ரசிக்கப்படுகிறது. குனிந்து நிமிர்ந்தால் ஒரு கூட்டமே குதூகலிக்கிறது. என் கடைக்கண் பார்வைக்கு கண்டங்களனைத்தும் அடிமையாக ஆயத்தம் எனும் போது இதையே ஏன் மூலதனமாக்கி உலகின் ஒவ்வொரு ஆணும் எனக்கு அடிமை என சொக்க வைக்கக்கூடாது. இருக்கும் குரலுக்கு இன்னும் மெருகேற்று, உடலை காட்டி உலகத்தை சொக்க வை என தனக்குத்தானே ஒரு புதிய சூத்திரம் வகுத்துக் கொண்டு, நியூயார்க் நகரத்திற்கு வந்து சேர்ந்தார் இந்த கட்டழகி.

எல்லா நகரத்தைப் போலவே நியூயார்க் நகரமும் இவரை உடனே ஏற்றுக் கொள்ளவில்லை. தன் முயற்சியில் சற்றும் தளாரத விக்கிரமாதித்தனை போல இவரும் எல்லா விதத்திலும் முட்டி மோதி பார்த்தார். பாடல் குழுக்களில் குரல் கொடுக்க போனார். நடன குழுக்களில் திறமை காட்டினார். எப்படியோ முட்டி மோதி வெளிச்சத்திற்கு வர வேண்டும் என அயராது பாடுபட்டவரை நியூயார்க் நகரத்திற்கே உரிய கோரப் பண்பு இவரையும் விட்டு வைக்கவில்லை. ஒரு நடன நிகழ்ச்சியில் ஆடி முடித்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தவரை சில காமுகன்கள் கொத்திக் கொண்டு போய் இரவு முழுவதும் ...... சரி வேண்டாம் விடுங்கள். அவையெல்லாம் நாகரிகத்தின் உச்ச பட்ச உயர்விலிருக்கும் நியூயார்க் நகரத்தில் கிடைக்கும் இலவச இணைப்புகள் தான். ஆனாலும் மடோன்னா அயரவில்லை. எனது மூலதனமே இந்த உடல் தானடா, இதை வைத்து என்ன செய்கிறேன் பார் என சூளுரைத்தவர் இன்னும் தீவிர கலைச்சேவையில் கவனம் செலுத்தினார். அந்த வாய்ப்பும் வந்தது. தனது சக கலைஞரை வளைத்துப் போட்டு ஒரு ஆல்பம் வெளியிட்டு, அது வரவேற்பை பெற அதற்கடுத்து நடந்ததெல்லாம் சகாப்தம் தான், எத்தனை சுற்றுப்பயணங்கள், எத்தனை இசை வெளியீடுகள், புத்தகங்கள், என ஒரே ஏறுமுகம்தான். அம்மணி எங்கு சென்றாலும் ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தார். அடுத்தவரை கவர என்ன வேண்டுமானாலும் செய். இந்த கவரும் தன்மை இருக்கும் வரைதான் உலகம் உன்பின்னே சுற்றும். என்ன வேண்டுமானாலும் செய், மக்களை கவர்ந்து கொண்டேயிரு என்பதில் மும்முரமாய் ஈடுபட்டு, ஆடை அவிழ்ப்பதிலாகட்டும், கவர்ச்சியாய் தோற்றமளிப்பதிலாகட்டும், வக்கிர வார்த்தைகள் நிறைந்த பாடல்களாலும், காமுக நடன அசைவுகளாலும் எப்பொழுதும் ஆடுத்தவர் கவனம் கவர்வதில் இந்த 54 வயதிலும் முன்னணியில் இருக்கிறார்.

இப்படி உடல் காட்டியே ஜெயித்து வந்த அம்மணிக்குள் எவ்வளவு நிறவெறியும் உறைந்து கிடக்கிறதென்று சமீபத்தில் தெரிய வந்த பொழுது எல்லோருக்கும் தூக்கி வாரிப் போட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், ஒபாமா மறுபடியும் களமிறங்கியிருக்கும் இந்த தருணத்தில் அம்மணி ஒரு மேடையில் திடீரென அதிர்ச்சி கொடுத்தார். “அமெரிக்கர்களே, (அவர் சொல்லாமல் சொன்னது என் இனிய வெள்ளையர்களே), வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு முஸ்லிம் வாழ்கிறான். அவன் இரண்டாம் முறையும் அதிபராகும் கனவு காண்கிறான். முதல் முறை அவனை தேர்ந்தெடுத்தீர்களே அதற்காக நான் இப்பொழுது ஆடை அவிழ்க்கிறேன்” என்று சொல்லி தனது மார்புகளை மறைத்திருந்த துணியை அவிழ்த்து தனது திறந்த முதுகை எல்லோருக்கும் காண்பித்திருக்கிறார். அது போதாதென்று தந்து அரைகுறை குட்டைப் பாவாடையையும் அவிழ்த்து தன் பின்பின்பக்கத்தை.......... வேண்டாம் விடுங்கள். அதை எழுத எனக்கே கூசுகிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. மறுபடியும் கூட்டத்தின் பக்கம் திரும்பி ஆடைகளை கையால் பிடித்தவாறே திருவாய் மலர்ந்தருளிய பொன்வாக்கு “மறுபடியும் இந்த கருப்பு முஸ்லிமை தேர்ந்தெடுங்கள், நான் முழுதும் அவிழ்த்து விட்டு நிர்வாண காட்சி தருகிறேன்” என சவால் விட்டு விட்டு சென்று விட்டார்.

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும் அந்த நொடியிலிருந்து கருப்பன் என்ற ஒரே காரணத்துக்காக அவமானப் படுத்தப்பட்டவர் தான் இந்த பரிதாப ஒபாமா. பதவிப் பிரமாண நிகழ்ச்சியில், எல்லா வெள்ளையர்களுக்கும் வழங்கப்படும் அதே மரியாதைகள் கௌரவங்கள் அனைத்தும் ஒரு கருப்பனுக்குமா, நிறுத்துங்கள் அதை என திட்டம் தீட்டி சில வார்த்தைகளை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு, எல்லாம் முடிந்து கை குலுக்கியபின், இது செல்லாது, நீ எல்லோர் முன்பும் பதவி ஏற்பதற்கு சற்றும் தகுதியற்றவன், கருப்பனான உனக்கு தனியறையில் தான் பதவிப்பிரமாணம் செய்விப்போம், பலர்காண மகுடம் சூடுவது வெள்ளையர்களுக்கு மட்டுமே எனக் கூறி அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று யாரும் காணாவண்ணம் பதவி ஏற்கச் செய்து தனது நிறவெறியை தீர்த்துக் கொண்டது இந்த வெள்ளைச் சமூகம். இப்பொழுது இன்னொரு வெள்ளை அம்மணி அந்தக் கருப்பன் அதிபரானால் நான் ஆடை அவிழ்பேன் எனக் கிளம்பியிருக்கிறாள்.

கேட்டால் கருத்துச் சுதந்திரம் எங்கள் நாட்டில் அளவுக்கு அதிகம் என அமெரிக்கா எத்தனைதான் மார்தட்டிக் கொண்டாலும், ஒரு பெண் ஒரு கருப்பினத்தவர் அதிபரானால் நான் மேடையில் ஆடை அவிழ்ப்பேன் என்பது நிறவெறியில்லாமல் வேறு என்ன மண்ணாங்கட்டி சுதந்திரமோ.... இதுக்கு வக்காலத்து வாங்க ஒரு ஊடக கூட்டம் வேறு. அட போங்கடா ..., காரித்துப்ப வேண்டும் போலுள்ளது.

3 comments:

Willswords M said...

இரவிலும் பகலிலும் இடைத்தடை யின்றி
ஞாலம் சுழன்றால், அதுஒர் நாளாம்!

இருகரு விழிகளும் விழிவெண் படலமும்
சரிவர இமைகளும் இயங்கிடும் என்றால் கண்கள்!

கீழ்மேல் உதடுகள் பற்களும் சொற்களும்
நார்தசை நாவும், நன்றாய் அசைந்தால் வாய்!

பேதம்ஓதிடும் வேதமும் வாதமும்
விலகா வரையிலும் மரண ஓலங்கள்!

பழுப்பும் கருப்பும் நிறவெறி ஒழித்தால்
பதட்டம் மறையும் பாரும் ஒன்றும்


Web site names / addresses :

1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in
2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in
4) Willswords India Twinkles
http://willswordstamil.blogspot.com
5) Willswords Stories Garden
http://willswordstamiltwinkles.blogspot.com

Willswords M said...

நெருப்புக்கும் நீருக்கும் தகராறு - இவற்றுக்கு
நெழிவதும் மெலிவதும் நிரந்தரம் கிடையாது?
நெருப்பையும் குளிர்நீர் அணைத்துவிடும்! (ஓர்நாளில்)
பெருநீரையும் புவிவிட்டு நெருப்பு பிய்த்துவிடும்!
(ஆவியாக்கிவிடும்)

கருப்புக்கும் பழுப்புக்கும் எப்போதும் கசப்பாறு!
ஒருமையில் அனைவரும் இணையாது - இந்த
கடும்பகை எந்நாளும் ஒழியாது!
பகலுக்கும் இரவுக்கும் பகையில்லையே! - அந்தி,
பகலிர(வு) ஒற்றுமையின் அதிசயமே!

பழுப்பென்ன வெளுப்பென்ன கருப்பென்ன?
எவ்வுடலுக்கும் உதிரம் சிவப்பினிலே!
பால்நகம் மொட்டுமுல்லை வெண்மையிலே!
பழுப்புடல் சிவப்புடல் எந்தஉயிர் என்றாலும்,
கண்மணி நிறமோ கருப்பினிலே!

இழுக்கென்ன உயர்வென்ன தாழ்வென்ன,
எந்நிற மேனிக்கும் கருப்பில் தலைமுடி, எழிலாகும்;
சிவப்பும் கருப்பும் சேர்கின்ற இயல்பில்,
தெளிகின்ற காட்சி அழகாகும்!

நெருப்பின்றி உலகம் ஒளிராதே!
எங்கும் நீரின்றி உயிர்களும் பிழைக்காதே!
தண்ணீரும் நெருப்பும் சமைக்க ஒன்றாமல்
தானியமும் முழுப்பசி போக்காதே?
இதைஏற்பவர் ஒன்றுபட்டு கடமைகள் செய்தால்
ஒற்றுமைப் பண்புக்குள் அகிலம் நிலைக்குமே!


Web site names / addresses :

1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in
2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in
4) Willswords India Twinkles
http://willswordstamil.blogspot.com
5) Willswords Stories Garden
http://willswordstamiltwinkles.blogspot.com

Willswords M said...

என்னுள் (லெமூரியாவில்) இருந்தே எகிறிட்ட ஆழியால்,
மண்ணுள் இடம்பெயர்ந்தாய்; மறந்து மொழிச்சிதைவால்,
அந்நிலன், இந்நிலன், அன்னியன், என்றானாய்;
நம்பிடு நான்யார்? தமிழ்!

அந்நாளில் ஓர்கொடி (பெயர் ஏவாளாம்)
அக்கொடி வித்துக்கள்...
இந்நாளில் நாம்என இவ்வு லகம்சூழ்ந்தும்,
எந்நாளும் மோதல் இனவாத சண்டைகளால்,
புண்ணாகிப் போனதேநம் ஒற்றுமை!

நீயும் அடநானும் நேற்றுவரை மானுடமே!
பேயாய் குதறும் பிரிவினையர் பேதங்களால்,
பாயும் உதிரமே! பாருக்குள் கீழானோம்!
மாயும் மதம்விலகி ஒன்று.

நான்இது நீஎதுஎன்று நாளும் நமக்குள்ளும்,
ஏனிது வந்தது என்றதும் நாணிட,
மூளை உரைத்தது முற்றும் துறந்தவன்,
தேளைத் தினம்வளர்ப்ப தால்!

மூடக் கருத்துக்கள் முன்னூறு நீகண்டும்
சாடி அழிக்காமல் தாங்குவதும் மூடமே!
சற்றும் வராது சகத்துள் பொதுசுகம்;
பித்துப் பேதவாதம் நீக்கு!

கடவுள் வணக்கத்தால் காயத்துள் நேயம்
அடநாளும் மாண்டது; அதுதானே கண்டது!
அடிதடிகள் ஓயும்; அறிவை விதைத்து,
மடமைமாசு மாற உழை.

இருண்டாய்; கடவுள், இருப்பதாய் நம்பி!
இரண்டாயிரம் ஆண்டாய்நீ ஏங்கித் தொழுதாய்!
உருண்டாய் உலகாய் ஒழிந்ததோ ஏழ்மை!
சுரண்டலைச் சுரண்டிடக் கல்!


1) Open Google Title bar -
2) Type the address: http:willsindiaswillswords.blogspot.in
and press ENTER. (or)

3) Type 'Wills in Kavithai Chittu' >
4) Select the typed title >
5) Give Right Click - Enter into Web Page
6) Type i.e., copy and paste the article title
Either -
“வகுப்புபேத ஒழிப்புக்கு (அறிக்கை)”
(or) Reservation on profession basis!
[வகுப்பு பேத ஒழிப்புக்கு, தொழில்வாரி இடஒதுக்கீடு!]
on the Search Tap.
7) Press: ENTER.