Wednesday, November 17, 2010

யோவ், ஆதி.... என்ன ஆச்சு உனக்கு...???

யோவ், நல்லத்தானய்யா எழுதிகிட்டிருந்தீரு, துறை சார்ந்த பதிவு, தங்கமணி பதிவு, அப்புறம் விமர்சனம், அப்புறம் அது, அப்புறம் இதுன்னு எல்லாம் ஒழுக்கமாத்தானய்யா போயிகிட்டிருந்தது, இப்ப என்ன ஆச்சுன்னு இப்பிடி ஒரு வம்பு பண்ண வந்திருக்கீங்க? இப்பத்தானய்யா போட்டியெல்லாம் வெச்சு, அதுக்கு நீ பட்ட கஷ்டத்தையெல்லாம் பார்த்து மலைக்க வெச்சீகளே, என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன், இல்ல ஏன்னு கேக்குறேன்.

How do you feel if, I stop blogging?

திடு திப்புன்னு ஏன்யா புத்தி இப்பிடி வேலை செய்யுது? வேணாய்யா எதாவது சொல்லீரப்போறேன். வழக்கமா, ஒழுக்கமா கடையை தொறந்தமா, பதிவை போட்டமான்னு போயிகிட்டேயிரு, அதை வுட்டுட்டு சும்மா இப்பிடி கோக்கு மாக்கா எதாவது யோசனை பண்ணுனே, அப்புறம் தாம்பரம் முழுக்க உனக்கு பேனர் கட்டிருவோம், அண்ணி கிட்ட சொல்லி கொள்ளிக்கட்டைல சூடு வெக்க சொல்லீருவோம், ஆமா....., சர்வே எடுக்கறாராம் சர்வே, வாயில நல்லா வர்றதுக்குள்ள ஒழுக்கமா அந்த சர்வேவை தூக்குற நீ.... # கடுப்பு.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அது என்னன்னே தெரியல, எங்க ஆபீஸ்ல எல்லார் கடையையும் படிக்க முடியுது, ஆனா தல நர்சிம் கடை, லக்கி லுக்கு கடை, வித்யாக்கா கடை எல்லாம் தொறந்தா அதை மாத்திரம் இந்த பொட்டி தட்டற கும்பல் தொறக்க வுட மாட்றாங்கோ, கடுப்பேத்தறாங்க மை லார்ட்.... # ஏமாற்றம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பதிவர் சந்திப்பு நடந்து பல நூற்றாண்டு ஆன மாதிரி இருக்கு, இப்ப கொஞ்ச நாளா ஊர்பக்கம் தலை காட்ட முடியுதே, சந்திப்பு எதாவது வைப்பாங்களான்னு நானும் பார்க்கிறேன், மூத்த பதிவர்கள் எல்லாம் ஒரே பிஸியா இருக்காங்க போல இருக்குது. கேபிள் அண்ணன்கிட்ட கூட சமீபத்துல கேட்டேன், பார்க்கலாம்னு சொன்னாரு. இந்த வருஷ கடைசிக்குள்ள ஒரு பதிவர் சந்திப்பு வைங்கப்பு....... # ஏக்கம்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பதிவுலகுல எல்லாம் பரபரப்பான விஷயங்களை மாத்திரம்தான் பேசறாய்ங்க, அதாவது வில்லங்கமான மேட்டர்னா அதை வெச்சு ஒரு நூறு பதிவாவது வருது, காமன்வெல்த், ஆதர்ஷ் அபார்ட்மெண்ட், ஒபாமா விஜயம், ராசா என்பார் மந்திரி என்பார்னு எல்லாமே ஒரு பரபரப்பான விஷயங்களைத்தான் எழுதறாய்ங்களே ஒழிய, காமன்வெல்த் போட்டில மெடல்களை அள்ளிக் குவிச்ச இந்தியா, ஆசிய விளையாட்டுப் போட்டிகள்ல மண்ணைக் கவ்வுதே அது ஏன்னு ஒரு வார்த்தை கேக்கறாங்களா???? இல்ல, நம்ம வீரர்கள் எல்லாம் நம்ம பேட்டைக்குள்ள மட்டும்தான் வீரர்களா??? இதைப் பத்தி யாருமே எழுத மாட்டேங்கறாய்ங்களே???? # கொளுத்தி போடல்

16 comments:

LK said...

அண்ணே ,கடைசி மேட்டர் பத்தி போட ஆசிய விளையாட்டு போட்டிகள் முடியட்டும் என்று காத்திருக்கிறேன்/ இதை ஓரளவு எதிர்பார்த்தேன். இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தாலும், துப்பாக்கிகாரங்களாவது பதக்கம் அள்ளுவாங்கன்னு நினைத்தேன். குறி தப்பிடுச்சி

Cable Sankar said...

adi dhooooolllll

DHANS said...

அது என்னன்னே தெரியல, எங்க ஆபீஸ்ல எல்லார் கடையையும் படிக்க முடியுது, ஆனா தல நர்சிம் கடை, லக்கி லுக்கு கடை, வித்யாக்கா கடை எல்லாம் தொறந்தா அதை மாத்திரம் இந்த பொட்டி தட்டற கும்பல் தொறக்க வுட மாட்றாங்கோ, கடுப்பேத்தறாங்க மை லார்ட்// repeat.......

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அதெல்லாம் சரி... ஆதி பதிவுல உங்களோட கருத்தைச் சொன்னீங்களா :)

கார்க்கி said...

ஆமாங்க.. பார்த்து ரொம்ப நாளாச்சு

ஆதிமூலகிருஷ்ணன் said...

இதெல்லாம் சொல்ல வாணாம்னு பாத்தேன். நீங்க பப்ளிக்காவே கூவிகினு இருப்பதால் சொல்றேன். கவலப்படாத தல.. அது சும்மா லுலுலாயிக்குதான். கண்டுக்காத. நானாவது உட்னு போறதாவது.? ஹிஹி..

பரிசல்காரன் said...

ஆதியின் பின்னூட்டம் பார்த்ததும்தான் மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது. எங்கே அவர் பதிவுலகை விட்டுப் போய்விடுவாரோ என்று அஞ்சிக் கொண்டிருந்த கோடானு கோடி தமிழ்வாசகர்களின் சந்தேகத்தைப் போக்கிய உங்களுக்கு நன்றி.


இப்படிப் போட்டா கிண்டல்ன்னு கண்டுபிடிச்சுடுவாங்களோ?

அடிங்... அவரு சும்மா பல்ஸ் பார்க்கறாரு.. அதுக்கு நீரு ஃபீலிங்க்ஸ் வேற விட்டுகிட்டு.. ஓடிப்போய்டுங்க ஆமா...


:)

தராசு said...

வாங்க LK,

அவங்கதான் குறியே வெக்கலையே, அப்புறம் எங்க தப்பறது???

தராசு said...

கேபிள் அண்ணே டேங்சு

தராசு said...

தன்ஸ்,

வொய் பிளட்??? சேம் பிளட்

தராசு said...

வாங்க குருஜி,

சொல்லலை, இப்ப போய் சொல்றேன்.

தராசு said...

கார்க்கி,

அப்ப ஒரு சந்திப்புக்கு விண்ணப்பம் போடுங்களேன்

தராசு said...

ஆதி,

அப்ப நீங்க பூச்சாண்டிதான் காட்டுனீங்களா, நாந்தான் உளறீட்டனா????

தராசு said...

பரிசல் அண்ணே...,

ஙே,,,,ஙே

விக்னேஷ்வரி said...

என்ன ஒரே பதிவுலக மேட்டர் மட்டும்?

roshaniee said...

நல்ல பகிர்வு